
Written by S NAGARAJAN
Date: 25 JUNE 2018
Time uploaded in London – 8-29 AM (British Summer Time)
Post No. 5145
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பாரத சாஸ்திர ரகசியம்
புராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 2
ச.நாகராஜன்

மீமாம்ஸ சாஸ்திரம் : கர்மத்தின் இயற்கை பற்றி விளக்கும் சாஸ்திரம் இது. “அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா” என்று ஆரம்பிக்கும் இது, “அன்வாஹார்யேச தர்மா:” என்று முடிகிறது. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன. இதை அருளியவர் ஜைமினி ரிஷி.
ஜைமினியின் மீமாம்ஸ சாஸ்திரத்தில் உள்ள 12 அத்தியாயங்கள் வருமாறு:
1) தத்வ தர்மப்ரகரணம்
2) தர்மாபேத அப்ஹேதௌ
3) சேஷாசேஷீபாவ
4) ப்ரயோஜக ப்ரயோஜக பாவ
5) கர்மா
6) அதிகாரிநிரூபணம்
7) சமன்யாதிதேச
8) விசேஹதிதேச
9) ஊஹா
10) பாதா
11) தந்த்ரம்
12) ப்ரசங்கம்
இது தான் இப்போதுள்ள மீமாம்ஸ சாஸ்திரம்.
ஆனால் இது போல இன்னும் மூன்று மீமாம்ஸ சாஸ்திரங்கள் உள்ளன. அவை பல சாஸ்திர ரகசியங்களை விவரிக்கின்றன.
சந்தஸ் சாஸ்திரம் : அதாவது யாப்பிலக்கணம். இது யதியை விளக்குகிறது. எழுத்துக்களின் இசைவையும் நிறுத்த வேண்டிய இடங்களையும் விளக்குவது யதி.
கணம் : சீரான கவிதைக்கான சந்தம்.
இவை போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் மட்டும் 12 சாஸ்திரங்கள் உள்ளன.

அலங்கார சாஸ்திரம் : கவிதையில் உள்ள வெவ்வேறு அணிகள், மற்றும் எழுத்து நடை பற்றிய சாஸ்திரம். உபமானம், உபமேயம், அர்த்தபதி,தண்டபூபிகா, திலதண்டுலா,ரூபகம், போன்றவற்றை விரிவாக விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.
இதிஹாஸம்: இதில் இதிஹாஸத்தை விளக்கும் 32 நூல்கள் உள்ளன.
புராணம் : மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 1) ப்ரஹ்ம 2) பத்ம 3)வைஷ்ணவ 4) சைவ 5) பாகவதம் 6)நாரதீயம் உள்ளிட்டவை இதில் அடங்கும். உப புராணங்களும் கூட உள்ளன.
சில்ப சாஸ்திரம் : இதில் 32 சாஸ்திரங்கள் உள்ளன.384 சிற்ப வகைகளை இவை விளக்குகின்றன.
சுப சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன.116 வகையான சமையலை இது விளக்குகிறது.
மாலினி சாஸ்திரம் : இரகசிய காதல் செய்தி பரிமாற்றத்தை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்கள், மாலைகள், பூங்கொத்து ஆகியவற்றின் மீது ரகசியமாக எப்படி எழுதுவது என்பதை இது விளக்குவதோடு அந்தப்புரத்திற்கு செய்திகளை எப்படி அனுப்புவது என்பதையும் நுணுக்கமாக விளக்குகிறது. இதே போல அந்தப்புரத்திலிருந்து காதலர்க்கு எப்படி செய்தி அனுப்புவது என்பதையும் இது தருகிறது. இது மட்டுமல்ல. தாதிகள் எப்படி ஆடை ஆபரணங்களை அழகுற உருவாக்குவது, ராணிமார், இளவரசிகளை எப்படி அழகுற அலங்கரிப்பது (இன்றைய மேக்-அப்) போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. மேல் தட்டில் உள்ள பிரபுக்களின் மனைவிமார்களை எப்படி அலங்கரிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஜரிஹர சாஸ்திரம் : யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்து, துப்பாக்கி குண்டு, துப்பாக்கி, பீரங்கி, அம்புகள் போன்றவற்றை எப்படி தயாரிப்பது என்பதை விளக்கும் ஒன்பது சாஸ்திரங்கள் இதில் உள்ளன.நூறு மற்றும் ஆயிரம் ரவுண்டுகள் சுடுவது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.
ப்ரளய சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. படைப்பில் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு காலம் உண்டு என்பதை இது விளக்குகிறது. எப்போது அழிவு ஏற்படும், எந்த சமயத்தில் எப்படிப்பட்ட அழிவு வரும் போன்றவற்றை இது விளக்குகிறது.

கால சாஸ்திரம் : வெவ்வேறு படைப்புகள் எப்போது உருவாகும் எப்போது மறையும் என்பதை விளக்குவது கால சாஸ்திரம். எப்போது விதை விதைப்பது, விவசாயம் எப்படி செய்வது, எப்போது அறுவடை செய்வது, தாதுக்கள் உள்ள இடம், மலைகளில் உள்ள தாதுக்கள் ஆகியவற்றை இது விளக்குகிறது. ஒவ்வொன்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மய வாத சாஸ்திரம் : 20 வகை நூல்களின் மூலம் மாயாஜாலம் விளக்கப்படுகிறது. பொருள்களை அந்தரத்திலிருந்து எடுப்பது உள்ளிட்ட மாஜிக் வேலைகளை விளக்குவது இது.
இது போல ஏராளமான சாஸ்திரங்களை சுப்பராய சாஸ்திரி விளக்கியுள்ளார்.
இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ஒரு கேள்வி எழலாம். இந்த சாஸ்திரங்களின் மூலம் எங்குள்ளது என்பதே நமக்கு எழும் சந்தேகம். டாக்டர் வி.ராகவன் உலகெங்கும் சுற்றி பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத சுவடி நூல்களைக் கண்டு அந்த நூல் பட்டியலை தயாரித்துள்ளார். இவற்றில் என்ன உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. படிக்க, ஆராய பல நூறு அறிஞர்கள் பல்லாண்டுகள் உழைக்க வேண்டும்.
நம்மிடம் ஏராளமான விஞ்ஞான சாஸ்திரங்கள் உள்ளன.
விளக்கத்தான், பல சுப்பராய சாஸ்திரிகள் வேண்டும்.
***
kailasam a
/ June 25, 2018.
tskraghu
/ June 25, 2018Amazing indeed!!