
Compiled by London swaminathan
Date: 14 August 2018
Time uploaded in London –18-44 (British Summer Time)
Post No. 5321
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலு மனிதர் அறிவையடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலகம் மீதில் அச்சம் ஒழிகவே!– பாரதி
வந்தே மாதரம் என்றுயிர் போகும் வரை
வாழ்த்துவோம்;- முடி தாழ்த்துவோம்
எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ?- அவமானமோ?– சுதந்திரம் பற்றி பாரதி

ஒற்றுமை வழியொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோம்;- நன்கு தேர்ந்திட்டோம்
மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக்கெல்லாம்
மலைவுறோம்; – சித்தம் கலைவுறோம்— சுதந்திரம் பற்றி பாரதி
ஜய ஜய பவானி! ஜய ஜய பாரதம்!
ஜய ஜய மாதா! ஜய ஜய துர்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!— பாரதி

ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே!— பாரதி
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? சுதந்திரம் பற்றி பாரதி

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பாட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவுற்றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே —சுதந்திரம் பற்றி பாரதி
தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்துகிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?– சுதந்திரம் பற்றி பாரதி
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?– சுதந்திரம் பற்றி பாரதி

வந்தே மாதரம் என்று வணங்கிய பின்
மாயத்தை வணங்குவாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?– சுதந்திரம் பற்றி பாரதி
எல்லாரும் அமரநிலை எய்தும்நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும்- ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்- ஆம், ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க!— பாரதி

பாரத சமுதாயம் வாழ்கவே– வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய — பாரதி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை- வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே– வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே- ஜய ஜய ஜய — பாரதி

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்- அதன்
உச்சியின்மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும்- செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர் —பாரதி
பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்- மிடிப்
பயங்கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்

ஆடுவோமே- பள்ளுப் பாடுவோமே;
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு;
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே- பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே- இனி
நல்லோர் பெரியாரென்னும் காலம் வந்ததே – கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நரகம் வந்ததே
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்- இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்- பரி
பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்.


–subham–