‘கொழ கொழ கண்ணே’ – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 19-34 (British Summer Time)

 

Post No. 5415

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கொழ கொழ  கண்ணே எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

 

இப்பொழுது ‘ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்’ (Twinkle twinkle Little Star) தெரியாத தமிழ்க் குழந்தைகள் கிடையாது. ஆனால் ‘நிலா நிலா ஓடிவா’ பாட்டோ, ‘கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு’ நர்ஸரி ரைமோ (Nursery Rhyme) தெரிந்த தமிழ்க் குழந்தை இருக்கிறார்களா என்பது ஐயப்பாடே.

 

நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது (65 ஆண்டுக்கு முன்னால்) என்னுடைய தாயார் எங்களுக்கு ‘கொழ கொழ கண்ணே’ கதையைச் சொல்லுவார்கள். அதை ஒவ்வொரு நாள் இரவிலும் சொல்லச் சொல்லிக் கேட்போம். இது தஞ்சைப் பகுதியில் மட்டும் வழங்கியதா அல்லது மற்ற பகுதிகளிலும் வழங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் மாவட்டம் தோறும் பல குழந்தைகள் பாடல்கள் வழங்கியதை அறிகிறோம். 1899ம் ஆண்டு வெளியான விவேக சிந்தாமணி என்ற சென்னை மாத இதழைப்  பார்த்தவுடன் மஹா சந்தோஷம்.அதில் இன்று படித்த, முன்னொரு காலத்திலென் தாயார் சொன்ன குழந்தைப் பாட்டு இதோ.

 

‘கொழ கொழ  கண்ணே’ என்று துவங்கி

 

‘என் பெயர் ஈ, இது தெரியாதா’? என்று முடிவடையும் தமிழ் நர்ஸரி ரைம்.

 

 

 

 

 

 

FULL  RHYME

தமிழ் வாழ்க

 

–சுபம்–

Leave a comment

1 Comment

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    இதை நாங்கள் திருச்சிப் பக்கத்திலும் கேட்டிருக்கிறோம் [ 65-70 வருஷங்களுக்குமுன்.] சில வித்தியாசங்கள்.
    கொழ கொழ கன்னே
    கன்னுந்தாயே
    தாயை மேய்க்கிற இடையா
    இடையன் கைக் கோலே
    கோலை எடுக்கிற கொடிமரமே
    கொடிமரத்திலிருக்கும் கொக்கே
    கொக்கு நீராடும் குளமே
    குளத்திலிருக்கிற மீனே
    மீன் பிடிக்கும் வலையா
    வலையன் கைச் சட்டியே
    சட்டி பண்ற கொசவா
    கொசவன் எடுக்கும் மண்ணே
    மண்ணின் மேலிருக்கிற புல்லே
    புல்லை மேயும் குதிரையே என் பேர் என்ன
    என, குதிரை ஹீ ஹீ ஈஈ எனக் கனைக்க
    ஓ என் பேர் ஈ!

    அப்போது ‘அரைக் கிளாஸ்’ என்று இருக்குமாம். திண்ணையில் நடக்கும். [இந்தக் கிளாஸ் எப்போதோ நின்றுவிட்டாலும்,எங்கள் கிராமத்தில் 1961 வரை இந்தத் திண்ணையும் அது இருந்த வீடும் இருந்தது.] அதில் இந்தமாதிரி விடுகதைப் பாடல்களும், மனக்கணக்கும் சொல்லுவார்களாம். வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் உடகார்ந்து கேட்டதால் சிலர் வயதிற்கு மீறிய அறிவு வளர்ச்சியைப் பெற்றார்கள்.
    1960கள் வரை தமிழ் நாட்டில் 5ம் வகுப்புவரை தமிழ் மீடியத்திலேயே சொல்லிக் கொடுத்தார்கள். 6ம் வகுப்பில் (முதல் ஃபார்ம்) தான் ஆங்கிலம் வரும். ஆனால் 6 வருஷங்களுக்குள் நன்றாக சொல்லித் தருவார்கள். ஆனால் ஆங்கிலம் ஒரு subject தான். பிற எல்லா பாடங்களும் தமிழில்தான்.சிறு வயதில் எளிய தமிழிலேயே பாடம் நடந்ததால், எளிதில் புரியும்; தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலும் வளர்ந்தது. விஞ்ஞானத்தில் மட்டும் சிலவற்றை தமிழில் சொல்ல முடியாமல் அப்படியே ஆங்கிலத்தில் தருவார்கள். ஒரு உதாரணம் இன்றும் நினைவில் இருக்கிறது: High frequency alternating current in a wire sends out radio waves in the surrounding space. இந்தப் பாடம் நடத்திய T.S.சோமசுந்தரம் சிறந்த bright ஆசிரியர், ஆனால் இதை அப்படியே எழுதிக்கொள்ளச் சொல்வார். [ இதை இன்று எப்படித் தமிழில் எழுதுகிறார்களோ தெரியாது.]

    இன்று pre-school, நர்சரி என்று எல்லாம் ஆங்கிலமய மாகிவிட்டதால், குழந்தைகளுக்கு இத்தகைய பாடல்கள் தெரியாது. ஆங்கில Nursery rhymes தான். அதிலும் சில விபரீத அர்த்தமுள்ளவையாம். யாரும் கண்டுகொள்வதில்லை. சொன்னாலும் கேட்கமாட்டார்கள். தமிழில் சிந்திக்கத் தெரியாது என்பதோடு, ஆங்கிலத்திலும் சுயமான சிந்தனை வளம் இல்லை. School ,college education is based on rote learning and repeating standard expressions and ready-marked answers.

    இன்று மனக்கணக்கு என்னும் பயிற்சி அறவே இல்லை. கால்குலேட்டர் இல்லாமல் யாரும் மூன்று எண்களைக் கூட்ட இயலாது!
    பொதுவாக இந்த மனக் கணக்கும், விடுகதை, கவிதைகளும் தஞ்சாவூர், திருச்சி பக்கம் தான் பிரசித்தம் என்று சொல்லுவார்கள்.[ காவிரித் தண்ணீர் மஹிமை!] அதனால் தான் சங்கீதம், சிற்பம் போன்ற கணக்கு அடிப்படை கொண்ட கலைகள் அங்கு நன்கு வளர்ந்தன போலும்!

Leave a comment