
Written by S NAGARAJAN
Date: 25 SEPTEMBER 2018
Time uploaded in London – 6-17 AM (British Summer Time)
Post No. 5466
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஹர் பிலாஸ் சர்தா – ஹிந்து நாகரிக மேன்மையை எழுதியவர்!
ச.நாகராஜன்
ஹிந்து நாகரிகத்தின் மேன்மையை எழுதிய சிறந்த ஹிந்து ஹர் பிலாஸ் சர்தா.(Har Bilas Sarda) ‘ Hindu Superiority’ – ஹிந்து சுபீரியாரிடி என்ற அவரது புத்தகம் ஹிந்துக்கள் அனைத்துக் கலைகளிலும் விஞ்ஞானத்திலும் மேம்பட்டிருந்த நிலையை ஆதாரங்களுடன் விளக்குகிறது.
ஹர் பிலாஸ் சர்தா ஆஜ்மீரில் பிறந்தார். (பிறப்பு : 3-6-1867 மறைவு : 20-1-1955). ஆசிரியராகவும், நீதிபதியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தால் பெரிதும் அறியப்பட்டார். திவான் பகதூர் பட்டத்தையும் ஆங்கிலேய ஆட்சியில் பெற்றார்.
அவரது தந்தையான ஹர் நாராயண் சர்தா ஒரு வேதாந்தி. ஆஜ்மீர் அரசுக் கல்லூரியில் நூலகராக அவர் வேலை பார்த்து வந்தார்.
சர்தா பி.ஏ. பட்டத்தையும் பின்னர் பெர்சிய மொழி மற்றும் தத்துவத்திலும் தேர்ச்சி பெற்றார்,
இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு 18881இல் அலகாபாத்தில் நடந்த போது அங்கு சென்று அதில் கலந்து கொண்டார். பின்னர் பல காங்கிரஸ் மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
ஆஜ்மீர் மெர்வாரா மாகாணத்தில் 1892இல் அவர் நீதித்துறையில் சேர்ந்தார். 1894இல் ஆஜ்மீர் முனிசிபல் கமிஷனராக ஆனார். படிப்படியாக நீதித் துறையில் உயர்ந்த அவர் 1923இல் அடிஷனல் டிஸ்ட்ரிக்ட் மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக ஆனார். ஆஜ்மீர் அசெம்பிளி உறுப்பினராக ஆன பெருமையும் அவருக்கு உண்டு.
ஆர்ய சமாஜத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட அவர் அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி மீது இளமையிலிருந்தே பக்தி கொண்டிருந்தார். 1888இல் ஆஜ்மீர் பிரிவின் தலைவராகவும் ஆனார். தயானந்த சரஸ்வதி தனது மறைவிற்குப் பின்னர் ஆர்ய சமாஜத்தை நடத்திச் செல்ல 23 உறுப்பினர்களைக் கொண்ட பரோபகாரிணி சபை ஒன்றை நிறுவ ஏற்பாடு செய்து அதைத் தன் உயிலில் எழுதி வைத்தார். அதன்படி அதில் நியமிக்கப்பட சர்தா படிப்படியாக உயர்ந்து ஆர்ய சமாஜத்தின் செயலாளராக ஆனார். இன்று இந்தியாவெங்கும் பல ஊர்களில் பிரபலமடைந்திருப்பது டிஏவி (DAV School) பள்ளித் தொடர். ஆஜ்மீரில் டிஏவி பள்ளியை நிறுவ அவர் பெரிதும் காரணகர்த்தராக இருந்தார்.
சமூக சீர்திருத்தங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த அவர் 1929ஆண்டு நிறைவேற்றப்பட்ட குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
சர்தா சட்டம் என்ற பெயரால் பிரபலமான அது சாரதா சட்டம் என்று பெயர் மருவி இன்றும் அப்படியே அழைக்கப்படுகிறது.
ஹிந்து சுபீரியாரிடி, ஆஜ்மீர் வரலாறு, மஹாராணா கும்பா,மஹாராணா சங்கா,மஹாராஜா ஹமிர் ஆகிய அவரது புத்தகங்கள் ஹிந்து மேன்மையை உணர்த்தும் புத்தகங்களாக அமைந்தன.
ஹிந்து சுபீரியாரிடி என்ற அவரது நூல் மிகுந்த ஆராய்ச்சியின் பேரில் எழுதப்பட்ட புத்தகம்.
1906 நவம்பரில் இதன் முதல் பதிப்பு வெளியானது. பின்னர் பல பதிப்புகளைக் கண்டு இன்றும் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. இதை இலவசமாக இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
415 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் பல பகுதிகளைக் கொண்டது.
Antiquity, Government, Social System, Character, chivalry, Patriotism, Valour, Position of Women, Foreign Relations ஆகியவற்றை முதல் பகுதி விவரிக்கிறது.
அடுத்த பகுதி Hindu Colonization of the World பற்றியது. Egypt and Ethiopia, Persia, Turkistan and Northern Asia, Scandinavia, Eastern Asia, China and Japan, America ஆகிய அத்தியாயங்களில் வியக்க வைக்கும் பல உண்மைகளை நாம் காணலாம்.
அடுத்த பகுதி Literature பற்றியது. Sanskrit Language, Art of Writing, Vedic Literature, Poetry, Epic Poetry, Drama, Lyric Poetry, Ethico- Didactic Poetry ஆகிய அத்தியாயங்களில் ஹிந்துக்களின் இலக்கிய மேன்மை விளக்கப்பட்டுள்ளது.
அடுத்த பகுதி Philosophy பற்றியது. Nyaya, Vaisheshik, Sankya, Yoga, Mimasa ஆகிய அத்தியாயங்கள் கொண்ட இந்தப் பகுதி ஹிந்துக்களின் உயர் தத்துவ நிலையைச் சுட்டிக்காட்டுகிறது.
அடுத்த பகுதி Science. Medicine, Mathematics – Arithmetic, Geometry, Algebra, Astronomy, Military Science, Music, Other Sciences ஆகிய அத்தியாயங்கள் ஹிந்துக்களின் உயர் விஞ்ஞான அறிவைத் தெள்ளத் தெளிவாக விளக்குபவை.
அடுத்த பகுதி Arts. Architecture and Sculpture, Painting, Weaving, Steel and Iron Manufactures, Other Arts ஆகிய அத்தியாயங்களில் ஹிந்துக்களின் பல்கலை அறிவைப் பார்க்கலாம்.
அடுத்த பகுதியான Commerce and Wealth ஹிந்துக்களின் Commerce , Wealth பற்றி விளக்கும் பகுதியாக அமைகிறது. இதில் இந்தியா எப்படி உலகின் மிகப் பணக்கார நாடாக இலங்கியது என்பது விளக்கப்படுகிறது.
நூலின் இறுதி அத்தியாயமாக அமைவது Religion.
ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது. நூலை முடித்து விட்ட போது ஹிந்து வானளவு உயர்ந்து நிற்கிறான்.
ஆயிரக்கணக்கான அழகிய கருத்துக்களை ஆதாரபூர்வமாக இந்தப் புத்தகம் விளக்குவதால் ஒவ்வொரு ஹிந்துவும் இதைப் படிக்க வேண்டியது இன்றியமையாததாக ஆகிறது.
***