
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 October 2018
Time uploaded in London – 6-50 AM
(British Summer Time)
Post No. 5584
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
மீன் சாப்பிடுவோருக்கும், பிளாஸ்டிக் பை அல்லது பாட்டில் அல்லது டப்பாக்களில் உணவோ, பானமோ சாப்பிடுவர்களுக்கும் அதிர்ச்சி தரும் செய்தி நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரியா நாட்டின் தலை நகரான வியன்னாவில் மருத்துவ பல்கலைக் கழக (VIENNA MEDICAL UNIVERSITY) ஆராய்ச்சியாளர்கள் இந்த செய்தியை வெளியிட்டனர். அவர்கள் வயிறு- குடல் மருத்துவ வாரம் கொண்டாடுகையில் இச் செய்தி வெளியிடப்பட்டது.
உடலுக்குள் ஒன்பது வகையான நுண் பிளாஸ்டிக் துகள் (MICRO PLASTICS) இருப்பதை அவர்களுடைய ஆராய்ச்சி காட்டுகிறது. எட்டு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த ஆராய்ச்சிக்கு உதவினர். அவர்கள் தினமும் வேளாவேளைக்குச் சாப்பிடும் பண்டங்களைக் குறித்து வைத்தனர். அவர்களுடைய மலம் டாய்லெட்டில் இருந்து சேகரிக்க ஏற்பாடும் செய்யப்பட்டது. அதை ஆராய்ந்ததில் இந்த ஒன்பது வகை பிளாஸ்டிக் உடலில் புகுந்த செய்தி கிடைத்தது.
அவர்களில் பெரும்பாலோர் கடல் மீன்களை சாப்பிட்டது அவர்கள் எழுதிய டயரியில் இருந்தது. பாட்டில் தண்ணீர், பீயர் (BEER) முதலிய பானங்கள், கடல் மீன், பிளாஸ்டிக்கில் சுற்றி விற்கப்படும் (PLASTIC PACKING) உணவுப் பண்டங்கள் அபாயகரமானவை. அவைகள்தான் இப்படி நுண் துகள்களை அனுப்புகின்றன.

தற்போதைய மல ஆராய்ச்சி, குடல் வரை இந்த விஷப்பொருட்கள் சென்றதைக் காட்டுகிறது. ஆனால் கடல் வாழ் உயிரினங்களை சோதித்த முந்தைய ஆராய்ச்சிகள் இவை, இரத்த மற்றும் நிணநீர் ஓட்டங்களிலும் கலக்க முடியும் என்று காட்டியுள்ளன.
ஆஸ்திரியா, பிரிட்டன், பின்லாந்து, ஜப்பான், ஹாலந்து, இதாலி, போலந்து, ரஷ்யா ஆகிய நாட்டு மக்கள் இதில் பங்கு கொண்டனர். இதுபற்றி மருத்துவப் பல்கலைக் கழக ஆய்ய்வுக்குழுத் தலைவர் டாக்டர் பிலிப் ஸ்வாபிள் சொன்னதாவது– ” மனிதர் உடலுக்குள் உணவுப் பொருட்கள் மூலம் பிளாஸ்டிக் துகள் செல்லுவது உறுதி செய்யப்பட்டு விட்டது. இனி வரும் ஆராய்ச்சி மூலம், இதனால் உடலுக்குக் கெடுதி வருமா? என்ன கெடுதி வரும் என்பதெல்லாம் ஆராயப்பட வேண்டும்.
ஒவ்வொருவர் மலத்தையும் சோதித்ததில் பத்து கிராம் மலத்தில் 20 துகள் வரை இருப்பது கண்டறியப்பட்டது.
முன்னர் யார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களும் கிட்டத்தட்ட இதே செய்தியை அளித்தனர்.
பிளாஸ்டிக் மனித குலத்தின் எதிரி; விரைவாக உலக நாடுகள் அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரலும் எழுந்துள்ளது.
இந்துக்கள் வாழ்வு முறையே சிறந்தது!
சைவ உணவுக்காரர்களுக்கு இது ஓரளவு ஆறுதல் தரும். ஏனெனில் மீன் சாப்பிடுவோர்தான் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மேலை நாடுகளில் மாமிச உணவு முழுவதும் பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றப்பட்டு வருகின்றன. காய்கறிகள் வாங்குவோருக்கு இந்த ஆபத்து இல்லை.
போகிற போக்கைப் பார்த்தால் எல்லோரும் கிணற்றுத் தண்ணீர் குடிப்பதே நல்லது என்று சொன்னாலும் வியப்பதற்கில்லை. ஏனெனில் குழாய்த் தண்ணீரும் ஒரு குற்றவாளி என்று ஆராய்ச்சியாளர் செப்புகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, மாமிசம் முதலான அசைவ உணவுகள் ஏற்படுத்தும் அக்கிரமச் செய்திகளையும் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஏதேனும் ஒரு கோழிப் பண்ணையில் வியாதி என்றால் கோடிக்கணக்கான கோழிகள் உயிருடன் எரிக்கப்படுகின்றன. MAD COW DISEASE ‘மேட் கவ் நோய்’ என்ற நோய் பசுமாடுகளைப் பீடித்தவுடன் இரக்கமில்லாமல் பல லட்சம் பசு மாடுகளைக் கொன்று எரித்தனர்.
ஏதேனும் ஒரு பாக்டீரியா பாதித்த ஒரு முட்டை வந்து விட்டால் சூப்பர் மார்க்கெட்டுகளில் லட்சக்கணக்கான முட்டைகள் அழிக்கப்படுகின்றன.
இவர்கள் வீணடிக்கும் உணவுப் பொருட்களை வைத்து பட்டினியால் வாடும் அனைவருக்கும் சோறு போட முடியும்.
இதற்கெலாம் மேலாக, அசைவ உணவுகள்தான் உலகில் அதிக புறச் சூழம் மாசு ஏற்படுத்துகிறது என்றும் விஞ்ஞான சஞ்சிகைகள் பட்டவர்த்தனமாக எழுதுகின்றன.

ஆகையால் வள்ளுவரும், வள்ளலாரும் பகர்வது போல சைவ உணவுகளை மட்டுமே உண்டு வாழ்வது சாலச்சிறந்தது.
‘கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைக்கூப்பித் தொழும்’ என்ற வள்ளூவன் வாக்கு பொய்யாமோ?
வெஜிட்டேரியன்ஸ் வாழ்க!”
–சுபம்-