2.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா?- QUIZ PART 2

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 October 2018

Time uploaded in London – 6-18 am

(British Summer Time)

Post No. 5596

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

2.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா?- QUIZ PART 2

முதல் பகுதியில் 20 இந்தியப் பெண்க   ளைக் கண்டோம் . மேலும்

இருபது பேரைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்; இலக்கியத்தில், சரித்திரத்தில், வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவர்கள்

இவர்கள்; யார் இவர்?

21.புத்தர் காலத்தில், 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசன் உதயணனின் அன்பு மனைவி; நாடகத்திலும், கதைகளிலும் நீங்காத இடம் பெற்றவள்; யார் அவர்?

22.ஹர்ஷவர்தனனின் அன்பு சகோதரி. அவருடைய கணவர் போரிலிறக்கவே, காட்டில் சிக்கிய இப்பெண்ணை மலைஜாதி மக்கள் உதவியுடன் ஹர்ஷன் மீட்டான்.   யார்?

23.தமிழ்க் கவிஞன் கம்பனின் மகன் அம்பிகாபதி. அவருடைய காதலி யார்?

24.ஹிந்து சாம்ராஜ்யம் ஸ்தாபிக்க வீர சிவாஜிக்கு கதைகள் மூலம் ஊற்றுணர்ச்சி தந்த தாய் யார்?

25.போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல கணவனைப் பின்தொடர்ந்து வந்து அவரது மதுரை வெற்றியை ‘மதுரா விஜயம்’ நூல் மூலம் தந்த பெண் யார்?

26.ஆப்கானிஸ்தானில் இப்போது காண்டஹார் என்று அழைக்கப்படும் பகுதியிருந்து வந்த பெண்; கணவனுக்குக் கண் தெரியாததால்,வாழ்நாள் முழுதும் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த பத்தினி யார்?

27.துணிச்சல்மிக்க உண்மை விளம்பி; மகனைப் பள்ளிக்கு அனுப்பி, உன்  தந்தை பெயரைக் கேட்பார் குருநாதர்; தாய்க்கே தெரியாது என்று சொல். ஸத்யகாமனை அனுப்பிய தாய் யார்?

28.உலகமே வியக்கும் இலக்கண புஸ்தகத்தை எழுதியவரின் தாயார் யார்? தன்னை தாயார் பெயரைச் சொல்லி …….புத்ரன் என்று அழைத்தார். பெருமைக்குரிய தாய் யார்?

29.வெளிநாட்டில் தோன்றிய மதங்கள் எல்லாம் கடவுளை ‘அவன்’ HE என்று ஆண்மகனாக எழுதின. ஆனால் இந்துக்களோ பெண்களுக்கு மதிப்பளித்து ‘கடவுளர்க்கெல்லாம் தாய்’ (Mother of all Gods)  என்ற பட்டத்தைப் பெண்ணுக்குக் கொடுத்தது, யார் அவர்?

30.செட்டியார் குலத்தில் அவதரித்து, தென் கிழக்காசிய நாடுகளில் புகழ்பரப்பிய, எலும்பும் தோலுமான சிவ பக்தை யார்?

31.கௌதம புத்தரை ஈன்றெடுத்தவர்; சுத்தோதனனின் மனைவி யாரோ?

32.சீதை மனம் நொந்து தற்கோலை பற்றி பேசிய போதெல்லாம், நல்ல செய்தி வழங்கிய பெண்; விபீஷணனின் மகள் யாரோ?

33.கணவர் கண்டேர் ராவ் ஹோல்கர் போரில் கொல்லப்பட்ட போதும் ,தானே சென்று சண்டையிட்ட மாள்வ தேச வீராங்கனையின் பெயர் என்ன?

34.’ஜான்ஸி கீ ராணி’ என்று புகழ்பெற்றவர். 1857ம் ஆண்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்த முதல் சுதந்திர யுத்தத்தில் வீரப் போரிட்டவர். அவர் யார்?

35.பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட கிட்டூர் ராணி; கர்நாடகத்தில் இவர் பெயரை அறியாதார் இல்லை; யார் அவர்?

36.கூன் பாண்டியனை, ‘நின்ற சீர் நெடுமாறனாக’ மாற்ற உதவியவர்; மிகு சைவம் தழைத்தோங்க உதவிய பாண்டிய ராணி யார்?

37.ஆங்கிலப் படைகளை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்திய ராணி; ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி யார்?

38.ராஜ ராஜ சோழனை மாபெரும் கோவில்கள் சமைக்கவும், நாடுகளை வெல்லவும் ஊக்கம் தந்த பெண்; தானும் தானம் செய்து கல்வெட்டுகளில் அழியா இடம் பெற்ற மாதரசி யார்?

  1. மதுரை மாநகரில் அழியாத பல கட்டிடம் கட்டிடய பெண்ணரசி யார்?

40.படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னரின் கை படாமல் மானம் காத்த மாதர் குல திலகம். இன்றும் 100 கோடி இந்துக்களை, தன் உயிர்த் தியாகம் மூலம் பெருமிதம் கொள்ளச் செய்யும் உத்தம பத்தினி யார்?

விடைகள்:-

21.வாசவதத்தா, 22.ராஜ்யஸ்ரீ, 23.அமராவதி, 24.ஜீஜாபாய் 25.கங்காதேவி,

26.காந்தாரி, 27.ஜாபாலா, 28.தாக்ஷி, 29.அதிதி, 30.காரைக்கால் அம்மையார், 31.மாயாதேவி, 32.த்ரிஜடை 33.அஹல்யாபாய் ஹோல்கர், 34.லக்ஷ்மிபாய், 35.கிட்டூர் ராணி சென்னம்மா, 36.மங்கையர்க்கரசியார், 37.வேலு நாச்சியார், 38.குந்தவை,39.ராணி மங்கம்மா, 40.சித்தூர் ராணி பத்மினி (பத்மாவதி)

–subham–

Leave a comment

Leave a comment