
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 October 2018
GMT Time uploaded in London – 8-23 AM
Post No. 5602
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
நாலாவது பகுதியில் இந்தியாவுக்கும், ஹிந்து கலாசாரத்துக்கும் உழைத்த சில வெளிநாட்டுப் பெண்மணிகளையும் நினைவு கூறுவோம்; இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்:–
61.இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்த குஜராத் பார்ஸி பெண்மணி யார்? இவர் முகத்துடன் தபால் தலையும் வெளியிடப் பட்டுள்ளது
62.இந்தியர்களுக்கும் ஐரிஷ் காரர்களுக்கும் சுய உரிமை தேவை என்று வாதாடிய பிரம்ம ஞான சபைப் பிரமுகர் யார்? இவர் முகத்துடன் தபால் தலையும் வெளியிடப் பட்டுள்ளது.
63.மார்கரெட் எலிஸபெத் நோபிள், சுவாமி விவேகாநந்தரின் சிஷ்யை ஆனாள். அவளுடைய புதிய பெயர்?
64.புதுவையில் புகழ்பெற்ற மிர்ரா ஆல்பாஸா யார்?
65.உத்தரப் பிரதேச பெண் கவிஞர்; முதல் பெண் சத்யாக்ரஹி; ‘ஜான்ஸீ கீ ராணி’ என்ற இந்திப் பாடல் மூலம் சுதந்திரக் கனல் மூட்டியவர் பெயர் தெரியுமா?
66.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேஸீயப் படையின் (INA) பெண் தலைவி யார்?

67.பன்னிரெண்டாம் நூற்றாண்டுக் கன்னட மொழிக் கவிஞர்;லிங்காயத் வழிபாட்டை ஆதாரித்தவர் யார்?
- ஆர்.எஸ்.எஸ்.பெண்கள் பிரிவு என்று கருதப்படும் ராஷ்ட்ர ஸேவிகா சமிதியைத் துவக்கியவர் யார்?
69.அசோகன் தனது மகளை இலங்கைக்கு அனுப்பி, புத்த மதப் பிரசாரம் செய்தான்? இலங்கைக்கு வந்த நங்கை யார்?
70.மாதவியின் மகள்; துறவுக்கோலம் பூண்டு புகழ் பெற்றவர்;கடல் வணிகர் வணங்கும் தெய்வத்தின் பெயர்; அவரைத் தெரியுமா?
71.பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய நாகா இன ராணியின் பெயரை அறிவீர்களா?
72.கபிலன் என்னும் பார்ப்பனப் புலவரால் காப்பாற்றப்பட்ட பாரி மகளிரின் பெயர்கள் என்ன?
73.இந்தியாவில் அணுகுண்டு வெடித்தும், வங்க தேசத்தை உருவாக்கியும் உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயர்த்திய இரும்பு நங்கை யார்?
74.பார்ப்பன அமைச்சர்கள் தடுத்தும் பாண்டிய மன்னரின் சிதைத் தீயில் குதித்து உடன்கட்டை ஏறிய புறநானூற்றுப் புலவர் யார்?
75.கணித மேதை; கம்ப்யூட்டர்களைத் தோற்கடித்து கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற பெண்ணரசியின் பெயர் என்னவோ?
76.புத்தரைச் சந்தித்த விலை மாது; அவரது உபதேசத்தைக் கேட்டு சந்யாசினியான வைசாலி நகர பேரழகி யார்?
- கணவர் சொல்லைத் தட்டாததால் அற்புதம் புரிந்த, வள்ளுவரின் மனைவியின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்ன?
- விண்ணில் சென்ற முதல் இந்திய மங்கை; ஆனால் பூமிக்குத் திரும்ப இயலாமல் புகழ் உடம்பு எய்திய பெண்ணரசியின் பெயர்?
79.மதுரையில் பிறந்தவர்; பிரம்ம ஞான சபைப் பிரமுகர்; நடனத்தினால் புகழ் எய்திய மாது. அவர் யார்?
80.கணவருக்கும் ஆதி சங்கரர் என்ற உலகப் புகழ்பெற்ற இந்திய தத்துவ ஞானிக்கும் இடையே நடந்த விவாதப் போட்டியில் நடுவராகப் பணியாற்றிப் புகழ் எய்திய ஞானியின் பெயர் என்ன?

விடைகள்
61.மேடம் பிகாஜி காமா
62.அன்னி பெஸன்ட்
63.சகோதரி நிவேதிதா
- அரவிந்த ஆஸ்ரம அன்னை
65.சுபத்ரா குமாரி சௌவான்
66.கேப்டன் லக்ஷ்மி
67.அக்க மஹாதேவி
68.லக்ஷ்மிபாய் கேல்கர்
69.சங்கமித்ரை
70.மணிமேகலை
71.ராணி கண்டின்லியூ
72.அங்கவை, சங்கவை
73.இந்திரா காந்தி
74.பூதப் பாண்டியன் தேவி
75.சகுந்தலா தேவி
76.ஆம்ர பாலி / அம்பா பாலி
77.வாசுகி (மாதானுபங்கி)
78.கல்பனா சாவ்லா
79.ருக்மிணி தேவி அருண்டேல்
80.உபய பாரதி

ANSWERS
61.MADAM BHIKAIJI CAMA
62.ANNIE BEASANT
63.NIVEDITA
64.Mirral Alfasa born to Egyptian mother a Turkish father is known as MOTHER OF AUROBINDO ASHRAM
65.SUBHADRAKUMARI CHAUHAN
66.CAPTAIN LAKSHMI OF INA
67.AKKAMAHADEVI
68.LAKSHMI BHAI KELKAR
69.SANGAMITRAI
70.MANIMEGALAI
71.RANI GAIDINLIU OF NAGALAND
72.ANGAVAI, SANGAVAI (Paari Makalir)
73.INDIRA GANDHI
74.BHUTHAPANDIYAN DEVI
- SHAKUNTALADEVI, MATHEMATICIAN
- AMRA PALI (AMBA PALI)
77.VASUKI (Mathanubhangi is her other name)
78.KALPANA CHAWLA
79.RUKMINIDEVI ARUNDALE, DANCER
80.UBHAYA BHARATI
XXXXXX SUBHAM XXXXXX