5.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? QUIZ க்விஸ்- பகுதி 5 (Post No.5608)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 31 October 2018

GMT Time uploaded in London – 7-47 AM

Post No. 5608

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் மஹாராணிகள்

தமிழ்நாட்டு மஹாராணிகளை அடையாளம் காண முடிகிறதா என்று பாருங்கள்; சங்க இலக்கியம் ,கல்வெட்டுகளில் இருந்து புகழ்பெற்ற வரலாற்று, கல்வெட்டு அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி ‘யாவரும் கேளிர்’ என்ற அவரது புஸ்தகத்தில் கொடுத்துள்ளார். கடைசி கேள்வியைக் காண்க

81.வர்த்தமான மஹாவீரரின் தாயார் பெயர் என்ன?

82.ஜவஹர்லால் நேருவின் சகோதரி; ஐ.நா.சபையில் பெரும்பதவி வகித்தவர் யார்?

83.முதலில் வக்கீல் தொழில் ஆற்றிய பெண்மணி யார்? பார்ஸி இனத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பணிபுரிந்தார்

84.இந்தப் பெண் அறிஞர் ஜனகனுடன் தத்துவ விஷயங்களை விவாதித்ததாக மஹாபாரதம் பகரும்; மைத்ரேயியும் அல்ல, கார்கியும் அல்ல; வேறு ஒருவர், யார் அவர்?

85.கேரளத்தில் பிறந்த தாவரவியல் அறிஞர்; இந்திய தாவரவியல் சங்கத்தில் அழியா இடம்பெற்ற மாது யார்?

86.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 115 புஸ்தகங்களை எழுதிக் குவித்த நாவல் ஆசிரியை, பத்திரிகையாளர் யார்?

87.மகனும் மன்னனுமான அலார்கா என்பவனுக்கு தர்ம உபதேசம் செய்த தாய் யார்? மார்கண்டேய புராணம் புகலும், புகழும் நங்கை அவள்.

88.காஷ்மீரின் 17ஆம் நூற்றாண்டு  பக்தை, கவிஞர் யார்?

89.முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மனைவி, விடுதலைப் போராட்ட வீராங்கனை; இந்திரா காந்தியின் தாய் யார்?

90.ஜெயப் ப்ரகாஷ் நாராயணனின் மனைவி; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்மணியின் பெயர் என்ன?

91.புத்தர் சொற்பொழிவாற்றுகையில் சப்தம் போட்டவுடன் ஏழு வகை மனைவி பற்றி புத்தர் பட்டியல் கொடுத்தார்; யார் அந்த நங்கை?

92.முதல் குலோத்துங்க சோழனின் மனைவியர் இருவர் என்று கல்வெட்டுகள் பேசும்; அந்த மஹாராணிகள் எவரோ?

93.கவிஞர், பாடகி, 90-க்கும் மேலான இந்திப் படங்களில் நடித்த நடிகை யார்?

94.இந்தியாவின் பொற்காலம் எனப்படும் குப்த சாம்ராஜ்யத்தின் மஹத்தான பேரரசன் சந்திர குப்தன்; அவன் ஒரு இளவரசியை மணந்து மகத சாம்ராஜ்யத்தையே வரதட்சிணையாகப் பெற்றான். யார் அந்த சீதனக் காரி (ஸ்ரீ தனம் = சீதனம்)?

95.அப்பர் என்னும் திருநாவுக்கரசரை மீண்டும் சைவ சமயத்துக்கு மாற்றிய சகோதரி யார்?

96.கடைசி கேள்வியில் இணைக்கப்பட்டது

  1. காஷ்மீர் மஹாராணிகளுக்கு விஷேச கஜானா, சிறப்பு அதிகாரங்கள் உண்டு. அதன் கீழ் பத்மராஜாவின் முறைகேடான நிர்வாகத்தை ஒரே ஆணையில் குப்பையில் போட்ட மஹாராணியின் பெயர் என்ன?

98.பாண்டவர் இருவரின் தாய்; பாண்டுவுடன் வானப்ரஸ்தம் சென்று, அவருடன் காட்டில் உயிர் துறந்த புனிதை யார்?

96,99, 100.ஒவ்வொருவர் பெயர் சொல்லியும் யார், எவர் என்று

கேட்காமல் ஒரு தமிழ் மஹாராணி பட்டியல் தருகிறேன் . யார் என்று கண்டுபிடியுங்கள்.

சங்கா-

தரணி முழுதுடையாள்-

செம்பியன் மாதேவி-

அம்மங்கா தேவி-

குந்தவை-

மணக்கிள்ளி-

அவனி முழுதுடையாள்- மங்கையர்க்கரசி-

பதுமன் தேவி-

ரங்கபதாகை-

விலாசவதி-

பஞ்சவன் மாதேவி-

வானவன் மஹாதேவி-

தியாக பதாகை-

மதுராந்தகி-

குந்தவை

ஒரட்டானன் சொரப்பை-

தந்தி சக்தி விடங்கி/லோக மாதேவி-

ஒவ்வொரு மன்னருக்கும் பல    மனைவியர் இருந்தாலும் ஒருவரோ, இருவரோ மட்டும் அரியணயில் அமர்ந்தனர்.

முக்கோக்கிழானடிகள்-

 

ANSWERS:–

81.திரிஷலா

82.விஜயலெட்சுமி பண்டிட்

83.கார்னீலியா சோரப்ஜி

84.சுலபா

85.டாக்டர் ஜானகி அம்மாள்

86.கோதை நாயகி அம்மாள்

87.மதலஸா

88.ரூப பவானி

89.கமலா நேரு

90.பிரபாவதி தேவி

91.சுஜாதா

92.தியாகவல்லி, ஏழிசை வல்லபி

93.மீனா குமாரி

94.குமார தேவி

95.திலகவதி

97.சூர்யமதி

98.மாத்ரி

  1. 99, 100++++++

சங்கா- பல்லவ மன்னன் நந்திவர்மன் மனைவி

தரணி முழுதுடையாள்- விக்கிரம சோழன் மனைவி

செம்பியன் மாதேவி- கண்டராதித்த சோழனின் மனைவி

அம்மங்கா தேவி- ராஜேந்திர சோழன் மகள்; சாளுக்கிய ராஜ ராஜனின் மனைவி

குந்தவை- ராஜராஜனின் மகள்; சாளுக்கிய மன்னன் விமலாத்தனின் மனைவி

மணக்கிள்ளி- சோழன் மகள்; நெடுஞ்சேரலாதனின் மனைவி

அவனிமுழுதுடையாள்-மலாட குலப் பெண், இரண்டாம் ராஜ ராஜனின் மனைவி

மங்கையர்க்கரசி- சோழன் மகள்; பாண்டியன் நெடுமாறனின் மனைவி

பதுமன் தேவி- வேளாவிக் கோமான் மகள்; சேரலாதன் மனைவி

ரங்கபதாகை- பல்லவமன்னன் இராஜ சிம்மன் மனைவி

விலாசவதி- இராஜ சிம்மனின் மற்றொரு மனைவி

பஞ்சவன் மாதேவி- முத்தரையன் மஹிமாலயன் மனைவி

வானவன் மஹாதேவி- உத்தம சோழன மனைவி

தியாக பதாகை- விக்கிரம சோழன் மனைவி

மதுராந்தகி- முதல் குலோத்துங்கனின் முதல் மனைவி; அவள் இறந்த பின்னர் வேறு இருவரை மணந்தான்.

குந்தவை (ராஜராஜனின் தமக்கை)- வந்தியத்தேவன் மனைவி

ஒரட்டானன் சொரப்பை- உத்தம சோழனின் பல மனைவியருள் ஒருத்தி

தந்தி சக்தி விடங்கி/லோக மாதேவி-இராஜ இராஜனின் தேவியரில் ஒருத்தி

ஒவ்வொரு மன்னருக்கும் பல    மனைவியர் இருந்தாலும் ஒருவரோ, இருவரோ மட்டும் அரியணயில் அமர்ந்தனர்.

முக்கோக்கிழானடிகள்- விக்ரம சோழனின் முதல் மனைவி; பின்னர் தியாக பதாகை

தமிழ் மஹாராணிகளின் கல்வெட்டுக் குறிப்புகளை டாக்டர் நாகசாமி புஸ்தகத்தில் காண்க.

–SUBHAM–

Leave a comment

Leave a comment