

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 8 December 2018
GMT Time uploaded in London – 7-39 am
Post No. 5752
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
மநு நீதி நூல்- பகுதி 35
மநு ஸ்ருதியின் ஆறாவது அத்தியாயத்தை இன்று முடித்து விடுவோம். இதற்குப் பின்னர் இன்னும் ஆறு அத்தியாயங்கள் உள. மொத்தம் 2685 ஸ்லோகங்கள்; ஒன்பது பேரின் முழு பாஷ்யங்கள்/ உரைகள். ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிதற்றல் பேர்வழிகளின் நூல்கள் வேறு.
ஸ்லோகம் 50 முதல் இறுதிவரையுள்ள (97) ஸ்லோகங்களின் புல்லட் bullet points பாயிண்டுகளை மட்டும் முதலில் தருகிறேன்.
1.வள்ளுவனுக்கு மிகவும் பிடித்த ‘இல்லறமே நல்லறம்’ என்ற கருத்து இங்கே வருகிறது. இதனால் வள்ளுவர் அப்படியே 4 குறள்களில், மநுவின் ஸ்லோகத்தை (6-87, 6-88, 6-89 etc) மொழி பெயர்த்து விடுகிறார்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை- குறள் 41
பிரம்மச்சாரி, வாநப்ரஸ்தன், ஸந்யாஸி ஆகிய மூவர்க்கும் கிரஹஸ்தனே துணை/ ஸப்போர்ட் support
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை – 42
அநாதைகள்,ஏழைகள், பிச்சை எடுப்போர்க்கும் கிரஹஸ்தனே (இல்வாழ்வான்) துணை
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை- 47
தர்ம நெறிப்படி வாழும் கிரஹஸ்தனே வேறு எவரைக்காட்டிலும் பெஸ்ட்/best தலை சிறந்தவன்.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து -48
தூய வாழ்க்கை நடத்தி மற்றவர்களையும் நல்வ வாழ்வு நடாத்த உதவி வாழும் வாழ்க்கை தவங்களையெல்லாம் விட மஹிமை வாய்ந்தது.
வள்ளுவனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முந்தி வாழ்ந்தவர் மநு என்பதில் எவருக்கும் கருத்து வேற்பாடு இல்லை. ஆக வள்ளுவன் இல்லறம் பற்றிச் சொன்ன பத்து குறள்களுமே முன்னரே மநு தர்ம சாஸ்திரத்தில் உள்ளதே. உலகில் எந்த மத நூல்களும் இப்படி 4 வகை மனிதர்களைச் சொல்லவும் இல்லை. அதில் இல்லற த்தானே சிறந்தவன் என்று பேசவும் இல்லை. இது பாரதீய சிந்தனையின் ஆணிவேர்- அஸ்திவாரம்.
2.உவமைகள்
காளிதாசனைப் போல, மநு அருமையான உவமைகளைக் பொழிவதை 67,71, 76, 77, 78, 90 ஸ்லோகங்களில் காண்க

3.தண்ணீர் சுத்தப் படுத்துவது
அந்தக்காலத்தில் காடக (தேற்றாங்கொட்டை) விதைகளைப் போட்டு தண்ணீரைச் சுத்தம் செய்ததை சங்க நூல்கள், காளிதாசன் முதலியோர் சொன்னது மநுவிலிருந்து போயிருக்கலாம் (ஸ்லோகம் 67)
4.வனவாசிக்கும் (வாந்ப்ரஸ்தன்) ஸந்யாஸிக்கும் அன்பும் அருளுமே அவஸியம் என்பதை மீண்டும் மநு வலியுறுத்துகிறார்- ஸ்லோகம் 6-52, 6-60
5.ஸ்லோகங்கள் 6-91, 6-92ல் வாழ்க்கையில் முன்னேற— ஸந்யாசி நிலையை அடைய–த் தேவையான பத்து குணங்களின் பட்டியலைத் தருகிறார். இவற்றை பகவத் கீதையும் திருக்குறளும் பல இடங்களில் வலியுறுத்துகின்றன.
ஸத்யம் என்னும் ஒரு குணத்தை இந்துக்கள் மட்டுமே ‘உண்மை,வாய்மை,மெய்மை’ (மனோ, வாக், காயம்= த்ரி கரண சுத்தி) என்று மூன்று பகுதிகளாக வரையறுத்துச்சொல்லுகின்றனர். இது மூன்றும் இருப்பவர்கள் மஹத்தான அற்புதங்களைச் செய்யலாம்– எல்லாஉயிரும் கை கூப்பித் தொழும்—வன விலங்குகளும் வணக்கம் செய்யும் – என்பது இந்துமத நூல்கள்மட்டுமே இயம்பும் கருத்து. கிறிஸ்தவ ஸந்யாஸிகளில் செயிண்ட் பிரான்ஸிஸ் ஆப் அஸிஸி (StFrancis of Assisi0 இப்படிப்பட்டவர்.

6.கொஞ்சமாகச் சாப்பிடு
அதிகம் சாப்பிடாதே (ச்லோகம் 55, 59); நிறைய சாப்பிட்டால் புலன்கள் சேட்டை செய்யும் என்றும் மநு எச்சரிக்கிறார்.
இதோ ஆறாவது அத்தியாயத்தின் இறுதிப் பகுதி—
TAGS- மநு நீதி நூல்- பத்து கட்டளைகள், இல்லறம், நல்லறம், கிரஹஸ்தன்,வானப்பிரஸ்தன்



-சுபம்-









—subham—
You must be logged in to post a comment.