
Written by S Nagarajan
Date: 9 DECEMBER 2018
GMT Time uploaded in London –7- 28 am
Post No. 5755
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
ஆங்கில இலக்கியம்
அந்த நல்ல காரியம் நடக்காதா? யார் சொன்னது? அது நடக்கும்; நடந்தே தீரும்!
ச.நாகராஜன்
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஒரு பிரச்சினை போல் இன்னொன்று இல்லை; ஒருவருக்கு உள்ளது போல இன்னொருவருக்கு இல்லை.
மனம் கலங்கி நின்றால் நிற்க வேண்டியது தான். நகர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கும்.
நிதானமாகச் சிந்தனை செய்; வழி பிறக்கும் என்பது தான் அனுபவ மொழி.

“For every problem under the sun,
There is a remedy, or there is none.
If there is one, try to find it;
If there is none, never mind it.”
என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் நம்மால் தீர்க்க முடியாத, பிறவியிலிருந்தே இருக்கும் அங்கக் குறைபாடுகள் போன்றவற்றை எண்ணி வருத்தப்படாமல் ஆக வேண்டியதைப் பார்க்கலாம்; கண் பார்வையற்ற ஹெலன் கெல்லர் போல வாழ்க்கையைச் சிறப்பாக்குவது எப்படி என்று யோசித்து வழி வகுத்துச் செல்லலாம்.
மார்க் ட்வெய்னின் கூற்று ஒன்று உண்டு:
Every complex problem has a solution which is simple, direct, plausible—and wrong.
எதுவும் முடியாது என்று சொல்லும் கோழைகளுக்கும், சோம்பேறிகளுக்கும் நடுவே இது முடியும் என்று சொல்பவனே ஹீரோ!
அமெரிக்காவின் பிரபல கவிஞரான எட்கர் ஏ கெஸ்ட் (Edgar Albert Guest பிறப்பு 20-8-1881 மறைவு 5-8-1959) உத்வேகம் மூட்டும் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். 11000 கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். டெட் ராய்ட் ஃப்ரீ ப்ரஸ் இதழில் அவரது கவிதைகள் வெளி வந்தன. மக்கள் கவிஞர் என்று அவர் அழைக்கப்பட்டார். ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் அவரது பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
தனது கவிதைகள் உருவாகும் விதத்தைப் பற்றி அவர் கூறும் போது, “எனக்கு அன்றாடம் நேரும் சின்ன நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு, அவை மற்றவர்களுக்கும் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்து எனது எளிய கவிதைகளைப் படைக்கிறேன்” என்றார்.
(“I take simple everyday things that happen to me and I figure it happens to a lot of other people and I make simple rhymes out of them.”)
அவரது கவிதைகளில் பிரபலமான கவிதை : It Couldn.t Be Done
It Couldn’t Be Done
by Edgar A. Guest
Somebody said that it couldn’t be done,
But he, with a chuckle replied
That maybe it couldn’t, but he would be one
Who wouldn’t say so till he’d tried.
So he buckled right in with the trace of a grin
On his face. If he worried he hid it.
He started to sing as he tackled the thing
That couldn’t be done, and he did it.
There are thousands to tell you it cannot be done,
There are thousands to prophesy failure;
There are thousands to point out to you, one by one,
The dangers that wait to assail you.
But just buckle in with a bit of a grin,
Just take off your coat and go to it;
Just start to sing as you tackle the thing
That “cannot be done,” and you’ll do it.

என்ன அருமையான கவிதை! ஆயிரம் பேர் கூறுவார்கள் அது முடியாது என்று. முயன்று தான் பாரேன். முடியும் என்பது தெரியும். அவர்கள் எதிர் வரும் அபாயங்களைக் கூறுவார்கள்; தோல்விக்கான ஆயிரக்கணக்கான காரணங்களைக் கூறுவார்கள்! சிரி; செயல்படு. அது முடிந்து விடும்!
Impossibe is a word to be found only in the dictionary of fools – என்று கூறிய நெப்போலியன் தான் குள்ளமாக இருந்த போதிலும் மனதால் உயர்ந்து வெற்றிகளை அள்ளிக் குவித்தான்.
Impossible என்று ஒரு கோழை கத்தும் போதே ஊக்கமுடைய ஒருவன் அந்த வார்த்தையிலேயே பார் – I ‘m possible -என்று வருகிறது என்று கூறுகிறான்.
ஊக்கமுடையவர் இல்லையெனில் இந்த உலகம் இந்த அளவுக்கு வந்திருக்குமா; சந்திரனுக்குத் தான் மனிதன் போயிருப்பானா!

அந்த நல்ல காரியம் நடக்காதா? அப்படி யார் சொன்னது? அது நடக்கும்; நடந்தே தீரும்!
ஆம்; I ‘m possible : It could be done!
tags- நல்ல காரியம், எட்கர் ஏ கெஸ்ட்
***