பாரதியார் QUIZ ‘க்விஸ்’- கேள்வி பதில் (Post No.5761)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 10 December 2018


GMT Time uploaded in London – 10-05 am

Post No. 5761


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டிசம்பர் 11 பாரதியார் பிறந்த தினம். நாம் எல்லோரும் அறிந்த விஷயங்களை நினைவு படுத்திக்கொள்ள முயல்வோம். இதோ கேள்விகள். 

விடைகள் கீழே:–

1.பாரதியாரின் பிறந்த நாள், இறந்த நாள் என்ன? மாதம், வருடத்துடன் தாருங்கள்.

2.பாரதியாரின் இயற் பெயர் என்ன?

3.பாரதியார் பிறந்த ஊர் எது? எங்கே உளது?

4.பாரதியாரின் தாய்,தந்தை பெயர் என்ன?

5.பாரதியார் பிறந்த நட்சத்திரம் எது?

6.பாரதியார் எந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்?

7.பாரதியார் பணியாற்றிய 4 பத்திரிக்கைகளின் பெயர்களைச் சொல்லுங்கள்

8.பாரதியார் வெளியிட்ட முதல் நூலின் பெயர் என்ன?

9.பாரதியாருக்கு பெண்ணுரிமை பற்றி ஊற்றுணர்ச்சி கொடுத்தவர் யார்?

10.பாரதியாருக்குத் தெரிந்த மொழிகள் என்ன?

11.பாரதியாரால் பாடப் பெற்ற வெளிநாட்டுத் தலைவர்கள் யார்?

12.பாரதியாரின் அரசியல் குரு யார்?

13.பாரதியார் எந்த வழக்கில் சிக்கி விடுதலை செய்யப்பட்டார்?

14. பாரதி எழுதி முடிவு பெறாத கதையின் பெயர் என்ன?

15.பாரதி என்ற பட்டத்தை அவருக்கு வழங்கியவர் யார்?

16.பாரதியார் பாடிய பாடல்கள் எத்தனை (சுமாராக)?

17.பாரதியாரின் மனைவி, மகள் பெயர் என்ன?

18.பாரதிக்கு இந்திய அரசு தபால்தலை வெளியிட்டது எப்போது?

19.பாரதிக்கு உதவிய, நெருங்கிய நண்பர்கள் யார், யார்? (சில பெயர்களைச் சொன்னாலும் போதும்.

20.வடநாட்டில் பாரதி படித்த ஊர் எது?

விடைகள்

1.பிறந்த தினம்- 11-12-1882; இறந்த தினம்- 11-11-1921

2.சுப்பிரமணியன்

3.எட்டயபுரம், திருநெல்வேலி மாவட்டம்

4.தாய்- இலக்குமி அம்மாள், தந்தை –

சின்னசாமி ஐயர்

5.மூல நட்சத்திரம், கார்த்திகை மாதம், தனுர் ராசி

6.மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கூடம்

7.சுதேச மித்திரன், இந்தியா, பாலபாரதம், சக்ரவர்த்தினி, விஜயா

8.ஸ்வதேச கீதங்கள், 1908, கிருஷ்ணசாமி ஐயர் வெளியிட்டது

9.சகோதரி நிவேதிதை (ஸிஸ்டர் நிவேதிதா என்னும் அயர்லாந்து மாது மார்கரெட் நோபிள்) சுவாமி விவேகாநந்தரின் சிஷ்யை

10.தமிழ்,ஆங்கிலம்,இந்தி, ஸம்ஸ்க்ருதம், பிரெஞ்சு

11.மாஜினி, வேல்ஸ் இளவரசர், பிரான்ஸ், பெல்ஜிய நாட்டு மக்கள், ரஷ்யப் புரட்சி; (எதிர்த்து எழுதிய பாடல்கள்- ஜார் அரசன், விஞ்ச் துரை)

12.பாலகங்காதர திலகர்

13.கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்

14.சந்திரிகையின் கதை

15.எட்டயபுரம் மன்னர்

16. இருநூற்று முப்பத்தைந்து பாடல்களுக்கு மேல்

17.மனைவியின் பெயர் – செல்லம்மா, மகள்கள் பெயர்- தங்கம்மா, சகுந்தலா

18. 1960-ஆம் ஆண்டு

19.குவளைக் கண்ணன், மண்டயம் சீனிவாச்சாச்சாரியார், துரைசாமி ஐயர், திருமலாச்சாரியார், கிருஷ்ணசாமி ஐயர், சுரேந்திரநாத் ஆர்யா, நீலகண்ட பிரம்மச்சாரி, பரளி நெல்லையப்ப பிள்ளை,எட்டயபுரம் மன்னர்.

 (நண்பர்கள்– அரவிந்தர், பரதிதாசன், வ.உ.சிதம்பரம்பிள்ளை)

20.காசி

பாரதியை நினைவு கூர்ந்த உங்களுக்குத் தமிழ்த்  தாயின் பரிபூரண ஆசிகள் உண்டு.

வாழ்க தமிழ்! வளர்க பாரதியின் புகழ்!!

tags–பாரதியார், QUIZ, ‘க்விஸ்’

–subham–

Leave a comment

Leave a comment