

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 December 2018
GMT Time uploaded in London – 11-43
Post No. 5788
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கம்ப ராமாயணத்தைப் பக்திசுவைக்காகப் படித்து அதில் முத்து எடுப்போர் பலர்.
கம்பனை இலக்கிய நயத்துக்காகப் படித்து பவளம் எடுப்போர் பலர்.
ஆனால் கம்பனை விஞ்ஞானியாக, உயிரியல் விஞ்ஞானியாகப்– பார்த்து ரஸிப்போர் சிலரே.
கம்பன் போகிறபோக்கில் கப்பல், கடல் வாழ் பிரணிகளைப் பற்றிச் சொல்லுவ தால், அந்தக் காலத்தில் தமிழர்களுக்குக் கடல் பற்றி எவ்வளவு தெரிந்திருந்தது என்பது நமக்குத் தெரிகிறது.
சோழ சாம்ராஜ்யம், ‘சிங்களம் புட்பகம், சாவகம் எனத் தீவு பலவினும் குடியேறி’ -நல்லாட்சி தந்த காலம் அது.
மாபூப்பாளம், மாநக்கவாரம், மாயிருடிங்கம் எனப் பல்வேறு தீவுகளில் சோழனின் புலிக்கொடி பறந்த காலம் அது.
இதே போல காளிதாசனும் கடல் பற்றிச் சொல்லுவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரத நாடு கடல் வணிகத்திலும், கடல் ஆதிக்கத்திலும் சிறந்து விளங்கியதைக் காட்டும்.
ரகு வம்ஸ மன்னர்களின் சிறப்பு பற்றி ஒரு பட்டியல் தருகையில் ‘இரு கடலையும் தொடும் நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்டனர்’ என்பான்.; கடலில் கப்பல் மூழ்கினால் அவற்றில் சென்றோரின் சொத்து யாருக்குச் சொந்தம் என்றும் விவாதிப்பான். அந்த அளவுக்குப் பாரதக் கொடி பட்டொளி வீசிப் பறந்த காலம் அது
.
கடல்வாழ் பிராணிகளை உவமையாகப் போகிற போக்கில் கம்பனும் காளிதாசனும் சொல்லுவது இரண்டு உணமைகளைக் காட்டும்
1.அந்தக் காலத்தில் இந்தியக் கடற்பரப்பிலும் திமிங்கிலங்கள் வாழ்ந்தன. (இப்போது கிடையாது).
2. மக்களுக்குத் திமிங்கிலம், சுறாமீன் போன்ற கடல் வாழ் பிராணிகள் பற்றி நன்கு தெரிந்து இருந்தது. ஏனெனில் உவமையாகக் கையாளப்படும் விஷயம் பலரும் அறிந்ததாக இருக்க வேண்டும் என்பது கவிகளின் மரபு இலக்கணம்.
கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில், வானரர் களம் காண் படலத்தில், ராமன் விட்ட அம்புகளால் என்ன நிகழ்ந்தது என்பதை விளக்கும் பாடல் இதோ:-
ஒழுகிப்பாயும் மும்மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற
பழகிற்கில்லா பல்திரை தூங்கும் படர் வேலை
முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர்
பொருள்
முதல் பாட்டில் ராமன் செலுத்திய அம்பால் வீழ்ந்தவர்களின் முகம் ரத்த வெள்ளதில் மிதந்தது; தாமரைக்குளம் போல இருந்தது என்றான்.
இந்தப் பாட்டில்,
ஒழுகிப் பாய்கின்ற மூன்று மத நீர்களையுடைய யானைகள் இன்னும் சாகவில்லை. அவைகள் ரத்த வெள்ளத்தில் இருந்து தலைகளைத் தூக்கி எழுந்திருக்க முயலும்; மீண்டும் விழும். இது எப்படி இருக்கிறது என்றால், பழகிய, அலை வீசும் கடலில் திமிங்கிலங்கள் கடலுக்குள் முழுகுவதும் எழுவதுமாக இருப்பதுப் போலக் காட்சி தந்தது.
இங்கே கடல் வாழ் பிராணிகளில் மிகப் பெரியதான திமிங்கிலத்தை ‘’மீன் அரசு என்பான். மீனவர்களும் அப்படித்தான் நினைப்பர். ஆனால் திமிங்கிலமோ மீன் வகையை சேர்ந்தது அல்ல. குட்டி போட்டு பாலூட்டும் (mammal) பிராணிகளை சேர்ந்தது. அது சுவாசிப்பதற்காக ஒவ்வொரு முறையும் வெளியே வரும். அப்படிச் சுவாசிக்கையில் அதன் அருகிலுள நீர் மேலே பீச்சி அடிக்கும். ஆனாலும் மீன் போலவே வடிவம்!
ஆகையால் மீன் அரசு என்று கம்பன் சொல்லுவதை ஏற்போமாக.
காளிதாசனும் இக்காட்சியை, கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே செப்பிவிட்டான். இதோ அந்தப் பாடல்…………………… (please follow the link given below)
கம்பன் கிட்கிந்தாக் காண்டத்திலும் திமிங்கிலம் பற்றிப் பேசுகிறான். எனது முந்தைய கட்டுரைகளில் சங்கப் பாடல்கள், காளிதாச ஸ்லோகம், கம்பன் பாடல்கள் உள. கண்டு களிக்கவும்.


திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் …
https://tamilandvedas.com/…/திமிங்கிலம்-பற்றிக…
திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426). Research Article Written by London swaminathan. Date: 7 December 2016. Time uploaded …
https://swamiindology.blogspot.com/2016/12/post-no3426.html
tags–கம்பனும் காளிதாசனும் , திமிங்கிலம்
–subham–