தோல்வியே வெற்றிக்கு முதற்படி! (Post No.5796)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 18 December 2018
GMT Time uploaded in London – 6-25  am
Post No. 5796


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஆயிரம் முறை தோல்வியுற்ற எடிசன்!

கண்டுபிடிப்புகளின் மன்னன் தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர் எத்தனை முறை தோல்வி அடைந்தார் என்பதை அறிந்தால் நாம், வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டோம்.

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம் கற்பிக்கிறது. நாம் எப்படிச் செய்யக் கூடாது என்பதை மனதில் ஆழப்பதிக்கிறது.

இதோ எடிசன் வாழ்வில்,

எடிஸன் ஒரு முறை ஸ்டோரேஜ் பாட்டரி கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றார். அவருடைய உதவியாளருக்கு ஒரே வியப்பு.

அட, இந்த ஆசாமி கூட ஒன்றைக் கடைசியில் கண்டு பிடித்து விட்டானே ! என்று.

அவர் உதைவியாளர் முகத்தில் ஆச்சரியக் குறி  பளிச்சிடுவதைக் கண்ட எடிசன் சொன்னார்:

ஏய் ,என்ன வியக்கிறாய்? இது நான் கண்டுபிடித்தவற்றில் முதலாவது இல்லை. 50,000 முறைகள் எப்படி செய்யக்கூடாது என்றும் கண்டுபிடித்து இருக்கிறேன்; தெரிஞ்சுக்கோ!– என்றார்.

தோல்வியே வெற்றிக்கு முதற்படி!.

Xxxxx

கவிஞர்ஷெல்லியின் ரசாயன மோகம்!

ஆங்கில இலக்கிய உலகத்தில் புலவர் ஷெல்லியை அறியாதோர் எவருமிலர். நமது பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆங்கிலக் கவிஞர். பாரதியார், தன்னை ‘ஷெல்லிதாசன்’ என்ற புனைப்  பெயருடனும்   அழைத்ததுண்டு.

அப்படிப்  புகழ்பெற்ற ஷெல்லிக்கு, ரசாயன பாடம் என்றால் ரொம்பப்  பிடிக்கும்.அதற்குக் காரணம் அவரது துவக்கப் பள்ளி ஆசிரியரே. அவர் ஷெல்லியின் அடிமனதில் வேதியியல் காதலை விதைத்து விட்டுப் போய் விட்டார். ஆனால் ஷெல்லிக்கோ புகழ்மிகு ஈடன் (Eton) பள்ளியில் ரசாயன பாடம் (Chemistry) படிக்க அனுமதி கிடைக்கவில்லை.

ஆகவே ஹாஸ்டல் அறையிலேயே சோதனைகளைச் செய்யத் துவங்கினார்.

 ஒரு நாள் அந்தப்புமாக சோதனை ரவுண்டுக்கு வந்த ஆசிரியருக்கு றையில் விநோதமான சப்தங்களைக் கேட்டு உள்ளே எட்டிப்பர்த்தார்.

அறை முழுதும் புகை மண்டலம்!

ஷெல்லியோ நீல நிறப்புகையில் ‘மங்கியதோர் நிலவு’ போலக் காட்சி தந்தார்.

ஏ சனியனே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று சப்தம் போட்டார்.

‘ஸார், நான் பேயை எழுப்பிக் கொண்டு இருக்கிறேன்’– என்றார் ஷெல்லி.

ஆசிரியருக்கு மஹா கோபம். ஏதோ ஒரு கருவியில் கையை வைத்தார். அடித்ததே ஒரு ஷாக் (shock)!

அம்மாடியோவ்! என்று அலறினார். அந்த ட்யூட்டர் பெயர் (Tutor Bethel) பெதல்.

Xxxx

முயற்சிதிருவினை ஆக்கும்

முயன்றால் வெற்றி பெறலாம்; அதுவும் தொடர்ந்து முயன்றால் வெற்றி பெறலாம். இதோ எடிசன் வாழ்வில் நடந்த சம்பவம்.

ரப்பரைக் கரைக்கும் ஒரு பொருள் உண்டா என்று கண்டுபிடிக்க  நிறைய விஞ்ஞானிகள், ‘பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர்.

தாமஸ் ஆல்வா எடிசனோ கண்டு பிடிப்பு மன்னன். ஆனால் அவர் விஞ்ஞானக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதை விட அனுபவத்திலேயே பல கருவிகளைக் கண்டு பிடித்தார்.

ஒருநாள் தனது சோதனைச் சாலைக்குள் நுழைந்தார். ரப்பர் துண்டுகளை எடுத்தார். வெவ்வேறு சோதனைக் குழாய்களில் வெவ்வேறு ரசாயனப் பொருளை நிறைத்தார். ஒவ்வொன்றிலும் ஒரு ரப்பரை நுழைத்தார். அதில் ஒரு திரவம் ரப்பரைக் கரைப்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டார்

பின்னர் என்ன  அவர் பாடியிருப்பார் என்பதை நாமே ஊகிக்கல்லாம்

“நந்தவனத்தில்  ஒரு ஆண்டி

அவன்  நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு  வந்தான் ஒரு தோண்டி

அதில் செய்த சோதனையை அன்று

வெளி உலகத்துக்கு உரைத்தானடி, பாடி,

ஆடி ஆடி ஆனந்தம் கொண்டானடி தோழி!

ஆடிப்  பாடி  கூத்து அடித்தானடி தோழி”.

tags– ரசாயன மோகம், ஷெல்லி,   எடிசன், 
நந்தவனத்தில் ஒரு ஆண்டி

–சுபம்–

Leave a comment

Leave a comment