இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுத் தூதர்கள் (5818)

AJANTA CAVE PAINTING

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 December 2018
GMT Time uploaded in London – 8-57 am
Post No. 5818


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்குப் பல நாட்டுத் தூதர்கள் வந்தனர். இது இந்திய வரலாற்றில் முக்கியத் தகவல்களைத் தருகின்றது.

ராமாயணத்தில் அனுமனும், மஹாபாரதத்தில் அக்ரூரன், கிருஷ்ணன் முதலியோரும் தூது சென்றதை நாம் அறிவோம். சங்க இலக்கியத்தில், அதன் பிறகு எழுந்த திருக்குறளில், தூதர் பற்றிய விஷயங்கள் நிறைய உள.

 ஆயினும் கீழ்க்கண்ட தூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து நிறைய தகவல்களை எழுதி வைத்துள்ளனர். இதே நேரத்தில் அசோகனும் அவனுக்கு முந்திய மன்னர்களும் வெளிநாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய செய்திகளையும் காணலாம்.

இதோ ஒரு பட்டியல்

சந்திரகுப்த மௌரியன் (கி.மு.302)ஆண்ட காலத்தில் கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகடார் என்ற மன்னன் மெகஸ்தனீஸ் என்ற தூதனை அனுப்பினான்.அவன் எழுதிய ‘இன்டிகா’ நூல்முழுக்கக் கிடைக்கவில்லை.ஆயினும் பிற்காலத்தில்  அர்ரியன்,தியோதரஸ் முதலியோர் கொடுத்த மேற்கோள்களில் இருந்து  நாம் மெகஸ்தனீஸ் சொல்லியவற்றை அறிகிறோம்.

அர்ரியன்= ஆர்யன்

தியோதரஸ் = தேவதரன்

ஸ்ட் ராபோ எழுதிய நூல்களிலிருந்து தெய்மஸ்ஸோஸ் ( தேவ மச்சான்) என்ற தூதர் மௌரிய மன்னன் பிந்துசாரனின் (கி.மு.300-273)அவைக்கு பல முறை வந்தது தெரிகிறது.

போரோஸ் (புரு) என்ற இந்திய மன்னன் ரோமானிய மன்னன் அகஸ்டஸ் அரசவைக்கு கி.மு 20-ல் தூதரை அனுப்பிய செய்தியையும் ஸ்ட் ராபோ நமக்கு அளிக்கிறார்.

பிந்துசாரன் அவைக்கு எகிப்திய மன்னன் டாலமி பிலடெல்போஸ் (கி.மு.285-247) அனுப்பிய தூதன் தியோநிஸோஸ் (தேவநிஸன்) வந்தான். எகிப்தில் புத்த மத பிரசாரம் வெற்றி பெற்றதாக அசோகனின் 13 ஆவது கல்வெட்டிலிருந்து அறிகிறோம்.

பாக்ட் ரி ய (வடமேற்கு இந்தியாவின் கிரேக்க ஆளுகை) அரசன்  அந்தியகிடஸ் (கி.மு140-130) ஒரு தூதனை விதிசா (பில்ஸா) நகருக்கு அனுப்பினான். அந்த தூதனின் பெயர்-ஹீலியோடரஸ். அவன் பரம பாகவதன் அதாவது மஹா விஷ்ணு பக்தன். அவன் வசுதேவனைப் போற்றி ஒரு பெரிய தூண் எழுப்பினான். அது இன்றுமுளது. அது ஒற்றைக்கல்லில் எழுப்பப்பட்ட தூண். இதிலிருந்து 2200 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள்,இந்துக்களாக மதம் மாறியது தெரிகிறது. ஏனெனில் கிரேக்க கடவுளர், வீரர்கள் ஆகியோரை அவர்கள் விஷ்ணுவாகவும்,சிவனாகவும் கண்டனர்.

ரோம் நகருக்கு இந்திய தூதர்கள் விஜயம்

2000  ஆண்டுகளுக்கு முன்னர் இதாலியில் ரோம் நகரிலிருந்த ரோமானிய சாம்ராஜ்யத்துக்கு நிறைய இந்திய தூதர்கள் சென்|றனர். இந்தியா முழுதும், குறிப்பாக தென் இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதுவும் தூதர் தொடர்பை உறுதிப்படுத்தும்.

ட் ராஜன் (கி.பி.98-117) 

ஹேட் ரி யன் (117-138)

அந்தோணியஸ் பயஸ் (138-161)

மார்கஸ் ஆரேலியஸ்(261-280)

ஹீலியோ ஜெரிலஸ் ( 218-222)

ஹீலியோ= சூர்ய

ஜூலியன் (270-275)

கான்ஸ்டன்டைன் (323-353)

ஜஸ்டீனியன் (527-535)

ஆகியோர் காலத்தில் இந்திய தூதர்கள் ரோம் நகருக்கு வந்ததாக எழுதி வைத்துள்ளனர்.

சிரியா நாட்டுக்கு இந்தியா, 218 முதல் 222 வரை தூதர்களை அனுப்பியது.

ஹர்ஷவர்தனன் (606-647), சீனாவுக்கு 641-ல் ஒரு தூதரை அனுப்பினான்.

இபின் படூடா என்ற தூதரை முகமது பின் துக்ளக் 1342ல் சீனாவுக்கு அனுப்பினன்.

சீனாவும் இருமுறை, ஹர்ஷனின் சபைக்கு தூதர் வாங் லியன்ட்ஸியை அனுப்பி வைத்தது.

முதல் முறை ஹர்ஷன் அவருக்கு வரவேற்பு அளித்தான். இரண்டாம் முறை வங் வந்தபோது, ஹர்ஷன் இறந்து போனதால் அர்ஜுனன் பதவியில் இருந்தான். அவன் சீன தூதரை விரும்பவில்லை. ஆயினும் வாங் 657-ல் புத்த கயா, வைசாலியில் புத்தமத பிரார்த்தனை செய்தார்.

அஜந்தாவில் தூதர் ஓவியம்

பாரஸீக (ஈரான்) மன்னன் இரண்டாம்  குஸ்ரூ சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேஸி காலத்தில் ஒரு தூதனனை அனுப்பி வைத்தான் இது கி.பி 627ல் நடந்தது. அவன் தூதர்  நியமன கடிதத்தைக் கொடுக்கும் காட்சி அஜந்தா குகை ஓவியங்ளில் தீட்டப்பட்டுள்ளது.

1443-ல் பாரஸீக சுல்தான் ஷாரூக் ஒரு தூதரை அனுப்பினான். அந்த தூதரின் பெயர்- அப்துர் ரஜாக். கோழிக்கோடு, விஜய நகரம் முதலிய இடங்களுக்குச் சென்ற அப்துர், விஜய நகரத்தில் கஜானாவுக்குக் கீழ் சுரங்கப்பாதைகள் இருந்த சுவையான செய்தியை நமக்கு அளிக்கிறார். அங்கே தங்கப் பாளங்கள் கொட்டிக் கிடந்ததையும், நாட்டு மக்கள் கை, கால்,மூக்கு, காது எல்லாவற்றிலும் நகைகளுடன் காட்சி தந்ததையும் விவரிக்கிறார். அந்த நாட்டில் 300 துறை முகங்கள் இருந்ததையும்  சொல்கிறார்.

கி.பி. 1615ல் மொகலாய மன்னன் ஜஹாங்கீர் அரசவைக்கு இங்கிலாந்திலிருந்து தாமஸ் மன்றோ வந்தார்.

சீன யாத்ரீகர்கள்

பாஹியான் (கி.பி.405-411), யுவாங் சுவாங் (630-645), இட்சிங் (671-695) ஆகிய சீன யாத்ரீகர்கள் புத்த சமய புனிதத்தலங்களைத் தரிசித்து புத்த மத நூல்கலைப் பயின்றனர். அவர்கள்   இந்தியா பற்றி மிக விரிவாக எழுதியுள்ளனர்.

அசோகன் தனது புதல்வி சங்க மித்ரையையும், மகன் மஹேந்திரனையும் இலங்கை முதலிய நாடுகளுக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரப்பினான்..

ஏசு கிறிஸ்து இந்தியா வருகை

ஏசு கிறிஸ்து இந்திய முனிவர்களிடம் பாடம் கற்றதை தற்கால பைபிளில் வெட்டிவீட்டனர்.அவருடைய 20 ஆண்டு இளமைப் பருவத்தைச் சொல்லாமம் ஏசு, மீண்டும் வந்தார் என்று பைபிள் சொல்கிறது அவர் 12 ஆண்டுகளுக்கு இமய மலையில், முனிவர்களிடம் பாடம் கேட்டதாக நிகலஸ் நோட்டோவிச என்ற ரஷ்ய பயணி எழுதிவைத்துள்ளார். அவர் திபெத்திய நூல்களை இதற்கு ஆதாரமாகக்  கொண்டுள்ளார்.

அக்பர் முதலிய மன்னர்களின் அவைக்கும் பல வெளிநாட்டினர் வந்தனர்.

இந்தியாவுக்கு யாத்ரீகர்களாகவும் தூதார்களாகவும் வந்த ஆல்பெருனி, இபின் படூடா, மார்க்கோ போலோ ஆகியோர் மிக விரிவாக இந்தியா பற்றி எழுதினர்.

மொகலாய,விஜய நகர சாம்ராஜ்ய செல்வ வளம் பற்றி ஜீன் பாப்டிஸ் டாவர்னியர் (1638-1663), நிகலோ மனூச்சி (1653-1708), பிரான்ஸ்வா பெர்னியர் (1656-1717) ஆகியோர் அற்புதமான தகவல்களைச் சொல்கின்றனர்

(இதுபற்றி தனி புத்தகமே எழுதலாம். டாவர்னியர், பெர்னியர் புத்தககங்கள், லண்டன் லைப்ரரிகளில் உள்ளன.நேரம் கிடைக்கும்போது அவர்கள் தரும் அற்புத விஷயங்களை உங்களுடன் பகிர்வேன்.

TAGS-  வெளிநாட்டுத் தூதர்கள், சீன யாத்ரீகர்கள்

–சுபம்–

Leave a comment

Leave a comment