
Written by S Nagarajan
Date: 4 JANUARY 2019
GMT Time uploaded in London – 8-53 am
Post No. 5881
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
புதிய சேனலில் 37 முதல் 48 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!
(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)
ச.நாகராஜன்
டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.
அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:
www.youtube.com —- ASacredSecret – Episodes
In Tamil
ariviyal aringar vazhvil ep 31
https://www.youtube.com/watch?v=oWQXGfrnla4&t=14s
லுட்விக் மாண்ட் உருவாக்கிய இரண்டு தலை பென்னி நாணயம்!
விஞ்ஞானி லுட்விக் மாண்டின் மகன் ஒரு சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு கடைக்காரரிடம் விலை கேட்க, அவர் சைக்கிளின் விலை ஒரு பென்னி தான் என்றார். ஆனால் அந்த நாணயத்தின் இரு புறமும் ராஜா தலை இருக்க வேண்டும் என்றார். பின்னர் நடந்தது என்ன?
இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 54 வினாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 32
https://www.youtube.com/watch?v=FOJ7bn0fcfg
ஆராய்ச்சி நினைப்பில் மறக்கும் மேதைகள்!
முட்டை வேக எவ்வளவு நேரம் ஆகும் என்பதைக் கணக்கிடச் சென்ற நியூட்டனின் கடிகாரத்திற்கு என்ன நேர்ந்தது? கூழாங்கல்லை ஆராயப் போன ஆம்பியர் லெக்சருக்கு தாமதமாகப் போகிறோமே என்று நினைத்து என்ன செய்தார்? மறதியால் வந்த விளைவுகளை இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 16 விநாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 33
https://www.youtube.com/watch?v=XTJGc3MWz60
ஐன்ஸ்டீன் எந்த நாடு தன்னை ஏன் ஏற்கும் என்பது குறித்துப் பேசிய பேச்சு!

ரிலேடிவிடி கொள்கை வெற்றி பெற்றால் தன்னை பிரான்ஸும் ஜெர்மனியும் என்ன சொல்லும் , வெற்றி பெறாவிட்டால் அவை என்ன சொல்லும் என்பதை நகைச்சுவையுடன் ஐன்ஸ்டீன் எப்படி விளக்கினார்?
இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 5 விநாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 34
https://www.youtube.com/watch?v=9QYNRxZXxes
வெடி மருந்தின் மீது உட்கார்ந்த பாரடே
பிரிட்டனில் நடந்த ஒரு சுரங்க வெடி விபத்தை ஆராய கமிஷன் ஒன்றை அமைத்த பிரிட்டிஷ் அரசு மைக்கேல் பாரடேயை விசாரணையை நடத்தப் பணித்தது. அங்கு சென்ற பாரடே தனதுகேள்விக்குக் கிடைத்த பதிலால் அலறி ஓடினார். என்ன நடந்தது?
இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 59 விநாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 35
https://www.youtube.com/watch?v=FRh935P8bHg
டார்வினை ஏமாற்ற வந்த சிறுவர்களிடம் டார்வின் கூறிய பதில்!
பிரபல விஞ்ஞானி டார்வினை ஏமாற்றத் திட்டமிட்ட சிறுவர்கள் நான்கு பூச்சிகளின் பாகங்களை வெட்டி ஒரு புதிய பூச்சியைக் கொண்டு வந்து டார்வினிடம் காட்டினர். டார்வின் ஏமாந்தாரா? அவர்கள் கேட்ட கேள்விக்கு டார்வின் சொன்ன பதில் என்ன?
இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 39 விநாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 36
https://www.youtube.com/watch?v=OCeKC0RXTtk
கிரஹாம் பெல்லும் பிரேஜில் மன்னரும்
டெலிபோனைக் கண்டுபிடித்த இளைஞரான கிரஹாம்பெல் கண்காட்சியில் அதைக் காட்சிக்காக வைத்திருக்க அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. பிரேஜில் மன்னர் அதைப் பார்த்தவுடன் அனைவரும் டெலிபோனைப் பார்க்க வந்தனர். பிறகு நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 51 விநாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 37
அந்தக் காலத்திலும் துணுக்குச் செய்திகள் உண்டு!
கம்பியில்லாத் தந்தியைக் கண்டு பிடித்த மோர்ஸ் பற்றியும், லூயி பாஸ்டர் பற்றியும் பத்திரிகைகள் என்ன துணுக்குச் செய்தியை வெளியிட்டன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 3 விநாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 38
எடிஸன் சிகார் ஸ்டோரி
பிரசித்தி பெற்ற எடிஸன் சிகார் ஸ்டோரி தாமஸ் ஆல்வா எடிஸனைப் பற்றிய ஒரு சுவையான சம்பவம். அவர் தனக்கென பிரத்யேகமாக வைத்திருந்த சிகார்கள் அவர் மேஜையிலிருந்து காணாமல் போயின. உடனடியாக அவர் எடுத்த நடவடிக்கை என்ன? பின்னர் என்ன நடந்தது.இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 16 விநாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 39
மறதி மேதை நார்பர்ட் வெய்னர்
வெய்னர் ஒரு முறை வீட்டை மாற்றினார். அவரோ மறதி மேதை. ஆகவே அவர் மனைவி ஒரு துண்டுச் சீட்டில் புதிய வீட்டின் முகவரியை எழுதித் தர அதை அவர் பையில் போட்டுக் கொண்டார். துண்டுச் சீட்டிற்கு என்ன கதி நேர்ந்தது? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 42 விநாடிகள்
***
ariviyal aringar vazhvil ep 40
ஜார்ஜஸ் லெமைடர் ஒரு கத்தோலிக்க பாதிரி. விஞ்ஞானி. அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்றார். ஒரு மாணவர் பைபிள் பூமியின் வயது 5800 ஆண்டுகள் என்று சொல்கிறதே என்று கேட்டார். அதற்கு அவர் கூறிய பதில் என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 8 விநாடிகள்
***
ENGLISH EPISODES :-
HOW TO INVITE WEALTH THE HINDU WAY ( PART ONE)
ENG EPISODE 7
The various types of rudraksha, different classifications which bestow wealth, health and other worldly pleasures are explained in this episode. Single face to ten faces : What are the benefits? This video gives you the answer.
Time 1 Min 55 Sec
HOW TO INVITE WEALTH THE HINDU WAY ( PART TWO )
ENG EPISODE 8
ENGLISH
There is one great secret to invite the wealth. If you keep water in a small bowl in the north-east corner, it will remove all negative vibration. For more details please this video.
Gopalakrishnan P
/ January 4, 2019டிசம்பர் 14, 2019 அன்று http://www.youtube.comஇல் ‘ASacredSecret’ (ஒரே
வார்த்தை, மூன்று காபிடல்
லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற
சேனல்
துவங்கப்பட்டுள்ளது….
டிசம்பர் 14, 2019..?இன்னும் வரவில்லை.. தவறான தகவல் என நினைக்கிறேன்..
திருத்தலாமே..வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்
9994240629 9344053440
Santhanam Nagarajan
/ January 5, 2019நன்றி நன்றி நன்றி. தவறைப் பார்த்து விட்டேன். ஒரு வருடம் முன்னால் போய் விட்டேன்!!! உடன் திருத்தம் செய்யப்படும்.
ச.நாகராஜன் முகாம் : சான்பிரான்ஸிஸ்கோ