பொங்கல் வாழ்த்து! (Post No.5937)

Pongal picture from Bank of Baroda calendar

Written by S Nagarajan


Date: 15 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-47 am


Post No. 5937

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பொங்கல் வாழ்த்து!

ச.நாகராஜன்

மங்கலம் தங்கிட மனமகிழ் வெய்திட

          வந்தது இன்று பொங்கல் – நனி

          தந்தது இன்று பொங்கல்

வெங்கல வோசையில் மங்கலம் முழங்கிட

           வேணும் பொங்கல் மகிழ்ச்சி – நாம்

           பூணும் நன்கல முகிழ்ச்சி

சத்தியம் நெஞ்சிடை நித்தியம் தவழ்ந்திட

           தைநாள் ஆரம்பப் பெருநாள் – நம்

           தையலர் மகிழ்ந்திடு திருநாள்

நாடுடன் நம்மிடை பரவிடும் உறவிடை

          நாளும் பெருகிட நேசம் – கதி

          ஆளும் அழகிய ஈசன்

பாரதம் ஓங்கிட பயக்கலி செத்திட

         பாரீர் அறுவடைக் காட்சி  – நீர்

         வாரீர் இதுநம் மாட்சி

தஞ்சம் என்றொரு சொல்லும் தவறிட

          சஞ்சலப் பஞ்சம் செத்து  – இவை

          மிஞ்சிடும் நெல்மணி முத்து

சுதந்திர பாரதம் நிரந்தரம் நிமிர்ந்திட

          தோடுடை செவியன் பாதம்

           நாடுதல் இந்நாள் நீதம்

                                                     எழுதிய தேதி  : 29-10-1967

***

அன்புடையீர்

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

சூரியனைப் போற்றாத மனித நாகரிகமே இல்லை.

அனைவருக்கும் பொது சூரியன்.

அனைவரையும் வாழ வைப்பவன்.

ஆன்மீக ரீதியாக தொழத் தக்கவன்.

போற்றித் தொழுது வணங்குகிறோம்.

அறிவியல் ரீதியாக வியக்க வைப்பவன்.

வியந்து பிரமித்து  திகைக்கிறோம்.

இலக்கிய ரீதியாக வர்ணிக்கத் தக்கவன்.

இன்பப் பரவசத்துடன் எழுதிக் குவிக்கிறோம்.

புற இருளை நீக்குபவன்.

அக இருளை நீக்குபவன்.

ஓம் ஸ்ரீம்  ஹிரண்யகர்ப்பாய நம:

ஓம் ஹ்ரீம் சம்பத்கராய நம:

ஓம் ஐம் இஷ்டார்த்தாய நம:

ஓம் அம் ஸுப்ரஸந்நாய நம:

இந்த ரகசிய மந்திரங்களால் உன்னை வணங்குகிறோம்.

ஓம். உனது பொன்னொளிர் கதிர்களுக்கு நமஸ்காரம். உனது சக்தி வாய்ந்த சூரிய ஆற்றல் எமது இதயங்களையும் உணர்ச்சிகளையும் நலமுடையதாக ஆக்கட்டும்.

ஓம். குணப்படுத்தும் ஆற்றல் உடையவனே! படைப்பாற்றலைத் தருபவனே! அனைத்துச் செல்வங்களையும் அருள்பவனே. உனக்கு நமஸ்காரம்.

ஓம். அனைத்து இஷ்டங்களையும் பூர்த்தி செய்து அருள்பவனே. உனக்கு நமஸ்காரம்.

ஓம். எப்போதும் சுப்ரஸன்னனாக இருப்பவனே. உனக்கு நமஸ்காரம்.

இருளிலிருந்து எம்மை ஒளிக்குக் கொண்டு சென்று அருள்வாயாக!

****

Leave a comment

2 Comments

  1. Anbalagan Subbarayan's avatar

    Anbalagan Subbarayan

     /  January 15, 2019

    கவித ய் நன்று

    செவ்., 15 ஜன., 2019, முற்பகல் 11:18க்கு, Tamil and Vedas எழுதியது:

    > Tamil and Vedas posted: ” Pongal picture from Bank of Baroda calendar
    > Written by S Nagarajan Date: 15 JANUARY 2019 GMT Time uploaded in London –
    > 5-47 am Post No. 5937 Pictures shown here are taken from various sources
    > including google, Wikipedia, Facebook”
    >

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  January 15, 2019

    thanks a ton Sri Anbalagan Subbarayan . S.nagarajan Camp SanFrancisco

Leave a comment