
Written by S Nagarajan
Date: 18 JANUARY 2019
GMT Time uploaded in London – 5-32 am
Post No. 5950
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
Clutter-ஐ ஒழியுங்கள் என்ற கட்டுரையைப் படித்து விட்டு இதைப் படித்தால் இதன் முக்கியத்துவம் புரியும். கட்டுரை எண் 5083 வெளியான தேதி – 7-6-18((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
BAGUA – பாகுவா அற்புதம்!
ச.நாகராஜன்
சீனர்களின் புராதனக் கலைகளில் ஒன்று தான் பெங்-சுயி. அதாவது wind and water -காற்றும் நீரும்!
நிலம்,நீர், காற்று, தீ, வான் ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் பிரத்யேகமான சக்தி ஒன்று உண்டு என்றும் அதை நமது முன்னேற்றத்திற்கும் வளத்திற்கும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பது இந்த சாத்திரத்தின் அடிப்படைக் கொள்கை.
மனிதனுக்குத் தேவையான எட்டு ஆதாரங்களை பட்டியலிடுகிறது பெங் சுயி.
ஆரோக்கியம் -HEALTH
சுய முன்னேற்றம், உத்தியோகம் – SELF, CAREER
ஞானம், அறிவு -WISDOM, KNOWLEDGE
பணம், செல்வம், வளம் – WEALTH
புகழ், எதிர்காலம் – FAME, FORTUNE
குடும்பம்,உறவுகள், சமூக உறவு – FAMILY ,RELATIONSHIPS, COMMUNITY
படைப்பாற்றல், குழந்தைகள் – CREATIVITY ,CHILDREN
பயணம், நண்பர்கள், உதவுவோர் -TRAVEL, HELPFUL PEOPLE
ஆரோக்கியம்-HEALTH
இதில் ஒரு தனிநபரின் உடல், மன ஆரோக்கியம் அடங்குகிறது. உடலை வாட்டும் நோய்களை எதிர்கொள்வது எப்படி என்பதையும் இது குறிக்கிறது.
பணம், செல்வம், வளம் – WEALTH
உங்கள் செல்வ வளம், உங்களால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதற்கான திறன், செல்வத்தை ஆகர்ஷிக்க உங்களது வலிமை என்ன, அதை தக்க வைத்துக் கொள்ளும் திறன் எப்படி ஆகியவை இதில் அடங்கும்.
புகழ், எதிர்காலம் – FAME, FORTUNE
மற்றவர்கள் முன் நீங்கள் எப்படிக் காட்சி அளிக்கிறீர்கள், உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி மதிக்கிறார்கள், உங்களது வேலை, எதிர்காலப் பயணம், இலட்சியம், அதற்கான ஆதார வளம் ஆகியவை இதில் அடங்கும்.
குடும்பம், உறவுகள்,சமூக உறவு – FAMILY, RELATIONSHIPS (LOVE, MARRIAGE – COMMUNITY
உங்களது பெற்றோர், உங்களது உடனடி இரத்த பந்தம், பாரம்பரியம், அண்டை வீட்டார்,சுற்றம், இருக்கும் நகரில்/ இடத்தில் வாழ்வோர் ஆகியவை இதில் அடங்கும்.
திருமண வாழ்க்கை, காதல், மனைவி, உறவுகளுடனான உங்கள் தன்மை, தொடர்பு ஆகியவையும் இதில் அடங்கும்.
படைப்பாற்றல், குழந்தைகள் – CREATIVITY ,CHILDREN
படைப்பாற்றல் திறன், குழந்தைகள், தன்னை முன்னிலைப்படுத்தல், புது உத்திகளைச் செயல்படுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
பயணம், நண்பர்கள், உதவுவோர் -TRAVEL, HELPFUL PEOPLE
நண்பர்கள், எதிலும் வந்து உதவுவோர், ஒரு காரியத்தில் உங்களை ஆதரிப்போர், (உங்களது நலத்தில் அக்கறை உள்ள டாக்டர், வக்கீல், குரு ஆகிய அனைவருமே இதில் அடக்கம் ), பயணம் ஆகியவை இதில் அடங்கும். ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
சுய முன்னேற்றம், உத்தியோகம் – SELF, CAREER
இதில் நமது உத்தியோகம், தன்னைப் பற்றிய மனச்சித்திரம், உங்கள் கொள்கை, உங்கள் வாழ்க்கைக் குறிக்கோள் அனைத்தும் அடங்குகிறது.
ஞானம், அறிவு -WISDOM, KNOWLEDGE, SPIRITUAL GROWTH
ஞானம் என்பதைப் பற்றிய உங்கள் விளக்கம் என்ன, உங்களது ஆன்மீக வாழ்க்கை, குறிக்கோள், எதைக் கற்கிறீர்கள், எதை மற்றவருக்குக் கொடுக்கிறீர்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
இந்த எட்டையும் எப்படி அடையலாம், இதில் நீங்கள் எந்த இடத்தில் இப்போது இருக்கிறீர்கள் என்பதை அறிய உதவும் ஒரு சாதனம் தான் பாகுவா!
அதைக் கீழே பார்க்கலாம்:

இது தான் பாகுவா.
இதை உங்களது பிரதான வாயிலில் வைத்துப் பார்த்தால் நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பது தெரிந்து விடும்.
இந்த பாகுவாவை பிரதான வாயிலில் எதிர்த்தாற் போல் உள்ள சுவரின் மையத்தையும் பாகுவா படத்தின் மையத்தையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வர வேண்டும். பின்னர் உங்கள் வீடே இந்த எட்டு பாகமாகப் பிரியும். எந்த திசை எதற்குரியது என்பதையும் பாகுவாவில் பார்க்கலாம். ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
எங்கெல்லாம் இந்த பாகுவா படம் சுட்டிக் காட்டும் பகுதியில் CLUTTER எனப்படும் அசுத்தம், அல்லது குப்பை கூளம் அல்லது வேண்டாத பயன்படுத்தாத பொருள்கள் உள்ளனவோ அவற்றை நீக்க வேண்டும்.
சி (Chi) எனப்படும் ஆற்றலை உள்ளே சீராக வரவழைக்க அதை தடைசெய்யும் தடுப்பாக உள்ள அனைத்தையும் மாற்ற வேண்டும்.
இதைத் தான் சீனர்கள் பெங் சுயி கலையாக முறையாக மாற்றினர்.
Clutter பற்றிய எனது கட்டுரையை- எண் 5083 -பிரசுரமான தேதி 7-6-18 – ஒரு முறை எடுத்துப் படித்துப் பாருங்கள்.
உங்களின் சுயமதிப்பீட்டை நீங்களே செய்து கொள்ளலாம். எந்த வளத்தை வேண்டுகிறீர்களோ அந்த திசையில் என்ன அசுத்தம் இருக்கிறது என்பதைக் கவனித்து அதை அப்புறப்படுத்தலாம். அந்த இடத்தை செழிப்பான ஒன்றாக ஆக்கிக் கொண்டு, வளமான வாழ்விற்கு வழி வகுத்துக் கொண்டு, உங்களை மாற்றிக் கொள்ளலாம். முன்னேறலாம்.
வாழ்க வளமுடன்!
***