ஒரு நாத்திகன் ஆத்திகன் ஆன கதை! (Post No.6067)

Written by S Nagarajan


Date: 13 February 2019


GMT Time uploaded in London – 6-54 am


Post No. 6067

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Source : 1973 Summer Showers in Brindavan – page 139

Leave a comment

4 Comments

  1. nparamasivam1951's avatar

    nparamasivam1951

     /  February 13, 2019

    சங்கரர் கூறிய கதை உண்மையில் நல்ல புத்தி புகட்டக் கூடியது

  2. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  February 13, 2019

    thanks

  3. Rama Nanjappa's avatar

    Rama Nanjappa

     /  February 14, 2019

    பாபா தமக்கே உரிய எளிய நடையில் விளக்கிவிட்டார்.
    அத்வைதத்தைப் பற்றி அறிவது வேறு, அதை அனுபவத்தில் உணர்வது வேறு.அத்வைதம் ஆன்மீக சாதனையின் இறுதி லக்ஷ்யம், இந்த நிலையை நடைமுறையில் கொண்டுவருவது சாத்தியமில்லை. நிர்விகல்ப சமாதி போன்ற அத்வைத நிலையை எய்தியவர்கள் 21 நாட்களுக்குமேல் இவ்வுடலைத் தாங்கியிருப்பது இயலாது என்று ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் கூறுவார், சுகர், நாரதர், சங்கரர் போன்றவர்களே தெய்வ சங்கல்பத்தால் உலகிற்கு உபதேசிக்க இந்த நிலையை எய்திய பின்னரும் உடல் தாங்கி இருந்தனார் என்பார். இல்லையெனில் நாம் உண்மையை அறிய இயலாது
    .
    நடைமுறையில் அத்வைதம் பற்றி ராஜரிஷி ஜனகர் சபையில் நடந்தாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார்கள். ஒரு சமயம் அவர் செய்த ஒரு யாகத்தின்போது யானை, குதிரை, பசு, ஒட்டகம் முதலியவை பரிசுப் பொருள்களாக வந்தனவாம். தவிர, பண்டிதர்கள், பிராமணர்கள், சாதுக்கள், பிற ராஜாக்கள் , பொது ஜனங்கள் ஆகியோரும் வந்தனர். ஜனகர் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்குரிய இடத்தில் தங்க வசதி செய்து தந்தார். யானை, குதிரை, பசு, ஒட்டகம் ஆகியவற்றையும் தனித்தனியே அததன் இடத்தில் கட்டிவைக்கச் சொன்னாராம். யாரோ ஒருவர் “என்ன இது, ஜனகர் பெரிய ஞானியாயிற்றே ! இப்படி வித்தியாசம் பார்க்கலாமா ?” என்றாராம். ஜனகர். ” யானை தின்பதை ஒட்டகம் தின்னுமா? குதிரை தின்பதை பசு தின்னுமா? பசுத் தொழுவமோ, குதிரை லாயமோ யானைக்குப் போதுமா? அததற்கும் உரிய இடத்தில் இருப்பது தான் அவற்றிற்கு வசதி. அது போல்தான் மக்களும். பண்டிதர்கள் சம்பாஷிப்பார்கள்; சாதுக்கள் அமைதியாக தங்கள் அனுஷ்டானத்தில் இருப்பார்கள் , ராஜாக்கள் தங்கள் கவுரவப்படி இடம் பார்ப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் தகுந்த இடம் இருந்தால் தான் திருப்தியாக இருக்கும். இறுதியில் திருப்தி என்பது ஒன்றுதானே? ” என்று சொன்னாராம்.

    சமீப காலத்தில் இதை பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள் பல சமயங்களில் விளக்கியுள்ளார். ஒரு சமயம் அவர் சொன்னது:
    “Advaita should be in Bhava, in the disposition of the mind,; it will not do for outside, worldly affairs. You are asked to look at everything with equality (sama drishti), but can we eat the same food that a dog eats? A handful of grains will do for a bird, but will that do for us? We eat a certain quantity of food but will that be enough for an elephant? So you should have the attitude of Advaita only in bhava,in the mind, but you should follow the world in other matters.” [ Letters From Sri Ramanasramam, Suri Nagamma, 26,February, 1946]

    ஸ்ரீ ரமணர் இதை உள்ளது நாற்பது அநுபந்தத்தில் ஒரு செய்யுளாகவும் எழுதினார்:
    அத்துவிதம் என்றும் அகத்துறுக ஓர்போதும்
    அத்துவிதம் செய்கையில் ஆற்றற்க- புத்திரனே
    அத்துவிதம் மூவுலகத் தாகும் குருவினோடு
    அத்துவிதம் ஆகாது அறி.
    இது ஆதிசங்கரர் இயற்றியாகக் கருதப்படும் “தத்வோபதேசம்” என்ற நூலின் 87வது சுலோகத்தின் தமிழாக்கமாகும்.

    நாத்திகர் ஆத்திகரான வேறு ஒரு நிகழ்ச்சியை நான் அறிவேன். எங்கள் ஊரில் “எழில் நிலவனார்” என்ற தமிழாசிரியர் இருந்தார். அசல் பெயர் ராமச்சந்திரன். சின்னசேலத்துக் காரர். திராவிடக் கழகக்காரர். 50களின் முற்பகுதியில் நாங்கள் உயர் நிலைப்பள்ளியில் படித்தகாலத்தில் வகுப்பிலேயே நாத்திகம் பேசுவார். (அது தவிர முற்போக்குக் கொள்கையென கருத்தடை, விவாகரத்து, மறுமணம் போன்றவற்றையும் பேசுவார்!) பள்ளிக்கு வெளியே கருப்புச்சட்டைக் காரர்களுடன்தான் அரட்டை அடிப்பார். வேறு யாருடன் பேசினாலும் கடவுள் மறுப்பு பற்றி விவாதம்தான். நாங்கள் பள்ளியைவிட்டு நீங்கி சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் பார்க்க நேர்ந்தது. பட்டையாக நெற்றியில் விபூதி, நடுவில் குங்குமப் பொட்டு. வியாழக்கிழமை பாபா பஜனையில் முதல் வரிசையில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார். அந்த பஜனைக் குழுவில் அவர்தான் பெரியவர் என்று சொன்னார்கள் ! இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை! ஆனால் இளவயதில் அவர் பேச்சைக்கேட்டு மயங்கியவர்கள் எத்தனை பேரோ ?
    “ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
    நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்” என்று மாணிக்கவாசக ஸ்வாமிகள் பாடுகிறார்! ஆத்திகம்-நாத்திகம் ஆகியவற்றிற்கிடையேயான போக்குவரத்து தொடர்ந்தே வரும் போலும்!

  4. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  February 20, 2019

    எழில் நிலவனார் எப்படி மாறினார்? அதையும் சேர்த்துத் தந்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு யுரேகா நொடி வரும் போலும்!
    நன்றி

Leave a comment