
Written by S.Nagarajan
swami_48@yahoo.com
Date: 25 FEBRUARY 2019
GMT Time uploaded in London – 11-03 am
Post No. 6118
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))







Rama Nanjappa
/ February 25, 2019பொதுவாக, ஒரு மொழியில் தேர்ச்சிபெற இலக்கண அறிவுடன் அம்மொழியில் அமைந்த பழமொழிகள், சிறப்புச் சொல் பிரயோகங்கள் ஆகியவற்றைக் கற்பது அவசியம். Good language is more than grammatically correct; it consists of a knowledge of the proverbs, idioms, verbal phrases and other peculiar usages. இதற்கு அம்மொழியில் இருக்கும் பழைய இலக்கியங்கள் பெரிதும் துணைசெய்யும்.
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ள பழைய இலக்கியங்கள் பெரும்பாலும் அறநெறி சார்ந்தவை; வாழும் முறையைக் கற்பிப்பவை. அதிலும் தமிழில் உள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ( திருக்குறள் உடபட) அறநெறி போதிப்பவை. இந்தியா முழுவதிலும் நிலவிய அறம் பற்றிய கொள்கையும் பழக்கங்களும் ஒன்றாகவே இருந்ததால், தமிழ் நூல்களில் உள்ள கருத்துக்கள் சம்ஸ்கிருதத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களினால் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்ட மாற்றங்கள் இதை மறைத்துவிட்டன.தமிழ் நாட்டு மாணவர்கள் பழைய தமிழ் நூல்களையே கற்பதில்லை, சுபாஷிதங்களை யார் படிக்கிறார்கள்?
இங்கு கொடுத்திருக்கும் சுபாஷிதங்களில் யமன்- டாக்டர் பற்றியது முக்கியமானது. இது இன்று 100க்கு 100 உண்மையாகிவிட்டது. கார்பொரேட் ஆஸ்பத்திரிகள் இன்று சூப்பர்மார்கெட் மாதிரியே செயல்படுகின்றன. அதுவும் இன்ஷ்யூரன்ஸ் இவற்றுடன் கைகோர்த்த பிறகு எல்லாம் கொள்ளைதான்! அவசியமில்லாத டெஸ்டுகள், அளவுக்கு மீறிய மருந்துகள், அதிகப்படியான சிகிச்சை, விலை குறைந்த மருந்துகள் இருக்கும்போதும் அதிக விலையுள்ள மருந்துகளைத் தருதல், தேவைக்கு மேல் தங்கவைத்து ரூம் வாடகை வசூலித்தல், பில் போடுவதில் குளறுபடி- என இவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் மிகவும் வருந்தத்தக்க செயல், உயிர் போகும்/போன நிலையிலும் அவசரசிகிச்சை என கட்டணம் வசூலித்தல். நோயாளி ஐ.சி யூவில் இருப்பதால் நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. உயிர் பிரிவதுடன் பணமும் கொள்ளை போகிறது.
இதில் சில சமயம் செல்வ நிலையில் இருந்து சரிந்தவர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். பிரதீப் குமார் என்ற புகழ்பெற்ற ஹிந்தி நடிகர். ஆஸ்பத்திரிக்குக் கட்ட பணம் இல்லை. பனம் கட்டாமல் உடலை அகற்ற ஆஸ்பத்திரி மறுத்துவிட்டது. கடைசியில் அவருடைய பழைய ரசிகர்கள் சிலர் பணத்தைக் கட்டி உடலை வெளியே எடுத்து வந்தனர். பழைய ஹிந்தி ஹிரோயின் மீனா குமாரிக்கும் இதே நிலை ஏற்பட்டது. பில் செட்டில் செய்ய அவரிடம் பணம் இல்லை. அவர் கணவர் கமால் அம்ரோஹியும் பணம் கட்ட மறுத்துவிட்டார். உடல் ஆஸ்பத்திரியில் ஊசலாடிய நிலையில் சினிமா உலக பிரமுகர்கள் சிலர் அம்ரோஹியை வற்புறுத்தி பணம் செலுத்தி உடலை மீட்டனர். கருத்த எமனுக்காவது இரக்கம் வரலாம், வெள்ளைக்கோட்டு டாக்டர்கள் எமனுக்கும் கீழ்ப்பட்டவர்கள். இதுதான் இன்றைய நிலை.
இந்த லிஸ்டில் வக்கீல்களையும் சேர்க்கலாம். கேசின் தீவிரத்தைப் பொறுத்து ஃபீஸ் உயரும், ஆனால் வழக்கு முடிந்து தீர்ப்பு வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தெரியாது! Anglo-Saxon சட்ட முறையைப் பின்பற்றும் எல்லா நாடுகளிலும் இந்த முறை இருந்தாலும், இந்திய நிலை மிகவும் மோசம். அமெரிக்காவிலும் சட்டம் என்று போனால் கொள்ளைதான். ஆனால் அங்கு இருதரப்பு வக்கீல்களும் தங்களிடம் உள்ள ஆவணங்கள், கேசின் நுணுக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கலந்து பேசி, பல சமயங்களில் கோர்ட்டுக்கு வெளியிலேயே ஒரு உடன்படிக்கைக்கு வருகிறார்கள். இங்கு இந்த நிலை இல்லை.
இந்தியாவின் சுதந்திரம் பரிபோனதற்கு அல்லோபதி டாக்டர்களும் வக்கீல்களும் பெருமளவுக்குக் காரணம் என மஹாத்மா காந்தி “ஹிந்த் ஸ்வராஜ்” புத்தகத்தில் 1909லேயே எழுதினார்.
டாக்டர்களும் வக்கீல்களும் மக்களின் கஷ்டத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் கருத்து. அதனால் டாகடர்களிடமிருந்தும் வக்கீல்களிடமிருந்தும் அவர் எதுவும் பெறமாட்டார்!
We are in the age of M.D., medical darkness, which seeks legislative protection from the light.
James Lendall Basford
You may not be able to read a doctor’s handwriting and prescription, but you’ll notice his bills are neatly typewritten.
Earl Wilson
Santhanam Nagarajan
/ February 25, 2019பிரமாதம்! சூப்பர்!! அருமை!!! நாகராஜன்