
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 7 March 2019
GMT Time uploaded in London – 13-56
Post No. 6162
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))








Rama Nanjappa
/ March 7, 2019அலெக்ஸாண்டர் கடவுளா? கடவுள் அம்சம் கொண்டவரா? இது சுவாரசியமான கேள்வி.
நாம் ஹிந்துக்கள் பொதுவாகவே மன்னர்களைக் கடவுளின் அம்சம் கொண்டவர்களாகவே பார்க்கிறோம்.[ உம். திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே] அலெக்ஸாண்டர் சாமானிய மன்னர் அல்ல. சிறுவயதிலேயே அதுவரை உலகம் காணாத அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார், உலகம் முழுதையும்- சமுத்திரங்களின் எல்லைவரையில் சென்று எல்லா இடங்களையும் வெல்லவேண்டும் என விரும்பினார், இத்தகைய ஆசை தோன்றியதே சாமானிய விஷயம் அல்ல. பத்து வருஷங்களில் 21 போர்களில் ஈடுபட்டு தோல்வி காணாமல் இருந்தார். தன்னுடன் போரில் வீரம் காட்டிய மன்னர்களை கவுரவமாக நடத்தினார்.
பிற நாடுகளை வெற்றிகொண்டது ஒரு புறம் இருந்தாலும், கிரேக்கர்களின் ஆதிக்கம் இந்த இடங்களில் எல்லாம் பரவியதால், கிரேக்க நாகரிகமும் [
Hellenic Civilization ]விரிவடைந்தது. பின்னர் வந்த ரோம சாம்ராஜ்யத்திற்கு அடிப்படையானது. இதன் தாக்கம் கிறிஸ்துவ மதம் பரவியதாலும் அதன் குருமார்களின் சூழ்ச்சியினாலும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டது, [ See: The Darkening Age: The Christian Destruction of The Classical World by Catherine Nixey, Pan, June 2018] ஆனாலும் 16/17ம் நூற்றாண்டிற்குப் பிறகு மறுமலர்ச்சி கண்டது. (Renaissance). கிரேக்க நாகரீகமே இன்றைய மேலைப் பண்பாட்டின் அடித்தளமாக அமைந்திருக்கிறது! [The Intellectual , philosophical and artistic foundations of the West].
அலெக்ஸாண்டரின் போர்த் திறமையும், அவர் கையாண்ட வழிமுறைகளும் இன்றளாவும் மிலிடரிக்காரர்களால் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர் இறந்ததற்காரண காரணம் பற்றி இன்றுவரை சரித்திர, விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.2014ல் நடந்த ஒரு ஆராய்ச்சியின் படி, இவர் அருந்திய மதுவில் விஷம் Veratrum album கலந்திருந்தது என்று சொல்லப்பட்டது.
33வயதிற்குள் இத்தனை சாதனை நிகழ்த்தி, உலக சரித்திரத்தின் போக்கையே மாற்றிய ஒருவரை ‘ஒரு மஹாபுருஷர்’ The Great என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ள முடியுமா?
இங்குதான் கீதை நமக்குக் கைகொடுக்கிறது! பத்தாவது அத்யாயத்தில் தன்னுடைய விபூதி (மஹிமை) களை ஓரளவுக்கு விளக்கிய பின்னர் பகவான் சொல்கிறார்:
यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम्।।10.41।।
யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஶ்ரீமதூர்ஜிதமேவ வா
தத்த தேவாவகச்ச த்வம் மம தேஜோ அம்ஶ ஸம்பவம்.
எந்த எந்த வஸ்து சிறப்புடையதாகவோ, லக்ஷ்மீகடாக்ஷம் பொருந்தியதாகவோ,, ஒளியுடையதாகவோ, உயர்ந்த சக்திபடைத்ததாகவோ உள்ளதோ, அந்த அந்தப் பொருள் எல்லாம் என்னுடைய சக்தியின் (தேஜோம்சத்தின்) அம்சத்தில் தோன்றியது என்று அறிதல் வேண்டும்.
இப்படிப் பார்த்தால் அலெக்ஸாண்டரும் ஒரு விபூதிதான் எனக் கொள்ளலாம் அல்லவா?
சமீப காலத்தில் அவதாரம்- விபூதி ( Avatara and Vibhuti)இவற்றுக்கிடையேயான வித்தியாசங்களை விளக்கி ஸ்ரீ அரவிந்தர் எழுதியிருக்கிறார். அவருடைய கருத்துப்படியும் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ஜூலியஸ் ஸீஸர் போன்றவர்கள் விபூதி அம்சம் உள்ளவர்களே! [ ஹிட்லர், ஸ்டாலின் போன்றவர்கள் ராக்ஷஸர்கள் ]
Rama Nanjappa
/ March 8, 2019ஒரு சிறு திருத்தம்/விளக்கம்.. ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக்காலம் [Renaissance] என்பது 14-17ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம். இச்சமயத்தில்தான் புராதன கிரேக்க, ரோமானியக் கருத்துக்கள் மீண்டும் ‘கண்டெடுக்கப்பட்டன’! இதன் அடிப்படையில்தான் கிறிஸ்தவ மதக்கொள்கையான ‘ மனிதன் பிறக்கும் போதே பாவச்சுமையுடன் பிறக்கிறான்- Man is born a sinner- என்ற கருத்து மறுக்கப்பட்டு, மனிதவியல் ( Humanism) என்ற புதிய கோணத்தில் எதுவும் அணுகப்பட்டது. இதற்கு அடிப்படை ” Man is the measure of all things” என்ற கிரேக்க தத்துவ ஞானி ப்ரொடகோரசின் ( Protagoras- different from Pythagoras) வாதம் தான். இன்றளவும் இதுவே மேலை நாகரீகத்தின் ஜீவநாடியாக இருக்கிறது.
2.ஹிட்லர், ஸ்டாலின் போன்றவர்கள் தீய சக்திகள். இவர்களை அசுரர்கள் எனவும் சொல்லலாம். ஸ்ரீ அரவிந்தர் அசுரர்களுக்கும் ராக்ஷஸர்களுக்கும் இடையேயான வேற்றுமைகளை விளக்கியிருக்கிறார். இவர்களும் உலகைப் பாதிக்கும் சக்திபடைத்தவர்களாக இருந்தார்கள். ஆனால் அதனால் அவர்களுக்கோ, உலகிற்கோ நன்மை ஏதும் விளையவில்லை.
Tamil and Vedas
/ March 8, 2019I AGREE WITH YOU. VALLUVAR ALSO SAYS, A MAN WHO LEADS AN IDEAL LIFE IN THIS WORLD,
WILL BE RANKED AMONGST THE GODS IN THE HEAVEN- KURAL 50