
Written
by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 5 April 2019
British Summer Time uploaded in London – 6-59 am
Post No. 6227
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 2-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
உடல் நலத்தைப் பாதிக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்!
ச.நாகராஜன்
பிளாஸ்டிக் பொருள்கள் அபாயம் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது. அது ஏன் அபாயம் என்பதையும் நன்கு புரிந்து கொண்டோமானால் அதைத் தவிர்ப்பது சுலபமாகி விடும்.
பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனப் பொருள்கள் மனித உடலில் உள்ள தைராய்ட் ஹார்மோன்களைப் பாதிக்கின்றன; இது வயதானவர்களையும் சரி, குழந்தைகளையும் சரி பாதிக்கவே செய்கிறது.
பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப் பொருளானது தைராய்டை அடைப்பதால் தைராய்டின் சமச்சீர்த்தன்மை பாதிப்புக்குள்ளாகிறது. அத்தோடு எஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டெரோன் ஆகியவையும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆகவே அதிக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோரின் உடலில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இயற்கையாக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய இரத்தத்தில் நச்சுப் பொருள்களான பி.பி.ஏ மற்றும் தாலேட் (BPA, & Phthalates) ஆகியவை சேர்கின்றன.
மைக்ரோவேவ் சாதனங்களில் பிளாஸ்டிக் பொருள்களை வைக்கலாம் என்பது பொதுவாகக் கூறப்படுகிறது. அவை பத்திரமானவை என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் எந்த பிளாஸ்டிக் பொருளும் பாதுகாப்பு இல்லாதது; பத்திரமாகப் பயன்படுத்துக் கூடியது அல்ல. இதை நன்கு புரிந்து கொள்ளல் இன்றைய வாழ்க்கை முறையில் அவசியம்.
இதை ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.
கர்ப்பிணிப் பெண்கள் பிளாஸ்டிக் பொருள்களில் பாக் செய்யப்பட்ட ப்ரெட், வறுத்த கொரிக்கும் பண்டங்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்படும் நீர், ஜுஸ், ஆகியவற்றைச் சாப்பிடுகின்றனர். அத்துடன் மட்டுமல்லாது இளம் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் திரவ உணவைத் தருகின்றனர்.
பாட்டில்கள் சுத்தம் செய்யப்படுகின்றன என்று சொல்லப்பட்ட போதிலும் கூட, வெந்நீரால் அந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு முறை சுத்தம் செய்யப்படும் போதும் பிளாஸ்டிக் பொருள்கள் சூட்டினால் இளகி குழந்தைக்குத் தரப்படும் உணவுடன் சேர்கின்றன.
ஆகவே இதைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கை கர்ப்பிணிகள் தவிர்ப்பதோடு தங்களுக்குப் பிறக்கும் இளம் குழந்தைகளுக்கும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தலைத் தவிர்த்தல் வேண்டும். இதற்குப் பதிலாக ஸ்டீல் அல்லது கிளாஸ் டம்ளர்களைப் பயன்படுத்தினால் மூன்றே நாட்களில் மிகப் பெரும் மாறுதலைக் காணலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்; உடல் நலம் காப்போம்; சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவோம்!
***
