சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை அடைய எளிய வழிகள்!(Post No. 6243)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 9 April 2019


British Sumer Time uploaded in London – 5-17 am

Post No. 6243

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 5-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை

சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை அடைய எளிய வழிகள்!

ச.நாகராஜன்

சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் பெரு நகரங்களில் அதிகரித்து வருவது உற்சாகமூட்டும் ஒரு விஷயமாக அமைகிறது.

அவ்வப்பொழுது நடக்கும் விருந்துகளில் பங்கு கொள்வோர் தமக்கு வேண்டிய ஸ்பூன் மற்றும் டம்ளர்களைத் தாங்களே கொண்டு வர ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல அறிகுறியாகும்.

பேப்பரினால் ஆன கப்புகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், தட்டுகள் ஆகியவை இதன் மூலம் அறவே தவிர்க்கப்படுகின்றன. இதனால் சுற்றுப்புறச் சூழலில் இதுவரை ஏற்பட்டு வந்த மாசு குறைகிறது.தனி நபர்கள் நடத்தும் விருந்துகள், சமூக விருந்துகள், அரசு நடத்தும் விருந்துகள் ஆகியவற்றில் இப்படி அவரவரே தங்களுக்குத் தேவையான தட்டு முதல் ஸ்பூன் வரை கொண்டு வருவதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற முன்வர வேண்டும்.

ஜீரோ வேஸ்ட் – அதாவது கழிவே இல்லை என்ற நிலையை உருவாக்க ஒவ்வொருவரும் மனதளவில் தயாரானால் கழிவற்ற நகரை உருவாக்க முடியும்.

குறிப்பாக அதிக ஆபத்தை விளைவிக்கும் மின்னணுப் பொருள்கள் பற்றிய கழிவை பெரு நகரங்களில் வாழ்வோர் நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

பயனற்ற மொபைல் போனின் பாகங்கள், மின்னணுப் பொருள்களின் சிதைந்த பகுதிகள், கம்ப்யூட்டரின் பகுதிகள் ஆகியவற்றை பொதுவான குப்பைத் தொட்டிகளில் போடாமல் இதற்கென தனியாக ஒரு தொட்டியை அமைத்து அதில் போடுதல் இன்றியமையாதது. ஈ வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகளை அதற்கென உள்ள தொட்டிகளில் போடுவதால் 90 சதவிகிதம் அபாயம் தவிர்க்கப்படுவதை பெரு நகரப் புள்ளி விவரங்கள் விளக்குகின்றன.

பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருவதால் அங்கெல்லாம் இப்படிப்பட்ட கழிவுத் தொட்டிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வருவதோடு மேல் மாடியில் சூரிய சக்தியை உபயோகப்படுத்த சோலார் பேனல்கள் அமைக்கப்படுகின்றன; இதுவும் வரவேற்கத் தக்க ஒரு அம்சமே.

இந்தப் புதிய நடைமுறைகள் பரவலாக அனைவராலும் பின்பற்றப்பட்டால் நகரத்தின் சுற்றுப்புறச் சூழல் பெரிய மேம்பாட்டை அடையும் என்பதில் ஐயமில்லை!

***

Leave a comment

Leave a comment