
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 10 April 2019
British Sumer Time uploaded in London – 7-54 am
Post No. 6248
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 6-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
நீரின் வகைகளும் அவற்றின் பயன்பாடும்!
ச.நாகராஜன்

அறிவியல் வளர வளர அதன் அடிப்படையில் ஒவ்வொன்றிற்குமான தர நிர்ணயமும் துல்லியமாக நிர்ணயிக்கப்படுகிறது.
ஆக இந்த வகையில் அன்றாடம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத நீரின் தரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொருவரும் அறிவது அவசியம்.
சுத்தமற்ற நீரால் ஏராளமான வியாதிகள் பரவுகின்றன என்பதை அனைவரும் அறிவோம். காலரா உள்ளிட்ட தொற்று வியாதிகளையும் இதர வியாதிகளையும் பரவாமல் செய்ய நீரின் தன்மையை உயரிய அளவில் தரமுள்ளதாக மேம்படுத்துவது இன்றியமையாததாக அமைகிறது.
நீரை மூன்று விதமாகப் பிரிக்கலாம். க்ளாஸ் ஏ (Class A), க்ளாஸ் சி (Class C) க்ளாஸ் ஏயும் இல்லை, சியும் இல்லை என்ற ரகம் (Neither in Class A nor Class C) ஆக இப்படி மூன்று விதமாக நீரின் தரத்தை நிர்ணயிக்க முடிகிறது.
க்ளாஸ் ஏ என்ற நீரில் ஒரு லிட்டர் நீரில் 6 மில்லி கிராமுக்கும் அதிகமாக ஆக்ஸிஜன் கரைந்திருப்பதைக் குறிக்கும் (Dissolved Oxygen more then 6 mg/l). தொற்றுநீக்கம் (Disinfection) செய்யப்பட்ட பின் இப்படிப்பட்ட நீர் பருகுவதற்கு உகந்ததாக அமைகிறது.
அடுத்து க்ளாஸ் சி என்பதில் நீரை முதலில் தொற்று நீக்கம் செய்து பின்னர் நன்னீராக்கும் முறை (water treatment process) கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் ஒரு லிட்டர் நீரில் 4 மில்லி கிராமுக்கும் அதிகமாக ஆக்ஸிஜன் கரைந்திருப்பதைக் குறிக்கும் (Dissolved Oxygen more then 4 mg/l).
இந்த இரண்டுமற்ற நிலையில் உள்ள நீரை மிகவும் உயரிய நிலை நன்னீராக்கும் வழி முறைப்படி நன்னீராக்கிய பின்னரே பயன்படுத்தலாம்.
குளிக்கும் நீருக்கும் கூட இப்படிப்பட்ட தர நிர்ணயம் இருப்பதால் உரிய முறையில் நீர் நன்னீராக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து அதன் பின்னரே பயன்படுத்தல் வேண்டும்.
கழிவு நீரை சுத்த நீருடன் சேர்க்காமல் இருக்கும் படி செய்வது கிராமப்புறங்களில் வாழும் ஒவ்வொரு வீட்டாரின் கடமையாகும்.
இன்றைய நவநாகரீக வாழ்க்கை முறையில் பெரு நகரங்களில் கேன்களில் அடைக்கப்பட்டு வரும் நீர் சுகாதார முறைப்படி நன்னீராக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே அவற்றைப் பயன்படுத்தல் வேண்டும்.
சீரைத் தேடின் நீரைத் தேடு என்பது தமிழ்ப் பழமொழி. அந்த நீரும் நன்னீராக இருப்பது அவசியம் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.
***

–Subham–
R.Nanjappa (@Nanjundasarma)
/ April 10, 2019பொதுவாக் இன்று விஞ்ஞானம் என்ற பெயரில் குட்டை குழப்புகிறார்கள்.
உலகில் தூய நீருக்கு மழையே ஆதாரம். கடல் நீர் உட்பட எல்லா வகை நீரும் சூரிய வெப்பத்தினால் மேகமாக மாறி மழையாகப் பெய்கிறது. இதுவே குளம், குட்டை ஏரி ஆறு என பல வகைகளில் பயன்பட்டு வந்தது.
50 வருஷங்களுக்கு முன்பு வரை வீடுகளில் கிணறு இருக்கும். இதில் வரும் நீரே குடிப்பதற்கும், சமையலுக்கும், குளிப்பதற்கும் பிறவற்றிற்கும் பயன்படும். இந்த நீர் கிணற்றில் ஊறும். இதற்கு ஆதாரமாக இருந்தது ஊரின் அருகே இருந்த ஏரிகளும் பிற நீர் நிலைகளும் ஆகும். இந்தியாவில் மழை வருவது பருவகாலத்தில் மட்டும்தான். அதனால் இந்த மழை நீரையே எங்கும் சேமித்து வைப்பார்கள். கோடையில் ஏரிகளில் நீர் வற்றும் போது வீட்டுக் கிணறுகளிலும் நீர் குறையும். பின்னர் மழைக்காலத்தில் நீர் நிலை உயரும். இன்று புதிய வீடுகளில் கிணறுகள் இல்லை. பழைய கிணறுகளும் வற்றிவிட்டன.
வீடுகளில் நீரை அளவாக பயன்படுத்துவார்கள். சாதாரணமாக வீட்டில் பயன்படும் நீர் வயல் வெளிகள், தோட்டங்கள்,, வெற்றிடங்களில் நிரம்பும்.
அன்று இவற்றில் ரசாயனக்கலப்பு இல்லை, துணிக்குப் போடும் சோப்பும் இன்றைய டிடர்ஜன்ட் இல்லை. அதனால் அவற்றால் பாதிப்பு இல்லை. அன்று இருந்தது Dry Laterine. இதுவும் குளியலறையும் தனித்தனியாக இருக்கும். அதனால் குளிக்கும் நீரும் பிற கழிவுகளும் ஒன்றுசேராது. பயன்படுத்தப்பட்ட நீர் பெரும்பாலும் இயற்கையாகவே recycling மறு சுழற்சி செய்யப்படும். கிணற்று நீர் இயற்கையாகவே சுத்திகரிக்கப்படும் undergo natural filtering through layers of sand underground. பிற சுத்திகரிப்பு தேவையாக இருக்கவில்லை.
இது 50 வருஷங்களுக்கு முன்பு வரை சகஜமாக இருந்த நிலை.
விஞ்ஞானத்தின் பெயரால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
– நீர் சேந்துவதற்கு பதிலாக பம்பு செட்டுக்கள், குழாய்கள் வந்தன,
– ஆழ் துளைக் கிணறுகள் வந்தன. bore wells
– மேலை முறை கழிப்பறைகள் வந்தன.
– தூய நீர் தொழிற்சாலகளுக்கு அனுப்பப்பட்டு கழிவு நீராக மாறுகிறது.
– ஆயிரக்கணக்கான ரசாயனப் பொருள்கள் வந்துவிட்டன, பற்பசையிலிருந்து food processing , பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் என எல்லாவற்றிலும் ரசாயனமயமாகிவிட்டது. இவை அனைத்தும் நமது உடலிலும், இறுதியாக நீரிலும் தான் கலக்கின்றன.
ஆழ்துளைக் கிணறுகள் வந்ததால் பூமியில் நீரின் மட்டம் தாழ்ந்துகொண்டே போகிறது. நீரின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது, முறையும் மாறிவிட்டது. வீட்டின் எல்லாவித கழிவு நீர்களும் ஒன்று சேர்ந்து underground drainage வழியாக வெளியேறுகின்றன. இவை சுத்திகரிக்கப்படாமலேயே பெரும்பாலும் நீர் நிலைகளிலோ ஆறுகளிலோகலக்கின்றன. [ கங்கையும் காவிரியும் கூட இன்று சாக்கடைதான்.]
நகரங்களும் பெருகிவருவதால் அவற்றைச் சுற்றியுள்ள குளம், குட்டை, ஏரிகள் தூர்ந்து வருகின்றன. எஞ்சியதை ரியல் எஸ்டேட் திமிங்கிலங்கள் வளைத்துப் போட்டு விட்டன. இந்த நிலையில் மழை நீர் தங்கும் இடம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அந்த நீரும் அருந்துவதற்கோ, விவசாயத்திகோகூட தகுதியற்றதாக மாறிவிட்டது.
தூய நீருக்கு ஒரே ஆதாரம் மழை நீர்தான் என்று தெரிந்து, அதைச் சரியான முறையில் சேகரிக்க எந்த விஞ்ஞானியும் வழிசொல்லவில்லை.
எல்லா நீர்வளப் பரப்புக்களும் மாசடைந்து விட்டன. இதுதான் விஞ்ஞானம் எனப்படும் விபரீதத்தின் நிகர விளைவு. Water pollution on the surface of the earth is the net result of the so called scientific progress in the last 200 years. All the rivers in India and all the seas are polluted.
இவ்வளவும் நடந்தானபிறகு, விஞ்ஞானிகள் நீரைப்பற்றி நமக்கு போதிக்கிறார்கள்! திருடர்கள் காவல்காரராகிறார்கள்!
மாசுபடுவதைத் தடுக்க முயலவில்லை/இயலவில்லை; சுத்திகரிப்பு என்ற பெயரில் மேலும் பணம் சுருட்டுகிறார்கள்! பெரிய தொழில்களின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். பாட்டில்களில் விற்கப்படும் நீரின் தரமும் சரியில்லை என்று செய்திகள் வந்தவண்ண மிருக்கின்றன.
இந்தியா பருவமழையையே நம்பி இருக்கும் நாடு. விவசாய நாடு. மக்கள் தொகையும் ஜன நெருக்கமும் அதிகம். இந்த நிலையில் நமக்கு சரியான வழிசொல்ல எந்த மேலை நாட்டு விஞ்ஞானிக்கும் அருகதை இல்லை. சென்ற 60 ஆண்டுகளாக வளர்ச்சி என்ற பெயரில் நாம் தீவிரமாகப் பின்பற்றிவரும் பல முறைகள் நம் நாட்டின் நீர்வளத்தைப் போற்றிப் பெருக்கிப் பாதுகாப்பதாக இல்லை. தண்ணீர் பஞ்சம் விஶ்வரூபமெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
–
Santhanam Nagarajan
/ April 11, 2019உண்மை, முற்றிலும் உண்மை! பதிவுக்கு நன்றி!