
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 12 April 2019
British Sumer Time uploaded in London – 7-29 am
Post No. 6255
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 8-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
அண்டார்டிகா பனிப்பாறையில் (Antarctic Glacier) அபாயகரமான ஓட்டை!
ச.நாகராஜன்
உலகில் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறையான த்வைட்ஸ் க்ளேசியர் (Thawaites Glacier)
விஞ்ஞானிகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் பனிப்பாறையாகும். அதில் மிகப் பெரிய ஓட்டை ஒன்று விழுந்திருப்பதை அண்மையில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஓட்டை சுமார் 14 சதுர மைல் பரப்பளவாக இருப்பதோடு ஆயிரம் அடி உயரத்தைக் கொண்டிருக்கிறது. இதை நாஸா ஜெட் ப்ரொபல்ஷன் லேபரட்டரி தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அண்டார்டிகாவின் பெரும் பனிப்பாறை 1400 கோடி டன் ஐஸ்கட்டியை உள்ளடக்கியது. ஆனால் கடந்த 3 வருடங்களில் இது உருக ஆரம்பித்து விட்டது.
இப்படி ஐஸ் உருகுவதால் கடல் நீரின் மட்டம் உயரும் அபாயம் ஏற்படும். கடல் நீரின் மட்டம் உயர்ந்து விட்டால் கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
அத்தோடு மிகப் பெரிய எண்ணிக்கையில் மனிதர்கள் இடம் பெயர வேண்டும் அல்லது அவர்கள் மடிவர்.
த்வைட்ஸ் க்ளேசியர் ஏற்கனவே உலகில் கடல் நீர் மட்டம் உயர்வதற்கு சிறிதளவு காரணமாக இருந்தது.
அண்டார்டிகாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டாட்டன் க்ளேசியரும் (Totten Glacier) இப்போது உருகும் நிலைக்கு வந்து விட்டது.
இதனால் கடல் நீர் வெதுவெதுப்பான வெப்ப நீராக மாறுகிறது. மொத்தமாக பூமி வெப்பமயமாதலே இதற்கான காரணம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான அடிப்படையான காரணமாக எது இருக்கிறது என ஆராய்ந்து பார்ப்போமானால் மனிதன் உபயோகிக்கும் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகை தான் என்பது தெளிவாகிறது.
ஆகவே இந்த அபாயத்தை முழுவதுமாக மனித குலம் உணர வேண்டும். வாகனப் புகையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக விசேஷ வடிவமைப்புள்ள எஞ்ஜின்களைப் பயன்படுத்தும் கார்களை மட்டுமே வாங்க வேண்டும். அத்துடன் சோலார் எனப்படும் சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்களைப் பெருமளவில் பயன்படுத்த முன்வர வேண்டும்.
அண்டார்டிகாவின் உருகும் பனிப்பாறைகள் நமக்குத் தரும் செய்தியை நன்கு புரிந்து கொண்டோமானால் மனித குலம் வாழும்; தழைக்கும்!
***

