

Compiled by London swaminathan
swami_48@yahoo.com
Date: 19 April 2019
British Summer Time uploaded in London – 7-17 am
Post No. 6279
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
கோபால கிருஷ்ண பாரதியார் ஒரு யோகி, கவிஞர், சங்கீத மேதை.
அவர் நரிமணம் என்னுமிடத்தில் 1811ம் ஆண்டில் பிறந்து புகழ் கொடி நாட்டியவர்.
அவர் பற்றிய சுவையான இணைப்பைப் படிப்பதற்கு முன் சில் வார்த்தைகள்:–
அவர் வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரி.
தந்தை பெயர்— ராமசாமி பாராதியார்
தாத்தா பெயர்– கோதண்டராம ஐயர்
குருவின் பெயர்– கோவிந்த சுவாமி ஐயர், மாயூரம்
சீடர்களில் முக்கியமானவர்- மாயவரம் முனிசீப் வேத நாயகம் பிள்ளை
இறந்த ஆண்டு- 1896
நந்தனார் சரித்திரம் நூலாக வர உதவியவர் – பிரெஞ்சு அதிகாரி- சீசய்யா.
கோபால கிருஷ்ண பாரதியார் , தனது படைப்பில் பல புதுமைகளையும் சேர்த்தார்.
பெரியபுராணம், நம்பியாண்டாரின் திருத் தொண்டத்தொகையில் மிகச் சுருக்கமாக நந்தன் சரித்திரம் உளது. அதில் அந்தணர்ர்- நந்தன் வாக்குவாதம், இரவில் சிவ பெருமானே விவசாய வேலைகளைச் செய்து அந்தண நில உரிமையாளரை வியக்கச் செய்தது முதலிய சில அம்சங்களை கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்தார். பிற்காலத்தில் அவரது கீர்த்தனைகள் தண்டபாணி தேசிகர் முதலிய சங்கீத மேதைகளால் பாடப்பட்டதாலும் திரைப்படப் பாடல்களாக வந்ததாலும் மிகவும் பிரபலமாகின.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனைப் பட்டியலைக் காண்க
















