வத்தக்குழம்பு வைப்பது எப்படி? (Post No.6286)

Written by S Nagaarajan


swami_48@yahoo.com


Date: 20 April 2019


British Summer Time uploaded in London – 14-10

Post No. 6286

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கேலிச் சித்திரம்

வத்தக்குழம்பு வைப்பது எப்படி? (Post No.6286) by S Nagarajan

யாருடி போன்? திருப்பித் திருப்பி ஆஃப் செய்றே?

“அது தான் என் ஃபிரண்டும்மா. லக்ஷ்மிம்மா. வெளியூர்லேர்ந்து வந்திருக்கே. பசிங்கறே! இப்ப அவளோட பேச ஆரம்பிச்சா நீ சாப்ட்ட மாதிரி தான். அதான் அப்பறம் பேசிக்கலாம்னு போனை ஆஃப் பண்றேன்.”

“அட, லக்ஷ்மியா! அவளை ஏண்டி கட் பண்றே! அப்படி என்ன பேசுவா, அவ?”

“வத்தக்குழம்பு எப்படி வைக்கறதுன்னு கேட்பா. மோர்க்குழம்பு எப்படி செய்றதுன்னு கேட்பா! அப்பறம் நாளைக்கு விடிஞ்சு போகும்.”

“சீ! அபத்தமா பேசாதடி. அஞ்சு நிமிஷத்திலே நான் சொல்லிக் கொடுத்திடுவேன். அவளைக் கூப்பிடு. அவள் க்ஷேமமா இருக்காளான்னு கேட்ட மாதிரியும் இருக்கும்”

“அம்மா, உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நெனக்கிறேன். நீ இன்னிக்கி பசிலே மயக்கம் போட்டு விழப்போற. எதுக்கும் டாக்டர் இருக்காரான்னு செக் பண்ணிக்கறேன்.”

“ரொம்ப ஓவரா பேசாதடி. கூப்பிடு அவளை.”

***

“டீ, லக்ஷ்மி, அம்மா வந்திருக்கா. உன்கிட்ட பேசணுங்கிறா. அம்மா வத்தக்குழம்பு ஸ்பெஷலிஸ்ட். கேட்டுக்கோ.”…. “இந்தாம்மா போன். லக்ஷ்மி லைன்லே இருக்கா!”

“டீ லக்ஷ்மீ சௌக்கியமா? என்ன பிரமாதமா ஒரு கேள்வி கேட்டுடப் போற. வத்தக்குழம்பு வக்கறது என்ன பிரமாதம். சொல்லிட்டா போச்சு.”

“மாமீ, முதல்லேர்ந்து சொல்லுங்கோ மாமி”

“முதல்லேர்ந்து என்ன முதல்லேர்ந்து. அடுப்பை பத்த வை.”

“எந்த அடுப்பை மாமி?”

“இது என்ன கேள்வி?பழங்காலம் மாதிரி, அதான் எங்க காலம் மாதிரி விறகு அடுப்பா இருக்கு இப்ப…”

“மாமி, என்ன விறகு அப்ப யூஸ் பண்ணேள்?”

“நல்ல கேள்வி கேட்ட. சவுக்கு விறகு தான்! மாமர விறகு கண்ணை எரிக்கும். லோக்கல் விறகு வாங்கவே கூடாது. அது இப்ப எதுக்கு. ஸ்டவ்வை பத்த வை.”

“கேஸ் ஸ்டவ் தானே மாமி?”

“வேற என்ன ஸ்டவ் இருக்கு இப்ப?”

“இண்டக் ஷன் ஸ்டவ் இருக்கே மாமி”

“ஓ, அதைச் சொல்றயா, எலட் ரிக் கிட்ட போகவே வேண்டாம். ஸ்டவ்வை பத்த வை”

“எப்படி மாமி. தீக்குச்சி வச்சு பத்த வைக்கணுமா. இல்லே லைட்டரா?”

“அது உன் சௌகரியம். அடுப்பிலே வத்தக்குழம்புக்கு பாத்திரத்தை ஏத்தி தண்ணியை கொதிக்க வை.”

“என்ன பாத்திரம் மாமி, எவர்சில்வரா, கச்சா சட்டியா?”

“ஓ, அதச் சொல்றயா, திருவல்லிக்கேணி வந்தா வத்தக்குழம்பு வைக்கற ஸ்பெஷல் சட்டியே உனக்கு வாங்கித் தரேன். தண்ணியக் கொதிக்க வச்சயா?”

“மாமி, தண்ணி எந்த தண்ணி மாமி?

“எத்தனை தண்ணி இருக்கு?’

“கேன் வாட்டர் இருக்கு, ஃபில்டர் வாட்டர் இருக்கு. காவேரி வாட்டர் இருக்கு.”

“அட,போ, கேன் வாட்டர் இருந்தா அதையே எடேன்.”

“எந்த பிராண்டு மாமி. பிஸ்லேரி தான் ஒசத்திங்கிறா. ஆனா என்கிட்ட பட்டர்பிளை தான் வரது”

“பட்டர்பிளையா! அது பறக்கலையோன்னோ. பறக்காம இருந்தா சரி, அதையே வச்சுக்கோ. கொதிக்க வை”

“மாமி எத்தனை டம்ளர்னு சொல்லலையே மாமி”

“உத்தேசமா நாலு டம்ளர் எடேன்”

“டம்ளர் எத்தனை மில்லி லிட்டர் மாமீ?”

“ஓ, அதைக் கேட்கறயா, 150 மில்லி லிட்டர் டம்ளர்லே எடேன்”

கொதிக்க வை.

“மாமி, டெம்ப்ரேச்சர் எவ்வளவு இருக்கணும் மாமி?”

“இதென்னடிம்மா, கேள்வி. கொதிக்கணும் அவ்வளவு தான்!”

“டெம்பரச்சர் சொன்னா சௌகரியமா இருக்கும்”

‘ஒரு நூறு டிகிரி வச்சுக்கோயேன்”

“மாமீ, பாரன்ஹீட்டா, செண்டிக்ரேடா”

“நல்ல வேளை, கெல்வினை விட்டுட்டயே. எனக்குக் கொஞ்சம் தலை சுத்தறது. கொதிக்க வச்சயா இல்லையா?”

“மாமி, கோபிச்சுக்காதேள். நல்ல விவரமா சொல்றேள். அப்பறம்?”

“புளியைத் தனியாக் கரை”

‘எந்தப் புளியை மாமி, கொட்டை இருக்கறதா, இல்லை, கொட்டை எடுத்ததா? மங்களூர் புளியா இல்லை, பிராண்டட் புளியா?”

“ எது கிடைக்கறதோ அதை எடுத்துக்கோ. நன்னா, கரை.’

“எப்படி கரைக்கறது மாமி. வெறும் கையாலயா, க்ளவுஸ் போட்டுக்கணுமா?”

“ஏண்டீ, நீ லாஸ் ஏஞ்சலஸ்லேர்ந்து எப்ப வந்தே? அங்கே ஏதோ கோர்ஸ் படிச்சயாமே, அங்க எப்படி கரைக்கச் சொன்னா?”

“மாமீ! கோபிச்சுக்காதேள். சில சமயம் க்ளவுஸ் போட்டுக்கணும். சில சமயம் கூடாது. சரி புளியைக் கரைக்கறேன். எவ்வளவு கிராம்னு சொல்லலை. அதை உருட்டணுமா, ஸ்குய்ரா போடணுமா, ரெக்ட் ஆங்கிளா ஆக்கணுமான்னும் சொல்லலே!”

டொபீர்னு ஒரு சத்தம்!

“அம்மா, மயங்கிட்டயா? அதான் சாப்பிடாம பேசாதன்னு சொன்னேனே!”

“அடி லக்ஷ்மீ! அம்மா மயக்கம் போட்டுட்டா. புளியை கரைச்சு வச்சுக்கோ. ஞாபகமா அடுப்பை ஆஃப் பண்ணிடு. எப்படி ஆஃப் பண்ணணும்னு ஆரம்பிச்சுடாதே. சௌகரியப்பட்டபடி ஆஃப் பண்ணு. இப்ப நான் போனை ஆஃப் பண்றேன்.”

டொக்.

***

இப்படித்தான் வத்தக்குழம்பு வைக்கணும். ஸயிண்டிபிக்கா!

எப்ப சாப்பிடறதுன்னு கேக்கறீங்களா?

இதை மெய்ல்லே கேட்கறீங்களா. போன்ல கேட்கறீங்களா. நேரே கேட்கறீங்களா. தமிழா, இங்கிலீஷா, ஹிந்தியா எதிலே பதில் சொல்லணும்……

****

Leave a comment

Leave a comment