
WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 3 May 2019
British Summer Time uploaded in London – 7-13 am
Post No. 6337
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))








R.Nanjappa (@Nanjundasarma)
/ May 3, 2019இங்கு “ஸத்” ( சத்யம்)” என்னும் சொல் நமது ஆன்மிக மரபில் மிக ஆழ்ந்த பொருளுடையது. இதற்கு நேரான சொல் பிற மொழிகளில் காண்பது அரிது.
முதலில், “ஸத்” என்பது உள்ளது, என்றும் நிலையாக மாறாமல் இருப்பது என்று பொருள்படும். இதை இடத்திற்குத் தகுந்தபடி விளக்குகின்றனர்..
உள்ளதைச் சொல்வது (உண்மை), சொல்தவறாமை (வாய்மை), உண்மைக்கு மாறாமல் நடந்துகொள்வது ( மெய்ம்மை) என்ற மூன்று நிலைகளில் மூன்று சொற்களை பயன்படுத்துகிறோம். சத்யம் என்பதற்கு உள்ளது என்பதே நேரான அழகிய தமிழ்ச் சொல்.. ஸத்-சித்-ஆனந்தம் என்பது பரம்பொருளின் இலக்கணம். ஆனால் பொது வழக்கில் நாம் சத்தியம், உண்மை, வாய்மை, மெய்ம்மை என்ற சொற்களை சரிசமமாகப் பயன்படுத்துகிறோம்.
“சத்யமேவ ஜயதே” என்ற பாரத அரசின் அடிப்படைக் கோட்பாட்டை ( motto) “வாய்மையே வெல்லும்” என்று தமிழில் எழுதினார்கள். இது சரியான மொழிபெயர்ப்பு இல்லை. . வாய்மை என்பது சொல்தவறாமை- இது இங்கு குறிப்பிட்ட சத்யம் அல்ல. . இது முண்டக உபனிஷதத்தில் (3.1.6) வரும் வாக்கியம். இதற்கு ஆழ்ந்த பொருள் உண்டு. “ஸத்யமேவ ஜயதே, ந அன்ருதம்” என்பது முழுச்சொற்றொடர். இங்கு சத்யம் வாய்மை என்ற பொருளில் வரவில்லை.
सत्यमेव जयते नानृतं सत्येन पन्था विततो देवयानः ।
येनाक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत् सत्यस्य परमं निधानम् ॥
ஸத்யமேவ ஜயதே நான்ருதம்
ஸத்யேன பன்தா விததோ தேவயான:
யேனாக்ரமந்தி ரிஷயோ ஹி ஆப்தாகாமா
யத்ர தத் ஸத்யஸ்ய பரம் நிதானம்
உண்மையே வெல்லும், உண்மையற்றது அல்ல.
தெய்வத்தை அடையும் பாதை (ஆன்மீகப் பாதை) உண்மையாலேயே அமைந்துள்ளது. ஆசைகள் நிறைவேறப்பெற்ற ( ஆசைகள் அடங்கிய) ரிஷிகள்
அதன்வழியாகவே செல்கிறார்கள். அதுவே உண்மையின் மேலான இருப்பிடம்.
satyameva jayate nānṛtaṃ
satyena panthā vitato devayānaḥ
yenākramantyṛṣayo hyāptakāmā
yatra tat satyasya paramaṃ nidhānam
Truth alone triumphs; not falsehood.
Through truth the divine path is spread out
by which the sages whose desires have been completely fulfilled,
reach to where is that supreme treasure of Truth.
எனவே, சன்யாசிகள் சத்யத்தைக் குறிக்கும் தண்டத்தைச் சதா ஏந்துவது எவ்வளவு பொருத்தமானது!
இங்கு சத்யம் என்பது வாய்மை இல்லை என்பதை அன்றே ராஜாஜி சுட்டிக்காட்டினார். அரசினர் கண்டுகொள்ளவில்லை.
சத்யம் என்பது உள்ள பொருள். “உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதம்” என்பது பாரதியார் வாக்கு.
ரமண மஹரிஷிகளின் அடியார் தமிழ்ப்புலவர் முருகனார் “மெய்யின் இயல்பும் அதை மேவும் திறனும் நாம் உய்யும் படிச் சொல்லவேண்டும்” என்று மஹரிஷிகளை வேண்டினார். அப்போது ரமணர் சில பாடல்களை எழுதினார். அதன் முதல் செய்யுள் :
உள்ளதலது உள்ளவுணர் வுள்ளதோ உள்ளபொருள்
உள்ளலற உள்ளத்தே உள்ளதால்- உள்ளமெனும்
உள்ளபொருள் உள்ளல் எவன் உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல் உணர்.
மெய்ப்பொருளை வாயினால் விளக்க இயலாது அதை அனுபவத்தில்தான் உணரமுடியும் என்ற கட உபனிஷத்தின் கருத்தைச் (2.3.12)சொல்வதாக அமைந்த இச்செய்யுள் ஸத்பொருளின் இயல்பை உள்ளபடி காட்டுகிறது.
உரைஅவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அனுபூதி ஆனதுவும்
என்று நமது அருணகிரி நாதர் பாடுகிறார்!
எனவே சத்யம்- உள்ளபொருள் எவ்வளவு உயர்ந்த விஷயம்!