
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 June 2019
British Summer Time uploaded in London – 7-36 am
Post No. 6555
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுவதற்கு இறைவன் 118 விதமான செங்கற்களைப் பயன்படுத்தினான். அவைகளை நாம் மூலகம் என்றும் தனிமம் (ELEMENT) என்றும் அழைக்கிறோம். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் ஒரு மூலகம். நாம் பயன்படுத்தும் இரும்பு, வெள்ளி, தங்கம், வைரம்,பிளாட்டினம் தாமிரம் ஆகியனவும் மூலகங்களே. அணுகுண்டு தயாரிக்கப்பயன்படும் யுரேனியம், ப்ளூட்டோனியம் ஆகியவையும் மூலககங்களே.
இவ்வகையில் பிஸ்மத் (BISMUTH) என்னும் மூலகம் ஒரு உலோகம் ஆகும். வெள்ளை நிறக்கட்டி(WEISSE MASSE= WISMUTH= BISMUTH) என்ற ஜெர்மன் சொல்லிலிருந்து வந்தது இந்த பிஸ்மத். நமது உடலில் இது மிக மிக மிகக் குறைந்த அளவே உள்ளதால் இது உடலுக்குத் தேவை இல்லை என்று சொல்லலாம். ஆயினும் ஆரோக்கியமாக வாழவும், அழகுடன் வாழவும் பிஸ்மத் உதவுகிறது.
பெண்களின் நகங்களில் போடும் நெயில் பாலிஷ் பள,பள (PEARL EFFECT) என்று பிரகாசிக்கும். இதற்கு அதிலுள்ள பிஸ்மத் ஆக்ஸி க்ளோரைட் உதவுகிறது இது போல அவர்கள் பூசும் உதட்டுச் சாயமும் பள பள என்று இருக்க வேண்டுமானால் அதில் பிஸ்மத் இருக்கும்!

வயிற்று வலிக்கு பிஸ்மத் மருந்து
வயிற்றில் புண் ஏற்படுவதை அல்சர் (PEPTIC ULCER & GASTRIC ULCER) என்போம். இப்படிப் புண் ஏற்பட்டால் வயிற்று வலி இருக்கும்; காரமான பொருட்களைச் சாப்பிட்டால் வலி அதிகமாகும். இதை வயிற்று எரிச்சல் என்றும் சொல்வர். இது குடலின் முன்பகுதி வரையும் பரவ வாய்ப்பு உண்டு. ஒரு காலத்தில் இதைத் தீர்க்க பிஸ்மத் மிக்ஸர் (BISMUTH MIXTURE) கொடுத்தனர். இப்போது மில்க் ஆப் மக்னீஷியா, மற்றும் சோடியம், கால்சியம் கார்பனேட் கலந்த மருந்துகள் பிரபலமாகிவிட்டன. ஆயினும் இப்போதும் பிஸ்மத்
பயன்படுத்தப்படுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை (ACIDIC) உடைய திரவங்கள் சுரந்து பொருட்களை ஜீரணம் செய்ய உதவுகின்றன. இந்த அமிலம், புண்களுள்ள பகுதிகள் மீது படும்போது வலியோ எரிச்சலோ ஏற்படும். பிஸ்மத் சப்சிட் ரேட் (BISMUTH SUBCITRATE) கலந்த கரைசல் இதற்கு தீர்வு தரும். அதாவது வயிற்றுச் சுவரில் பதிந்து, புண்கள் ஏற்பட்ட பகுதி மீது அமிலம் படாதபடி பார்த்துக்கொள்ளும்.
மேலும் வயிற்றில் சுரக்கும் பெப்டிக் என்ஸம் (PEPTIC ENZYME) எனப்படும் திரவத்தைச் செயல்பட விடமல் தடுக்கிறது
தற்போதைய ஆராய்ச்சிகள் குடலில் வரும் புண்ணுக்கு —அல்சருக்கு—ஹெலிகோபாக்டர் பைலோரி (HELICO BACTER PYLORI) என்னும் பாக்டீரியா காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது . நமது உடலுக்குள் நன்மை செய்யும், தீமை செய்யும் – இரண்டு வகை பாக்டீரியாக்களும் இருக்கின்றன. தீமை செய்யும் — வயிற்றில் புண் ஏற்படுத்தும் –ஹெலிகோ பாக்டர் பைலோரி எளிதில் போகாது. இவைகளை அகற்ற பிஸ்மத் பொருளுடன் வேறு சில சக்திவாய்ந்த ஆண்ட்டிபயாடிக்ஸ் (பாக்டீரியா கொல்லி) உடன் அளிப்பர்.

இந்த பிஸ்மத்துக்கு வேறு ஏதேனும் உபயோகம் உண்டா?
உண்டு. இந்த உலோகத்துக்கு உருகு நிலை (271 டிகிரி சி) குறைவு. ஆகையால் மற்ற உலோகங்களுடன் இதைச் சேர்க்கையில் அவைகளையும் எளிதில் பயன்படுத்த முடிகிறது. எலெக் ட் ரி க் ப்யூஸ், தீயை அணைக்கும் தண்ணீர் தெளிப்பான் (AUTOMATIC SPRINKLE SYSTEM) , ரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் பிஸ்மத் பயன்படுகிறது..
கண்டுபிடித்தவர் யார்?
1400ம் ஆண்டில் பெயர் தெரியாத ஒருவர் இதைக் கண்டு பிடித்தார். அதற்குப் பின்னர் இதையும் ஈயத்தையும் ஒன்றோ என்று எண்ணிக் குழம்பினர். பின்னர் ஜார்ஜியஸ் அக்ரிகோலா, காஸ்பர் நியூமான், கிளாட் பிரான்ஸ்வா ஜெப்ப்ராய் ஆகியோர் வெவ்வேறு காலத்தில் இது ஒரு மூலகம் என்றனர்.
அமெரிக்கா, பொலிவியா, பெரு, ஜப்பான், மெக்ஸிகோ, கனடா முதலிய நாடுகளில் நிக்கல், கோபால்ட், வெள்ளி, தகரம் ஆகியவற்றை எடுக்கும் போது பிஸ்மத்தும் கிடைக்கிறது.
ரசாயனத் தகவல்கள்
இதனால் புறச் சூழலுக்கு ஆபத்து இல்லை.
இது கனமான, வெள்ளி போன்றநி றம் உடைய உலோகம். கொஞ்சம் இளம் சிவப்பு சாயல் இழை ஓடும்.
இதன் மூலக அட்டவணை எண்- 83
குறியீடு- பி ஐ — Bi
கொதி நிலை- 1560 டிகிரி C ஸி
உருகு நிலை 271 டிகிரி C
இதன் ஐஸ்டோப்புகளுக்கு கதிரியக்கம் கிடையது.
இது எளிதில் உடையக்கூடிய உலோகம் என்பதால் பிற உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகமாகவே பயன்படுகிறது.
இதை யுரேனியத்துக்கு மேல்வைசையில் வரும் உலோகங்களுடன் சேர்ந்து பயன்படுத்தியபோது போஹ்ரியம் (BOHRIUM) , மெய்ட்நே ரியம் (MEITNERIUM) முதலிய புதிய தனிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அதாவது திரைப்படத்தில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் டைரக்டர் போலச் செயல்பட்டது.
வாழ்க பிஸ்மத் !
–சுபம் —-
