சின்மயா லஹரி!(Post No.6676)

WRITTEN  by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 25 JULY 2019


British Summer Time uploaded in London – 6-25 AM

Post No. 6676


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ச.நாகராஜன்

ஸ்வாமி சின்மயாநந்த சரஸ்வதி (தோற்றம் 8-5-1916 சமாதி 3-8-1993) தனது சின்மயா மிஷன் மூலமாக உலகெங்கும் ஹிந்து மதத் தத்துவங்களைப் பரப்பினார். இதன் கிளைகள் இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் தொடங்கப்பட்டன. சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தக் கிளைகள் அத்வைத ஸித்தாந்தத்தைப் பரப்பி உலக மக்களை அத்வைத ஸித்தாந்தத்தின் மீது ஈடுபட வைத்தன. அவரது பகவத் கீதா உரைகளும் உபநிடத உரைகளும் அனைவரையும் கவர்ந்தன.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்

***

ஒரு சமயம் யாகம் ஒன்று நடந்தது. யாகசாலையில் எதிரொலி சத்தம் கேட்டது.

ஒரு அன்பர் ஸ்வாமிஜியிடம்,”ஸ்வாமிஜி, யாகசாலையில் ஏன் எதிரொலி கேட்கிறது?” என்று வினவினார்.

அதற்கு ஸ்வாமிஜி, “ அவைகள் கேட்கப்படாத வார்த்தைகள். ஆகவே திரும்பி வருகின்றன” என்றார்.

மனதில் உள் வாங்கிய வார்த்தைகள் திருப்பி வராதல்லவா?

“Swamiji, there is echo on the Yagnasala, Why?”

“Oh! They are words returned unlistened.” replied Swamiji

***

ஸ்வாமிஜி தனது குடிலில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த ஜன்னல் வழியே வெளியில் பார்த்தார். பூத்துக் குலுங்கும் மரம் ஒன்று தெரிந்தது.

“நமது தோட்டத்தில் மலர்ச் செடிகள் உள்ளன. மலர்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார் அவர்.

அவர் அருகில் இருந்த ஒரு பக்தர், “மலர்களைப் பார்த்தாலேயே உள்ளார்ந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றார்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“ஆமாம்! உள்ளார்ந்த மகிழ்ச்சியில் நாம் வாழவில்லை எனில், அதை எழுப்பித் தர  மலர்கள் தான் மிக அருகில் உள்ள ஒரு வழி” என்றார் ஸ்வாமிஜி, ஒரு அர்த்தமுள்ள புன்னகையுடன்!

“We have flowers in our garden.. It is indeed nice to see flowers” said Swamiji.

“The sight of flowers gives us sublime happiness” remarked one of the devotees by his side.

“Yes – If we cannot live in the sublime Happiness within ourselves, then flowers are the ‘nearest’ means to invoke it” added Swamiji with a meaningful smile.

***

பூஜ்ய குருதேவர் உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்று தன் உலகப் பயணத்தை முடித்துக் கொண்டு பம்பாய் விமானநிலையத்திற்குத் திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்கப் பெருந்திரளான கூட்டம் குழுமி இருந்தது. வி.ஐ.பி. அறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது பக்தர்களில் சிலர் அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள். (சுங்க அதிகாரிகள்). அவர்களும் ஸ்வாமிஜியை தரிசிக்க அங்கு வந்தனர்.

அவர்களில் ஒருவரைப் பார்த்துப் புன் சிரிப்புடன் ஸ்வாமிஜி கூறினார்:

“ நான் ஒரு பெரிய கடத்தல்காரன் என்பது உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியுமே! இந்த தடவை முந்தைய தடவைகளை விட அதிகமாக -ஏராளமான – இதயங்களைக் கடத்தி வந்திருக்கிறேன்” என்றார் அவர். அங்கு குழுமியிருந்தோர் அனைவரும் மலர்ச்சியுடன் சிரித்து மகிழ்ந்தனர்.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

A smiling Gurudev told one of those Customs Officers, “ You know that I am a great smuggler… this time I have smuggled in many more hearts than ever before.”  The observations sent the entire assemblage into a rapturous laughter.

***

Leave a comment

Leave a comment