
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 JULY 2019
British Summer Time uploaded in London – 14-15
Post No. 6682
Pictures are taken from various sources such as Facebook, google, friends,
websites etc ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
தர்ம- அறப்பணிகளுக்கு; யசஸ் – புகழ் பெறுவதற்கு; அர்த்த- முதலீடு செய்வதற்கு; காம- கேளிக்கைகளுக்கு; ஸ்வஜன- குடும்பத்தைப் பராமரிப்பதற்கு.
தர்மாய யசஸேஅர்த்தாய காமாய ஸ்வஜனாய ச
பஞ்சதாவிபஜன்வித்தமிஹாமுத்ர ச மோததே-
பாகவத புராணம்- 8-19-37
Xxxx
கல்வி கற்க முடியாத 5 வகையினர்
சண்ட- வன்முறைவாதிகள்; ஸ்தப்த- மந்த புத்தி உடையோர்; அலச- சோம்பேறிகள்; சரோக- நோயாளிகள், விஸ்மரண சீலாஹா–ஞாபக சக்தி இல்லாதோர்.
பஞ்ச வித்யாம் ந க்ருஹ்ணந்தி சண்டாஸ்தப்தா ச யேநராஹா
அலஸஸ்ச ஆரோகஸ்ச யேஷாம் ந விஸ்ம்ருதம் மனஹ
Xxxxxx
கொடிகள் 5 – வல்லீபஞ்சமூல
விதாரீ; ஸாரீவ; ரஜனீ; குடூசீ; அஜஸ்ருங்கீ
–ஸுஸ்ருத சூத்ர – 38-72
xxx
ஆடைகள் செய்ய உதவும் 5 மரப்பட்டைகள்
ந்யக்ரோத- ஆலமரம்; உடும்பரா- அத்திமரம்; அஸ்வத்த- அரச மரம்; ப்லக்ஷ- இந்திய அத்தி; வேடஸ- பிரம்பு
ந்யாக்ரதோதும்பராஸ்வத்தப்லக்ஷவேதஸவல்கலைஹி
ஸர்வைரேகாத்ர ஸம்யுக்தைஹி பஞ்சவல்கலமுச்யதே
–சப்தகல்பத்ரும 3-14
Xxx
சொல்லக்கூடாத 5 பெயர்கள் – வர்ஜ்ய நாமானி
ஆத்ம நாம- சொந்தப் பெயர்; குரு நாம- குருவின் பெயர்; க்ருப நாம- கஞ்சனின்/ கருமியின் பெயர்; ஜ்யேஷ்டாபத்ய நாம- மூத்த மகனின் பெயர்; களத்ர நாம- மனைவியின் பெயர்.
ஆத்மநாம குரோர்நாம நாமதிக்ருபணஸ்ய ச
ஸ்ரேயஹ காமோ ந க்ருஹ்னீயாத் னை ஜ்யேஷ்டாபத்யகளத்ர யோஹோ
XXX
பழங்காலத்தில் பெயர்களைச் சொன்னால் ஏனையோர் மந்திர தந்திரங்களால் வசப்படுத்துவர் என்ற நம்பிக்கை பல கலாசாரங்களில் இருந்தது.
இதனால் குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ஒரு பெயரும் வெளியே கூப்பிடுவதற்கு வேறு ஒரு பெயரும் வைத்திருந்தனர்.
எகிப்து, இந்தியா போன்ற நாடுகளில் மன்னர் முடி சூட்டும்போது சொல்லப்படும் அபிஷேக நாமாவை மட்டுமே நாம் அறிவோம். உன்மைப் பெயர் எவருக்கும் தெரியாது.
மாணிக்க வாசகர் போன்றோரின் உண்மைப் பெயர் இன்றுவரை நமக்குத் தெரியாது.
அவருக்கு இறைவன் அளித்த மாணிக்க வாசகன் என்ற பெயரும், திவாதவூர்க்காரர் என்ற பெயருமே நமக்குத் தெரியும்.
XXX

ஆண்டுகளின் வகைகள்
சாந்திரமாயன- சந்திரனின் இயக்கத்தின் பேரில் அமைந்தது; சௌரமான- சூரிய இயக்கத்தை அடிப்படையாக உடையது; சாவன- சோம யாகத்தை அடிப்படையாக உடையது; நக்ஷத்ர – விண்மீன் உதயத்தை அடிப்படையாக உடையது ;பார்ஹஸ்பத்ய – பிருஹஸ்பதி என்னும் குரு கிரஹத்தை அடிப்படையாக உடையது.
வத்ஸரஹ பஞ்சதா – சாந்த்ரஹ ஸௌரஹ ஸாவனோ நாக்ஷத்ரோ பார்ஹஸ்பத்ய இதி.
–தர்மசிந்துஹு
XXXX
5 வகை உலோஹங்கள்
காம்ஸ்ய- வெண்கலம்; அர்க- தாமிரம்; ரீதி- பித்தளை; லோஹ- இரும்பு; அஹிஜாதம்- ஈயம்
காம்ஸ்யார்கரீதி லோஹாஹ்ஜாஹம் தத்வர்தலோஹகம்
ததேவ பஞ்சலோஹாஹ்யம் லோஹவித்பிரு தாஹ்ருதம்
–ரஸரத்னஸமுச்சயஹ 5-212
XXXX
5 வகை உப்புகள்– லவணம்
ஸைந்தவம்- பாறை உப்பு; ரோமக- ஒரு வகை உப்பு; ஸமுத்ரம்- கடலுப்பு; பீதம்- செயற்கையாகச் செய்யப்பட்ட மருத்துவ உப்பு; ஸௌவர்சலம்- கரு உப்பு
ஸைந்தவம் ரோமகம் சைவ ஸாமுத்ரலவணம் ததா
பிதம் ஸௌவர்ச்சலாக்யம் ச யத்தத் லவணபஞ்சகம்
–ராஜ நிகண்டு
XXXX SUBHAM XXXXXXXXXX

R.Nanjappa (@Nanjundasarma)
/ July 26, 2019பெயரை வைத்து மந்திர-தந்திரங்களால் வசப்படுத்தும் முறை இன்னும் சில இடங்களில் இருக்கிறது. அதேபோல் புகைப்படத்தையும் வைத்து மந்திரிக்கக்கூடும் எனத்தோன்றுகிறது, எனக்குத் தெரிந்த ஒரு ஹோமியோபதி டாக்டர் ( ஆர்மியில் மேஜர்) புகைப்படத்தைவைத்து நோய்களை டயக்னோஸ் செய்வார்! முதல் முறை மட்டும் ஆசாமி நேரில் வந்தால் போதும். இந்தியாவில் இத்தகைய முறையைப் பின்பற்றுபவர்கள் 10,12 பேர் இருக்கலாம் என்று அவர் சொன்னார்.
ஒருவர் உபயோகித்த உடை அல்லது பிற பொருளைவைத்து வசியம் செய்யும் முறை சில இடங்களில் இருந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலேய கிராமப்புறங்களில் நடந்த இத்தகைய சில செயல்களைவைத்து தாமஸ் ஹார்டி ஒரு நாவலில் எழுதியிருக்கிறார்.