

WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 3 AUGUST 2019
British Summer Time uploaded in London –14-59
Post No. 6722
Pictures are taken from various sources. Museum pictures are taken by me ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

சென்னை அரசினர் அருங்காட்சியக வளாகம் பல அதிசய மரங்களைக் கொண்டுள்ளது. இங்கு கல்லாக மாறிய (படிம fossil tree அச்சு ) மரம் ஒன்றுள்ளது. திருவெள்ளக்கரை வரை சென்று படிம அச்சுப் பூங்காவைப் பார்க்க முடியாதவர்கள் இங்கு பல கோடி ஆண்டுகளில் கல் போல மாறிவிட்ட மரத்தைக் கண்டு களிக்கலாம்
வளாகத்தைப் பின்புறமாகச் சுற்றி வந்தால் மிகப் பெரிய பழம்தின்னி வௌவால்கள் Fruit eating bats நூற்றுக் கணக்கில் ( ஆயிரக் கணக்கில்??) பறப்பதையும் காணலாம்
ஆனைப் புளியங்கொட்டை மரம்????
ஆனால் பாவோபாப் (Baobab Tree) என்னும் மரத்துக்கு ஆனைப் புளியங்கொட்டை என்று பெயரிட்டுள்ளனர். அது தவறு என்று நினைக்கிறேன். மதுரைக் கல்லூரி தாவரவியல் சுற்றுலாவின்போது நானே ஏர்க்காடு சென்று ஆங்குள்ள ஆனைப் புளியங்கொட்டை மரத்தைப் பார்த்துள்ளேன். அதன் காய் தோற்றத்தில் புளியங்காய் போல இருக்கும். ஆனால் ஆறு அடி நீளம் வரை காய் இருக்கும். இதை யானைக் கொழுஞ்சி என்று கூறுவர் என விக்கி பீடியா கூறுகிறது . ஆனால் சென்னை வளாகத்தில் உள்ள மரம் அது அல்ல.
சென்னை வளாகத்திலுள்ள மரத்திற்கும் பொந்தன் புளி, ஆனைப் புளி என்று பெயர் உள்ளது. ஆயினும் இந்த மரத்தின் காய்கள் அரை அடி முதல் ஒரு அடி வரை மட்டும்தான் வளரும். ஆனால் ஏர்க்காட்டில் நாங்கள் பார்த்து, மதுரைக் கல்லூரி தாவரவியல் சோதனைக்கூடத்துக்குச் சேகரித்த புளியங்காயோ 5 அடி முதல் 6 அடி வரை இருந்தது. ஒரு வேளை இரண்டு மரத்துக்கும் ஒரே பெயர் (பாமர மக்கள் அளவில்) இருந்தாலும் வியப்பில்லை. நல்ல வேளையாக தாவரவியல் (Botanical name) பெயர் வேறு.
மற்றொரு மரம் சிவலிங்கப் பூ அல்லது நாகலிங்கப் பூ மரம் ஆகும்.
இது தவிர நங்கூரம், பீரங்கி முதலியனவும் வெளிச் சுவரை அலக்கரிக்கின்றன (படங்களைக் காண்க)












நான் முன்னர் எழுதிய கட்டுரைகள்
வியப்பூட்டும் அதிசய மரங்கள் | Swami’s …
https://swamiindology.blogspot.com/2012/10/blog-post_5.html
5 Oct 2012 – வியப்பூட்டும் அதிசய மரங்கள். Picture shows Udumpara Tree (Aththi in Tamil, Ficus glomerata or Ficus racemora). உலகில் மரத்தின் பெயரை நாட்டின் …
https://tamilandvedas.com/tag/கல்-மரம்/
21 Mar 2018 – திருவக்கரையில் ஒரு கல் மரப் பூங்கா இருக்கிறது. அங்கே இரண்டு கோடி ஆண்டுப் பழமையான கல் மரங்கள் இருக்கின்றன. 247 ஏக்கர் …
https://tamilandvedas.com/tag/ந்யக்ரோத/
த.லோ.சு.மயிலை தந்த தகவல்). (இந்த மரத்தை ஆனைப் புளியங்கொட்டை மரம் என்று சொல்லுவார்கள். தாவரவியல் படிப்பவர்களுக்கு இதுபற்றித் …
–subham–