
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 14 AUGUST 2019
British Summer Time uploaded in London – 8-59 am
Post No. 6775
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
1982ம் ஆண்டில் மங்கை பத்திரிக்கையில் வந்த கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். தமிழ் நாட்டுக் கட்சிகள் எப்படி பிளவுபட்டன, எப்படி உதயமாயின என்பதை விளக்கும் வரலாறு இது. வருங்கால சந்ததியினர் அறிய வேண்டிய விஷயம்
எழுதியவர்- ராஜலட்சுமி இளமதி
இதைப் படிப்பதற்கு இதை கம்ப்யூட்டரில் இதை இறக்கி பெரிதாக்கலாம்.







R.Nanjappa (@Nanjundasarma)
/ August 14, 2019இது நல்ல பதிவு. இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நாடுமுழுவதும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தமிழ் நாட்டில் மட்டும் தேசீய உணர்வுக்கு எதிராக சிலர் செயல்பட்டனர். இது பிராமணர்களின் அரசியல் நிலையை எதிர்த்து பிரிட்டிஷ்காரர்கள் ஊக்குவித்த ஜஸ்டிஸ் கட்சியில் தோன்றி, திராவிடமாக மலர்ந்து, கடவுள்-ஹிந்துமத எதிர்ப்பாக மாறி, பிராமணர் வெறுப்பாக நின்றது. திராவிடக் கோஷம் அண்டை மாநிலங்களில் எடுபடாது போகவே, தமிழ் இன, மொழிப் பற்று என்ற நிறமும் பூசினர். இன்றும் இந்த நிலைதான் நீடிக்கிறது,
அண்ணாதுரை குழுவினர் ஈ.வே.ரா கூடாரத்திலிருந்து பிரிய ஈ.வே.ரா-மணியம்மை திருமணம் மட்டும் காரணமல்ல.ஈ.வே.ரா கட்சியின் சொத்துக்களுக்கு யார் பொறுப்பு, யார் வாரிசு என்பதுதான் அடிப்படைக் காரணம். மணியம்மை திருமணம் ஒரு நிமித்த காரணம் மட்டுமே.
வயதானவர் ஒருவரை இளம்பெண் மணக்க முன்வந்தால் அது அவர்கள் சொந்தப் பிரச்சினை. இது கட்சிப் பிரச்சினை ஆகாது. அதே கட்சி பதவியில் இருந்து, அதன் தலைவர் திருமணமின்றி ஒரு பெண்ணுடன் சம்பந்தப்பட்டதாக பேச்சு எழுந்தால், அது அரசியல் பிரச்சினை. ஆனால் இந்த நிலை தமிழ் நாட்டில் எழுந்த போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை!
திருமண, பெண் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிக சுதந்திரமாக நடந்துகொள்ளும் மேலை நாடுகளில் கூட அரசில் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் மாட்டிக்கொண்டால் பதவி இழக்க-விலக நேரிடுகிறது! அன்றைய புரொஃபூமோ விஷயத்தில் பிரதமர் ஹெரால்டு மாக்மில்லன் பதவியை ராஜினாமா செய்தது முதல் இன்றுவரை இந்த விஷயத்தில் இங்கிலாந்து கண்டிப்பாக இருக்கிறது. இந்தியாவில் சந்தி சிரிக்கிறது.
ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருக்கும்போது திருவண்ணாமலைக்கு விஜயம் செய்த சமயத்தில் ஈ.வே.ரா அவரைச் சந்தித்து அறிவுரை கேட்டார். இது கவர்னர் ஜெனரல் தங்கியிருந்த விசேஷ ரயில் பெட்டியிலேயே நிகழ்ந்தது. “பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவர் ஒரு பெண்ணுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகப் பேச்சு எழுந்துவிட்ட நிலையில், அத்தொடர்பு திருமணத்தில் முடிவதுதான் சரியானது” என்று ராஜாஜி சொன்னதாகப் பிறகு தெரியவந்தது. இங்கு வயது வித்தியாசம் பெரிதல்ல- பொதுவாழ்வில் ஈடுபட்டவர் சொந்த வாழ்க்கையிலும் சரியாக நடந்துகொள்ளவேண்டும் என்பதுதான் முக்கியக் கருத்து. ‘யார் யாருடனும் எப்படியும் இருக்கலாம்’ என்ற கொள்கையுடைய ஒரு கும்பல் இதை எப்படி ஏற்றுக்கொள்ளும்? இவர்களின் நடத்தையை கண்ணதாசன் சில புத்தகங்களில் விமர்சித்திருக்கிறார்.
கடந்த நூற்றாண்டு தமிழ் நாட்டின் சமூக வரலாற்றை யாரும் நடு நிலையில் நின்று எழுதவில்லை. பத்திரிகைகளும், மீடியாவும் கட்சிவாரியாகப் பிரிந்திருக்கும் இன்றைய நிலையில் யாரும் முழுவிவரங்களையும் சரியாகப் பேச மாட்டார்கள். இத்தகைய பழைய கட்டுரைகள் இந்தக் குறையை ஓரளவு ஈடுசெய்யும்.
Tamil and Vedas
/ August 14, 2019Thanks.