

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 27 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London – 10-06 am
Post No. 7022
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.








–subham —
R.Nanjappa (@Nanjundasarma)
/ September 27, 2019ஊது பத்தி மட்டும் அல்ல- மற்றும் பல விஷயங்கள் இப்படித்தான்.
கங்கை, காவிரியைப் புனிதம் என்கிறோம், அவற்றையே தூய்மையற்றதாக்குகிறோம். பசுவைக் கொண்டாடுகிறோம், ஆனால் எருமைப்பாலைக் குடிக்கிறோம்.
நமது விபூதி எப்படி எதில் செய்யப்படுகிறது என்பது தெரியாது, நெற்றியில் அணிந்தால் கருப்பாகக் கோடுவிழுகிறது, சில சமயம் அரிச்சல் எடுக்கிறது. குங்குமத்திலும் இப்படித்தான் கலப்படம்- அணியும் இடத்தில் கறை, தழும்பு வருகிறது.
கற்பூரம் ஏற்றினால் புகை அதிகம் வருகிறது- பல கோவில்களில் இப்போது கற்பூரம் ஏற்றுவதில்லை.
விபூதி, குங்குமம் செய்ய சாஸ்திரிய முறை இருக்கிறது. ஆனால் அதன்படிதான் செய்துவருகிறார்களா என்பது தெரியாது. இதற்கெல்லாம் தர நிர்ணயம் செய்யவேண்டும். AGMARK போன்ற ஒரு முறை வேண்டும், ஆனால் அதிலும் பித்தலாட்டம் இல்லை எனச்சொல்ல முடியாது. சம்பிரதாயமாகச் செய்துவருதாகச் சொல்பவர்களும் வாசனைக்காக சில வெளிச்சரக்குகளைச் சேர்க்கிறார்கள்.
விபூதி பசுஞ்சாணத்திலிருந்து செய்யவேண்டும். அதற்கும் குறிப்பிட்ட நாட்கள் இருக்கின்றன. இப்படி கர்னாடகத்தில் ஒரு இடத்தில் செய்வதாகக் கேள்வி. அங்கிருந்து பல கோவில்களுக்கும் போகிறது. ஸ்ரீ ரமணாஸ்ரமத்திலும் வருஷத்தில் ஒரு நாள் இப்படி விபூதி செய்து வருடம் முழுதும் அதையே பயன்படுத்துகிறார்கள். நாம் பொதுவாகக் கடையில் வாங்கும் விபூதி பற்றியெல்லாம் [ ஜவ்வாது விபூதி என்றெல்லாம் எழுதுகிறார்கள்] தெரியாது.
குங்குமமும் இப்படித்தான். இதெல்லாம் சரிசெய்ய சில யோசனைகள்:
1. விபூதி, குங்குமம் ஆகியவை வரும் பேக்கெட்டில்-
– இது எதனால் ஆனது ( ingredients) என்ற விவரம் தரவேண்டும்
-இதில் எந்தவிதமான ரசாயனப்பொருளும் இல்லை என்ற உத்திரவாதம் தரவேண்டும்
– இது சாஸ்திரிய முறைப்படி தயாரிக்கப்பட்டது என்ற உத்திரவாதம் தரவேண்டும்- அதற்கு ஆதாரமும் காட்டவேண்டும். [ ஆயுர்வேத மருந்துகளில் இப்படிச் செய்கிறார்கள்]
-இப்பொழுது பல கோசாலைகள் இருக்கின்றன. அங்கெல்லாம் சரியான முறையில் விபூதி தயாரிக்கலாம். இது Forward Integration. அவர்களுக்கு வருமானமும் வரும். சென்னை-மேற்கு மாம்பலத்தில் ஒரு இடத்தில் இப்படிச் செய்கிறார்கள்.
– நமது ஆஸ்தீக மடங்கள் இந்தப் பொறுப்பை ஏற்கலாம். நம்பகமானவர்களைக்கொண்டு செய்விக்கலாம் ஆனால் வெறும் லாப நோக்கிற்காக என்றால் வியாபார தந்திரங்கள் புகுந்துவிடும்.
– இதில் அரசினரின் ஆதரவையோ, உதவியையோ நாடக்கூடாது.
50களில் மைசூரிலிருந்து Lalitha Perfumery Works அவர்கள் தயாரித்த ஊதுவத்திகள் தமிழ் நாட்டில் பிரசித்தம். கம்கம் ஜவாஜ், கம்பால்,கமகர் என்ற மூன்று வகை அன்று பிரசித்தம்.
இங்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை மைசூர் மஹாராஜா தன் கோஷ்டியுடன் ஸ்ரீ ரமணாஸ்ரமத்திற்கு விஜயம் செய்தார். அப்போது ஆஸ்ரமத்தில் ஏற்றியிருந்த ஊதுவாசனை அவர்கள் கவனத்தைக் கவர்ந்தது! இது எங்கிருந்து வந்தது என்று கேட்டார்கள். அது மைசூர் லலிதா பெர்ஃபூமரி செய்தது என்றதும் அவர்களுக்கு ஆச்சரியம்! மைசூர் வத்தியாக இருக்கலாம், ஸ்ரீ ரமணரின் சன்னிதி விசேஷம் அல்லவா!
நான் 45 வருஷங்களாக பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆஸ்ரமத்தில் Cottage Industry பிரிவில் செய்யும் ஊதுவத்திகளைப் பயன்படுத்தி வருகிறேன், இவை சிறிய 10 கிராம் பாக்கெட்டுகளாகக் கிடைக்கின்றன. இவற்றில் கெமிகல் கலப்படம் இல்லை. வெளிக்கடைகளில் கிடைக்காது!
ஒரு பழைய தமிழ்ப்படத்தில் ஒரு பாட்டு-
கலப்படம்…..கலப்படம்
அதை எடுத்துச் சொன்னாலே புலப்படும்
என்று வரும். படம் பெயர் நினைவில்லை.
இதே கருத்து Do Jaasoos என்ற ஹிந்திப் படத்திலும் வந்தது. [1975] ஹஸ்ரத் ஜெய்புரி எழுதிய பாடல்
दो जासूस करें महसूस के दुनिया बड़ी खराब है
कौन है सच्चा कौन है झूठा
हर चेहरे पे नकाब है
ज़रा सोचो ज़रा समझो
ज़रा संभल के राहियो जी
प्यास लगे तो दूध पियो दूध में पानी मिलता है
मंदिर में भी आज दिया नकली घी का जलता है
ना असली मिठाई है ना असली मलाई है
मावा है सिंघाड़े का क्या ज़ालिम हलवाई है
आटे में मिट्टी चावल में कंकर बेहिसाब हैं
कौन है सच्चा कौन है झूठा
हर चेहरे पे नकाब है
जहर दवा में शामिल है जहर दवा से बेहतर है
जहर भी नकली मिलता है मरना भी अब दूभर है
देश के सच्चे दुश्मन हैं ये जो मिलावट करते हैं
इनकी बदौलत कितने लोग मौत से पहले मरते हैं
ऐसे लोगों को पकड़ाना सबसे बड़ा सवाब है
do jasoos karen mehsoos, ke duniya badi kharaab hai
kaun hai sacha kaun hai jhoota
har chehere pe naqaab hai
zara socho zara samajho
zara sambhal ke rahiyo ji
pyaas lagey to doodh piyo, doodh mein paani milta hai
mandir mein bhi aaj diya naqli ghee ka jalta hai
na asli mithaai hai na asli malaai hai
maava hai sinhgaade ka, kya zaalim halwaai hai
aate mein mitti chaawal mein kankar behisaab hai
kaun hai sachcha kaun hai jhootha
har chehre pe naqaab hai
zehar dawaa mein shaamil hai zehar dawaa se behtar hai
zehar bhi naqli milta hai marna bhi ab doobhar hai
desh ke sachche dushman hain yeh jo milaawat karte hain
in ki badaulat kitne log maut se pehle marte hain
aise logon ko pakadaana sabse bada sawaab hai
இதோ, இரண்டு துப்பறிபவர்கள் எச்சரிக்கிறார்கள்-
இந்த உலகம் மிகவும் கெட்டுவிட்டது
யார் அசல், யார் பொய்- ஒவ்வொரு முகத்திலும் ஒரு வேஷம்!
சற்று யோசியுங்கள், சிறிது புரிந்துகொள்ளுங்கள்
ஜாக்ரதையாக இருந்துகொள்ளுங்கள்!
தாகம் எடுக்கிறதா, பால் குடியுங்கள் –
ஆம், பாலில் தண்ணீர் கிடைக்கிறது!
கோவில்களில் கூட இன்று பொய் நெய்யில் தானே விளக்கு எரிகிறது!
மிட்டாயும் அசலல்ல, பால் ஆடையும் அசலல்ல!
மாவில் ஏதோ விதையின் பொடி, என்ன கேடுகெட்ட ஹல்வா,
கோதுமை மாவில் மண், அரிசியில் கல்- இப்படித்தானே வருகிறது!
யார் அசல், யார் பொய் – ஒவ்வொரு முகத்திலும் ஒரு மூடியல்லவா இருக்கிறது!
விஷம் மருந்தில் கூட கலந்திருக்கிறது,
அது மருந்தைவிட நன்றாகவே இருக்கிறது!
அந்த விஷத்திலும் போலி கிடைக்கிறது,
மரணம் கூட இன்று கடினமாகிவிட்டது!
இப்படிக் கலப்படம் செய்கிறார்களே- அவர்களே தேசத்தின் அசல் துரோகிகள்
இவர்கள் கலப்படத்தினால் எத்தனைபேர் தங்கள் காலத்திற்குமுன்பே இறக்கிறார்கள்!
ஆனால் இவர்களைப் பிடிப்பது அனைத்தையும் விடக் கடினமாகவல்லவா இருக்கிறது!
+.
Santhanam Nagarajan
/ September 29, 2019Super O Super. i would like to use aurobindo ashram pathi. is it available in bangalore? shivranjani is also a very good brand. Regarding vibhuthi, puttaparthi vibhuthi is being prepared in the Gosala. we may use it. Thanks for the input.