
WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 3 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 14-11
Post No. 7050
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

திருமாலின் எட்டு வகை சயனங்கள்–
வடபத்ர சயனம் – திருவில்லிப்புத்தூர்
வீர சயனம் – திரு இந்தளூர்
தல சயனம் – கடல் மல்லை (மஹாபலிபுரம்)
உத்தான சயனம் – குடந்தை
புஜங்க சயனம் – திருப்புல்லாணி
போக சயனம் – தில்லை திரு சித்திர கூட
மாணிக்க சயனம் –திருநீர்மலை
Xxx
சுயம் வியக்த விஷ்ணு கோவில்கள் (தானாகத் தோன்றிய மூலவர்கள்)–
ஸ்ரீரங்கம், திருமுஷ்ணம், திருவேங்கடம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், வானமாமலை, புஷ்கரம், பத்ரி
Xxxx
சிவ்பெருமானின் எட்டு பூத கணநாதர்கள்–
குண்டோதரர், கும்போதரர், அகோதரர், கஜகர்ணர், விசித்திரகர்ணர், வியாக்ரமுகர், சிங்கமுகர், பட்சபாட்சர்
xxx

அஷ்ட பைரவர்களும் சக்திகளும்–
அசிதாங்க பைரவர்- பிராஹ்மீ
குரு பைரவர்- மாகேச்வரி
சண்டபைரவர் – கௌமாரி
குரோத பைரவர்- வைஷ்ணவி
உன்மத்த பைரவர்- வராஹி
கபால பைரவர்- இந்திராணி
பீஷண பைரவர்- சாமுண்டி
சம்ஹார பைரவர்- சண்டிகா
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் காணலாம்
Xxxx

அஷ்ட வீரட்டான தலங்கள்–
கண்டியூர்- பிரமன் சிரம் கொய்த தலம்
கடவூர் – யமனை உதைத்த தலம்
அதிகை – திரிபுரத்தை எரித்த தலம்
வழுவூர் – யானையை உரித்த தலம்
பறியலூர் – தக்கன் சிரம் கொய்த தலம்
கோவிலூர் – அந்தகாசுரனை சம்ஹரித்த தலம்
குறுக்கை – காமனை எரித்த தலம்
விற்குடி – சலந்தாசுரனை சம்ஹரித்த தலம்
Xxx

அஷ்டமூர்த்திகளின் பெயர்கள்-
பவன், சர்வன் ஈசன், பசுபதி, வீமன், உக்கிரன், மாதேவன், உருத்திரன்
xxx
சித்தாந்த அஷ்டகம்-
சிவப்பிரகாசம்
திருவருட்பயன்
வினா வெண்பா
போற்றிப் பஃறொடை
கொடிக்கவி
நெஞ்சுவிடுதூது
உண்மை நெறி விளக்கம்
சங்கற்ப நிராகரணம்
Xxx
ஈஸ்வரனின் 8 குணங்கள்
தன்வயத்தனாதல்
தூயவுடம்பினனாதல்
இயற்கை உணர்வினன் ஆதல்
முற்றுமுணர்தல்
பாரம் நீங்குதல்
பேரளுடைமை
வரம்பிலின்பமுடைமை
முடிவிலா ஆற்றல் உடைமை
Xxx subham xxx



