அனைவரும் போற்றும் 500 வயது மரம் ! (Post No.7124)

Major Oak, Robin hood Tree

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 22 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-42 am
Post No. 7124

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

1992ம் ஆண்டில் நான் வாரம் தோறும் தினமணி பத்திரிக்கையில் எழுதி வந்த உலகப் பலகணி ப்குதியிலிருந்து மேலும் ஒரு கட்டுரை.

அனைவரும் போற்றும் 500  வயது மரம் ! published in Dinamani on 6-9-1992; written by S Swaminathan from London

இது போல நாமும் புகழ்பெற்ற மரங்களை, குறிப்பாகத் தமிழ் நாட்டுக் கோவில் தல மரங்களப் பாதுகாக்க வேண்டும். மதுரை, காஞ்சீபுரம் போன்ற இடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்ட பட்டுப் போன மரங்களை விஞ்ஞான முறையில் கார்பன் டேட்டிங் செய்து முடிவுகளை வெளியிட வேண்டும்.

புத்தரின் போதி/ அரச மரம் உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஆனால் புகழ்பெறாத பெரிய ஆலமரங்கள், நம்மாழ்வாரின் புளிய மரம், தான்ஸேனின் புளிய மரம், கட்டபொம்மனின் தூக்கு மரம் முதலியவற்றையும் சுற்றுலாத் தலங்கள் ஆக்க வேண்டும்.

மேலும் புகழ்பெற்ற மரங்கள் பற்றித் தபால் தலைகள் வெளியிட வேண்டும்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட மரத்துக்கு அடியில், போகும் வரும் யாத்ரீகர்கள் ஒரு சிறு கல்லைப் போட்டு மரியாதை செய்வர் என்று எழுதப்பட்ட, 100 ஆண்டுக்கு முந்தைய புஸ்தகத்தை பேஸ் புக்கில் வெளியிட்டேன். இப்பொழுது அந்த இடம் இருந்தால் , அதையெல்லாம் மரியாதைக்குரிய சின்னங்களாக மாற்ற வேண்டும்.

என்னிடமே  பிரிட்டனின் புகழ்பெற்ற மரங்கள் பற்றிய நூலும் மாதம் தோறும் வெளியாகும் மரங்கள் பற்றிய பத்திரிக்கையும் உள்ளன. இது போல மரம் அறிவு பெருகி “மரத்தடியர்கள்”  அதிகரிக்க வேண்டும்.

மரத்தடியர்கள் = மரத்துக்கு அடியில் வசிப்போர்! வானப் ப்ரஸ்தர்கள்; புத்தர், நம்மாழ்வார் போன்ற ஞானிகள்.

மரங்கள் பற்றி எனது பிளாக்கில் 20, 30 கட்டுரைகள் உள. படித்து இன்புறுக.

Following is from Daily Mail (Nov.14, 2014)

The Major Oak in Nottinghamshire’s Sherwood Forest was a clear winner in a public vote run by the Woodland Trust.

It claimed 2,317 votes or 18 per cent of the 13,000 cast in just eight days earlier this month.

The Major Oak is said to be where Robin Hood and his Merry Men slept when not stealing from the rich and giving to the poor.

It gets its name from Major Hayman Rooke, an 18th century historian, who described it in 1790.

But it is thought to have stood within what is now Nottinghamshire County Council’s Sherwood Forest Country Park for up to 1,000 years.

It boasts a girth of 33ft, a spread of 92 ft, weighs 23 tons and each year produces up to 150,000 acorns.

Its nearest rivals were two other ancient oaks – Old Knobbley in Mistley, Essex, and the Ickwell Oak in Ickwell, Bedfordshire. 

7 branched Palmyra Tree, Kallal
Tamarind Tree of Nammalvar
Picture by Lalgudi Veda
Tree Worship in Varanasi
Sangu/ Conch Katha Perumal Temple
Save Our Trees; Dont cut them.
Tansen
Tansen’s Famous Tamarind Tree

–subham–

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    நாகரிகம் முற்றியதாகக் கருதப்படும் மேலை நாடுகளில் பழங்காலச் சின்னங்களுக்கும் பொருட்களுக்கும் புகழ்பெற்ற கவிஞர், அறிஞர் ஆகியோரின் இருப்பிடங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் தந்து அவற்ரைப் போற்றிப் பாதுகாக்கின்றனர். மரங்கள், பாறைகள் போன்ற இயற்கைப் பொருட்களுக்கும் அவ்வாறே மதிப்பளிக்கின்றனர். ஆனால் பழமை விரும்பிகளெனப்படும் இந்தியாவிலோ , யாரும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.
    பாராமரிப்பு என்ற பெயரில் ஸ்ரீ ராமக்ருஷ்ணர், அன்னை சாரதாதேவியார் பிறந்து வளர்ந்த இடங்கள் மாற்றப்பட்டு விட்டன. ஸ்ரீ ரமணர் பிறந்த திருச்சுழி வீட்டையும், ஞானம் பெற்ற மதுரை வீட்டையும் புதுப்பித்து விட்டனர். திருவையாற்றில் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் வீடும் இவ்வாறே. சீர்காழியில் திருஞானசம்பந்தரின் வீடாகக் கருதப்பட்ட இடமும் அப்படியே ‘புதுப்பிக்கப்’ பட்டு விட்டது. சென்னையில் உ.வே சாமினாதையர் இருந்த ‘தியாஜராச விலாசம்’ இடிக்கப்பட்டுவிட்டது. அவரது அடையாளமாக எதுவும் இல்லை. திருவல்லிகேணியில் பாரதியார் இருந்த வீட்டை என்ன செய்தார்களோ தெரியவில்லை. பாவம் ஆர்.கே நாராயண். அவர் தமிழராக இருந்ததாலும், கன்னடத்தில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதியதாலும் அவர் மைசூரில் இருந்த வீட்டை நினைவிடமாக மாற்றுவதற்கு கன்னட அரசியல் வாதிகளும் எழுத்தாளர்களும் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். சென்னையில் கணிதமேதை ராமனுஜத்திற்கு ஒரு நினைவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன், இந்தியாவிலேயே அவருக்கு ஒரு மியூசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

    கோவில் மரங்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. தில்லையான சிதம்பரத்தில் ‘தில்லை’ மரம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சம்பந்தர் ஆண் பனையை பெண்பனையாக மாற்றிய இடத்தில் பனைமரம் இருக்கிறதா என்பதே தெரியவில்ல! நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திரர் சமாதியில் இருந்த வில்வமரம் பட்டுப்போய்விட்டது, தக்ஷிணேசுவரத்தில் ஸ்ரீ ராமக்ருஷ்ணர் நட்டு வளர்த்த ‘பஞ்சவடி’யும் இன்று பரிதாப நிலையில் இருக்கிறது. மரங்களுக்கு பதிலாக மாடிக் கட்டிடங்கள் வருகின்றன!
    பொதுவாகவே இந்தியாவில் மரங்களுக்கு மதிப்பில்லை! கிருஷ்ணகிரி-திருவண்ணாமலைப் பாதையை அகலப் படுத்துகிறோம் என்ற பெயரில் 20,000 மரங்களுக்குமேல் வெட்டப்பட்டுவிட்டன. மும்பை ஆரோ காலனியில்
    மெட்ரோ ஷெட் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் நிலையில் மக்களின் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. அவர்கள் நீதிமன்றத்தை அணுகுமுன் வாரக்கடைசியில் ஒன்றரை நாட்களுக்குள் 2500 மரங்களை வெட்டித்தள்ளி விட்டார்கள்.
    The world is too much with us; late and soon,
    Getting and spending, we lay waste our powers;—
    Little we see in Nature that is ours;
    We have given our hearts away, a sordid boon!
    T.S.Eliot.

  2. Tamil and Vedas's avatar

    Now thee is an awareness about desilting the temple tanks. With the same spirit we have to revive the temple Nandavanams (gardens).
    Appar did not expect the government to clear the temple of weeds. He did it himself 1400 years ago. Balarama went with a plough and spread agriculture to different parts of India. So people must act. In Britain almost all major cities have Tree (lovers) societies. It is sad that the trees are cut in Mumbai. They must plant ten times of those trees first and then develop other areas.

Leave a comment