மூளைக்கு வல்லாரை- அருமையான மூலிகைப் பாட்டு (Post No.7183)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 6 NOVEMBER 2019

Time  in London – 8-23 am

Post No. 7183

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஹெல்த்கேர் மருத்துவ மாத இதழ் R.C.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் – 627006 (போன் : 9843157363) -லிருந்து வெளிவருகிறது. வருட சந்தா ரூ 120/. நவம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது:

மூளைக்கு வல்லாரை, முடி வளர நீலிநெல்லி : அருமையான மூலிகைப் பாட்டு!

ச.நாகராஜன்

ஏராளமான இரகசியங்களைத் தெரிவிக்கும் பாடல்களை தமிழ்ச் சுவடிகள் கொண்டிருப்பதை பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

மாயச் சதுரம் பற்றியும், சதுரங்க பந்தம் போன்ற சித்திரத் தமிழ் பற்றியும் ஒரு சின்னப் பாடல் மூலமாக அருமையான ரகசியத்தை அறிகிறோம்.

இந்த வகையில் அன்பர்  மாரிமுத்து, அவனியாபுரம், மதுரை அனுப்பியுள்ள பாடல் மூலிகைப் பாட்டாக, அருமையான ஒன்றாக அமைகிறது. அதைக் கீழே தருகிறேன்.

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும், 

இப்பாடல் 

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை

  முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!

இதே போல அருமையான பாடல்களை தஞ்சையில் உள்ள சரஸ்வதி மஹால் சுவடிகளில் காணலாம். சரஸ்வதி மஹால் வெளியீடுகளும் அற்புதமானவை.

நோயில்லா நெறி என்ற புத்தகம் ஒவ்வொரு நதியின் நீர் பற்றிய அருங்குணங்களைத் தருகிறது. வைகை, காவிரி, தாமிரபர்ணி ஆகிய நதிகளின் நீருக்கு இவ்வளவு சக்தியா என வியக்கிறோம். அத்துடன் நோயில்லாமல் வாழ்வதற்கான நெறிகளையும் அது தருகிறது.

பழைய பாடல்களைத் தேடி எடுத்து அதை வல்லாரிடம் கொடுத்து அதன் மெய்ப்பொருளைக் காண்பதுவே அறிவு.

செய்வோம்; மனதால் உயர்வோம்; ஆரோக்கியத்தால் உயர்வோம்!

***

Leave a comment

Leave a comment