

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 20 December 2019
Time in London – 6-59 AM
Post No. 7361
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
லலிதா சஹஸ்ரநாமம் லலிதாம்பிகையைப் பற்றிக் கூறுகையில் 64 கலைகளாக இருப்பவள் எனக் கூறுகிறது.
சதுஷ் ஷஷ்டி கலாமயீ
அறுபத்துநாலு கலைகளின் ஸ்வரூபமாக இருப்பவள்
236வது நாமம் இது.
64 கலைகளுக்குக் 64 யோகினிகள் உண்டு.
இந்த 64 கலைகள் எவைஎவை என்பதைப் பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன. (அதை தனிக் கட்டுரையில் பார்ப்போம்)
இதற்கு அடுத்த நாமம் இது:
மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ கண ஸேவிதா
மஹா சதுஷ் ஷஷ்டி கோடி யோகினீ கணங்களால் ஸேவிக்கப்பட்டவள்.
லலிதாம்பிகையின் ஸ்ரீ சக்ரத்தில் முதலாவது ஆவரணமாகிய த்ரைலோக்ய மோஹன சக்ரத்தில் ப்ராம்ஹீ முதலான எட்டு மாத்ருகா சக்திகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய அம்சமாக அக்ஷோப்யா முதலிய எட்டு யோகினீகள் உண்டு. ஆக இவர்கள் அறுபத்திநாலு சக்திகள் இருக்கிறார்கள். திரும்பவும் இந்த அறுபத்திநாலு சக்திகள் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய அம்சமாக கோடி யோகினீகள் இருக்கிறார்கள். ஆக அறுபத்துநாலு கோடி யோகினீகள் என்றாகிறது. இப்படிப்பட்ட கணக்குடையவும் மஹத்தாயும் இருக்கும் யோகினீகளால் ஸேவிக்கப்பட்டவள் என்று இந்த நாமத்திற்கு அர்த்தம்.
தந்த்ர ராஜம் என்ற நூலில் இன்னும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. அதன்படி த்ரைலோக்ய மோஹனசக்ரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டது போலவே இதர எட்டு சக்ரங்களிலும் இருப்பதாகவும் ஆக யோகினீகளின் கணக்கு ஒன்பது தடவை அறுபத்துநாலு கோடி – அதாவது ஐந்நூற்றி எழுபத்தாறு கோடி – என்று ஆகிறது. இதைத் தான் மஹத் என்ற பதம் குறிப்பிடுகிறது.
லலிதா சக்ர நவகே ப்ரத்யேகம் சக்த்ய: ப்ரியே |
சதுஷ் ஷஷ்டி மிதா: கோட்ய: |
என்று குறிப்பிடப்படுகிறது.
64 கோடி யோகினீகளில் முக்கியமானவர்கள் 64 யோகினிகள் என்பதை அறிகிறோம்.
யோகினிகளுக்குப் பாரத நாடெங்கும் கோவில்கள் உண்டு என்றாலும் சிறப்பாக அமைந்துள்ள கோவில்கள் ஒரிஸா மாநிலத்தில் உள்ள இரண்டு கோவில்களும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு கோவில்களும் ஆகும். (இவை பற்றித் தனிக் கட்டுரைகளில் பார்ப்போம்)
64 யோகினிகள் யார் யார் என்பதை அறிய ஆர்வமுள்ள சக்தி பக்தர்கள் ஏராளம். அவர்களுக்காக இந்தப் பட்டியல் இங்கு அளிக்கப்படுகிறது.
- பஹுரூபா (Bahurupa)
- தாரா (Tara)
- நர்மதா (Narmada)
- யமுனா (Yamuna)
- சாந்தி (Shanti)
- வருணி (Varuni)
- க்ஷேமாங்கரி (Kshemankari
- ஐந்திரி (Aindri)
- வாராஹி (Varahi)
- ரண்வீரா (Ranveera)
- வானர-முகி (Vanara-Mukhi)
- வைஷ்ணவி (Vaishnavi)
- காலராத்ரி (Kalaratri)
- வைத்யரூபா (Vaidyaroopa)
- சர்ச்சிகா (Charchika)
- பேதலி (Betali)
- சின்னமஸ்திகா (Vhinnamastika)
- வ்ரிஷபாஹனா (Vrishabahana)
- ஜ்வாலா காமினி (Jwala Kamini)
20.கடவரா (Ghatavara)
- கரகாலி (Karakali)
22.ஸரஸ்வதி (Saraswati)
23. பிரூபா (Birupa)
24.காவேரி (Kauveri)
25. பஹாலுகா (Bhaluka)
26. நரசிம்ஹி (Narasimhi)
27. பீரஜா (Biraja)
28. விகடனா (Vikatanna)
29.மஹாலக்ஷ்மி (Mahalakshmi)
30.கௌமாரி (Kaumari)
31.மஹாமாயா (Maha Maya)
32.ரதி (Rati)
33.கர்கரி (Karkari)
34. ஸர்பஸ்யா (Sarpashya)
35. யக்ஷிணி (Yakshini)
36. விநாயகி (Vinayaki)
37. விந்த்யா பாலினி (Vindya Balini)
38. வீர குமாரி (Veera Kumari)
39. மஹேஸ்வரி (Maheshwari)
40. அம்பிகா (Ambika)
41.காமியானி (Kamiyani)
42.கடபாரி (Gharabari)
43. ஸ்துதி (Stutee)
44. காளி (Kali)
45. உமா (Uma)
46. நாராயணி (Narayani)
47. சமுத்ரா (Samudraa)
48.ப்ராஹ்மணி (Brahmani)
49.ஜ்வாலா முகி (Jwala Mukhi)
50. ஆக்னேயி (Agneyei)
51. அதிதி (Aditi)
52. சந்த்ரகாந்தி (Chadrakanti)
53.வாயுபேகா (Vayubega)
54.சாமுண்டா (Chamunda)
55.முரதி (Murati)
56. கங்கா (Ganga)
57.தூமவதி (Dhumavati)
58. காந்தாரி (Gandhari)
59. சர்வ மங்களா (Sarva Mangala)
60. அஜிதா (Ajita)
61. சூர்ய புத்ரி (Surya Putri)
62.வாயு வீணா (Vayu Veena)
63. அகோரா (Aghora)
64. பத்ரகாளி (Bhadrakali)
இன்னும் யோகினீகளைப் பற்றிய ஏராளமான சுவையான கருத்துக்களை புராணங்கள், தந்திர சாஸ்திரங்கள் தருகின்றன.
அவற்றைப் பின்னர் பார்ப்போம்!
***


You must be logged in to post a comment.