தேன் ஏன் கெடுவதில்லை? (Post No.7533)

Written by London Swaminathan               

Post No.7533

Date uploaded in London – – 4 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

லண்டனில்  இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிகை அறிவியல் கேள்வி பதில் பகுதியில் தேன் ஏன் கெடுவதில்லை? என்ற கேள்விக்கு பதில் சொல்லகிறது.

மூடி வைக்கப்பட்ட பாண்டங்களில் தேன் (Honey) இருந்தால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை. எகிப்திய கல்லறைகளில் தேன் கண்டுபிடிக்கப்பட்டது. அது கெடவில்லை. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com

தேன் கெடாமல்  இருப்பதற்குக் காரணம் தேநீக்கள் அதை செய்யும் முறையே.

தேனீக்களில் , பூக்களுக்குச் சென்று தேனை சேகரித்துக் கொண்டுவரும்  ஒரு பிரிவு (Forager Bees)  உண்டு. அவை .அதை தொழிலாளர் பிரிவு தேநீக்களிடம் (Worker Bees)  அளிக்கும்

தொழிலாளர் பிரிவு தேனீக்கள் அதை குடிக்கும்; கொப்பளிக்கும் ; இவ்வாறு பலமுறை செய்து கொண்டே இருக்கும் . இதனால் அந்தத் தேனில் உள்ள நீர்சசத்து குறைந்துவிடும். இப்படி ச்  செய்கையில் அவற்றின் வயிற்றில் உள்ள என்சைம்  தேனில் இருக்கும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை குளுகோனிக் அமிலமாக (Gluconic Acid)  மாற்றிவிடும் தென் இவ்வாறு அமில ச் சத்துடன் ஆக்கப்படும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen Peroxide) என்ற வாயுவும் உற்பத்தியாகும் . அதுமட்டுமல்ல . தேன் அட்டைகளின் அறைகளில் தேனை வைத்து தனது  சிறகுகளால் விசிரிக் கொண்டே இருக்கும். இதனால் தண்ணீர் சத்து மேலும் ஆவியாகும் .மொத்தத்தில் அமிலத் தன்மையும் நீரின்மையும் இதைக் கெடாமல் பாத்து காக்கிறது. உணவுப் பண்டங்களைக் கெட்டுப்போக ச் செய்யும்  பாக்டீ ரியாக்கள் இந்த சூழ்நிலையில் வாழ முடியாது . ஹைட்ரஜன் பெராக் ஸைட் வாயுவுக்கும் பாக்டிரீயா (Anti bacterial)  கிருமிகளைக் கொள்ளும் சக்தி உண்டு . ஆகையால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் , பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை . Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

rock honey bees

எனது கருத்து

சமணர்கள் தேன் சாப்பிடமாட்டார்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு தேனீக்கள் உருவாக்கும் தேன் நமக்கானதல்ல . அவைகளுக்கானதே ;மேலும் இது பிராணிகளை வதை செய்வதாகும் என்பது அவர்கள் கருத்து. இந்துக்கள் வேத காலம் முதலே மது பர்க்கம் என்ற பெயரில்  பாலையும் தேனையும் சேர்த்துக் கொடுத்து உபசரித்தனர்; பைபிளிலும் சரி, சம்ஸ்க்ருத -தமிழ் இலக்கியங்களிலும் சரி; ஒரு நாட்டின் செழிப்பை  வருணித்துச்  சொல்கையில் ‘அங்கு பாலும் தேனும் ஆறாக ஓடிற்று’ என்பர்.

ஆனால் சமணர்கள் பால் பொருட்களை பயன்படுத்துவர். கன்றுகளுக்கு எஞ்சியது போக மீதியுள்ள பாலை மட்டும் இந்துக்களும் சமணர்களும் பயன்படுத்துவர். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜாதிக்கொடுமை

Honey bottles in my kitchen in London.

ஜாதிகளைக் கண்டுபிடித்தது ஆரியரா திராவிடர்களா என்ற சர்சசையை வரலாற்று ஆசிரியர்கள் விவாதிப்பது உண்டு .உண்மையில் சொல்லப் போனால் அதைக் கண்டுபிடித்து இன்று வரை நடைமுறைப் படுத்துவது தேனீக்களே! ராஜா -ராணி வம்ச பரம்பரை ஆட்சிக்கும் அதுவே காரணம் போலும். தொழிலாள ர்களை வேலைக்கு வாங்கி சுக போகமாக வாழ்கிறது ராணித்  தேனி . போகட்டும் . அவைகள்  பின்பற்றும்  ஜாதிக்கொடுமைக்கு கை  மேல் கிடைத்த பலன்!! மனிதர்கள் அத்தனை தேனையும் திருடிக் குடித்து விடுகிறார்கள் ! Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com

–subham–

Leave a comment

Leave a comment