
Written by London Swaminathan
Post No.7532
Date uploaded in London – – 4 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நேற்றைய தினம் (3-2-2020) பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு சுவையான செய்தியை வெளியிட்டுள்ளன. அது பிரிட்டனின் மிகப்பெரிய புதையல் பற்றிய செய்தி .அதன் மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன்கள். இந்தியக்கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய். இவை இரும்புக் கால நாணயங்கள் (Iron Age Coins)
பிரிட்டனில் புதையல் கண்டுபிடிக்கும் கருவி விலைக்கு கிடைக்கிறது. குழந்தைகளுக்கான சிறு பொம்மைக் கருவி முதல் மிகவும் சக்தி வாய்ந்த கருவி வரை யாரும் வாங்கலாம். இதை மெட்டல் டிடெக்டர் (Metal Detector) என்பர். அதாவது பூமிக்கடியில் இருக்கும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடித்து ஒலி எழுப்பும்.
பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வாரம் தோறும் புதையல் செய்திகள் வருகின்றன. இதற்காக மாதப் பத்திரிக்கைகளும் உள . இந்தியாவிலும் நிலத்துக்கடியில் நிறைய புதையல் உளது. அதைக் கண்டு பிடிப்போர் அதன் மதிப்பு தெரியாமல் உருக்கி உலோகத்தை மட்டும், குறிப்பாக தங்கம் வெள்ளியை மட்டும் , எடுத்துக்கொள்வர். உண்மையில் அதிலுள்ள உலோகத்துக்குக் கிடைக்கும் விலையைப் போல பத்து முதல் 100 மடங்கு விலை கிடைக்கும் என்பதை பாமரர்கள் அறியார். விஷயம் தெரிந்தோர் அதை வெளிநாட்டுக்க்குக் கடத்தி விடுகின்றனர். தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காதலன் காதலி ரோமானிய மோதிர உருவம் பத்திரிகைகளில் வெளியான சில தினங்களில் மாயமாய் மறைந்து விட்டது. கரூரில் அமராவதி ஆற்றில் கிடைக்கும் புதையல்கள கள்ளத் தனமாய் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. கங்கை நதியில் நவநந்தர்கள் ( Nava Nandas of Nanda Dynasty, 5th century BCE) தங்கக் கட்டிகளை ஒளித்து வைத்த செய்தியை சங்க புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளனர் . நிற்க. Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதையல்களில் (Treasure) இதுதான் மிகப்பெரியது என்று கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற இப் புதையலில் 69,347 தங்கம், வெள்ளி, இரும்பு நாணயங்கள் அடங்கும். இதன் எடை 1700 பவுண்டு.விலை மதிப்பு பத்து மில்லியன் ஸ்டெர்லிங் பவுன். இதில் பழைய காசு கி.மு. 50 காலத்தைச் சேர்ந்தது .
ரெக் மீட் மற்றும் ரிசர்ட் மைல்ஸ் (Reg Mead and Richard Miles) ஆகிய இருவர் இதை 2012ல் ஒரு வேலிக்கு அடியில் களிமண் மேட்டில் கண்டுபிடித்தனர் . ஆனால் இப்போதுதான் கின்னஸ் சாதனை நூல் இதை பெரும் புதையல் (Biggest Treasure) என்று அறிவித்துள்ளது. புதையலை யாராவது கண்டுபிடித்தால் அது மகாராணிக்குச் சொந்தம் என்பது பிரிட்டனில் உள்ள சட்டம். ஆயினும் கண்டுபிடித்தோருக்கு ஒரு பங்கு உண்டு.
‘கழுகுக்கு மூக்கில் வேர்க்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. அதுபோல புதையல் தேடுவோருக்கு கையில் அரிக்கும். யாரோ ஒரு பெண்மணி இந்தப் பொட்டலில் ஒரு வெள்ளி பித்தா னை பார்த்தேன் என்றார். உடனே இவ்விருவரும் மம்மட்டி, கோடாரி , கத்தி, கபடா , மெ ட்டல் டிடெக்டர் சஹிதம் போய் வெற்றி கண்டனர்.

இவை கிடைத்த இடம் சானல் ஐலண்ட்ஸ் (Channel Islands) எனப்படும் ஜெர்சி, கேர்ன்சி ஆகும்.
ஜெர்சியில் உள்ள லா ஹோ க் பை மியூசியத்தில் (La Hogue Bie Museum, Grouville, Jersey) இவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதையல் 1978ல் வில்ட்ஷைர் (Wiltshire) அருகில் கிடைத்த 54,951 நாணயங்கள் புதையல் ஆகும். Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் கிடைத்த மிகப்பெரிய புதையல் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1,50,000 பென்னி காசுகள் புதையல் ஆகும். அவை 1908ம் ஆண்டில் பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்) நகரில் கண்டெடுக்கப்பட்டன.
நாமும் புதையல் தேடுவோம். கிடைத்தை அழிக்காமல் , உருக்காமல் பாதுகாப்போம் .
Written by London swaminathan, tamilandvedas.com, swamiindology.blogspot.com
Tags – புதையல், மிகப்பெரிய, ஜெர்சி, கின்னஸ் சாதனை,
–subham–