
WRITTEN BY S NAGARAJAN
Post No.7583
Date uploaded in London – 17 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கையெழுத்து முதல் தலையெழுத்து வரை!
ச.நாகராஜன்
சம்ஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான சுபாஷிதங்கள் உள்ளன.
இவற்றில் இல்லாதது எங்குமே இல்லை. அறவுரைகள், புதிர்கள், சமயோசித பதில்கள், காம சாஸ்திர நுட்பங்கள், பொருளாதார உண்மைகள், காதலர்களின் பரிபாஷைகள், போர்க்கள வீர தீரங்கள் என அனைத்து விஷயங்களையும் நூற்றுக் கணக்கான கவிஞர்கள் பாடியுள்ளனர்.
கையெழுத்து முதல் தலையெழுத்து வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சயம் ஒரு சுபாஷிதம் இருக்கிறது.

உதாரணத்திற்குச் சில:
கையெழுத்து எப்படி இருக்க வேண்டும்?
கையெழுத்து ஒரு பெண்ணின் மார்பகம் போல இருக்க வேண்டும்! எப்படிப் போகிறது பாருங்கள் கவிஞனின் மனம்!
அக்ஷராணி சமானானி வர்துலாலி தனானி ச |
பரஸ்பரவிலக்னானி தருகீகுசகும்பவத் ||
Closely related (or : resembling) like breast of young ladies, or letters (handwriting) which are even and round, and wealth (coins) imperishable, even and round in shape.
(English translation by A.A.R)
இளம்பெண்களின் மார்பகம் போல எழுத்துக்கள் (கையெழுத்து எழுதும் போது) சமமாகவும் உருண்டையாகவும் அழியாத காசு போல சமமாக, உருண்டை வடிவத்தில் இருக்க வேண்டும்!
அனுபவிக்கும் வரை தான் உறவெல்லாம்!
காதிதும் ப்ராப்யதே யாவத் தாவதேவ ஹி பாந்தவா: |
ஷிஷிரே பத்மினீம் ப்ருங்கவ: கடாக்ஷேணாபி நேக்ஷதே ||
Relatives are there only so long as they receive something to enjoy with; in the winter season a black bee does not even deem worthy to cast a side-glance over a lotus.
(English translation by S.B.Nair)
ஏதேனும் ஒன்றை அனுபவிக்கும் வரை தான் உறவு எல்லாம்! குளிர்காலத்தில் கருவண்டானது தாமரை மலரின் மீது ஒரு ஓரப் பார்வையைக் கூடச் செலுத்தாது!
நண்பர்கள் ஒரே மனதுடையவர்கள் தான்!
க்ஷீரம் நீரம் ச மிஸ்ரன் சத் ஏகரூபம் யதா பவேத் |
மித்ரயோருபயோர்வ்ருத்திம் தத் தத் துல்யம் ப்ரகாஷதே ||
When milk is mixed with water, both are of the same colour. Likewise, the mood of two friends is the same. (English translation by V.Krishnamacharya)
பாலானது நீருடன் கலக்கும் போது இரண்டும் ஒரே நிறத்தை உடையதாய் இருக்கிறது. அதே போல, இரு நண்பர்களும் மனமும் ஒன்றாகவே இருக்கும்.
விதியின்றி வெற்றி இல்லை!
க்ஷேத்ரே சுக்ருஷ்டே ஹத்யுபிதே ச பீஜே
தேவே ச வர்ஷத்யுதுகாலயுக்தம் |
ந ஸ்யாத் பலம் தஸ்ய குத: ப்ரசித்திர்
அன்யத்ர தேவாதிதி சிந்தயாமி ||
When the soil does not bear fruit despite that it was properly tilled and seeded, and despite that God Indra showered it with rain, I think, that without Fate nothing can succeed.
(English translation by S.B.Nair)
நிலத்தை நன்றாக உழுது விதை விதைத்து இந்திரன் மழை பொழிந்தும் கூட நிலத்தில் விளைச்சல் இல்லையெனில் விதியின்றி எதுவும் வெற்றி பெறாது என்றே நான் நினைக்கிறேன்.
மஹாபாரதத்தில் இடம் பெறும் ஸ்லோகம் இது.
விதியின்றி வெற்றி இல்லை
நீதி சதகத்தில் பர்த்ருஹரி விதி பற்றி விரிவாகப் பேசுகிறார்; அலசி ஆராய்கிறார்.

பக்காசஸ்ய கரண்ட பிண்டித தநோ:
க்லாநேந்திரியஸ்யக்ஷுதா க்ருத்வர்கு:
விவரம் ஸ்வயம் நிபதிதோ
நக்தம்முகே போகிந: |
த்ருப்த: தத் பிஸிதேந ஸத்வர
ம்ஸௌ தேநைவ யா த:
ஸ்வஸதா திஷ்டத ஸ்தவ மேவ ஹி
பரம்வ்ருத்தௌ க்ஷயே காரணம் ||
ஆகு: – எலியானது
நக்தம் – இரவில்
விவரம் க்ருத்வா – பாம்புப் பெட்டியில் துவாரம் செய்து
பக்நாசஸ்ய – வெளியே வருவதில் நம்பிக்கை இழந்ததும்
கரண்டபிண்டிததநோ: – பாம்புப் பெட்டியில் சுருண்டு கிடக்கிறதும்
க்ஷுதா க்லாந்திரியஸ்ய – பசியால் வாடிய சரீரம் உள்ளதுமான
போகிந: – பாம்பினுடைய
முகே – வாயில்
ஸ்வயம் நிபதித: – தானாகவே விழுந்தது (ஒரு எலி)
அஸௌ – இந்த பாம்பானது
தத்பிசிதேந: – அந்த எலியின் மாமிசத்தால்
த்ருப்த:- திருப்தியடைந்து
தெநைவபதா – அந்த எலி ஏற்படுத்திய த்வாரத்தின் வழியாகவே
யாத : – வெளியே போய் விட்டது, ஆகையால்
வ்ருத்தௌ – க்ஷேமத்திற்கும்
க்ஷயே – நாசத்திற்கும்
தைவமே – தெய்வமே
பரம் காரணம் – முக்கியமான காரணம்
ஆகையால்
ஸ்வஸ்தா – அமைதியுடன்
திஷ்டத – இருங்கள்
பாம்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட பாம்பானது வெளியேற முடியாமல் மனமுடைந்து பசியால் வாடி சுருண்டு கிடக்கையில், ஒரு எலியானது இரவில் அந்தப் பாம்புப் பெட்டியைக் கடித்துத் துளை செய்து, அதன் மூலம் பெட்டிக்குள் சென்று பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டு அதற்கு இரையாகி விட்டது. எலியின் மாமிசத்தால் பசியாறி திருப்தி அடைந்ததுடன் அந்தப் பாம்பானது எலி துளைத்த அந்த துவாரத்தின் வழியாகவே வெளியே தப்பி ஓடியும் விட்டது.
ஆகையால் க்ஷேமத்திற்கும் நாசத்திற்கும் தெய்வமே (அதாவது விதியே) காரணம் என்று அமைதியாக இருங்கள்.
பர்த்ருஹரியின் அறிவுரையை மனதில் ஏற்றி அமைதியாக இருக்க வேண்டியது தான்!
இப்படி சுபாஷிதங்களை எடுத்துக் கொண்டால், கையெழுத்திலிருந்து தலையெழுத்து வரை சகல விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்
tags — விதி, கையெழுத்து, தலையெழுத்து, பர்த்ருஹரி
***