பிராணிகளுக்குக் கடிகாரம் பார்க்கத் தெரியுமா? (Post No.7600)

WRITTEN BY London swaminathan

Post No.7600

Date uploaded in London – 21 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நேரம், காலம் (Notion of Time) பற்றிய உணர்வு உண்டா? என்ற கேள்வியை ஒரு நேயர் கேட்டவுடன், அதற்கு  லண்டன் (Daily Mail) டெயிலி மெயில் பத்திரிகை 1-4-2006ல் பதில் வெளியிட்டது. அந்த ‘பேப்பர் கட்டிங்’கை குப்பைத் தொட்டியில்   போடுவதற்கு முன்னர் மொழிபெயர்த்தால் என்ன? என்று தோன்றியது.அத்தோடு என் அனுபவத்தையும் சேர்த்துள்ளேன்; படியுங்கள்.

நாயின் மனது  (The Mind of the Dog by J R H Smythe) என்ற ஒரு புஸ்தகத்தை நாய்கள் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஜே .ஆர் .எச் .ஸ்மித் எழுதினார். அதில் அவருடைய நாய் ‘பென்’ (Ben) னுக்கு கிழமைகள் கூட தெரியும் என்கிறார். காட்டு மிருகங்களை வளர்க்கும் ஒருவரிடம் அதை விலைக்கு வாங்கி இருந்தார். ஒவ்வொரு வியாழக் கிழமையும் காலையில் பென் (Ben) காணாமற்போய் விடும். மாலையில் திரும்பி வந்து விடும். ஸ்மித்துக்கு இந்த மர்மம் புரியவில்லை. ஒரு நாள் பஸ்ஸில் பயணம் செய்தபோது பஸ் கண்டக்டர் அந்த நாயை அடையாளம் கண்டுகொண்டு அதன் புதிய எஜமானரிடம் பழைய கதை ஒன்றைக் கூறினார். நாயை முதலில் வளர்த்தவர் அந்த பஸ்சில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 9 மணிக்கு நாயுடன் புறப்படுவாராம். பக்கத்திலுள்ள கிராமத்திற்குச் சென்றுவிட்டு  மாலை நேர பஸ்ஸில் சொந்த கிராமத்துக்குத் திரும்பி வருவாராம். ஏனெனில் பழைய மாஸ்டர் (Master)  வியாழக்கிழமை மட்டும் பறவைகளைச் சுடுவதற்கு இப்படிச் செல்வராம். வியாழக்கிழமைகளில் அந்த நாய் ‘நாயாக உழைத்து’ மாஸ்டருக்கு உதவி செய்யுமாம். புதிய எஜமானர் விலைக்கு வாங்கிய பின்னரும் அந்த நாய்க்கு வியாழக் கிழமை வந்தவுடன் வெளியே கிளம்பி விடுமாம். இதுதான் காலையில் போய் மாலையில் திரும்பி வருவதன் மர்மம்.

நாய்க்கு காலண்டரில் தேதி பார்க்கத் தெரியுமோ தெரியாதோ, ஆனால்  அதன் உடலுக்குள் உள்ள கடிகாரமும் காலண்டரும் வியாழக் கிழமை காலை ஒன்பது மணியை நினைவு படுத்துவது அதிசயமே.

டோக்கியோ நாய் ஹசிகோ Hachiko

ஹசிகோ என்ற உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய நாய்க்கு ஏன் டோக்கியோவில் ரயில் நிலையத்தில் சிலை வைத்து இருக்கிறார்கள் என்பது இந்த பிளாக்கில் பல முறை வெளி வந்து விட்டது. அதை வளர்த்தவர் இறந்த பின்னரும், ஒன்பது ஆண்டுகளுக்கு தன்னுடைய மாஸ்டருக்காக தினமும் ரயில் நிலையம் சென்று காத்திருந்த கதை பலரும் அறிந்ததே.

நான் 1986 டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன். அத்தோடு என்னுடைய 16 ஆண்டு தினமணிப் பத்திரிக்கையின் சீனியர் சப் எடிட்டர் வேலை முடிந்து பி.பி.சியில் சேர்வதற்காக லண்டனு க்கு வந்தேன். மதுரையில் தினமணியில்  வேலை பார்க்கும்போது, வாரத்தில் இரண்டு நாட்களைத் தவிர மற்ற நாட்கள் எல்லாம் இரவு ஒன்பது மணிவரை அலுவலகத்தில் இருப்பேன். இரவு எட்டு மணிக்கு எல்லோருக்கும் பெரிய பன் ரொட்டியும் தேநீரும் தருவார்கள். பெரிய பன் ரொட்டியை அலுவலத்தில் உள்ள பியூனுக்குகே கொடுத்து விடுவேன். இப்படிப் பலரும் கொடுக்க துவங்கியதால் அவனே வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டான். ஒரு நாள்

வீட்டில் மாடிக்குப் போய் காகங்களுக்கு அதை போடுவோமே என்று போட்டால், அதைச்  சாப்பிட்ட காகம் என்ன பாஷையில் பேசியதோ தெரியவில்லை ஏராளமான காகங்கள் வந்து விட்டன. நானோ பறவை பிரியன். தினமும் இதைத் தொடர்ந்தேன்  . நூற்றுக் கணக்கில் காலையில் காகங்கள் படை எடுக்கத் துவங்கிவிட்டன.

காலையில் நான் தாமதமாகப் போனால் அவை மொட்டை மாடியிலும் அருகிலுள்ள மரங்களிலும் காத்திருக்கும். நான் போன அடுத்த நிமிடத்தில் அவை அங்கே கூடிவிடும். இதை பார்க்கையில் அவைகளும் எதோ ஒரு வகை கடிகாரங்களை வைத்திருப்பதாகவே தோன்றுகிறது!! இப்பொழுதும் இது போல பல நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். சென்னை முதலி ய நகரங்களில் தானியத்தைச் சாப்பிட பல ஆயிரம் கிளிகள் வரும் அதிசயத்தைக் ( in You Tube)  காண்கிறோம். அவைகளும் அருகிலுள்ள மரங்களில் இதற்காக காத்து இருக்கின்றன.

இது போல வீடுகளில் நாய், பூனை வளர்ப்போரும் பல கதைகளைச் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அவைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வைக்காவிடில் நாம் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவை நம் அருகில் வந்து அன்பாக வாலை ஆட்டும். என்னை மறந்து விட்டாயா? என்று வாய் திறவாமலே கேட்கும்.

காக்காய் பிடித்த கதை

இறுதியாக காக்காய் பிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.அந்தக் காலத்தில் பாட்டி, தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளைக் கூப்பிட்டு டேய்! கால், கைகளைப் பிடித்து விடடா! உனக்கு காலணா தரேன். மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு என்பர். இதன்  காரணமாக, நமக்கு சினிமா போகக்  காசு, ஹோட்டலில் சாப்பிட காசு என்று  காசு வேண்டிய நேரத்தில் எல்லாம் , நாமே அவர்களிடம் சென்று ‘பாட்டி கால், கை பிடித்து விடட்டுமா?’ என்று கேட்போம், அவர்களுக்கும் விளங்கி விடும். இதுதான் காக் காய்  (கால்+ கை ) பிடித்தல் என்பதாகும் . குல் லாப் போடுவது எப்படி என்பதை முன்னரே எழுதிவிட்டேன். ஞாபகம் இருக்கிறதா? ஒரு குல்லாய் வியா பாரி – குல்லா யுடன் மரத்தடியில் தூக்கம் – அவன் கூ டையில் இருந்த குல்லாய்களை குரங்குகளும் அணிந்தன ; அவன் குல்லாய் போட்டவுடன் அவைகளும் போட்டன. அவன் குல்லாயைத் தூக்கி எறிந்தவுடன் அவைகளும் தூக்கி எறிந்தன . அதாவது ‘ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும் ,பாடுற மாட்டை பாடிக்கறக்கனும்’ .

. –subham—

Leave a comment

Leave a comment