பிராமணர்களுக்கு மரண தண்டனை பற்றி மநு ! (Post No.7740)

ஆக்ஸ்போர்டில் மநுவின் சிலை

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7740

Date uploaded in London – 25 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மநு நீதி நூல் – பகுதி 49

ஸ்லோகம் 11-99 முதல்   11-198  வரை

மானவ தர்ம சாஸ்திரம் என்னும் மனு நீதி நூலில் 11-ஆவது அத்தியாயத்தில் முதல் நூறு ஸ்லோகங்களைக் கண்டோம். இப்போது மேலும் 100 ஸ்லோகங்களைக் காண்போம். இது பெரும்பாலும் பிராமணர்களுக்கானது. அவர்கள் தவறு செய்தால் மரண தணடனை கொடுக்கலாம் என்றும் சொல்கிறது. இது உண்மையான மரண தண்டனை அல்ல. ‘சிம்பாலிக்’ SYMBOLIC, அதாவது அடையாளப்பூர்வமானது; ஏனெனில் அவர்கள் வாழ்நாள் முழுதும் கெட்ட பெயருடன் வாழ்வது பல ஆயிரம் மரண தண்டனைகளுக்கு நிகரானது என்னும் கருத்தையும் உரைகார்கள் முன் வைத்துள்ளனர். ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே ஒன்பது உரைகளைக் கண்ட நூல் இது.

லண்டன் செயின்ட் பால் கதீட்ரலில் மனு நீதி நூல் 

ஆண்டுதோறும் இன்னும் மனு நீதி பற்றி நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வளவுக்கும் இது இன்றைய இந்தியாவில் பின்பற்றப்படவில்லை. புதிய அரசியல் சாசனம் தான் அமலில் உள்ளது. பழங்கால இந்தியாவிலும் இது அப்படியே பின்பற்றப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. தமிழர்கள் இதைத் தலை மேல் வைத்துக் கொண்டாடினர். மநு நீதிச் சோழன் தன் மகனையே தேர்க் காலில் வைத்து புகழ் பெற்றான்.

நிற்க. முக்கியமான விஷயம் இதில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கானது . tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதலில் சுவையான விஷயங்கள் புல்லட் (bullet points)  பாயிண்டுகளில் :–

ஸ்லோகம் 11-99/100 — தங்கத்தைத் திருடினால் பிராமணனுக்கு மரண தண்டனை;

ஸ்லோகம் 11-103/104 செக்ஸ் குற்றங்களுக்கு மரண தண்டனை ;

ஸ்லோகம் 11-108 முதல் — பசு வதை முதலிய சிறிய குற்றங்கள் ; அதாவது அறியாமற் செய்த பிழைகள் முதலியவற்றுக்கான தண்டனைகள்;

பாவங்கள் மகா பாதகங்கள் , உப பாதகங்கள் என்று பிரிக்கப்பட்டிருப்பதையும் காணலாம் .

ஸ்லோகம் 11-118ம், 11-122ம் வினோதமான கழுதைக் கொலை பற்றியும் கழுதைத் தோலைப்  போர்த்திக்கொண்டு 7 வீடுகளில் பிச்சை எடுப்பது பற்றியும் பேசுகிறது. ஒரு பிராமணனுக்கு இதைவிட பெரிய அவமானம் கிடையாது .

புறநானுற்றிலும், காரவேலன் கல்வெட்டிலும் பகைவர் நாட்டில் கழுதை ஏர் பூட்டி  எதிரி ஊர் நிலத்தை உழுவது பற்றியும் உள்ளதை ஒப்பிடுக.

ஸ்லோகம் 11–125ல் சொல்லப்பட்ட விரதங்கள், ஹோமங்கள் கூ ட இப் போது பிரமணர்களுக்கே தெரியாது !

ஸ்லோகம் 11-126ல் கணித முறைப்படி , விகிதாச்சாரப்படி 4 வருணத்தினருக்கு தண்டனை சொல்லப்படுகிறது. அக்கால மக்கள் கணிதப் புலிகள்!

ராஜஸ்தான் ஹைகோர்ட்டில்  மநுவின் சிலை 

செடிகள் , பிராணிகள் மீது கருணை

ஸ்லோகம் 11-131 முதல் பிராணிகளை அறியாமல் கொன்ற பாவத்துக்கும் 142 முதல் செடி,கொடிகளை அழித்த பாவத்துக்கும் பிராயச் சித்தம் சொல்லப்படுகிறது . அந்தக் காலத்தில் இவைகள் மீது எவ்வளவு அன்பு காட்டப்பட்டது!! அஹிம்சைக்கும் புறச் சூழல் அறிவுக்கும் (Non- Violence and Environmental Concerns) சான்றுகளாம். இவை எல்லாம் ‘தெரியாமல் செய்துவிட்ட’ பாவம். தெரிந்து எவரும் செய்ய மாட்டார்கள் என்பது சொல்லாமலே விளங்கும்  .

11-146 முதல் தகாத பொருட்களை உண்டால் பிராயச்சித்தமும், 11-148 முதல் கள் , சாராய கழுவாயும் சொல்லப்படுகிறது சோமபானம் புனிதமான டானிக் (Elixir)  மருந்து போன்றது; கள் என்பது உடலைக் கெடுப்பது என்பதை ஸ்லோகம் 11-149 காட்டும் .

11-171, 11-172 அத்தை மகள், அம்மான் கல்யாணம் மீதுள்ள தடைகளைக் காட்டுகிறது. இப்போது மேல்நாட்டு ஆராய்ச்சிகளும் உறவு முறைத் திருமணங்களில் உள்ள குறைபாடுகளைக் காட்டுகின்றன.

ஸ்லோகம் 11-174 ஹோமோ செக்ஸ் (Homo sex) – ஒரு பால் புணர்ச்சி பற்றிப் பேசுகிறது. மநு  சிந்திக்காத விஷயமே இல்லை ; அவர் தொடாத சப்ஜெக்ட் (subject) எதுவுமில்லை என்று தெரிகிறது. இஃது பழங்கால இந்தியாவின் மன நிலையை அறிய உதவுகிறது. இன்று நாம் ஹோமோ செக்ஸ் முதலியவற்றை சட்டபூர்வமாக்கிவிட்டோம். அவர்கள் கல்யாணம் தட ( (Gay Weddings) புடலான விருந்துகளுடன் நடைபெறுகிறது . கணவன்- மனைவிக்குண்டான எல்லா அலவன்சுகளும் (Allowances) – படிகளும் — அவர்களுக்கும் உண்டு என்று மேலை நாடுகள் அறிவித்துவிட்டன .

மநு நீதி ஒரு செத்த பாம்பு; இதை அவ்வப்போது அடித்து மகிழும் திராவிடங்களும், மார்கசீயங்களும் , அதுகளும் இதுகளும்  அபார்ஷன் (Abortion) , கே செக்ஸ் (Gay Sex)  பற்றி வாய் மூடி, மௌனியாகி, மகிழ்கின்றன.

ஸ்லோகம் 11- 182 முதல் ஒரு வினோதமான சடங்கைக் காணலாம். பாவியை செத்தவன் போல கருதி நடத்தும் சடங்கு இது . இவை அனைத்தும் ‘பிராமண பாவி’ (Brahmin sinners) களுக்கான சடங்குகள். பிராமணர்களை எவ்வளவுக்கு மனு மேலே வைக்கிறாரோ அந்த அளவுக்கு பிராமண குற்றவாளிகளைக் கீழே வைக்கிறார் என்பதையும் கருத்திற் கொள்க.

tags — மநு நீதி நூல் – பகுதி 49,பிராமணர், மரண தண்டனை

SUBHAM
Leave a comment

1 Comment

  1. Bala Subramaniam's avatar

    Bala Subramaniam

     /  March 26, 2020

    Very good information. We have to take efforts to spread messages
    particularly diravidian mind set people

Leave a comment