வாழ்க்கைமுறையை மாற்றுவோம்! (Post No.7760)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No.7760

Date uploaded in London – – 30 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில் நான்காவது உரை

(4-3-2020 அன்று ஒலிபரப்பானது)

வாழ்க்கைமுறையை மாற்றுவோம்!

இன்று அன்றாட வாழ்க்கையில் நாம் அறியாமலேயே பிளாஸ்டிக் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் அனாவசியமாகப் புகுந்து விட்டன.

இவற்றை இனம் கண்டு ஒதுக்கி நம் வாழ்க்கை முறையை மானால் உலகத்தின் சுற்றுப்புறச் சூழல் மேம்படும்.

பிளாஸ்டிக் கப்களில் தேநீர், காப்பி, ஜூஸ் ஆகியவற்றை அருந்தி அதைத் தூக்கி எறியும் போது அந்த கப்களில் தேனீக்கள் அமர்ந்து உயிரை விடுகின்றன. தரையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படும் சிட்டுக்குருவிகளிலிருந்து கடலில் எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி என்று நினைத்து உண்டு மாயும் திமிங்கிலம் வரை பிளாஸ்டிக் தரும் பாதிப்புகள் ஏராளம்.

தேனீக்கள் உலகிலிருந்து மறைந்து விட்டால அதிலிருந்து மனித குலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழும் என்பது பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கூற்றாகும். (If the bees disappear humans would have 4 years to live – Einstein).

மைக்ரோ பிளாஸ்டிக்கினால் மீன்கள் பாதிப்புக்குள்ளாவதை அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தி விட்ட நிலையில் இந்த மீன்களை உணவாக ஏற்கும் மனிதர்கள் அடையும் பாதிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

கடற்கரைப் பகுதிகளில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கப்புகள், ஸ்பூன்கள், உணவைப் பாக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவை கடல் நீரில் தூக்கி எறியப்படுவதால் அதை உண்ணும் கடல்வாழ் உயிரினங்கள் பரிதாபகரமாக உயிரை இழக்கின்றன.

இந்த பிளாஸ்டிக் அபாயம் உலகத்தின் குரல்வளையைப் பிடித்து உலகையே அபாயத்திற்குள்ளாக்குவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கையைத் தொடர்ந்து விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆகவே ஒவ்வொருவரும் தன்னளவில் பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் ஸ்பூனோடு கூடிய பிளாஸ்டிக் கப்புகளில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு அதைத் தூக்கி எறிவதைத் தவிர்த்து கோன் ஐஸ் மட்டுமே வாங்குவது என்ற பழக்கத்தை ஏற்படுத்தலாம்; ஒவ்வொருவராக ஆர்டர் செய்து உணவுப் பொருள்களை வாங்குவது இன்றைய நடைமுறை ஆகி விட்டது. இதைத் தவிர்த்து மொத்தமாக ஆர்டர் செய்து பிளாஸ்டிக் பேக்கிங், பிளாஸ்டிக் கப்கள் மற்றும் ஸ்பூன்களைத் தவிர்க்கலாம்.

மேக்-அப் வைப் (Makeup Wipe) என்று வாங்கி முகத்தைத் துடைத்து விட்டு அதைக் கழிவாகத் தூக்கி எறிவதைத் தவிர்த்து பருத்திப் பஞ்சை உபயோகப்படுத்தலாம்.தோலுக்கு எரிச்சல் தரும் செயற்கை வாசனைதிரவங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா, மினரல் ஆயில், பாரஃபின் (Mineral Oil and Paraffin) ஆகியவை மேக் அப் சாதனங்களில் உள்ளனவா என்று சோதித்து வாங்குதல் வேண்டும்.மேக் அப் சாதனங்கள் அனைத்தையுமே இப்படி உன்னிப்பாகக் கவனித்து வாங்க வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!  

          Tags-  விஞ்ஞானி, ஐன்ஸ்டீன், வாழ்க்கை முறை, தேனீக்கள்,

                   Script by S.Nagarajan (ச.நாகராஜன்)

Leave a comment

Leave a comment