Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
FOLLOWING ARE SOME RARE PICTURES ABOUT INDIA IN AN OLD GERMAN BOOK. PICTURES ARE TAKEN AT BERLIN AND LONDON MUSEUMS. SOME ARE FROM INDIA. THE BOOK WAS PUBLISHED IN 1929.
Three Famous Indologists from England and France
NAGARI ALPHABET IN YEAR 1667 IN AMSTERDAMTALKADU KANNADA INSCRIPTIONHORSE IN CALLIGRAPHY , V&A MUSEUM, LONDONvotive offerings in Siva Temple in Ludhiana, Punjab GARUDA IN GANDHARA STYLE, V & A MUSEUM, LONDONGAJALAKSHMI LAMP IN MADRAS MUSEUMSIVA AND PARVATI IN ELEPHANTA CAVES, INDIANUR MAHAL, V & A MUSEUM, LONDONNaga Deepa/lamp
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Diamond Axe- Hindus’ Reply to Christian Attacks கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888 நூலில்!-1(Post No.7705)
I am posting it in two parts ;இரண்டு பகுதிகளாக வெளியிடுகிறேன்
Following book contains Hindus’ reply to Christian criticism in English and Tamil. Book is available in the British Library in London.
நாடார்கள் பேய்களை வழிபடும் கீழ்ஜாதிகள் என்றும் கிருஷ்ண பரமாத்மா பெண் பித்தன் என்றும் பிஷப் கால்டு வெல் (Bishop Caldwell 1814-1891) போன்ற விஷமிகள் விஷ(ம)ப் பிரசாரம் செய்து வந்ததை எதிர்த்து இந்துக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் கொடுத்து புஸ்தகம் வெளியிட்டனர். 1888-ம் ஆண்டிலேயே இவ்வளவு ஹிந்து விழிப்புணர்ச்சி இருந்தது வியப்பூட்டுகிறது. அதுமட்டுமல்ல “கல்வி கற்ற இந்துக்களுக்கு” என்ற தலைப்பில் 4 பகுதி கொண்ட ஆங்கிலப்புஸ்தகத்தில் கிருஷ்ணனையும் மகாபாரதத்தையும் குறைகூறி பிஷப் கால்டு வெல் எழுதியதற்குப் பதிலாக இந்தப் புஸ்தகம் உள்ளது. ஐந்தாம் நூற்றாண்டில் கணிதம் கற்பித்த பேரழகியை தர தர என்று தெருவுக்கு இழுத்து வந்து அவளை உயிருடன் கொளுத்திய சம்பவம் முதல் தென் அமெரிக்க நாகரீகங்களை கிறிஸ்தவப் பாதிரியார்கள் தீக்கிரை ஆக்கிய சம்பவம் வரை எல்லாவாற்றையும் சுருக்கமாகக் கொடுத்துள்ளனர். இதில் ஒரு சம்பவம் கூட மிகைப் படுத்தப்பட்டதல்ல என்பதை இன்று வரலாறு படிப்போர் அறிவர். எல்லா என்சைக்ளோபீடியாக்களிலும் உலகமே ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவங்கள் இவை.
புஸ்தகத்தின் பெயர் – வஜ்ரக் கோடாலி (சம்ஸ்க்ருதத்தில் வஜ்ர டங்கம் )
கிடைக்குமிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்
நான் இதை பிரிட்டிஷ் லைப்ரரியில் படித்தவுடன் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலர் வாக்கு நினைவுக்கு வந்தது . உடனே இதை பேஸ் (Facebook) புக்கில் போட்டேன் . இப்பொழுது எனது இரண்டு ‘பிளாக்’குகளிலும் பதிவு செய்கிறேன்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – கட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி – கட்டுரை எண் 7611 – வெளியான தேதி 24-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரி – கட்டுரை எண் 7656 – வெளியான தேதி 6-3-2020
பத்து சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்தோத்ரம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்.
‘நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே’ என்று ஒவ்வொரு ஸ்லோகத்திலும் அமைந்திருப்பதால் இது ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் என்று வழங்கப்படுகிறது.
அத்வைத தத்துவத்தை மிக அழகாக விளக்கும் ஸ்தோத்ரம் இது.
இதற்கான ஆக்ஷேபணைகளையும் அதற்கான தகுந்த சமாதானங்களையும் அறிந்து கொள்வது எளிதான விஷயமல்ல.
ஆகவே இதற்கான அற்புதமான விரிவுரைகள் பல பெரியோர்களால் இயற்றப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஸுரேஸ்வாராசார்யாளால் இயற்றப்பட்ட மானஸோல்லாஸ வார்த்திகம் ஸ்லோக ரூபமாக அமைந்துள்ளது; அற்புதமானது; பிரசித்தி பெற்றது.
வார்த்திகம் என்பதற்கான லக்ஷணம் என்ன? மூலத்தில் கூறியதை விளக்குவது, அவசியம் இருந்தால் மூலத்தில் கூறாததையும் எடுத்துக் கூறி உண்மைப் பொருளை விளங்க வைப்பது, தவறிச் சொல்லப்பட்டிருப்பது போல காணப்படுவதை தெளிவு படுத்துவது – இதுவே வார்த்திக லக்ஷணமாகும்.
ஆகவே இந்த ஸ்தோத்ரத்திற்கு இன்னொரு உரையை ஸ்வயம்பிரகாச யதீந்திராள் இயற்றியருளினார். இந்த உரைக்குப் பெயர் லகு தத்வஸுதா.
இந்த இரண்டு உரைகளுக்கும் விளக்க உரைகள் ஏராளமாக நவீன காலத்தில் வந்துள்ளன.
‘ஹிதபாஷிணி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ ஆர். முத்துகிருஷ்ண சாஸ்திரிகள் தமிழில் லகுதத்வ ஸுதாவை ஒட்டி 1950 ஆம் ஆண்டு ஒரு விளக்க உரையை வெளியிட்டுள்ளார்.
இன்னொரு உரை ஆங்கிலத்தில் அமைந்துள்ள ஒன்றாகும். இதை எழுதியவர் D.S. சுப்பராமய்யா என்னும் பேராசிரியர். இவர் சர் சி,வி,ராமனுடன் அவரது ஆராய்ச்சியில் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். பங்களூர், சென்ட்ரல் காலேஜில் இயற்பியலை 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கற்பித்து வந்தவர்.
ஆகவே இயல்பாகவே விஞ்ஞான அறிவும், கூடவே ஆழ்ந்த அத்வைத ஞானமும் இருந்ததால் இந்த ஸ்தோத்ரத்திற்கு இரு பாகங்களில் பெரிய உரையை விஞ்ஞான பூர்வமான உதாரணங்களுடனும் ஆதாரங்களுடனும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். முதல் பாகம் 1988இலும் இரண்டாம் பாகம் 1990ஆம் ஆண்டிலும் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகள் (சிருங்கேரி ஆசார்யாள்) அவர்கள் பூரண ஆசியுடன் ஸ்ரீ சாரதா பீடத்தால்வெளியிடப்பட்டது. முதல் பாகம் – 722 + 33 பக்கங்கள் – முதல் நான்கு ஸ்லோகங்களின் விளக்கத்தை அளிக்கிறது இரண்டாம் பாகம் – 593 பக்கங்கள் – அடுத்த 6 ஸ்லோகங்களின் விளக்கத்தை அளிக்கிறது.
இன்னும் பலர் எழுதிய இது போன்ற பல விளக்கவுரைகள் உள்ளன. அவற்றை ஆழ்ந்து படித்தால் அத்வைதம் பற்றி நன்கு புரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தின் முதல் ஸ்லோகம் இது: விச்வம் தர்பணத்ருச்யமாநநாகரீதுல்யம் நிஜாந்தர்கதம்
பச்யந்நாத்மநி மாயயா பஹிரிவோத்பூதம் யதாநித்ரயா |
யஸ்ஸாக்ஷாத்குருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மாநமேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தயே ||
இதன் பதவுரை (‘ஹிதபாஷிணி’ ஆசிரியர் ஸ்ரீ ஆர். முத்துகிருஷ்ண சாஸ்திரிகள் எழுதியுள்ளபடி)
தர்பணத்ருச்யமாநநாகரீதுல்யம் – நிர்மலமான கண்ணாடியில் காணப்படும் மாநகரத்திற்குச் சமானமாயும்
நிஜாந்தர்கதம் – ஆத்ம ஸ்வரூபத்தினுடைய மத்தியில் கல்பிக்கப்பட்டிருக்கும்
ப்ரபோத ஸமயே – குருவினால் மஹாவாக்ய உபதேசம் செய்யப்பட்டும் ஸமயத்தில் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற அனுபவமானது ஏற்பட்டிருக்கும் காலத்தில்
அத்வயம் – ஆகாயம் என்ற த்வீதிய வஸ்து
ஸ்வாத்மாநமேவ – ஆகாயம் முதலான பிரபஞ்சத்திற்கு அதிஷ்டானமான ப்ரம்மத்தைக் காட்டிலும் வேறுபடாததாயும் சச்சிதானந்த ரூபமாயுள்ள ப்ரத்யகாத்மாவை
ஸாக்ஷாத்குருதே – சச்சிதானந்த ரூபமான ப்ரம்மமே நான் என்று யாதொரு விதமான ப்ரதிபந்தமில்லாமல், ப்ரமத்திற்கும், தனக்கும் அணுமாத்ரமான வ்யவதானம் இல்லாமல் செய்து அனுபவிக்கின்றானோ
தஸ்மை – முன் சொல்லப்பட்ட வைபவத்தோடு கூடினதாயும்
ஸ்ரீ குருமூர்தயே – ப்ரம்ம தத்வத்தை ஸாக்ஷாத்கரித்துக் கொண்ட காரணத்தால் த்ரிவித பரிச்சேத சூன்யனாயும், ஞானோபதேஷ்டாவாயுமுள்ள புருஷன் எவனோ தத்ரூபமாக இருக்கிறவரா
ஸ்ரீ தக்ஷிணாமூர்தயே – தெற்கு முகமான சரீரத்தோடு கூடின பரம குருவின் பொருட்டு அல்லது மாயாசக்தியினால் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய இவற்றைச் செய்வதில் சாமர்த்தியமுள்ளவராயும், ஆகார விசேஷமில்லாதவராயுமுள்ள பரப்ரம்மமாகிய பரம குருவின் பொருட்டு
முதலாவது ஸ்லோகத்தில் அனைத்து பிரபஞ்சமும் கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் போல ஆத்ம ஸ்வரூபத்திலேயே கற்பிதம் என்பது சொல்லப்படுகிறது.
இரண்டாவது ஸ்லோகத்தில் ஆத்மாவிற்கு அவயவங்கள் இல்லை என்றும் அது எங்கும் நிறைந்திருப்பது என்றும் கூறும் போது அதிலிருந்து பிரபஞ்சம் எப்படி உற்பத்தியாகும் என்ற ஆக்ஷேபத்திற்கு பதில் கூறி ஆத்மாவே ஜகத்தின் காரணம் என்பது உரைக்கப்படுகிறது.
மூன்றாவது ஸ்லோகத்தில் சூன்யத்திலிருந்தே ஜகத் உண்டாகிறது என்ற பௌத்தர்களின் வாதம் நிராகரிக்கப்படுகிறது.
நான்காவது ஸ்லோகத்தில் ஆத்மாவில் சத்தும் பிரகாசமும் இருப்பது போல ஜகத்திற்கும் சத்தும் பிரகாசமும் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்விக்கு – சந்தேகத்திற்கு – விடை அளிக்கப்படுகிறது.
ஐந்தாவது ஸ்லோகத்தில் சிலர் பிராணனையும், இந்திரியங்களையும், புத்தியையும், ஆத்மா எனக் கருதுகின்றனர். இந்த மோகம் நீங்குவதற்கு பரமேஸ்வரனின் அனுக்ரஹம் தேவை என்பது சொல்லப்படுகிறது.
ஆறாவது ஸ்லோகத்தில் ஆத்ம ஸ்வரூபம் சூன்யமாகவே இருக்க வேண்டும் என்று கூறும் சூன்யவாதிகளின் கருத்து நிராகரிக்கப்பட்டு அதற்கான சமாதானம் சொல்லப்படுகிறது.
ஏழாவது ஸ்லோகத்தில் தேகம் முதலியவற்றிலிருந்து ஆத்ம ஸ்வரூபத்தை விவேசனம் செய்து அதற்கு பரமேஸ்வர சொரூபத்துடன் ஐக்கியம் போதிக்கப்படுகிறது.
எட்டாவது ஸ்லோகத்தில் பிரும்மம் தவிர வேறு ஒன்றும் இல்லையெனில் வித்யோபதேசம், குரு, சாஸ்திரம் ஆகியவை எதற்காக இருக்கிறது என்ற சந்தேகத்திற்கு விடை அளிக்கிறது. வித்யோபதேசம், குரு, சாஸ்திரம் ஆகியவற்றால் ஞானம் உண்டாகும். அதனால் கற்பனையில் உள்ள பிரபஞ்சம் நசிக்கும்; சச்சிதானந்தமான ஆத்ம ஸ்வரூபம் தெரியும் என்று பதில் அளிக்கப்படுகிறது.
ஒன்பதாவது ஸ்லோகத்தில் இந்த பிரும்ம ஞானத்தைப் பெற அஷ்டமூர்த்தி உபாஸனமே வழி என்று என்பது எடுத்துரைக்கப்படுகிறது.
பத்தாவது ஸ்லோகத்தில் இந்த ஸ்தோத்திரத்தை குரு முகமாக முறைப்படி கேட்பதாலும் இதன் அர்த்தத்தை அறிவுபூர்வமாக ஆராய்ச்சி செய்வதாலும், இதை தியானம் செய்வதாலும், பிறருக்கு எடுத்துக் கூறுவதாலும் உண்டாகும் பயன் விளக்கப்படுகிறது.
இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆழ்ந்த பொருள் விளக்கம் தரப்படுவதோடு உள்ளார்ந்த அர்த்தத்தையும் விளக்கும் மானஸோல்லாஸ வார்த்திகம் படித்து சிந்திக்கப்பட வேண்டிய ஒரு நூல்.
இது தமிழிலும் கிடைக்கப் பெறுவது தமிழர்களின் நற்பாக்கியமே.
இது த.சுந்தரராஜ சர்மா பரிசோதித்து 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்.
புத்தகத்தின் பெயர் : ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம். (மாநஸோல்லாஸத்தோடு) – பக்கங்கள் – 400
மாநஸோல்லாஸம் பற்றிய சிறு குறிப்பு:-
மாநஸோல்லாஸம் பத்து உல்லாஸங்களைத் தன்னுள் கொண்டது.
366 ½ ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.
கீழ்க்கண்ட வினாக்களுக்கு இந்த நூல் அற்புதமான விளக்கங்களை அளிக்கிறது.
இது உள்ளது, விளங்குகின்றது என்னும் வழக்குச் செல்லுகின்றது. அந்த உண்மையென்பதும், விளக்கம் என்பதும் எப்பொருளில் நிலைத்தவை? பொருள்கள் தோறும் நிலைத்தவையா? அல்லது எல்லாவற்றிற்கும் ஆத்மாவான ஈஸ்வரனிடத்து நிலைத்தவையா?
ஈஸ்வரன் என்பவன் எப்படிப்பட்டவன்?
ஜீவன் என்பவன் எப்படிப்பட்டவன்?
எல்லாவற்றினுடைய ஆத்மா என்பவன் எப்படிப்பட்டவன்?
ஜீவன் அதனை எப்படி அறியக் கூடும்?
அதனை அறிவதற்குக் கருவி யாது?
அதனை அறிவதனால் பயன் யாது?
மேலும் ஜீவனும், ஈஸ்வரனும் ஒன்று என்பது எவ்வாறு ஆகும்?
முற்றுமுணர்ந்தவனாய் எல்லாவற்றையும் செய்கின்ற ஈஸ்வரன் ஜீவனாக எப்படி ஆவான்?
இத்தனை கேள்விகளுக்கும் ஆசார்யர் முறைப்படி நல்ல பதில்களைக் கூறுகிறார்.
நூலின் பயன் என்ன என்பதையும் ஸ்ரீ ஸுரேஸ்வாராசார்யாள் மிகத் தெளிவாக பத்தாவது உல்லாஸத்தில் கூறுகிறார்; விளக்கமும் அளிக்கிறார்.
மோக்ஷத்தை வேண்டுவோர் அதைப் பெறுவர், அதற்கு இந்த ஸ்தோத்திரத்தை அர்த்தத்தோடு படித்து அதற்குத் தக நிற்க வேண்டும்.
வேண்டுவன அனைத்தும் இதை ஓதுவதால் கிடைக்கும். என்றாலும் அற்ப லாபம் அடைய விரும்பாமல் மஹாலாபத்திற்கே இதனை உபயோகிக்க வேண்டும்.
என்றாலும் கூட எண்ணாத பயனும் கூடவே கிடைக்கும் என்பதற்கு ஆசார்யாள் திருஷ்டாந்தமும் இப்படி அளிக்கிறார்:-
சமையலில் ஈடுபட்டிருப்பவனுக்குக் குளிர் முதலியன நீங்குதல் போல இடையிலுள்ள பயன்களும் இந்த ஸ்தோத்திரத்தினாலே எப்பொழுதும் அமைகின்றன.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் அத்வைதத்தை உணர்ந்து பரமேஸ்வரனின் அருளுக்குப் பாத்திரமாக வழிகாட்டும் ஒரு அற்புத ஸ்தோத்ரம். சுருக்கமாகச் சொன்னால் மோக்ஷத்திற்கான பாதையைக் காட்டும் நூல் இது!
tags — தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம், ஆதி சங்கரர் நூல்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
When you do something wrong, make sure witness is dealt with
In a village a man was raising a fat sheep. The watchman of that village set his eye upon it. One day he stole it and took it home. His wife was very happy and cooked it. She made a very tasty dinner. Their son was sleeping in the outhouse. They wanted to share the tasty dish with their son. They wanted to bury the rest of the curry. So they devised a plan to bring their son inside the house and give him. But they were worried about their son knowing the theft.
So according to the cunning plan his wife went to the rest house and woke her son. At the same time the watch man poured a pot of water on him. Both of them shouted,
“Oh my god, heavy rain. Please take him inside”. All of them went inside. His son was given his share.
As expected the boy told his friends about the tasty mutton he had the previous night. When the owner of the sheep came to know about it , he complained to the local magistrate. All of them were asked to appear before him.
Both the watch man and his wife were in the witness box.
Magistrate asked,
Did you cook mutton curry last night?
No, said they.
Your child says so, he replied.
We do not know what night he says he ate it , said they.
The justice looked at the boy and asked,
What night did you eat mutton curry?
Last night there was heavy rain. And my parents took me inside the house and I ate the mutton.
Magistrate said,
There was no rain last night. This little child might have eaten it some time ago. So last night is wrong.
He sent them away after dismissing the case.
Thieves will escape by trick. But one day they will be caught- says a Tamil proverb.
Xxx
DIVIDE AND RULE
Two friends were traveling to another country. On their way they took rest at the entrance of a house. In the villages there used to be a pial, a bench like construction at the entrance of each house.
They observed that the husband and wife living in the house were affectionate. One of them looking at the other said, observe their harmony.
He was astonished and replied, their friendship will never change.
The one who heard this said, see I will make it change and made a bet on it.
After wards he met the couple and spoke to them like an ascetic. The woman and her husband saluted him and gave him food and shelter.
One day when her husband was away, the man said,
“Madam, you are a great woman. But your husband is not that good. You are very faithful. Your husband is not. More over he was a salt seller in his previous birth”.
So saying he was sorry.
How may I know that? She asked anxiously.
At night when he is fast asleep, lick his feet and it will taste salt.
Then he met her husband separately and told him,
“You are a good and worthy man. Alas! Alas! That you should have for your wife who is in a former birth was a street dog. I am sorry to tell you the truth”.
The worried man asked the ‘ascetic’ man,
How may I know this?
At night pretend to be sleeping and see whether she licks your feet. This is was she is doing every night.
Accordingly, his wife woke up in the midnight and walked like a cat and licked her husband’s foot.
He woke up and shouted at her,
You dog! Get out of the house now.
She said to him, You salt seller, I know you from day one! I won’t live with you. I am going to my mother’s house now.
She packed her things and left the house in the morning.
Before dawn both ‘ascetic’ and his friend also left the village.
This is what foreigners did to Indians.
They divided the country into Aryan and Dravidian which is not in Tamil and Sanskrit literature.
They divided the country into India and Pakistan.
They said Aryans drove out Dravidians out from Indus Valley. But all the skeletons in Indus valley are of Punjabi stature; no Dravidian skeletons at all!
There is no basis or proof for Aryan invasion or Dravidian cowards running away to south from them. Literature shows that both of them are sons of the soil.
They criticised everything in Sanskrit. They never touched Silappadikaram or Peria Puranam. They never criticised anything in Sangam literature though it repeated Arundhati story, Sibi Story, Ramayana story and Mahabharata story!
There is a proverb in Tamil, if a buffalo sees a simpleton, even it would say to him you are my darling lover. Foreigners knew Tamils did not know their own literature!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
தமிழ் விக்கிபீடியாவில் (Tamil Wikipedia) சடங்கு பற்றிய தகவலைப் படித்தேன். அது தவறான விளக்கம். அதைத் திருத்த வேண்டும். மேலும் பிராமணர்களைப் பற்றிய தவறான தகவல், அத்தலைப்புக்கு சம்பந்தமில்லாத இடத்தில் ,கொடுக்கப்பட்டுள்ளது அதையும் நீக்கவேண்டும்.
விக்கிபீடியா பற்றி எச்சரிக்கை !
இது ஒரு கை எழுதுவது அல்ல. பல உள்நோக்கம் படைத்தோரும் அரைவேக்காடுகளும் கூட இதை எழுதுகின்றன. இதில் பல தவறுகளைக் காண்கிறேன். இன்று சடங்கு பற்றி மட்டும் கதைப்போம். பி.பி.சி. போன்ற வெளிநாட்டு
ஒளி/ஒலி பரப்புகள் பொய் சொல்வதில்லை . ஆ னால் விஷமம் செய்யும் . பாதி உண்மையைச் சொல்லி , சந்தேகத்தைக் கிளப்பிவிடும். தங்களுக்கு வேண்டிய செய்திகளை மட்டும் தெரிந்தெடுத்து ஒளி/ஒலி பரப்பும். சதா ம் ஹுசைன் அல்லது கடாபி பெட்ரோல் தராவிடில் அல்லது பெட்ரோலிய கான்டராக்ட்டுகள் தராவிடில் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திக் கொன்றுவிடும். இதுபோல தமிழ் திராவிடங்கள் விக்கிபீடியாவின் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளன. அதாவது கருணாநிதி , நெடுஞ்செழியன் போன்றவர்கள் எழுதிய தொல்காப்பிய, திருக்குறள் உரைகளை எழுதிவிட்டு 1000 ஆண்டுகளாக உள்ள பழைய உரைகளை இல்லாமற் செய்து விடுவது ; இதோ விக்கிபீடியாவில் சடங்கின் விளக்கம் :-
சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும்.
சட்ட + அம் + கு = சடங்கு
‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள்.
‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது
‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி.
பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது.
“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”
ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார். எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள் கொள்ளலாம்.
சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு:
அரண் – அரணம் – கரணம்
மொழி முதல் எழுத்தாக வரும் அகரம் வழக்கில் ககரமாகத் திரிவது உண்டு. அனல் கனலாகத் திரிந்தது இதற்கு உதாரணம். தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைக் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர கரணங்களை, அதாவது சடங்குகளை யாத்தோர் தமிழ்ச்சான்றோர். நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. சான்றோர்களைக் குறிப்பிட்டது இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப் பொருள்படும்.
XXXXX
மூன்று தவறுகள்
தமிழில் “ச” என்ற எழுத்தில் எந்தச் சொல்லும் துவங்கக் கூடாது என்பது தொல்காப்பிய விதி. இதையும் மீறி சங்க இலக்கியத்தில் சுமார் 20 சொற்கள் உள்ளன. அவை அனைத்தும் சம்ஸ்கிருத சொற்கள்.
ஆகையால் விக்கி கூறும் ‘சட்டம்’ சங்க இலக்கியத்தில் இல்லை. பிற்காலத்தில் வந்த சொல்; மேலும் அது சம்ஸ்கிருத அடிப்படையானது .
சடங்கு என்ற சொல் ஷட் +அங்கம் , அதாவது வேதத்தின் ஆறு அங்கங்கள் , என்ற சொல்லைக் குறிக்கும். இதை வேதம் கற்கும் அனைவரும் துணைப்பாடங்களாக கற்க வேண்டும். இதில் வல்லவர் ‘சடங்கவித்’ எனப்படுவார். சுந்தர மூர்த்தி நாயனாருக்கு பெண் கொடுத்த சடங்கவி(த்) சிவாச்சாரியாரை ‘சடங்கவி’ என்று சொல்லுவோம். சடங்கு என்ற தமிழ்ச் சொல் இதிலிருந்து வந்ததைக் கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 18-10-1932 நிகழ்த்திய சென்னை மைலாப்பூர் சொற் பொ ழிவில் விளக்கியுள்ளார். பின்னர் இது தெய்வத்தின் குரல் புஸ்தகத்திலும் வந்துள்ளது.
திருவாசகத்துக்கு உரை எழுதியவர்களும் சட்டம் -உடல், அல்லது சிவாகமக் கட்டளைகள் என்று இருந்தாலும் உடல் என்பதே பொருந்தும் என்பர் – காண்க ச.தண்டபாணி தேசிகர் உரை, திருவாவடுதுறை ஆதீனம் , பாடல் 467, திருக்கழுக்குன்றப் பதிகம்
அதே பாடலில் மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சிஷ்டன் -ஒழுங்கு நெறி தவறாதவன் என்பதும் சிஸ்டம் SYSTEM என்னும் ஆங்கிலத் தொடர்புடையது. அதாவது ஆதி மூலம் சம்ஸ்கிருத “ஸ்த” (Sta- Stand, System) என்னும் வேரிலிருந்து பிறந்தது.
xxx
“ஐயர் யாத்தன கரணம் என்ப”
ஐயர் என்ற சொல் ‘ஆர்ய’ என்பது பிராகிருத பேச்சு வழக்கில் ‘அஜ்ஜ’ ஆகி, பின்னர் ஐயர் என மருவியது.
‘ஆ ரி/ர் ய’ என்றால் கற்றவன், பண்பாடு உடையவன், முனிவன் என்று மூன்று பொருள் உண்டு . சங்க இலக்கியத்திலும் ‘ஆ ரிய’ இந்த மூன்று பொருளில் வருகிறது. ‘ஐயர்’ பல இடங்களில் வருகிறது.
‘கரணம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. சங்க இலக்கியத்திலும் இல்லை. தொல்காப்பிய பொருள் அதிகாரம் உருவான ஐந்தாம் நூற்றாண்டில் புழக்கத்துக்கு வந்தது . பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பது அறிஞர் பெருமக்கள் கருத்து.
இந்தக் ‘கரணம்’ உருவான கதை மஹாபாரதத்தில் உள்ளது . ஒருவனுடைய மனைவியை மறறொருவன் இழுத்துச் சென்றபோது அந்தப் பெண்ணின் மகன் எதிர்ப்புக் குரல் எழுப்பவே கல்யாண சடங்குகள் / கரணம் உருவானது . கரணம் , காரணம் என்பதற்கு 21 விளக்கங்களை விஸ்டம் லைப்ரரி (Wisdom Library) வெப்சைட்டில் காண்க.
ஆக, மு. கருணாநிதி எழுதிய தொல்காப்பிய உரையை விடுத்து உண்மை உரை தருக.
xxx
மூன்றாவது தவறு அந்தணர், வேதியர், மறையோர் , பார்ப்பனருக்கு தேவையில்லாதபடி இவர்கள் ஒரு ஜாதியினரை (பிராமணர்களை)க் குறிக்காது என்று எழுதியிருப்பது, இதை எழுதியவரின் உள் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இவை அனைத்தும் சம்ஸ்கிருத சொற்கள் –
வேதம் அறிந்தவன் வேதியன் (வேதம் சம்ஸ்கிருதச் சொல் )
பார்ப்பனன் – எப்போதும் உள்ளே உறையும் இறைவனை பார்ப்பவன்.
உண்மையில் இவை அனைத்தும் சம்ஸ்கிருத சொற்களின் மொழிபெயர்ப்பு.
பிரம்மத்தை நாடுபவன் அல்லது நெஞ்சில் நிறுத்தியவன் பிராமணன்.
வேதம் என்னும் அறிவு பெற்றவன் – வேதவித்
இறைவனுக்கே பிராஹ்மணன் , பிராஹ்மண ப்ரியன் என்று பெயர்கள் உண்டு. விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்போர் இதை அறிவர் .
பிராமணர்கள் நூற்றுக்கு நுறு சதவிகிதம் இந்தக் கருத்தை ஏற்றதால் இவை அவர்களைக் குறித்தன. இதே போல பிரம்மத்தை நாடிய விஸ்வா மித்ரன் , ஜனகன் போன்ற பிராமணர் அல்லாதோரையும் , துறவியரையும் குறித்தது உண்மைதான்.
ஆயினும் சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் இது வேதம் அறிந்த பிராமணர்களைக் குறித்தது என்பதை உ.வே.சாமிநாத ஐயர் , கி.வா ஜகந்நா தனின் சங்க இலக்கிய மற்றும் திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பில் காண்க (குறள் 543)
சங்க இலக்கியத்தில் பிராமணர் பற்றிக் குறிப்பிடுகையில் மேற்கூறிய சொற்களைப் பயன்படுத்திய இடங்களை இங்கே குறிப்பிட்டால் கட்டுரை விரியும். ஆகையால் அதைத் தனியாகக் காண்போம்.
ஆக மூன்று தவறுகளையும் திருத்துவது விக்கிபீடியாவின் கடமை. தமிழ் பற்றி பிறர் எழுதும் விஷயங்களை அறிஞர் குழுவின் மேற்பார்வைக்கு அனுப்புவது நல்லது.
வாசகர்களுக்கு
தமிழ் பற்றிக் கடந்த 50 ஆண்டுகளாக வெளிவரும் புஸ்தகங்களில் விஷமிகளின் கைவரிசை அதிகம் இருப்பதால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழைய உரைகளையும் காண வேண்டும். அப்படி மாற்றுரை எழுத விரும்பினால் பழைய உரைகாரர் சொன்னதையும் குறிப்பிடுவது எழுத்து தர்மத்தை நிலைநாட்டும். மேலும் பொய்யுரைகள் தமிழ் மொழியை அழித்துவிடும் .
அசைக்க முடியாத வலிமையுடன், நேர் கொண்ட பார்வையுடன் எதிர் வருவதை நான் நேராகப் பார்க்கிறேன்; ஆகவே நான் பிரச்சினையின்றி வாழ்கிறேன்.
With unwavering strength, with steadfast and clear vision I shall look ahead and hence live without trouble.
(Translation by Dr N.P.Unni)
*
சிங்கம் சிறுநரியை இரையாக ஏற்றுக் கொல்லாது!
சிம்ஹோ ஜம்புகமங்கமாகதபி த்யக்வா நிஹந்தி த்விபம் |
சர்வ: க்ருச்கதோபி வாஞ்சதி ஜன: சத்வானுரூபம் பலம் ||
ஒரு சிங்கமானது தன் அருகே வரும் சிறுநரியை இரையாகக் கொல்லாமல விட்டு விடுகிறது; அது யானையையே தன் இரையாகக் கொள்ள நினைக்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டமாக இருந்த போதிலும் தன் பலத்திற்குத் தக்கபடியே பலனை அடைய விரும்புகிறார்.
A lion igorea jackal coming into his lap but prefers an elephant as his prey. All however be in difficulty wants to achieve the result according to his stature. (Translation by Dr N.P.Unni)
விஷத்திலிருந்தும் கூட ஒருவன் அம்ருதத்தை எடுக்கலாம்; மோசமான அமேத்யத்திலிருந்து கூட தங்கத்தை எடுக்கலாம்; மிக உயரிய வித்தையை கீழான நீசன் ஒருவனிடமிருந்து பெறலாம்; நற்பெயர் இல்லாத குலத்திலிருந்து கூட ஒரு ஸ்த்ரீ ரத்னத்தை (பெண்களில் ஜொலிக்கும் ரத்னம் போல இருப்பவளை) பெறலாம்.
One should take nectar even from poison, gold from filthy surroundings, knowledge of the highest kind even from a low person and the jewel of an woman from an ill-reputed family. (Translation by Dr N.P.Unni)
*
சுபாஷித பெருமை!
பாஷாஷு முக்யா மதுரா திவ்யா கீர்வாணபாரதி |
தஸ்மாத்தி காவ்யம் மதுரம் தஸ்மாதபி சுபாஷிதம் ||
மொழிகளில் கடவுளர் பேசும் மொழியானது முக்கியமானது, (கீர்வாண பாரதி – சம்ஸ்கிருதம்) இனிமையானது, தெய்வீகமானது. அதிலும் அதில் உள்ள காவியங்கள் இனிமையானவை; அதிலும் அதில் உள்ள சுபாஷிதம் இன்னும் அதிக இனிமையானவை.
Among languages the speech of the gods is important, sweet, and divine; even there the poetry is enjoyable and the subhasita – the finer sayings are even sweeter. (Translation by Dr N.P.Unni)
*
விவேகமில்லாதவனிடம் வேலை பார்ப்பதை விட காட்டுக்குப் போவது மேல்!
வரம் வனம் வரம் பைஷ்யம் வரம் பாரோபஜீவனம்|
பும்ஸாம் விவேகஹீனானாம் சேவயா ந தனார்ஜனம் ||
காட்டிற்குப் போவது, பிச்சை எடுப்பது, கடினமாக உழைப்பது முதலிய யாவும் ஒரு விவேகமில்லாத முதலாளியிடம் உழைப்பதை விட மேல்! அப்படிப்பட்டவர்களிடம் வேலை பார்த்து ஒருவன் பணம் சம்பாதிப்பது முடியாத காரியம்.
Going to the forest, begging for alms, living by hard labour etc, are better than serving a master who has no discretion and in no way one could make money out of service with such people.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சோழர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இரண்டு தமிழ்ப் புலவர்கள் பற்றி மக்களிடையே வழங்கும் இரண்டு சொற்றொடர்களைக் கொடுத்துள்ளேன் . கண்டு பிடிக்க முடியாவிட்டால் விடையைப் பாருங்கள்.