
WRITTEN BY R.NANJAPPA
Post No.7821
Date uploaded in London – – 13 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சென்ற கட்டுரையின் தொடர்ச்சி..
ஹிந்தி படப் பாடல்கள் – 5 – காலம் என்னும் புதிர்! -2
R.Nanjappa

காலம் என்னும் புதிர்!
ஆங்கிலத்தில் Arrow of Time என்று சொல்வார்கள். வில்லிலிருந்து ஒருமுறை தொடுக்கப்பட்ட அம்பு திரும்பி வராது. அது போல் தான் காலமும். சென்றது திரும்பாது! இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என காலம் அம்புபோல் பாய்ந்து ஒரே திசையில் போகிறது!
தத்துவ அளவில் இதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் உலகப் படைப்பும் யுகங்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. நம் கொள்கை காலச் சுழற்சிக் கொள்கை– Cyclical Time.
கிறிஸ்துவ மதம் தோன்றிப் பரவுவதற்குமுன் உலகில் இருந்த எல்லா பண்டைய நாகரிகங்களும் இந்த காலச்சுழற்சிக் கொள்கையையே பின்பற்றின.இதையே இன்று விஞ்ஞான உலகமும் ஒப்புக்கொண்டு விட்டது. நம் யுகக் காலக்கணக்கை CARL SAGAN போன்ற Astro physicists வியந்து போற்றுகிறார்கள். இது Big Bang கருத்துடன் மிகவும் ஒத்துப்போகிறது என்கிறார்கள்.
ஆனாலும் தனி மனித வாழ்வில் எந்தக் காலச் சுழற்சியுமில்லை! போனது போனதுதான்–மீண்டும் பிறவிதான். அதனால் தான் நம் பெரியவர்கள் காலத்தைப் பொன்னைவிடப் பெரிதாகப் போற்றினார்கள்.
இதில் முக்கிய அம்சம் இந்த க்ஷணம் தான்! க்ஷணத்தைச் சரியாகச் செலவிடுவதுதான் நாம் காலத்தை வெல்லும் உபாயம். அதாவது நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்! கடந்ததை நினைத்து விசனப்படாதே, எதிர்காலத்தையே பார்த்திருக்காதே, இப்போது காலத்தில் கவனம் வை என்றார் புத்தர். பகவான் ரமணரும் இதையே சொன்னார். கடந்த காலம் என்பது நினைவுப் பின்னல்தான், எதிர்காலம் என்பது இன்னும் வரவில்லை- அது ஒரு எதிர்பார்ப்புத்தான். அது வரும்போது அது நமக்கு நிகழ்காலமாகத்தான் இருக்கும். நாம் எதிர்காலத்தில் வாழ்வதில்லை- அதை நினைத்து நிகழ்காலத்தில்தான் வாழ்கிறோம்!அதனால் நிகழ்காலம்தான் நமக்கிருப்பது என்பார்.

We would experience the future only as the present when it comes, so the present is the only reality!
இந்தக் கருத்தையும் கவி ஸாஹிர் லுதியான்வி ஒரு பாடலில் அழகாகச் சொல்லிவிட்டார்.
आगे भी जाने ना तू, पीछे भी जाने ना तू
जो भी है बस यही एक पल है
ஆகே பீ ஜானே ந தூ, பீசே பீ ஜானே ந தூ
ஜோ பீ ஹை பஸ் வஹி ஏக் பல் ஹை
இனி என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாது,
கடந்துபோனதைப் பற்றியும் உனக்குத் தெரியாது!
இந்த க்ஷணம்– இது மட்டும்தான் உனக்கிருப்பது!
अनजाने सायों का राहों में डेरा है
अनदेखी बाहों ने हम सब को घेरा है
ये पल उजाला है, बाकी अंधेरा है
ये पल गवाँना ना, ये पल ही तेरा है
जीने वाले सोच ले, यही वक्त है कर ले पूरी आरजू
அஞ்சானே ஸாயோ(ன்) கா ராஹோ(ன்) மே டேராஹை
அன்தேகீ பாஹோ(ன்) நே ஹம் ஸப் கோ கேராஹை
ஏ பல் உஜாலா ஹை, பாகீ அந்தேரா ஹை
ஏ பல் கவானா நா, ஏ பல் ஹீ தேராஹை
ஜீனே வாலே ஸோச் லோ, யஹீ வக்த் ஹை கர்லோ பூரி ஆர்ஜூ
நமது பாதையில் நமக்குத் தெரியாத நிழல்கள் டேரா போட்டிருக்கின்றன
நாம் காணாத கரங்கள் நம்மைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கின்றன
இந்த க்ஷணம் மட்டும்தான் வெளிச்சமாக இருக்கிறது, மற்றதெல்லாம் ஒரே இருள் மயம்
இந்த க்ஷணத்தைக் கோட்டைவிடாதே, உனக்கிருப்பதெல்லாம் இது ஒன்றுதான்!
உலக வாசிகளே! நன்கு சிந்தியுங்கள்,
இதுதான் தகுந்த சமயம்–உங்கள் ஆசைகளைப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள்!
इस पल के जलवों ने, महफ़िल सवारी है
इस पल की गर्मी ने धड़कन उभारी है
इस पल से होने से, दुनियाँ हमारी है
ये पल जो देखो तो, सदियों पे भारी है
जीने वाले सोच ले, यही वक्त है कर ले पूरी आरजू…
இஸ் பல் கீ ஜல்வோ நே, மஹஃபில் ஸவாரீஹை
இஸ் பல் கீ கர்மீ நே தட்கன் உபாரீஹை
இஸ் பல் கே ஹோனே ஸே, துனியா ஹமாரீ ஹை
யே பல் ஜோ தேகோ தோ ஸதியோ(ன்) பே பாரீ ஹை
ஜீனே வாலே ஸோச் லோ……….
இந்த க்ஷணத்தின் பெருமையினால் இந்த சபை களைகட்டியிருக்கிறது
இந்த க்ஷணம் தரும் சூட்டினால் மனது உற்சாகமாக இருக்கிறது!
இந்த க்ஷணம் இருப்பதால் தானே இந்த உலகம் நமதாகிறது!
இந்த க்ஷணத்தை நன்கு கவனித்துப்பார்–
இதுவே யுகங்களைக் காட்டிலும் கனமானது!
உலக மக்களே–சிந்தியுங்கள்!
इस पल के साए मे अपना ठिकाना है
इस पल के आगे ही हर शे फ़साना है
कल किसने देखा है कल किसने जाना है
इस पल से पायेगा जो तुझको पाना है
जीने वाले सोच ले यही वक़्त है कर ले पूरी आरज़ू
आगे भी…
இஸ் பல் கே ஸாயே மே அப்னா டிகானா ஹை
இஸ் பல் கே ஆகே ஹீ ஹர் ஸோ ஃபஸானா ஹை
கல் கிஸ்னே தேகா ஹை, கல் கிஸ்னே ஜானா ஹை
இஸ் பல் ஸே பாயேகா ஜோ துஜ்கோ பானா ஹை
ஜீனே வாலே ஸோச் லோ, யஹீ வக்த் ஹை கர்லோ பூரி ஆர்ஜூ
ஆகே பீ…..
இந்த க்ஷணத்தின் நிழலில்தான் நமது இருப்பிடம் இருக்கிறது!
இந்த க்ஷணத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் ஒரு கற்பனைதான்!
நாளை யார் கண்டார்கள், நாளை யாருக்குத் தெரியும்?
உலகில் நீ எதை அடைய வேண்டுமோ–
அதை இந்த க்ஷணத்தில் தான் அடையவேண்டும்!
உலக மக்களே–சிந்தியுங்கள்– உங்கள் ஆசைகளைப் பூர்த்திசெய்துகொள்ள
இதுவே தருணம்.

இனி என்ன வரும் என்பது உனக்குத் தெரியாது….
மேம்போக்காகப் பார்த்தால் இது ஏதோ சாருவாகர்களின் கொள்கை போலத்தோன்றும் கிரேக்க தத்துவத்தில் இதை Epicureanism என்பார்கள். உலகம் நமது இன்ப அனுபவத்திற்காகவே இருக்கிறது, இருப்பதை அனுபவி; எதிர்காலம் , மேலுலகம். என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாதே என்பது இதன் அடிப்படை. ஆனால் இந்தப் பாடல் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை. காலம் என்றால் நிகழ் காலம்– அதிலும் இந்த க்ஷணம் முக்கியமானது. இதைப் புரிந்த்கொண்டால்தான் நல்லபடியாக வாழ முடியும். சமய ஆன்மீக சாதனையானாலும் உலகியல் தொடர்பான முயற்சியானாலும் ஒவ்வொரு க்ஷணமும் மதிப்புமிக்கது, அதை வீணே கழித்தலாகாது என்பதுவே இப்பாடலின் ஆழ்ந்த பொருள்.
Time is the essence of life. This moment is the essence of time. Once gone, it is gone for ever, goes beyond our control!
Song: Aage bhi Jaanena tu. Film: Waqt 1966 Lyricist: Sahir Ludhianvi
Music: Ravi. singer: Asha Bhonsle
This song is in the Raga Pahadi. Sublime fusion of melody, meaning and voice.
காலத்தைப் பற்றி எல்லா மொழி இலக்கியங்களிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அறிஞர்கள் என்றுமே அதைக் கருத்தில் கொண்டனர். பல மொழிப் புலவர்களும் பாடியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் நம் ஷேக்ஸ்பியர் சொன்னதை விடலாமா?
Tomorrow and Tomorrow and Tomorrow
Tomorrow, and tomorrow, and tomorrow,
Creeps in this petty pace from day to day
To the last syllable of recorded time,
And all our yesterdays have lighted fools
The way to dusty death. Out, out, brief candle!
Life’s but a walking shadow, a poor player
That struts and frets his hour upon the stage
And then is heard no more. It is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing. [ Macbeth]
நாளை, நாளை நாளை- —
சிறுகச் சிறுக ஒவ்வொரு நாளாக இப்படி மெல்ல ஊர்ந்துபோய்
ஊழிக்காலத்தின் முடிவையே எட்டிவிடுகிறது!
சென்ற நம் எல்லா ‘நேற்றைய தினங்களும்’ முட்டாள்களை மரணத்திற்கு அருகில் இட்டுச் சென்றிருக்கின்றன.
வாழ்க்கை-அது என்ன?
சிறிது காலமே எரியும் விளக்குப் போன்றது!
ஊர்ந்து போகும் ஒரு நிழல்!
திறமையில்லாத நடிகன் சிறிது நேரம் மேடையில் தடுமாறுகிறான்-பின் போய்விடுகிறான். அவனைப்பற்றி பின் யார் கேட்கிறார்கள்? அது போன்றது!

அது ஒரு மடையன் சொன்ன கதை போன்றது-
அர்த்தமில்லாத வெறும் சப்த வேகம் மட்டுமே!
[ காலம் எல்லோரையும் மரணத்தை நோக்கித்தானே இட்டுச் செல்கிறது? ஆனால் அதன் இயல்பை அறிந்து, அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாதவன் முட்டாள்.]
காலம் நமக்கு வேண்டியவர்களை என்ன பாடு படுத்துகிறது! குழந்தைகளாக நமக்குமுன் துள்ளித் திரிந்து விளையாடியவர்கள்- வயதாக ஆக. களை இழந்து, வலுவிழந்து. முகத்தில் சுருக்கம் விழ- அட ராமா, எத்தனை விதமாற்றங்கள்! இதை எப்படி எதிர்கொள்வது? இதையும் ஷேக்ஸ்பியர் சொல்கிறார்!
SONNET 19
Devouring Time, blunt thou the lion’s paws,
And make the earth devour her own sweet brood;
Pluck the keen teeth from the fierce tiger’s jaws,
And burn the long-lived phoenix in her blood;
Make glad and sorry seasons as thou fleet’st,
And do whate’er thou wilt, swift-footed time,
To the wide world and all her fading sweets;
But I forbid thee one most heinous crime:
O carve not with thy hours my love’s fair brow,
Nor draw no lines there with thine ántique pen.
Him in thy course untainted do allow
For beauty’s pattern to succeeding men.
Yet do thy worst, old Time; despite thy wrong,
My love shall in my verse ever live young.

எல்லாவற்றையும் விழுங்கும் காலமே!
நீ சிங்கத்தையும் வலுவிழக்கச் செய்கிறாய்!
உலகம் தன் குழந்தைகளையே கபளீகரம் செய்யச் செய்கிறாய்!
புலியின் வாயிலிருந்து அதன் கூரிய பற்களைப் பிடுங்குகிறாய்
நீண்ட ஆயுள் படைத்த ஃபினிக்ஸ் பறவையையும் அதன் ரத்தத்தை வைத்தே எரித்து விடுகிறாய்!
உன் போக்கில் சுகத்தையும் துக்கத்தையும் விளைத்துப் போகிறாய்!
விரைந்து செல்லும் காலமே! இந்தப் பரந்த உலகிற்கும் அதிலிருக்கும்
மறைந்து போகும் இயல்புடைய களியாட்டங்களுக்கும்
நீ எதுவேண்டுமானாலும் செய்துகொள்
ஆனால் ஒரு குரூரச் செயலை மட்டும் செய்யாதே!
எனக்கு வேண்டியவரின் வயதைக் கூட்டி, அவர் நெற்றியில் சுருக்கம் விழச்செய்து
அதில் உன் புராதன எழுதுகோலால் எதையும் எழுதி விடாதே!
உன்னால் பாதிக்கப்படாமல் காலத்தைக் கடந்து வருங்கால மக்களுக்கு அழகின் மாடலாக அவன் திகழட்டும்!
காலம் காலமாக வரும் காலமே– நீ உன்னால் முடிந்ததைச் செய்துகொள்!
நீ செய்வதெல்லாவற்றையும் தாண்டி என் அன்பன் அமரத்துவம் பெற்றுவிடுவான்–
ஆம், என் கவிதையில் அவன் என்றும் இளைஞனாகவே இருப்பான்!

எத்தகைய சிந்தனை பாருங்கள்! காலம் எல்லாவற்றையும் சுருட்டிவிடுகிறது. ஆனால் காலத்தையும் மீறி நிற்பது கவிதை! உயர்ந்த இலக்கியம் என்றும் அழிவதில்லை! அத்தகைய இலக்கியம்போற்றும் பெரியோர்களும் அமரத்துவம் பெற்றுவிடுகிறார்கள்!
காலத்தின் புதிரை எப்படியெல்லாம் அவிழ்க்கிறார்கள் நம் கவிஞர்கள்!
காலத்தைப் பற்றிய சினிமா பாடல்கள் எங்கெல்லாம் நம்மை இட்டுச் செல்கின்றன!

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 5 , ஸாஹிர்லுதியான்வி , R Nanjappa, , ஷேக்ஸ்பியர் , காலம் , புதிர்,
****