
RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7881
Date uploaded in London – 25 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ரிக் வேதத்தில் ஆப்கானிஸ்தான் முதல் பீஹார் வரை
ரிக் வேதம் உலகின் பழமையான கவிதைப் புஸ்தகம். இதில் பத்து மண்டலங்கள் உள்ளன. இதிலுள்ள ஹரியூபிய என்னும் இடம் சிந்து-சரஸ்வதி நதி தீர ஹரப்பா நகரம் என்ற கருத்தும் உண்டு. இது பற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளேன். காண்க-

tamilandvedas.com › tag › ஹரி…
1 Nov 2014 – கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014. உலகின் மிகப்பழைய நூல் …
ரிக் வேதம் காட்டும் பல்லாயிரக்கணக்கான சதுரமைல் பர ப்பைக் காண்கையில் அந்தப் புலவர்கள் பல நூற்றாண்டுக் காலத்தில் வாழ் ந்தவர்கள் என்று தெரிகிறது. இதைவிட மிகச் சிறிய பரப்பைக் கொண்ட தமிழகம் பற்றிப் பாடிய 450 சங்கப்புலவர்களுக்கு நாம் 400 ஆண்டுக்காலம் ஒதுக்கியுள்ளோம். ரிக் வேதத்திலும் 450 புலவர் பாடல்கள் உள்ளன. இவ்வளவுக்கும் இவர்கள் பாடியது கடவுள் துதிகள் ! பூகோளம்- வரலாறு அல்ல.
ரிக் வேதத்தின் சில பகுதிகள் ஈரான் நாட்டவர் பாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் எல்லோரும் ஒப்புக்கொள்ளாக் கூடிய , இன்றும் அடையாளம் தெரியக்கூடிய பிரதேசங்களை மட்டும் காண்போம்.
ஆப்கானிஸ்தான் (AFGHANISTAN) :-
இப்பொழுது அடிக்கடி பெயரில் அடிபடும் நகரம் காண்டஹார். முஸ்லீம் பயங்கரவாதிகளால் அடிக்கடி தாக்கப்படும் நகரம் இது. இதன் பெயர் காந்தாரம் என்பதாகும். அங்கிருந்து வந்தவர்தான் திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி. அரசர்களுக்கு பல மனைவியர் இருப்பதால் அந்தந்த நாட்டிலிருந்து வந்தவர்களை அந்தப் பெயர்கொண்டு அழைப்பர் .
கோசால நாட்டிலிருந்த வந்த பெண்ணை கோசலை, கௌசல்யா என்பர். கேகய தேசத்திலிருந்து வந்த ராணியை கைகேயி என்பர். மிதிலா நகரில் இருந்து வந்த பெண்ணை மைதிலி என்று அழைப்பர். இதே போல தமிழ் மன்னர்களும் பலரை மணந்ததால் சோழ மாதேவி , பாண்டிமாதேவி என்று நாட்டின் பெயரால் அழைத்தனர்.
இந்த காந்தார நாட்டைப்பற்றி ஒரே இடத்தில் ஒரே துதி வருகிறது – 1-126-6
கந்தர்வர் பற்றிக் குறிப்பிடும் துதிகளை, மறைமுகமாக காந்தாரம் பற்றிக் குறிப்பிடுவதாக எண்ணுவோரும் இருக்கின்றனர்.
கந்தர்வர் பற்றிய இருபது குறிப்புகளில் பெரும்பாலானவை 1, 8, 9, 10 ஆவது மண்டலங்களில் வருவதால் அவை பிற் காலத்தியவை . மற்ற மண்டலங்களுக்குப் பின்னர் வைத்த புதிய மண்டலங்கள் இவை.
XXX

பஞ்சாப் (PUNJAB) :–
அடுத்தபடியாக இருப்பது பஞ்சாப் .
இப்பொழுது இதன் கிழக்குப் பகுதி இந்தியாவிலும் மேற்குப் பகுதி பாகிஸ்தானிலும் உளது. இப்போது நம் இதை ‘ஐந்து நதி – பஞ்ச ஆப’ — என்று அழைக்கிறோம். . வேத காலத்தில் இதை ‘ஏழு நதி – சப்த சிந்து’ – (SAPTASINDHU) பிரதேசம் என்று அழைத்தனர். மேற்கே ஓடிய சிந்துவையும் கிழக்கே ஓடிய சரஸ்வதி நதியையும் சேர்த்து இப்படி கூப்பிட்டனர் . பாரசிகர் மதநூலான செண்ட் அவெஸ்தாவிலும் ‘சப்த சிந்து’ என்றே வருகிறது.
ஆயினும் வேதத்தில் ‘பல’ , ‘அநேக’ என்ற பொருளிலும் எண் 7 பயன்படுத்தப்பட்டுள்ளது . சப்த சிந்து என்ற சொல் வரும் இடங்கள் –
1-32-12; 1-35-8;
2-12-3; 2-12-12;
4-28-1;
8-54-4; 8-69-12; 8-96-1;
9-66-6;
10-43-3; 10-67-12
இந்த மண்டலங்களை மத்திய கால , இறுதிக்கால மண்டலங்கள் என்பர் ஆய்வாளர்கள்.
xxx
ஹரியானா (HARYANA) :-
இதை மஹாபாரத காலத்தில் குருக்ஷேத்ரப் பகுதி என்று அழைத்தனர். மனு ஸ்மிருதி முதலியன பிரம்மாவர்த் த என்று குறிப்பிடும். ஆனால் இவ்விரு சொற்களும் ரிக் வேதத்தில் இல்லை. ‘வர ஆ ப்ருதிவ்யா’- உலகில் சிறந்த இடம் – ‘நாபா பிருதிவ்யா’ – பூமியின் நாபி போன்ற பகுதி — என்றும் வேதம் போற்றும் .
ரிக் வேதத்தில் 3-23-4ல் ‘இலாயாஸ்பத’ , ‘மானுஷ’ என்ற இரண்டு இடங்கள் வருகின்றன. இவற்றை கிரிப்பித் Griffith தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்றும் இவைகளைப் பற்றிய தெளிவான விளக்கங்கங்கள் மஹாபாரதத்தில் வருகின்றன என்றும் ‘ரிக்வேதத்தில் வரலாறு’ என்ற நூலில் ஸ்ரீகாந்த் தலகரி காட்டுகிறார் .
THE RIG VEDA- A HISTORICAL ANALYSIS, Shrikant G. Talageri, Aditya Prakashan, New Delhi ,2000
வன பர்வத்தில் தீர்த்தயாத்ரை பகுதியில் 178 ஸ்லோகங்களில் குரு க்ஷேத்ரப் பிரதேசத்திலுள்ள புண்ய ஸ்தலங்களின் பட்டியல் கிடைக்கிறது.
“உலகப்புகழ் பெற்ற மானுஷாவில் (MANUSHA) குளிப்போரின் பாவங்கள் போய்விடும்
மானுஷாவிலிருந்து கூப்பிடு தூரத்தில் கிழக்கு திக்கில் ஆபகா (APAGA) நதி வரும். சித்தர்கள் வந்து செல்லும் இவ்விடத்தில் ஒரு பிராமணனுக்கு அன்னம் இட்டாலும் அது கோடி பிராமண அன்ன தான புண்யத்தை அளிக்கும்.”
(இதில் வரும் கூப்பிடு தூரம் என்னும் சொல் இன்றும் தமிழ் நாட்டின் கிராமத்தார் வழங்கும் சொல்!)
“இதற்குப் பின்னர் ஒருவர் இலாஸ்பத (ILYASPADA OR ILAYASPADA) செல்லவேண்டும் . உலகப் புகழ் பெற்ற சாரக என்னும் இடத்தில் அத்துறை உள்ளது. முன்னோர்களை வழிபட்டு அங்கே குளிப்போருக்கு துரதிருஷ்டம் என்பதே வராது.
அதற்குப்பின்னர் திருஷத்வதி நதியில் குளிப்போருக்கு ‘அக்னிஸ்டோம’, ‘அதிராத்ர’ யாக பலன்கள் கிட்டும்”.
மானுஷ என்றால் மனிதன் என்ற பொருளும் உண்டு. கிரிப்பித் அந்தப் பொருளை மனதில் வைத்து தவறாக மொழி பெயர்த்தார். ஆனால் எம். எல். பார்கவா என்பவர் இப்போதும் இவை ஹரியானாவில் உள்ள புனித ஸ்தலங்கள் என்பதைக் காட்டுகிறார்.
கைதால் (Kaithal) என்னும் இடத்திலிருந்து மூன்றரை மைல் தூரத்தில் மானஸ் இருக்கிறது கத்லி (Gadhli) என்னும் பெயரில் ஆபக (Apaga) தீர்த்தம் இருக்கிறது . கைதால் என்னும் இடத்திலிருந்து 2 மைல் தொலைவில் சாரக (Saraka) என்னும் இடம் ஷெர்கத் (Shergad) என்று மருவி வழங்குகிறது அதுதான் இளாஸ் பத.
இளா , பாரதி , சரஸ்வதி என்னும் மூன் று தேவியர்களும் ரிக் வேத ஆப்ரி ஸுக் தங்களில் எல்லா மண்டல ரிஷிகளாலும் வணங்கப்படுகின்றனர்.
ரிக் வேதத்தில் ஹரியானா புண்ய ஸ்தலங்கள் இடம்பெறும் துதிகள்—
வர ஆ ப்ருதிவ்யா –
3-23-4; 3-53-11;
நாபா ப்ருதிவ்யா –
1-143-4; 2-3-7; 3-5-9, 3-29-4;
9-72-7, 9-79-4, 9-82-3; 9-86-8;
10-1-6.
இலஸ் பத – இலயாஸ்பத –
1-128-1; 2-10-1; 3-23-4; 3-29-4; 6-1-2;
10-1-6; 10-70-1; 10-91-1; 10-191-1
மானுஷ –
1-128-7; 3-23-4
எல்லா மண்டலங்களிலும் பரவலாக ஹரியானா விஷயங்கள் வருவதைக் கவனிக்கவும். மேலும் மூன்றாவது மண்டலம் இன்னும் ஒரு அரிய விஷயத்தையும் சொல்கிறது . மிகப் பழைய மண்டலம் என்று கருதப்படும் ஆறாவது மண்டலத்தில் வரும் மன்னன் திவோ தாசன். அவனுடைய மூதாதையர் தேவவாதன் இலாஸ் பதத்தில் அக்கினியை பிரதிஷ்டை செய்த விஷயத்தை சொல்கிறது. இந்த வழக்கம் பாரசீக மதத்தில் பெரு வழக்காக காணப்படுகிறது.
xxx

உத்தர பிரதேசம் (UTTAR PRADESH):-
தற்கால உ.பி. மாநிலம் அக்காலத்தில் ஆர்யவர்த்தம் எனப்பட்டது. ஆனால் ரிக் வேதத்தில் அச்ச்சொல் இல்லை. பிரதர்தன என்ற காசி ராஜனின் பெயரை மூதாதையர் என்று கூறும் ரிக்வேத சூக்தங்கள் 9-96, 10-179-2 ஆகியவற்றின் அநுக்ரமணி (VEDIC INDEX) ஆகும்.
காசிராஜனின் ‘பிரதர்தன’ என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் பெயர். கி.மு 1400ல் துருக்கி- சிரியா நாடுகளை ஆண்ட இந்து மன்னன் (Mitanni Civilization) பெயரும் அதுவே. கங்கைநதியின் பெயரும் காசி நகரின் பெயரும் தமிழ் இலக்கியத்திலும் உண்டு . பூமியில் மிகப்பழமையான நகரம் புண்ய காசி.
ரிக் வேத சூக்தம் மற்றும் அநுக்ரமணி காண்க- 9-96; 10-179-2;
xxx
பீஹார் (BIHAR):-
உலகப் புகழ் பெற்ற சாம்ராஜ்யம் மகத சாம்ராஜ்யம். புத்தருக்கும், மஹாவீரருக்கும் முன்னரே தத்துவ ஞா னிகளை ஈன்றெடுத்த மாநிலம். ‘கீகட’ என்ற பெயரில் வேதத்தில் மகதம்/ பீஹார் இடம்பெறுகிறது .
3-53-14
பிரமகந்த என்று வேதம் குறிப்பிடும் மன்னன் பெயரில் இருந்து ‘ப்ர- மகதம்’ உண்டாயிற்று என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு .

xxx
ஆரியர் குடியேற்றம் பற்றிக் கொக்கரிக்கும் அரைவேக்காடுகளின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கும் பகுதி, இந்த பூகோள விஷயங்களாகும். கங்கையை முதலில் வைத்து, மேற்கு நோக்கி நதிகளின் பெயரை அடுக்கும் ஒரு சூக்தம் (Westward) வெள்ளைக் காரர்களின் மண்டையைப் பிளக்கிறது அடுத்தாற்போல ஹரியானாவிலும் உத்தர பிரதேசத்திலும் புனிதத் தலங்களை காட்டிவிட்டு
பஞ்சாப் பகுதியில் எதையும் காட்டாதது அவர்களுக்கு ஆப்பு அடிக்கிறது; வேத கால மக்கள் வடமேற்கு வழியாக நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கே வரவில்லை ; கங்கையிலிருந்து புறப்பட்டு உலகம் முழுதும் நாகரீகத்தைப் (Westward Expansion) பரப்பினர் என்பதை 6, 3, 7 ம் மண்டலங்களில் வரும் இலாயாஸ்பத (Ilayaspada) — காசி (Kasi Raja) ராஜன் – ‘கீகட’ (Kikata) பாடல்கள் பறை சாற்றுகின்றன . கி.மு 1400ம் ஆண்டிலேயே துருக்கியில் ஆடசி அமைத்தவர் காசி மக்கள். அதற்கு முன்னர் கி.மு 1800-ல் பாபிலோனிய -சுமேரிய பகுதியை ஆண்ட காசைட்டுகளும் (Kassites Civilization) காசி மக்களே!!
வெள்ளைக்கார மாக்ஸ்முல்லர்களுக்கும் கள்ளப்பயல் கால்டுவெல்களுக்கும் செமை அடி கொடுக்கிறது ரிக்வேத பூகோளம்.
tags — ரிக் வேதம் , பூகோளம், காசி, மாநிலங்கள், கீகட , ஆரியர் , குடியேற்றம்


— subham —
Bala Subramaniam
/ April 26, 2020Arumaiyana information. Tamilnadu Dee Raa Vida muttalkaluku ethu puriyathu