இந்தோனேஷியாவில் தொல்காப்பியர் சிலை? (Post No.7885)

மத்திய ஜாவா தீவில் கிடைத்த அகத்தியர், விஷ்ணு சிலைகள். சுமார் ஒன்றரை மீட்டர் உயரம் உடையவை.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7885

Date uploaded in London – 26 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அகஸ்திய மகரிஷி பற்றி அறியாத இந்தியர் எவருமிலர். புராணங்களில் கூறப்படும் மாபெரும் பொறியியல் வல்லுனர்களின் – எஞ்சினியர்களில்-  பகீரதனுக்கு அடுத்தபடியாக இந்தியா முழுதும் தெரிந்த எஞ்சினியர் அகத்தியர்தான். அதுமட்டுமல்ல, வியாசர், வால்மீகி ஆகிய இரண்டு முனிவர்களுக்கு அடுத்த படியாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் பிரபலமான ரிஷியும் அகஸ்தியர் ஒருவரே. இந்துக்கள் வணங்கும் ஏழு ரிஷிக்களின் பெயர்களும் துருவன் என்ற சிறுவனின் பெயரும், அருந்ததி என்ற கற்புக்கரசி பெயரும் வடக்கு வானில் ஒளிரும் நட்சத்திரங்களுக்கு சூட்டப்பட்டதை நாம் அறிவோம். இதற்கு அடுத்தபடியாக தெற்கு வானில் நட்சத்திரமாக ஜொலிப்பதும் அகஸ்தியர் (Canopus) ஒருவரே.  தென் வானத்தில் தென்படும்   சத்தர்ன் கிராஸ் (Southern Cross)   எனப்படும் திரிசங்கு நட்சத்திரம் தென்பட்டாலும் அது சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்ட திரிசங்கு ராஜாவின் பெயர் சூட்டப்பட்ட நக்ஷத்திரமேயன்றி முனிவரல்ல.

இவ்வாறு விந்தியமலை வழியாக தென்னாட்டுக்கு சாலை அமைத்த, காவிரி நதியை கேரளத்துக்குச் செல்லவிடாமல் தமிழ்நாட்டுக்குத் திருப்பிவிட்ட,  அகஸ்தியர் பகீரதன் போல சிவில் எஞ்சினியர் (not only a Civil Engineer but also a Marine Engineer) மட்டுமல்ல. அவர் ஒரு மரைன் — அதாவது — கப்பல் போக்குவரத்து — எஞ்சினியரும் கூட !—“தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுது” – “வடக்கில் ஜனத்தொகை பெருகிப் போயிற்று- ஆகையால் 18 குடி மக்களை தெற்கே அழைத்துச சென்று குடியேற்று” – என்று சிவபெருமான் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு வந்த அகத்தியன் , அந்தப் பணிகளை முடித்த பின்னர் சும்மா இருக்க முடியவில்லை.

பாண்டியமன்னரின் கடற்படையை எடுத்துக்கொண்டு, முட த்திருமாறன் என்ற மன்னரை அழைத்துக் கொண்டு, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாமில் இந்து மத ஆடசியைத் துவக்கிவைத்தார். துலுக்கர்கள் வந்து அவர்களை மதம் மாற்றும் கி.பி 1600 வரை அது நீடித்தது. இப்போது பெயர் அளவுக்கு தாய்லாந்தில் மட்டும் இருக்கிறது. வியட்நாமில் கண்டு பிடிக்கப்பட்ட ஸ்ரீமாறன் கல்வெட்டுதான் (முடத்  திருமாறன்) கல்வெட்டுதான் தென்கிழக்கு ஆசியாவிலேயே பழைய கல்வெட்டு. இப்போது அகஸ்தியர் சிலை இல்லாத தென் கிழக்கு ஆசிய நாடு கிடையாது. இவை எல்லாம் நான் 11 ஆண்டுகளாக இந்த பிளாக்குகளில் எழுதிய பழைய விஷயம். இப்போது புதிய விஷயத்துக்கு வருகிறேன் .

அய்யாசாமி கல்யாண ராமன் என்ற தமிழ் அறிஞர் ‘ஆர்யதரங்கிணி’ என்ற பெயரில், இரண்டு தொகுதிகளில், ஆங்கிலத்தில்,  இந்திய கலாசாரம் பற்றி அரிய , பெரிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அகஸ்தியர் பற்றி அதற்கு முன்னர் தமிழ் அறிஞர்களுக்குத் தெரியாத தென்கிழக்காசிய அகஸ்திய முனி கல்வெட்டுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

அவர் போகிற போக்கில், ‘தொல்காப்பிய முனிவரின் சிலை த்ருண பிந்து என்ற பெயரில் அகஸ்தியர் சிலையுடன் ஜாவாவில் இருக்கிறது’— என்று எழுதி இருந்தார். நீண்ட நாளகத் தேடிய அந்த முனிவரின் சிலையின் படம் கிடைத்துவிட்டது. இத்துடன் உள்ள படங்களைக் காண்க.

ஹரிஹரன் (சங்கர நாராயணன் சிலை)

பிலிப் ராவ்சன் எழுதிய ‘தென் கிழக்காசிய நாடுகளின் கலைகள்’ என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் ஒரு பக்கம் சம உயரமுள்ள அகஸ்தியர் , விஷ்ணு சிலைகளின் படங்களை வெளியிட்டு அவை மத்திய ஜாவாவில் சண்டி பனோன் என்ற இடத்தில் கிடைத்தவை என்று எழுதியுள்ளார். ஜாவா தீவு இந்தோனேஷியாவின் ஒரு பகுதி . உலகப் புகழ் பெற்ற போரோபுதூர் தூபி உள்ள இடம். எட்டாம் நூற்றாண்டு முதல் பல கட்டிடங்கள் அங்கே உள்ளன. சிங்கசாரி என்னும் இடத்தில் கிடைத்த அகஸ்தியர் சிலை, த்ருண பிந்து சிலைகள் பற்றி எழுதுகையில் அகஸ்தியர் ஒரு தெய்வ ரிஷி என்றும் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுகிறார் என்றும் சொல்கிறார். த்ருண பிந்து (Trunabindhu)  என்பவர் கொழுத்த முனிவர் அவர் சிவ பெருமானின் புகழ் மிகு பக்தர் என்று மட்டும் சொல்கிறார் . 

த்ருண பிந்து தொல்காப்பியரா?

  த்ருண பிந்து   சிலை

த்ருண பிந்து என்ற பெயர் மைசூர் ராமர் கோவில் மற்றும் ராமாயண சம்பந்தப்பட்ட கோவில்களில்  ஒரு முனிவராக காட்டப்படுகிறார். ஆனால்  தமிழ் இலக்கியத்தில் தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி முனிவர் என்றே உள்ளது. ஆகவே த்ருண பிந்துதான், த்ருண தூம  அக்கினியா என்று ஆராய வேண்டும்..

தொல்காப்பியர் எனப்படும் த்ருண தூமாக்கினி முனிவர் எழுதிய தொல்காப்பியம்தான் தமிழில் கிடைத்த மிகப்பழைய நூல் என்று பெரும்பாலோர் செப்புவர். இவருடைய காலம் பற்றிய  வேறுபட்ட கருத்துக்களை ‘தொல்காப்பியர் காலம்’ என்ற தொடர் கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.

இவர் பற்றி உலகப் புகழ் உரைகாரர் , ‘உச்சிமேற் புலவர் கொள் , நச்சினார்க்கினியர்’ ஒரு கதை சொல்கிறார்.

தொல்காப்பியரின் இயற்பெயர் த்ருண தூமாக்கினி முனிவர் என்றும் அவர் அகத்தியர் சீடர் என்றும் சொல்லிவிட்டு தொல்காப்பிய பாயிர உரையில் ஒரு சுவையான கதையைச் சேர்த்து இருக்கிறார். அது என்ன கதை?

“ஏ , சீ டா , தொல்காப்பியா ; இங்கே வா! என் மனைவி லோபாமுத்ரா விதர்ப்ப (மத்திய பிரதேச மாநிலம்) நாட்டு அரசி ; அவளைப் போய் அழைத்துவா. ஒரு முக்கியமான விஷயம் ; குருவின் மனைவி மீது கை பட்டுவிடக்கூடாது ; ஆகையால் நாலு கழி / கோல் நீள த்துக்குத்  தள்ளியே நடந்துவா” என்று கட்டளை இட்டார்.

அப்படியே ஆகட்டும் குருவே என்று சொல்லிவிட்டு, த்ருண தூமாக்கினி என்ற பெயர் கொண்ட தொல்காப்பியர் 99 சதவிகிதம் பணியை செவ்வனே செய்து முடித்தார். மதுரைக்கு வருகையில் வைகை நதி வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடியது. ‘தொல்’.லுக்கு பெரிய தொல்லை ! உடனே பேரழகி, விதர்ப்ப நாட்டு அரசி லோபாமுத்ராவை நோக்கி,  “தாயே ஓர் கழியின் ஒரு புறம் நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். மறுபுறத்தை நான் பிடித்துக் கொள்கிறேன் ; உங்களை வெள்ளம் அடித்துச் செல்லாமல் காப்பது என் கடமை” என்று சொல்லி வெற்றிகரமாக அழைத்தும் வந்தார்.

அகஸ்திய முனிவரிடம் அவர்தம் மனைவியை ஒப்படைக்கையில் வைகை வெள்ளத்தை வெற்றிகரமாக கடந்து வந்த சாதனை பற்றி விதந்து ஓதினார் . “அடப்பாவி ; நாலு கழி இடைவெளி இருக்க வேண்டும் என்று சொன்னேனே ; ஒரு கம்பு நீளம் தான் இருந்தது என்று சொன்னாயே ; நீ சொர்க்கத்துக்கு போக மாட்டாய்; தொலைந்து போ” என்று சபித்தார். த்ருண துமாக்னிக்கும்  கோபம் வந்தது .

“என்ன குருவே , எல்லை மீறிப் போகிறீர் ! செய்யாத  தப்புக்கு சாபமிடுவது முறையோ ? இது தகுமோ? இந்தா , பிடி சாபம் ! நீ வீரும்  சொர்க்கத்தைக் காண மாட்டீர்” — என்று சாபம் இட்டார்.

தேவ லோக அழகிகள் – அப்சரஸ் 

இது ‘நச்சி.’ சொல்லும் கதை. 600 ஆண்டுப் பழமையான கதை. தொல்காப்பியர் பிராமணர் என்பது உண்மையே. அவர் உலகப் புகழ் பெற்ற ‘காவ்ய கோத்திர’த்தில் வந்ததால் ‘காப்பிய’ என்ற அடைமொழி பெற்றார் என்பர் ஆன்றோர். ‘காப்பியாற்றுக் காப்பியனார்’ என்ற வேறு ஒரு சங்கப் புலவரும் இதே கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

‘நச்சி.’ சொல்லும் கதைக்கு வேறு எங்கும் ஆதாரமில்லை. மேலும் அவர் சொல்லும் ரிக் வேத அகஸ்தியர் – லோபா முத்திரை காலத்தில், தொல்காப்பியர் இருந்திருக்க முடியாது. ‘தொல்’. காலத்தை கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரையே அறிஞர் பெருமக்கள் வைப்பர். இது தவிர தொல் பற்றிய சம்ஸ்கிருத பெயர் சரியா? அதுவும் த்ருண பிந்துவும் , தூமாக்னியும் ஒருவரா என்றும் ஆராய வேண்டும்.

இவ்விஷயத்தில் மேலும் ஆராய்ச்சி செய்ய, நாம் த்ருண பிந்து பற்றிய கல்வெட்டுகளைப் படிக்கவேண்டும். பின்னர் மைசூர் முதலான கோவில் சரிதங்களில் அடிபடும் முனிவர் இவர்தானா எனக் காண வேண்டும். அதற்குப் பின்னர் அகத்தியர் சிலையுடன் ஒட்டி உறவாடும் இவர் தொல்காப்பியர் தானா என்று பார்க்க வேண்டும். அப்படி ஆதாரம் கிடைக்குமேயானால் நச்சி. ‘கப்ஸா’ அடிக்கவில்லை உண்மைதான் விளம்பினார் என்ற முடிவுக்கு வரலாம்.

குபேரன் சிற்பம் (பிலிப் ராவ் சன் புஸ்தகத்திலிருந்து)

வாழ்க தமிழ்!  வளர்க  தொல்காப்பியன் புகழ்!!

tags –  இந்தோனேஷியா,  தொல்காப்பியர் சிலை,    த்ருண பிந்து   சிலை, ஜாவா 

TOLKAPPIAR STATUE IN INDONESIA? (Post No.7884)

AGASTYA AND VISHNU IN CENTRAL JAVA, INDONESIA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7884

Date uploaded in London – 26 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

TOLKPPAIAR, author of the oldest grammar book in Tamil called TOLKPPAIAM was a disciple of AGASTYA , one of the greatest of the Hindu seers.

A .Kalyanaraman says in his book ‘Aryatarangini’ ,

“In Tamil literature Agastya is given the pride of place and credited with the most ancient work in the language, named after him as ‘Agastyam’ which work has, however, been lost.  The earliest extant Tamil work written by Tolkaappiyanaar, author of Tolkaappiam , is a follower of Agastya. He uses sutra style of grammatical compositions, perfected by Panini . The original name of Tolkappianar is Trinabindhu  and he appears frequently in Javanese inscriptions as a disciple of Agastya.”

xxx

STATUE OF HARIHARA (SHIVA AND VISHNU, S E ASIA)

I was looking for the statue of Trinabindhu with Agastya and found both in a book. Please see the pictures –

Philipp Rawson says in his book ‘The Art of South East Asia’ :-

“The classical Indianized art of Java is possibly the greatest art produced by any of the peoples of South East Asia surpassing even that of the Khmers.

Chandi Mendut dates from about 800 AD (CE)  and is thus generally speaking contemporary with Borobudur.

Picture line-

Chandi Mendut bas relief-

KUBERA, LORD OF WEALTH

Kuvera on the north wall of ante chamber. Kuvera is the God of Wealth, the merchant’s deity , and has sacks of gold under his feet and wish granting trees beside him.

Agastya and Vishnu (TOP PICTURE)

From another ruined Shiva temple not far from Borobudur itself, has come a group of extremely fine life size iconic sculptures, virtually full round. The Vishnu statue, 175 cm, is from Chandi Banon in Central Java . The divine teacher Agastya , 174 cm, from Chandi Banon, both ninth century AD (CE).

The divine teacher, sometimes called Agastya , represents god Shiva taking the form of a bearded Brahmin sage .

Statue of Trna Bindhu

TRUNABINDHU/TOLKAPPIAR

There are a number of other fine images from Singasari, but they do not all belong to the same period. Durga slaying the buffalo demon, Ganesa seated on a throne of skulls, Shiva in his terrible form garlanded with skulls, corpulent sage Agastya with more of the high relief lotus flowers by his side are some of them.

The seer Trnavindu, probably mid fourteenth century, height 153 cm. the well fed brahmin sage who was one of the most renowned devotes of Shiva.

XXXX

And the most famous Tamil commentator Nacchinarkiniyar of 14th century gives an interesting story about Tolkappianar.

APSARAS WOMEN IN SOUTH EAST ASIA

In his commentary on the prefatory ode to Tolkappiam , called Paayiram that Agattiyanar/ Agastya asked his disciple Trnadhumagni/Tolkappian to escort the master’s wife , Lopaamudraa, from Vidharba to Podiya hill. He at the same time warned his disciple not to approach his wife nearer than the length of four rods. When Lopaamudraa and Trnaduumaagni had to cross the  Vaigai, the river was in flood, and fearing that she would be washed away by the river, he extended his walking stick to her and asked her to cling to it.  He thus disobeyed his master’s solemn injunctions , for in crossing the river, he was but one rod’s length from her.

The irate master when he heard of this exclaimed,

‘May you two not reach Svarga’.

The pupil in turn said, as you have cursed us for no fault of ours,

‘May you not reach svarga’.

Xxx

Tamil fanatics could not digest the fact that their oldest author was a Brahmin with a Sanskrit name. Others pointed out that he was from the famous and ancient Kavya Gotra and so he was called Tolkaappian (Tol= ancient, Kaappiya= Kaavya). Even Lord Krishna in Bhagavad Gita called himself as Uchanas Kavi among the poets. (the word Kavi/poem, Kavyam/classical book etc are derived from the most ancient Rig Vedic poet Uchanas Kavi). And there are few Kavya Gotra poets in Sangam Tamil literature.

For Sanskritists the names Trna Dhumagni and Trna Bindhu were rare and unheard names. One Truna Bindhu is associated with the stories of a Rama temple in Mysore

But to my surprise both Agastya and Trna Bindhu are pictured in the book. We know that Agastya statues are found in different parts of Asia and they are same throughout South East Asia, India and Nepal. And his disciple also looks similar. So it must be true that Agastya has a disciple by name Trna Bindhu. The question that remains is “ Are Trnabindhu and Trna Dhumagni same?”

If it is proved same, then Nacchinarkiniyar has some truth in the story. Even if we find out that it cannot be same Agastya and  Lopamudra of Rig Veda, still the connection between Agastya and Trna Bindhu is confirmed by Javanese (Indonesian Island) inscriptions and statues.

The earliest literary mention of Agastya and the Pandya comes from Kalidasa of First /Second century BCE. So Agastya’s connection with the south is also confirmed. And his arrival from the Himalayas to the southern Pothiya Malai (Podiya Hill) is also indirectly referred to in Purananuru verse 2 by Mr Nagarajan  (Muranjiyur Mudinagarayar).

Here is the Kalidasa’s Raghuvamsam reference:-

“This king whose long pendant of pearls is dangling from his shoulders, and whose body is shining forth with the tinge of red sandalwood as that paste is smeared on his body, and who appears like a lordly mountain letting streams of rapids on its mountainsides, and with its peaks flooded with the morning sunlight, is the prince of pANDya kingdom… [6-60]

–o)0(o–

विन्ध्यस्य संस्तम्भयिता महाद्रेर्निःशेषपीतोज्झितसिन्धुराजः|
प्रीत्याश्वमेधावभृथार्द्रमूर्तेः सौस्नातिको यस्य भवत्यगस्त्यः॥ ६-६१

vindhyasya saṁstambhayitā mahādrerniḥśeṣapītojjhitasindhurājaḥ |

prītyāśvamedhāvabhṛthārdramūrteḥ sausnātiko yasya bhavatyagastyaḥ || 6-61

vindhyasya sa.nstambhayitA mahAdrerniHsheShapItojjhitasindhurAjaH |
prItyAshvamedhAvabhR^ithArdramUrteH sausnAtiko yasya bhavatyagastyaH || 6-61

vindhyasya sa.mstambhayitA mahA adreH niHsheSha pIta ujjhita sindhu rAjaH prItyA ashva medha avabhR^itha Ardra mUrteH sausnAtikaH yasya bhavati agastyaH

“Sage who stopped the upward growth of the great vindhya mountain, who quaffed off and spouted out entire ocean, that sage agastya will be the catechiser of this king when this pANDyan king’s body is still wet after the concluding sacred bath of ashvamedha ritual enquiring, ‘…have you performed the ceremony of ablution after Vedic-ritual ashvamedha properly….’ [6-61]

–o)0(o–

अस्त्रम् हरादाप्तवता दुरापम् येनेन्द्रलोकावजयाय दृप्तः|
पुरा जनस्थानविमर्दशङ्की संधाय लङ्काधिपतिः प्रतस्थे॥ ६-६२

astram harādāptavatā durāpam yenendralokāvajayāya dṛptaḥ|
purā janasthānavimardaśaṅkī saṁdhāya laṅkādhipatiḥ pratasthe || 6-62

astram harAdAptavatA durApam yenendralokAvajayAya dR^iptaH |
purA janasthAnavimardasha~NkI sa.ndhAya la~NkAdhipatiH pratasthe || 6-62

astra.m harAt AptavatA durApa.m yena indra loka apajayAya dR^iptaH purA janasthAna vimarda sha~Nkii sa.mdhAya la~Nka adhipatiH pratasthe

“No less than the haughty king of lanka, namely rAvaNa, had to make truce with these pANDyan kings as he feared the devastation of his stronghold called janasthAna at the hand of pANDya kings, because the pANDyan-s wielded a deadly missile called brahma-shiro-astra, obtained through the grace of god shiva… so, rAvaNa firstly made pact with them and then went to conquer indra’s heaven, because conquering heaven is nothing before conquering pANDyan empire…  [6-62]

From Sanskrit documents.org

MAHABHARATA BATTLE SCENE, S E ASIA

These slokas throw amazing light on the Pandyas of the South:

1.Pandya’s connection with Agastya

2.Pandyan king Palyaga Salai Mudukudumi Peruvaluthi’s Asvamedha Yajna. (His coin with his name and Asva/horse is discovered)

3.Pandya Kingdom’s world-famous pearls (mentioned also by Valmiki and Kautilya and Roman sources)

4.Sandalwood Trees

5.Ravana’s Peace Agreement with the Pandyas (probably this is why Rama skipped Pandyas and sought the help of Vanarasena, i.e. the semi civilized tribes wearing monkey totems)

Sources:–

The Art of South East Asia, Philip Rawson, 1967

Arya Tarangini in two volumes, A Kalyanaraman, Asia Publishing House, London, 1970

History of the Tamils, P T Srinivasa Iyengar, Asian Educational Services, Delhi reprint 1989.

Sanskrit documents.org

tags – Tolkappiar statue,Trunabindhu, Agastya, statues,Indonesia, Java

******subham *********

ஹிந்தி படப் பாடல்கள் – 18 – ரசிகர்கள்! (Post No.7883)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7883

Date uploaded in London – – 26 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 18 – ரசிகர்கள்!

R.Nanjappa

ரசிகர்கள்

இசையின் தரம் ரசிகர்களின் தரத்தையும் பொறுத்து அமைகிறது. நல்ல ரசிகர்கள் முன்வரிசையில் அமர்ந்தால் வித்வான்களுக்கு உற்சாகம் பிறக்கிறதுபொறுப்பும் ஏறுகிறது!

ரசிகர்கள் இல்லாமல் இசைஎந்தக் கலையுமேஎப்படி வளரும்

50களில் நம் ரசிகர்கள் அபாரமானவர்களாக இருந்தார்கள். பல படங்கள் இசைக்காகவே ஓடின. [படங்கள் பல்டி அடித்தபோது, நல்ல இசையும் முடங்கிப்போன நிகழ்ச்சிகளும் உண்டு.]

பைஜு பாவ்ரா படம் 1953ல் வெளியானபோது, ராஷ்டிரபதிக்காக இது தனியாகத் திரையிடப்பட்டது. இதன் பாடல்களை ரசித்த ராஷ்டிரபதி பாபு ராஜேந்த்ர பிரசாத்மன் தட் பத் ஹரிஎன்ற மால்கோஷ் ராகப்  பாடலைக் கேட்டு  உருகி அழுது விட்டார்! அன்று மேலிடத்திலும் (அரசியல், அதிகார வர்கத்திலும்) அத்தகைய ரசிகர்கள்!

இன்றும் இசையைக் கேட்கிறார்கள், ஆடுகிறார்கள். ஆனால் இசைக்கு இப்படி உருகும் இத்தகைய ரசிகர்கள்  எத்தனை  பேர் இருக்கிறார்களா?

இத்தகைய இசையும் இப்போது  இல்லையே என்பதும் உண்மைதான்

பத்திரிகைகளின் பங்கு

தரமான இசை மக்களிடையே பரவ  பொறுப்புள்ள பத்திரிகைகளும் , விஷயமறிந்த எழுத்தாளர்களும் அவசியம். சில விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. 1950களில்குமுதம்பத்திரிகையில் நல்ல விமர்சனங்கள் வரும். ஒரு இதழில் ஒரு படத்தின் விமர்சனத்தில்சத்து உன்டுஇனிமை இல்லைஎன்று எழுதியது. (படத்தின் பெயர் நினைவில்லைதஞ்சை ராமையாதாஸ் எடுத்த படம் என்று நினைவு.) அடுத்த வாரமே ஜெமினியின்வஞ்சிக்கோட்டை வாலிபனுக்கு எழுதிய விமர்சனத்தில்  ” வாலிபன் விஷயத்தில் இது தலைகீழ்ப் பாடம்என்று எழுதியது ( அதாவது, இனிமை உண்டு சத்து இல்லை!) 

வி.சாந்தாரம் எடுத்த “ஸ்த்ரீபடத்திற்கு விமர்சனம் எழுதுகையில், அவரே இந்தக் கதையை முன்பே எடுத்திருக்கிறார்  (இது சகுந்தலை கதை) என்று சொல்லி, ” அதே புராதனக் கொட்டாவிஆனால் உயர்ந்த வண்ணம் தீட்டிய கொட்டாவிஎன்று எழுதியது!  ‘பத்தினித் தெய்வம்படத்தின் விமர்சனத்தில்,  “ஒவ்வோரிடத்தில் இசையில் பசையும் உண்டுஎன்று எழுதியது! 60 ஆண்டுகள் ஆகியும் இவை மறக்கவில்லை! நல்ல விஷயங்கள் மக்களிடையே பரவ நல்ல பத்திரிகைகளும் இருக்கவேண்டும்நல்ல ரசிகர்களை உருவாக்க, ரசிகத்தன்மை வளர, ரசிகரின் தரம் உயர நல்ல பத்திரிகைகள், விமர்சகர்கள் அவசியம்.

இன்று இசை என்ற பெயரில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. புதிய படத்தின் சி.டி வெளியிட பெரிய விழாவே நடக்கிறது. ஆனால் அடுத்த மாதமே அந்த இசை காணாமல் போய்விடுகிறது.

டிப்பு டாப்பு டகல் டூப்பு டமாரம்

கலிகாலம் நம்ம கிரகசாரம்– ” 

என்று தஞ்சை ராமையதாஸ் மிஸ்ஸியம்மாவில் ஒரு பாட்டில் எழுதினார். அதுதான் நடக்கிறது.

ஆனாலும் பொற்காலப் பாடல்களுக்கு மவுசு குறையவில்லை. இன்று ஒவ்வொரு பெரிய  நகரத்திலும்  அதற்கென பல கிளப்புகள் தோன்றிவிட்டன. நாளாக ஆக தங்கத்தின் மதிப்பு உயரும் தானே!

இதோ, மேலும் சில “தங்க காலப் ” பாடல்கள்!

தியா ஜிஸ்னேதில் !

Falling in Love- beware!

diya jisne dil, diya jisne dil
lut gaya wo bechara, lut gaya wo bechara
diya jisne chhora dil, diya jisne wo beta dil
lut gaya wo bechara, lut gaya wo bechara
jiya kon jise nichi najaro ne mara
lut gaya wo bechara, lut gaya wo bechara
diya jisne dil, diya jisne dil
lut gaya wo bechara, lut gaya wo bechara

தியா ஜிஸ் நே தில்  லுட் கயா  பிசாரா, லுட் கயா பிசாரா

nahi bhulti, wo ada kya ada thi
nahi bhulti, wo ada kya ada thi
lipatna tumhara, jhijkana tumhara
lipatna tumhara, jhijkana tumhara
lut gaya wo bechara, lut gaya wo bechara
kiya kya jise, nichi najaron ne mara
kiya kya jise, nichi najaron ne mara
lut gaya wo bechara, lut gaya wo bechara  

நஹீ பூல்தீ, அதா க்யா அதாதீ

mera ashiya phunk, dala gulo ne
mera ashiya phunk, dala gulo ne
baharo akar mera ghar ujada
baharo akar mera ghar ujada
lut gaya wo bechara, lut gaya o bechara
jiya kon jise nichi najaro ne mara
jiya kon jise nichi najaro ne mara
lut gaya wo bechara, lut gaya o bechara
maje lut le char din chandani hai
maje lut le char din chandani hai
jawani ko dekho budhapa pukara
jawani ko dekho budhapa pukara
lut gaya wo bechara, beta lut gaya wo Bechara

மேரா ஆஷியா(ன்) பூ(ன்)க் டாலா குலோ நே 

Song: Diya jisne dil  Film: Bhanwra 1944 Lyrics: Kidar Sharma

Music: Khemchand Prakash Singer: K.l.Saigal , Amirbai Karnataki

என்ன கந்தர்வ கானம்!

இது 1944ல் வந்த படம்திரை இசையின்இடைக்காலம்என்று சொல்லலாம். குரல் வளம், இசை நுணுக்கம்இரண்டுதான் இப்பாட்டின் ஜீவன். எளிய பின்னணி இசை. டெக்னிகல் உத்திகள் எதுவும் இல்லை!

 பாட்டு சாதாரணக் காதல் பாட்டு பெண்ணை வருணிக்கிறார். காதலில் விழுந்தால் அதோகதிதான் என்கிறார்.

It is said we always “fall ” in love!   

பொருள் வேண்டாம், பாட்டின் இசையைக் காது கொடுத்துக் கேட்போம்!

கே.எல் சைகல் நம் திரை இசைப்பாடகர்களில் நிரந்தரமாக முதல் இடத்தை வகிப்பவர். முன்னோடியாக இருந்தவர். ரஃபி, கீஷோர், முகேஷ் என் பின் வந்த ஒவ்வொரு பாடகரும் இவரைப் போல் பாட வேண்டுமென ஆசைப்பட்டவர்களே, இவரால் கவரப்பட்டு திரை இசைக்கு வந்தவர்களே! 1944ல் வந்த பாட்டு– 75  வருஷங்கள் கழித்து இன்றைக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது! [யூடியூபில் ஏதோ சதி நடந்திருக்கிறதுஇந்தப் பாட்டின் அசல் வடிவத்தை இன்று காணவில்லை!]

சைகல் பாட்டு  ஒன்று ரேடியோ சிலோனில் தினமும் காலை 7.57க்கு ஒலிபரப்பாகிறது.

இசையமைத்த கேம்சந்த் பிரகாஷ் பழைய ஜாம்பவான்களில் ஒருவர். ‘மஹல்படத்திற்கு இவர்  அமைத்து, லதா பாடியஆயேகா ஆனேவாலாஎன்ற பாட்டு சாகாவரம் பெற்ற ஹிந்திப் பாட்டுக்களில் ஒன்று.

பாட்டெழுதிய கிதார் ஷர்மா பெரிய தயாரிப் பாளராகவும் இயக்குனராகவும் இருந்தவர்

அர்த்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தப் பாட்டைக் கேளுங்கள். சங்கீதம் உலக மொழி என்று ஏன் சொல்கிறார்கள் என்பது புரியும்!

நைன் ஸோ நைன் நாஹி மிலாவோ

नैन सो नैन नाही मिलाओ – 2
देखत सूरत आवत लाज, सैय्यां
प्यार से प्यार आके सजाओ – 2
मधुर मिलन गावत आज, गुइयां
नैन सो नैन

நைன் ஸோ நைன் நாஹி மிலாவோ

தேகத் ஸூரத் ஆவத் லாஜ், சையா(ன்)

ப்யார் ஸே ப்யார் ஆகே ஸஜாவோ

மதுர் மிலன் காவத்  ஆஜ், குய்யா(ன்)

நைன் ஸே நைன்…….

அன்பே, என் கண்ணுடன் நேருக்கு  நேர் பார்க்காதே!

உன் முகத்தைப் பார்த்து நாணமாகிறது!

அன்பே, வா; காதல் காதலுடன் இணையட்டும்

இதை நாம்  இன்று பாடுவோம்!


खींचो कमान मारो जी बाण
रुत है जवान मेरे प्राण
रुक क्यों गये?
तुमने चोरी कर ली कमान
कैसे मारूं प्रीत का बाण, गुइयां
नैन सो नैन …  

கீஞ்சோ கமான் மாரோஜீ பாண்

ருத் ஹை ஜவான் மோரே ப்ராண்

ருக் க்ய்யூ(ன்) கயே?

தும்னே சொரீ கர்லீ கமான்

கைஸே மாரூ(ன்) ப்ரீத் கா பாண். குய்யா(ன்)

நைன் ஸே நைன்……

மாரனின் பாணத்தை எடுத்து வீசு!

என் உயிரே, காலம் இளமையாக இருக்கிறது!

ஏன் நிறுத்தி விட்டாய்?

அந்த பாணத்தை நீ திருடி விட்டாயே!

பின் எப்படி அன்பின்  பாணத்தை விடுவது!

रिम झिम  रिम् झिम गाये झरनों की धार
दिल को लुभाये कोयल पुकार
नहीं!
तो फिर?
झरनों की धारों में तेरा संगीत
गाये कोयल तेरा ही गीत, गुइयाँ
नैन सो नैन …  

ரிம் ஜிம்  ரிம்ஜிம் காயே ஜரனோ கீ தார்

தில் கோ லுபாயே கோயல் புகார்

நஹீ(ன்)

தோ ஃபிர்?

ஜரனோ(ன்) கீ தாரோ மே  தேரா ஸங்கீத்

காயே கோயல் தேரா ஹீ கீத், குய்யா(ன்)

நைன் ஸோ நைன்

இதோ, இந்த நீர் ஊற்றுக்கள் ஜலஜலவென  சப்திக்கின்றன!

குயில்களின் கீதம் மனதைக் கொள்ளைகொண்டு போகிறது!

அந்த ஊற்றுக்களில் ஒலிப்பது உன் கீதமே!

இந்தக் குயில்களும் உன் இசையையே பாடுகின்றன!

नीले गगन पे झूमेंगे आज
बादल का प्यार देखेंगे आज
बादल नैय्या है बिजली पतवार
हमतुम चल दें दुनिया के पार, सैय्यां
नैन सो नैन …  

நீலே ககன் மே ஜூமேங்கே ஆஜ்

பாதல் கா ப்யார் தேகேங்கே  ஆஜ்

பாதல் நையா ஹை பிஜ்லீ பத்வார்

ஹம்தும் சல் தே(ன்துனியாகே பார், ஸையா(ன்)

நைன் ஸோ நைன்

நீல வானத்தில்  இன்று சுற்றித் திரிவோம் வா!

மேகங்களின் காதலையும் பார்த்துவிடுவோம், வா!

மேகங்களின் படகில், மின்னலைத் துடுப்பாகக்கொண்டு

இந்த உலகத்தைக் கடந்து போய்விடுவோம் வா!

Song: Nain so nain Film: jhanak jhanak Payal  Baje 1955 Lyricist : Hasrat Jaipuri

Music: Vasant Desai Singers: Hemant Kumar & Lata Mangeshkar.

 எத்தனை அருமையான கவிதை! தூய சிருங்கார ரசத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட வரிகள்! எழுதியவர் சிறந்த உருதுக் கவி (ஷயர்) எனப் புகழ் பெற்ற ஹஸ்ரத் ஜய்புரி. ஆனால் இந்தப் பாட்டில் உருதுச் சொல்லே இல்லை! எல்லாம் .பியின் வட்டார வழக்கில் அமைந்த சொற்கள்! நம் மொழிகளில் தான் எத்தனை வளமை!

ஹேமந்த் குமார், லதா குரல்கள்  எவ்வளவு இயல்பாக, இனிமையாக இணைகின்றனஇது நமது டூயட் இசையின் முக்கிய வலு. இரண்டு குரல்கள் சேர்வது 1+ 1= 2 என்ற கணக்கில் வராது!. 1+!= புதிய உலகம்!ஹேமந்த் குமார் குரல் இந்த ராகத்திற்கு, இந்த மெட்டிற்கு மிகப் பொருந்தியிருக்கிறது!

இந்த இசையுடன்  கோபி கிருஷ்ணாசந்த்யா  “கதக்நாட்டியமும் அபாரம்! இது போல் இந்தியப் படங்களில் அமையவில்லை!

[இங்கு நீர் ஊற்றுக்கள்  என்பது  கிருஷ்ணராஜஸாகரில் அமைக்கப்பட்டிருந்த fountains. இது அங்கு படமாக்கப்பட்டது.]

இசைஞர் வஸந்த் தேசாய் நமது பாரம்பரிய இசையில் பிடிப்புள்ளவர். எளிமையாக சாது போல் வாழ்ந்தவர். “தோ ஆங்கே பாரஹ் ஹாத்என்ற படத்தில் இவர் அமைத்த மாலிக் தேரே பந்தே  ஹம்என்ற பிரார்த்தனைப் பாட்டு மிகப் பிரபலமானதுபாகிஸ்தானிலும் பாடப்பட்டது!

எம்.எஸ். 1966ல் .நா சபையில் பாடியமைத்ரீம் பஜதஎன்ற சம்ஸ்கிருதப் பாடலுக்கு இசையமைத்தவர் வஸந்த் தேசாய் தான்! இதற்காகக் கொடுக்கப்பட்ட செக்கை அவர் பயன்படுத்தவே இல்லை! ஃபிரேம் போட்டு மாட்டிவிட்டார்! [இந்த மைத்ரீம் பஜத  பாடலை எழுதியவர் டாக்டர்.வி.ராகவன்காஞ்சிப் பெரியவர் அதை அங்கீகரித்தார்எழுதவில்லை.]

இந்த ஜனக் ஜனக் பாயல் பாஜே படத்தின் முழு இசையும் நமது திரை இசை வரலாற்றில் ஒரு மைல் கல்.

இந்தப் பாட்டு  மால்குஞ்சி    माल्गुन्जि என்ற ராகத்தில் அமைந்திருக்கிறது

இதோ, இன்னொரு டூயட் !

தில் கீ நஜர் ஸே

दिल की नज़र से, नज़रों की दिल से
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे  

தில் கீ ஃஜர் ஸே, நஃஜ்ரோ(ன்) கீ தில்  ஸே

பாத் க்யா ஹை, ராஃஜ் க்யாஹை

கோயீ  ஹமே பதா தே

கண்ணிலிருந்து மனதிற்குமனதிலிருந்து கண்ணிற்கு

இது என்ன விஷயம், இது என்ன ரகசியம்

எவராவது சொல்வார்களா?


सीने से उठकर, होठों पे आया
ये गीता कैसा, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से…  

ஸீனே சே உட்கர் ஹோடோ(ன்) பே ஆயா

யே கீத் கைஸா, யே ராஃஜ் கயா ஹை

கோயீ ஹமே பதாதே

மனதிலிருந்து எழுந்து, உதடுகளுக்கு வந்தது

இது எத்தகைய கீதம், இது என்ன ரகசியம்?

எவராவது சொல்வார்களா?

क्यों बेखबर, यूँ खिंची सी चली जा रही मैं
ये कौन से बन्धनों में बंधी जा रही मैं
कुछ खो रहा है, कुछ मिल रहा है
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से…  

க்யோ(ன்) பேகபர்,யூ(ன்கீஞ்சீ  ஸீ  சலீ ஜா ரஹீ(ன்) ) மை

யே கௌன் ஸே பந்தனோ மே பந்தீ ஜா ரஹீ மை

குச் கோ ரஹா ஹை, குச் மில் ரஹா ஹை

யே பாத் க்யா ஹை, யே ராஃஜ் கயாஹை

கோயீ ஹமே பதா  தே

என்னை அறியாமலேயே நான் ஏன் இப்படி இழுத்துச் செல்லப் படுகிறேன்?

என்ன எந்தப் புதிய பிணைப்பு பந்தப்படுத்துகிறதுதெரியவில்லையே!

எதையோ இழக்கிறேன், எதையோ அடைகிறேன்!

இது என்ன விஷயம், இது என்ன ரகசியம்

எவராவது சொல்வார்களா?

हम खो चले, चाँद है या कोई जादूगर है
या मदभरी, ये तुम्हारी नज़र का असर है
सब कुछ हमारा, अब है तुम्हारा
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से…  

ஹம் கோ சலே சாந்த் ஹை யா கோயீ ஜாதுகர் ஹை

யா மத் பரீ யே துமாரீ நஃஜர் கா அஸர் ஹை

ஸப் குச் ஹம்ஹாரா, அப் ஹை தும்ஹாரா

யே பாத் க்யா ஹை, யே ராஃஜ் க்யா ஹை

கோயீ ஹமே பதாதே

இது என்ன, சந்திரனா அல்லது ஏதோ மாயாஜாலக்காரனா

நான் என்னை முற்றிலும் இழந்துவிட்டேன்

அல்லது இது போதை நிறைந்த உன் கண்களின் பார்வையின் விளைவா?

என்னுடையதெல்லாம் இப்பொழுது உன்னுடையதாகிவிட்டதே!

இது என்ன விஷயம், இது என்ன ரகசியம்,

எவராவது சொல்வார்களா?

आकाश में, हो रहें हैं ये कैसे इशारे
क्या, देखकर, आज हैं इतने खुश चाँदतारे
क्यों तुम पराये, दिल में समाये
ये बात क्या है, ये राज़ क्या है
कोई हमें बता दे
दिल की नज़र से…  

ஆகாஷ் மே ஹோ ரஹே ஹை  யே கைஸே இஷாரே

கயா தேக் கர் ஆஜ் ஹை இத்னே குஷ் சாந்த் தாரே

க்யோ(ன்) தும் பராயேதில் மே ஸமாயே

யே பாத் க்யா ஹை, யே ராஃஜ் க்யா ஹை

கோயீ ஹமே பதா தே

இது என்ன, வானத்தில் ஏதேதோ சமிக்ஞைகள் வருகின்றனவே!

எதைக் கண்டு  சந்திரனும் தாரகைகளும் இன்று இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன!

நீ ஏன் ஒரு புதியவனின் மனதில் இடம் பிடித்துவிட்டாய்

இது என்ன விஷயம் இது என்ன ரகசியம்

எவராவது சொல்வார்களா?

Song: Dil ki nazar se  Film: Anadi 1959  Lyricist:Shailendra

Music: Shankar Jaikishan  Singers: Mukesh & Lata Mangeshkar

அருமையான பாட்டுஷைலேந்த்ராவின் நல்ல கவிதை. ‘தில் கீ நஃஜர் ஸே, நஃஜ்ரோ(ன்) கீ தில்ஸேஎன்ற வரியே பொருள் பொதிந்த ஒன்றுபல வகையில் பொருள் சொல்லலாம். மனதின் பார்வை_- intuitive sight, or the sight of intuition or intimacy என்று இப்படி எத்தனையோ சொல்லலாம். ” ஜானே நஃஜர், ஃபஹ்சானே ஜிகர்என்றுஆஹ்படத்தில் 1953 எழுதினார். “கண் காணாததும் மனம் கண்டுவிடும்என்று இதைத் தமிழில் தந்தார் கம்பதாசன்! இங்கு ஒப்பிட்டுப் பாருங்கள்!

சங்கர் ஜெய்கிஷனின் அபார இசை

முகேஷ்லதாவின் அருமைக் குரல்கள்! 1+! மாஜிக் இங்கும் பார்க்கலாம்!

ரிஷீகேஷ் முகர்ஜீ படமாதலால்  நல்ல விதத்தில் (விரச மில்லாமல்) படமாக்கப்பட்டிருக்கிறது!

tags –     –ஹிந்தி படப் பாடல்கள் – 18 ,  ரசிகர்கள்

ஒரு டம்ளர் பால்! (Post No.7882)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7882

Date uploaded in London – – 26 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு டம்ளர் பால்!

ச.நாகராஜன்

ஒரு ஏழைச் சிறுவன். வீடு வீடாக தேவைப்பட்ட பொருள்களைப் பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதிப்பான். கிடைக்கும் காசை வைத்து பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டுவான்; தனது புத்தகங்களையும் வாங்கிப் படிப்பான்.

ஒரு நாள் அவன் கையில் ஒரே ஒரு பைசா (டைம் Dime) தான் இருந்தது. ஒரே பசி.

தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த ஒரு டைமைக் கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று அவன் முடிவு செய்தான்.

ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டிய போது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை. ஆனால் பசியோ பசி!

ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.

அந்த இளம் பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆகவே தண்ணீருக்குப் பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன், “நான் இந்தப் பாலுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

“எனக்கு ஒன்றும் தர வேண்டாம். அன்பிற்கு விலை பேசக் கூடாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்” என்றாள் அவள்.

“அப்படியானால் என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான் அந்தச் சிறுவன்.

அந்தச் சிறுவனின் பெயர் ஹோவர்ட் கெல்லி (Howard Kelly).

அந்த வீட்டை விட்டு வெளியேறும் போது ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றான் அவன். கடவுள் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை கூடியது; நல்ல உணர்ச்சிகள் கூடியது!

ஒரு தக்க தருணத்தில் இப்படி ஒரு அன்பைக் காட்டிய பெண்மணி அவனுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தாள்.

வருடங்கள் ஓடின.

அவன் ஒரு பெரிய டாக்டராக ஆனான்; பெயரும் புகழும் பெற்றான்.

ஒரு நாள் எந்த இளம் பெண் அவனுக்குப் பாலை வழங்கினாளோ அவளுக்கு கடுமையான நோய் ஒன்று வந்தது.

அவள் வசித்து வந்த ஊரில் உள்ள டாக்டர்கள் திகைத்தனர்; அதைக் குணப்படுத்த அவர்களால் முடியவில்லை.

அவர்கள் நகருக்குச் சென்று ஹோவர்ட் கெல்லியைப் பார்க்குமாறு ஆலோசனை கூறினர்.

அந்தப் பெண்ணும் ஸ்பெஷலிஸ்டான ஹோவர்ட் கெல்லியைப் பார்க்கச் சென்றாள்.

அந்தப் பெண் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பதைக் கேட்டவுடன் கெல்லியின் கண்கள் பளபளத்தன. நேராக நோயாளி இருந்த இடத்திற்கு விரைந்து சென்றார்.

ஆம், அதே பெண் தான்! அவர் நன்றாக அடையாளம் கண்டு கொண்டார்.

உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினார். எப்பாடு பட்டேனும் அவளைக் காப்பாற்றுவது என்று உறுதி பூண்டார்.

பெரும்பாடு பட்டு கடைசி கடைசியாக அவர் வென்றார். அந்தப் பெண் பூரண குணமடைந்தாள்.

கெல்லி அக்கவுண்ட்ஸ் பிரிவின் அதிகாரிக்கு அந்தப் பெண்மணிக்கு ஆன செலவுக்கான பில்லைத் தனக்கு அனுப்பச் சொன்னார். அக்கவுண்ட்ஸ் பிரிவும் அவரது அங்கீகாரத்திற்காக அந்த பில்லை அவரிடம் அனுப்பியது.

அந்தப் பில்லைப் பார்த்தார் அவர்! பெருந்தொகை தான்!!

அந்த பில்லின் கீழே கோடியில் சில வார்த்தைகளை அவர் எழுதி விட்டு, அந்த பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பச் சொன்னார்.

அந்தப் பெண்மணி நடுநடுங்கிக் கொண்டிருந்தாள், பில்லை நினைத்து – இந்த ஜென்மத்தில் அந்த பில் தொகையைத் தன்னால் கட்ட முடியுமா என்பதே அவள் பயம்!

அந்த பில்லை வாங்கிப் பார்த்தாள்! அடேயப்பா!

ஆனால் பில்லின் அடியில் ஓரத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் அவள் கவனத்தை ஈர்க்கவே அவள் அதைப் படித்தாள் :

“Paid in full with one glass of milk”

Signed Howard Kelly

ஒரு டம்ளர் பாலால் பில் முழுவதும் கட்டப்பட்டது.

ஹோவர்ட் கெல்லி.

அந்தப் பெண்மணியின் கண்களில் நீர் துளித்தது.

அவள் ஹோவர்ட் கெல்லி யார் என்பதை இப்போது தெரிந்து கொண்டாள்.

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?!

***

உண்மையாக நடந்த இந்த சம்பவத்தை இணையதளத்தில் அவ்வப்பொழுது பல அன்பர்களும் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

tags – ஒரு டம்ளர் பால், ஹோவர்ட் கெல்லி,Howard Kelly

ரிக்வேத பூகோளம்- கால்டுவெல்களுக்கும் மாக்ஸ்முல்லர்களுக்கும் செமை அடி! (Post. 7881)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7881

Date uploaded in London – 25 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ரிக் வேதத்தில் ஆப்கானிஸ்தான் முதல் பீஹார் வரை

ரிக் வேதம் உலகின் பழமையான  கவிதைப்  புஸ்தகம். இதில் பத்து மண்டலங்கள் உள்ளன. இதிலுள்ள ஹரியூபிய என்னும் இடம் சிந்து-சரஸ்வதி நதி தீர ஹரப்பா நகரம் என்ற கருத்தும் உண்டு. இது பற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளேன். காண்க-



ஹரியூபிய | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ஹரி…

  1.  

1 Nov 2014 – கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014. உலகின் மிகப்பழைய நூல் …

ரிக் வேதம் காட்டும் பல்லாயிரக்கணக்கான சதுரமைல் பர ப்பைக் காண்கையில் அந்தப் புலவர்கள் பல நூற்றாண்டுக் காலத்தில் வாழ் ந்தவர்கள் என்று தெரிகிறது. இதைவிட மிகச் சிறிய பரப்பைக் கொண்ட  தமிழகம் பற்றிப் பாடிய 450 சங்கப்புலவர்களுக்கு நாம் 400 ஆண்டுக்காலம் ஒதுக்கியுள்ளோம். ரிக் வேதத்திலும் 450 புலவர் பாடல்கள் உள்ளன. இவ்வளவுக்கும் இவர்கள் பாடியது கடவுள் துதிகள் ! பூகோளம்- வரலாறு அல்ல.

ரிக் வேதத்தின் சில பகுதிகள் ஈரான் நாட்டவர் பாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் எல்லோரும் ஒப்புக்கொள்ளாக் கூடிய , இன்றும் அடையாளம் தெரியக்கூடிய பிரதேசங்களை மட்டும் காண்போம்.

ஆப்கானிஸ்தான் (AFGHANISTAN)  :-

இப்பொழுது அடிக்கடி பெயரில் அடிபடும் நகரம் காண்டஹார். முஸ்லீம் பயங்கரவாதிகளால் அடிக்கடி தாக்கப்படும் நகரம் இது. இதன் பெயர் காந்தாரம் என்பதாகும். அங்கிருந்து வந்தவர்தான் திருதராஷ்டினின் மனைவி காந்தாரி. அரசர்களுக்கு பல மனைவியர் இருப்பதால் அந்தந்த நாட்டிலிருந்து வந்தவர்களை அந்தப் பெயர்கொண்டு அழைப்பர் .

கோசால நாட்டிலிருந்த வந்த பெண்ணை கோசலை, கௌசல்யா என்பர். கேகய தேசத்திலிருந்து வந்த ராணியை கைகேயி என்பர். மிதிலா நகரில் இருந்து வந்த பெண்ணை மைதிலி என்று  அழைப்பர். இதே போல தமிழ் மன்னர்களும் பலரை மணந்ததால் சோழ மாதேவி , பாண்டிமாதேவி என்று நாட்டின் பெயரால் அழைத்தனர்.

இந்த காந்தார நாட்டைப்பற்றி ஒரே இடத்தில் ஒரே துதி வருகிறது – 1-126-6

கந்தர்வர் பற்றிக் குறிப்பிடும் துதிகளை, மறைமுகமாக காந்தாரம் பற்றிக் குறிப்பிடுவதாக எண்ணுவோரும் இருக்கின்றனர்.

கந்தர்வர் பற்றிய இருபது குறிப்புகளில் பெரும்பாலானவை 1, 8, 9, 10 ஆவது மண்டலங்களில் வருவதால் அவை பிற் காலத்தியவை . மற்ற மண்டலங்களுக்குப் பின்னர் வைத்த புதிய மண்டலங்கள் இவை.

XXX

பஞ்சாப் (PUNJAB) :–

அடுத்தபடியாக இருப்பது பஞ்சாப் .

இப்பொழுது இதன் கிழக்குப் பகுதி இந்தியாவிலும் மேற்குப் பகுதி பாகிஸ்தானிலும் உளது. இப்போது நம் இதை ‘ஐந்து நதி – பஞ்ச ஆப’ — என்று அழைக்கிறோம். . வேத காலத்தில் இதை ‘ஏழு நதி – சப்த சிந்து’ – (SAPTASINDHU) பிரதேசம் என்று அழைத்தனர். மேற்கே ஓடிய  சிந்துவையும் கிழக்கே ஓடிய சரஸ்வதி நதியையும் சேர்த்து இப்படி கூப்பிட்டனர் . பாரசிகர் மதநூலான செண்ட் அவெஸ்தாவிலும் ‘சப்த சிந்து’ என்றே வருகிறது.

ஆயினும் வேதத்தில் ‘பல’ , ‘அநேக’ என்ற பொருளிலும் எண் 7 பயன்படுத்தப்பட்டுள்ளது . சப்த சிந்து என்ற சொல் வரும் இடங்கள் –

1-32-12; 1-35-8;

2-12-3; 2-12-12;

4-28-1;

8-54-4; 8-69-12; 8-96-1;

9-66-6;

10-43-3; 10-67-12

இந்த மண்டலங்களை மத்திய கால , இறுதிக்கால மண்டலங்கள் என்பர் ஆய்வாளர்கள்.

xxx

ஹரியானா (HARYANA) :-

இதை மஹாபாரத காலத்தில் குருக்ஷேத்ரப் பகுதி என்று அழைத்தனர். மனு ஸ்மிருதி முதலியன பிரம்மாவர்த் த  என்று குறிப்பிடும். ஆனால் இவ்விரு சொற்களும் ரிக் வேதத்தில் இல்லை. ‘வர ஆ ப்ருதிவ்யா’- உலகில் சிறந்த இடம் – ‘நாபா பிருதிவ்யா’ – பூமியின் நாபி போன்ற பகுதி — என்றும் வேதம் போற்றும் .

ரிக் வேதத்தில் 3-23-4ல் ‘இலாயாஸ்பத’ , ‘மானுஷ’ என்ற இரண்டு இடங்கள் வருகின்றன. இவற்றை கிரிப்பித் Griffith தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்றும் இவைகளைப் பற்றிய தெளிவான விளக்கங்கங்கள் மஹாபாரதத்தில் வருகின்றன என்றும் ‘ரிக்வேதத்தில் வரலாறு’ என்ற நூலில் ஸ்ரீகாந்த் தலகரி காட்டுகிறார் .

THE RIG VEDA- A HISTORICAL ANALYSIS, Shrikant G. Talageri, Aditya Prakashan, New Delhi ,2000

வன பர்வத்தில் தீர்த்தயாத்ரை பகுதியில் 178 ஸ்லோகங்களில் குரு க்ஷேத்ரப் பிரதேசத்திலுள்ள புண்ய ஸ்தலங்களின்  பட்டியல் கிடைக்கிறது.

“உலகப்புகழ் பெற்ற மானுஷாவில் (MANUSHA) குளிப்போரின் பாவங்கள் போய்விடும்

மானுஷாவிலிருந்து கூப்பிடு  தூரத்தில் கிழக்கு திக்கில் ஆபகா (APAGA)  நதி வரும். சித்தர்கள் வந்து செல்லும் இவ்விடத்தில் ஒரு பிராமணனுக்கு அன்னம் இட்டாலும் அது கோடி பிராமண அன்ன தான புண்யத்தை அளிக்கும்.”

(இதில் வரும் கூப்பிடு தூரம் என்னும் சொல் இன்றும் தமிழ் நாட்டின் கிராமத்தார் வழங்கும் சொல்!)

“இதற்குப் பின்னர் ஒருவர் இலாஸ்பத (ILYASPADA OR ILAYASPADA) செல்லவேண்டும் . உலகப் புகழ் பெற்ற சாரக என்னும் இடத்தில் அத்துறை உள்ளது. முன்னோர்களை வழிபட்டு அங்கே குளிப்போருக்கு துரதிருஷ்டம் என்பதே வராது.

அதற்குப்பின்னர் திருஷத்வதி நதியில் குளிப்போருக்கு ‘அக்னிஸ்டோம’, ‘அதிராத்ர’ யாக பலன்கள் கிட்டும்”.

மானுஷ என்றால் மனிதன் என்ற பொருளும் உண்டு. கிரிப்பித் அந்தப் பொருளை மனதில் வைத்து தவறாக மொழி பெயர்த்தார். ஆனால் எம். எல். பார்கவா என்பவர் இப்போதும் இவை ஹரியானாவில் உள்ள புனித ஸ்தலங்கள் என்பதைக் காட்டுகிறார்.

கைதால் (Kaithal)  என்னும் இடத்திலிருந்து மூன்றரை மைல் தூரத்தில் மானஸ் இருக்கிறது கத்லி (Gadhli) என்னும் பெயரில் ஆபக (Apaga)  தீர்த்தம் இருக்கிறது . கைதால் என்னும் இடத்திலிருந்து 2 மைல் தொலைவில் சாரக (Saraka) என்னும் இடம் ஷெர்கத் (Shergad) என்று மருவி வழங்குகிறது அதுதான் இளாஸ் பத.

இளா , பாரதி , சரஸ்வதி என்னும் மூன் று தேவியர்களும் ரிக் வேத ஆப்ரி ஸுக் தங்களில் எல்லா மண்டல ரிஷிகளாலும் வணங்கப்படுகின்றனர்.

ரிக் வேதத்தில் ஹரியானா புண்ய ஸ்தலங்கள் இடம்பெறும் துதிகள்—

வர ஆ ப்ருதிவ்யா –

3-23-4; 3-53-11;

நாபா ப்ருதிவ்யா –

1-143-4; 2-3-7; 3-5-9, 3-29-4;

9-72-7, 9-79-4, 9-82-3; 9-86-8;

10-1-6.

இலஸ் பத – இலயாஸ்பத –

1-128-1; 2-10-1; 3-23-4; 3-29-4; 6-1-2;

10-1-6; 10-70-1; 10-91-1; 10-191-1

மானுஷ –

1-128-7; 3-23-4

எல்லா மண்டலங்களிலும் பரவலாக ஹரியானா விஷயங்கள் வருவதைக் கவனிக்கவும். மேலும் மூன்றாவது மண்டலம் இன்னும் ஒரு அரிய விஷயத்தையும் சொல்கிறது . மிகப் பழைய மண்டலம் என்று கருதப்படும்  ஆறாவது மண்டலத்தில் வரும் மன்னன் திவோ தாசன். அவனுடைய மூதாதையர் தேவவாதன் இலாஸ் பதத்தில்  அக்கினியை  பிரதிஷ்டை செய்த விஷயத்தை சொல்கிறது. இந்த வழக்கம் பாரசீக மதத்தில்  பெரு வழக்காக காணப்படுகிறது.

xxx

உத்தர பிரதேசம் (UTTAR PRADESH):-

தற்கால உ.பி. மாநிலம்  அக்காலத்தில் ஆர்யவர்த்தம் எனப்பட்டது. ஆனால் ரிக்  வேதத்தில்  அச்ச்சொல் இல்லை. பிரதர்தன என்ற காசி ராஜனின் பெயரை மூதாதையர் என்று கூறும் ரிக்வேத சூக்தங்கள் 9-96, 10-179-2 ஆகியவற்றின் அநுக்ரமணி (VEDIC INDEX) ஆகும்.

காசிராஜனின் ‘பிரதர்தன’ என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் பெயர். கி.மு 1400ல் துருக்கி- சிரியா நாடுகளை ஆண்ட இந்து மன்னன் (Mitanni Civilization)  பெயரும் அதுவே. கங்கைநதியின் பெயரும் காசி நகரின் பெயரும் தமிழ் இலக்கியத்திலும் உண்டு . பூமியில் மிகப்பழமையான நகரம் புண்ய காசி.

ரிக் வேத சூக்தம் மற்றும் அநுக்ரமணி காண்க- 9-96; 10-179-2;

xxx

பீஹார் (BIHAR):-

உலகப் புகழ் பெற்ற சாம்ராஜ்யம் மகத சாம்ராஜ்யம். புத்தருக்கும், மஹாவீரருக்கும் முன்னரே தத்துவ ஞா னிகளை ஈன்றெடுத்த மாநிலம். ‘கீகட’   என்ற பெயரில் வேதத்தில் மகதம்/ பீஹார் இடம்பெறுகிறது .

3-53-14

பிரமகந்த என்று வேதம் குறிப்பிடும் மன்னன் பெயரில் இருந்து ‘ப்ர- மகதம்’ உண்டாயிற்று என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு .

xxx

ஆரியர் குடியேற்றம் பற்றிக் கொக்கரிக்கும் அரைவேக்காடுகளின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கும் பகுதி, இந்த பூகோள விஷயங்களாகும். கங்கையை முதலில் வைத்து, மேற்கு நோக்கி நதிகளின் பெயரை அடுக்கும் ஒரு சூக்தம் (Westward)  வெள்ளைக் காரர்களின் மண்டையைப் பிளக்கிறது அடுத்தாற்போல ஹரியானாவிலும் உத்தர பிரதேசத்திலும் புனிதத் தலங்களை காட்டிவிட்டு

பஞ்சாப் பகுதியில் எதையும் காட்டாதது அவர்களுக்கு ஆப்பு அடிக்கிறது; வேத கால மக்கள் வடமேற்கு வழியாக நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக  கிழக்கே வரவில்லை ; கங்கையிலிருந்து புறப்பட்டு உலகம் முழுதும் நாகரீகத்தைப் (Westward Expansion)  பரப்பினர் என்பதை 6, 3, 7 ம் மண்டலங்களில் வரும் இலாயாஸ்பத (Ilayaspada) — காசி (Kasi Raja) ராஜன் – ‘கீகட’ (Kikata)   பாடல்கள் பறை சாற்றுகின்றன . கி.மு 1400ம் ஆண்டிலேயே துருக்கியில் ஆடசி அமைத்தவர் காசி மக்கள். அதற்கு முன்னர் கி.மு 1800-ல் பாபிலோனிய -சுமேரிய பகுதியை ஆண்ட காசைட்டுகளும் (Kassites Civilization)  காசி மக்களே!!

வெள்ளைக்கார மாக்ஸ்முல்லர்களுக்கும் கள்ளப்பயல் கால்டுவெல்களுக்கும்  செமை அடி கொடுக்கிறது ரிக்வேத பூகோளம்.

tags — ரிக் வேதம் , பூகோளம், காசி, மாநிலங்கள், கீகட , ஆரியர் , குடியேற்றம்

— subham —

Wealth & Collection Anecdotes (Post No.7880)

COMPILED  BY LONDON SWAMINATHAN

Post No.7880

Date uploaded in London – 25 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Some years ago, while Baron Rothschild and a noble man friend were taking a pleasure trip along the Rhine a young lad on the boat noticed the end of a silk handkerchief sticking out of Rothchild’s pocket. With visions of the fabulous value of a Rothschild handkerchief he took the end of the handkerchief and gently tugged at it

At this point the noble man turned to the baron and whispered,

Baron, that boy beside you is taking your hand kerchief.

Leave him alone, said the Baron.

“We all had to start small.”

xxxx

Collection anecdote

MONEY IS NOT EVERYTHING

A meeting of bank directors included J Edward Simmons and Russel Sage. In the course of a general conversation Mr Simmons remarked,

Money is not everything— is it Mr Sage?

No, replied Mr Sage thoughtfully, the work of collecting it is very important.

Xxxx

Battle anecdotes

A confederate soldier was seen by General Lee, who met him retiring from the front with what Lee considered unbecoming haste. Lee said to him,

Why don’t you go back to the front? That is the place where a soldier should be when a battle is going on.

The reply was,

General, I have been there, and I give you my word of honour it is not a place where any self- respecting man would care to be.

Xxx

WHO IS BETTER?

When General O Kelly was introduced to Louis XVI soon after the Battle of Fontenay, his majesty observed that Clare’s regiment behaved very well in the engagement.

Sure, said the General, they behaved very well . It is true— many of them were wounded, buy my regiment behaved better for we were all killed.

TAGS – WEALTH, COLLECTION, BATTLE, ANECDOTES

Xxx Subham xxx

ஹிந்தி படப் பாடல்கள் – 17 – ஓ! காதலா, வேண்டாம்!! (Post No.7879)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7879

Date uploaded in London – – 25 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 17 – ஓ! காதலா, வேண்டாம்!!

R.Nanjappa

ஓ  காதலா, வேண்டாம்!

காதல் என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு அலர்ஜி! பலர் முகத்தைச் சுளிப்பார்கள் .

ஏன் இப்படி?

இந்தச் சொல் ஒரு குறிப்பிட்ட பொருளிலேயே வழக்கில் வந்து விட்டதுகதாசிரியர்களும் சினிமாகாரர்களும் இதற்கு ஒரு உருவம் கொடுத்து, ஒரு சாயம் பூசிவிட்டார்கள்.

காதல் என்றால் அன்பு என்றுதான் பொருள்நாம் பெரியவர்களிடம் காட்டும் அன்பு மரியாதை, குழந்தைகளிட்ம் காட்டும் அன்பு, வாஞ்சை, பிரியம். வேண்டியவர்களிடம் காட்டுவது நட்பு. எல்லோரிடமும் பொதுவில் காரணமில்லாமல்  காட்டுவது அருள், கருணை. கடவுளிடம் காட்டுவது பக்தி. எல்லாமே ‘காதல்தான். அண்டைவீட்டுக் காரருடன் சண்டையில்லாமல் இருப்பதும் அன்பு தான்.

கண்ணே உந்தன் கழலிணையில்

காதல் பெருக்கே தருவாயே” 

என்று அருணாசலனிடம் வேண்டினார் ஸ்ரீ ரமணர்

ஆனால் கதை எழுதுபவர்களும், சினிமா எடுப்பவர்களும் அகராதியைக் குறுக்கிவிட்டார்கள். ஆண்பெண் உறவை மட்டும் இதில் அடக்கிவிட்டார்கள். அதுவும் ஒரு நிலையில் தான்கணவன் மனைவி உறவை காதல் என்று சொல்வதில்லை.

மேலும் இவர்கள் காதல் என்று சொல்லும் இடங்களிலும் காட்டும் காட்சிகளிலும் ஒரு நெறிமுறை இல்லை, வரம்பு இல்லை. யார் யாருடன் ஓடிப்போனாலும் காதல் தான்! ‘கண்டவுடன் காதலேஎன்று பாடுவார்கள்! It is a free for all! 

நம் தமிழிலக்கியத்தில் இப்படி இல்லை . தொல்காப்பியமும் திருக்குறளும் காதலுக்கு இலக்கணம் வகுக்கின்றன. காமத்துப்பால் தொடக்கத்தில் முன்னுரை தந்த பரிமேலழகர் எழுதுகிறார்:

பிணி, மூப்பு,இறப்புக்கள் இன்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய், உருவும், திருவும் பருவமும், குலனும் அன்பும் முதலியவற்றால் தம்முள் ஒப்புமை உடையராய தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றித் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது” 

இங்கேபால் வகைஎன்றதுநல்லூழின் திறம்“.(தொல். களவு.2)  ஒப்புமைக்கு 10 லட்சணங்கள் தருகிறார் தொல்காப்பியர்.

இதற்கு உரை எழுதிய பரிப்பெருமாள், “மறையவர் தேஎத்து மன்றல் எட்டனுள்இது காந்தருவ வகை மணத்தைச் சேரும் என்று எழுதினார்

இதற்கெல்லாம்  போஜராஜன் , வாத்ஸ்யாயனர் ஆகியோர்  நூல்களையே ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆக, பாரதப் பண்பாடு ஒன்றே!

 நமது வரலாற்றில் இதற்கெல்லாம் எத்தனை எடுத்துக் காட்டுக்கள் இருக்கின்றன? இதிஹாசத்தில் துஷ்யந்தன்சகுந்தலை, புராணத்தில் முருகன்வள்ளிஇப்படி அபூர்வமாகத்தான் இருக்கிறதே  தவிர தடுக்கி விழுந்தால் காதல் என்று வரவில்லை!

ஆனால் நமது பத்திரிகைகளுக்கும், கதை எழுதுபவர்களுக்கும் சினிமாகாரர்களுக்கும் இதிலெல்லாம் அக்கறை இல்லை. மேலும் தமிழ்  நாட்டில் இவர்களுக்கெல்லாம் வேறு உள்நோக்கம்  Hidden Agenda  இருக்கிறது.. அதனால் காதல் என்ற பெயரில் எதைஎதையோ எழுதுகிறார்கள், சித்தரிக்கிறார்கள். இந்த நிலையில் சில பெரியவர்கள் முகம் சுளிப்பதில் ஆச்சரியமில்லை

But we need not confine ourselves to these distortions. We take Love as a serious subject, ordained by divine providence, not a frivolous preoccupation . It has many facets and manifestations. Man-woman love is one, just one out of the many. And that too mostly reigns in marriage.

இதையே வள்ளுவர் இல்லறம் எனச் சிறப்பித்தார். காமத்துப் பாலிலும், களவியலுக்கு 70 குறள்கள் தந்த வள்ளுவர், கற்பியலுக்கு 150  குறள்கள் தந்திருக்கிறார்.. What a sense of proportion!

எனவே, நாம் காதல் என்றல் காத தூரம் ஓடவேண்டாம்!

மேலும் சில டூயட்களை ரசிப்போம்!

லௌட் கயா கம்கா ஃஜமானா!

लौट गया गम का ज़माना
लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना  

லௌட் கயா கம் கா ஃஜமானா ஆயீ குஷீ லஹராதீ

லௌட் கயா கம் கா ஃஜமானா ஆயீ குஷீ லஹராதீ

சோகத்தின் ஆதிக்கம் ஓடிவிட்டதுமகிழ்ச்சி அலையாய் வருகிறது!

சோகத்தின் ஆட்சி ஓடிவிட்டதுமகிழ்ச்சி அலை எழுந்துவிட்டது!

दूर गगन में देखो चमके
ाषाओ के तारे ाषाओ के तारे
झिलमिल प्यारे प्यारे
बदली में छुपकर टारो के साग
चड़ा करे ईशारे चड़ा करे इशारे
किसकी लगन में आज पवन है 

बागो में इठलाती  

தூர் ககன் மே தேகோ சம்கே ஆஷாவோ(ன்) கே தாரே,

ஆஷாவொ(ன்) கே தாரே

ஃஜில்மில் ப்யாரே ப்யாரே

பத்லீ மே சுப்கர் தாரே(ன்) கே சங்க்

சந்தா கரே இஷாரே, சந்தா கரே இஷாரே

கிஸ்கீ லகன்மே ஆஜ் பவன் ஹை பாகோ மே இத்லாதீ

அங்கே தூர வானத்தில் பார்

நம்பிக்கையின் தாரகை ஓளிர்கிறது, நம்பிக்கையின்  தாரகை ஒளிர்கிறது!

ஆஹா, எவ்வளவு அழகாக மின்னுகிறது!

தாரகைகளுடன் சந்திரனும் சேர்ந்துகொண்டது!

மேகத்தில் மறைந்து ஏதோ சமிக்ஞை செய்கிறது! சமிக்ஞை அனுப்புகிறது!

இன்று யாருடைய  திருமணத்திற்காக

சோலையில் காற்று இப்படித் தென்றலாக வீசுகிறது!


लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना

லௌட்கயா கம் கா ஃஜமானா, ஆயீ குஷீ லஹராதீ

துக்கத்தின் ஆதிக்கம் ஓடிவிட்டது, மகிழ்ச்சி அலை வந்துவிட்டது!

रात नयी हर बात नयी है
नया नया है ज़माना
कैसा समा सुहाना
कैसा समा सुहाना
गाये चाँदनिया धीरे धीरे
प्रीत भरा अफ़साना
प्रीत भरा अफ़साना
आज मेरे छोटे से मन में
आशा है मुसकाती  

ராத் நயீ ஹர் பாத் நயீ ஹை நயா நயா ஹை ஃஜமானா

கைஸா ஸமா சுஹானாகைஸா ஸமா ஸுஹானா

காயே சந்தனியா தீரே தீரே

ப்ரீத்  பரா அஃப்ஸானா, ப்ரீத் பரா அஃப்ஸானா

ஆஜ் மேரே சோடே ஸே மன் மே ஆஷா ஹை முஸ்காதீ

இரவு புதிது, அதில் ஒவ்வொரு விஷயமும் புதிது!

இந்த உலகமும் புதிது புதிதாகவே இருக்கிறது!!

ஆஹா, என்ன இனிய நேரம், என்ன இனிய நேரம்!

நிலவும் மெல்ல மெல்ல பாடத்தொடங்கி விட்டது!

ஆம், அன்பு நிறைந்த கதை இசைக்கத் தொடங்கிவிட்டது!

இந்த என் குட்டி மனதில் இன்று  நம்பிக்கை புன்னகைக்கிறது!

लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना.  

லௌட் கய கம் கா ஃஜமானா  ஆயீ குஷீ லஹராதீ

சோக நாட்கள் ஓடிவிட்டன, மகிழ்ச்சி அலை எழுந்துவிட்டது!

Song: Laut gaya gham ka zamana  Film.Naya Admi 1956 Lyricist: Rajinder Krishan

Music: Vishvanathan-Ramamurthi  Singers: Hemant Kumar  & Lata Mangeshkar

Oh, what an extraordinary melody, what beautiful yet simple lyrics!

Note how the lyrics and the tune blend, how the voices blend! Here too. some passages are rendered by both singers with different pitches, at the same time!

குரல்களில் என்ன குழைவு, நெளிவு, கமகம்!

இந்த ஹிந்திப் படம் என்.டி ராமராவ், அஞ்சலி தேவி , ராம சர்மா ஆகியோர் நடித்தது, இதுசந்தோஷம்என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங் என்று தோன்றுகிறது. இசையமைப்புமதன் மோஹன்என்று  போட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பாடல்தீயெனி ஈனாடி ரயிஎன்ற தெலுங்குப் பாடலின் மெட்டில் இருக்கிறது. அதனால் இது மதன் மோஹன் இசையல்ல.

இந்தப் பாட்டின் ஆர்கெஸ்ட்ரேஷன்  பிரமாதம். தெலுங்கில் எப்படியோ தெரியவில்லை.

இது ராம சர்மாஅஞ்சலி தேவி மீது படமாக்கப் பட்டிருக்கிறது..

1960களில் இப்பாட்டை ரேடியோ சிலோனில் கேட்டிருக்கிறேன். வார்த்தைகள் புரியாது, எந்தப் படம் என்றும் தெரியாது! மெட்டு மிகவும் பிடிக்கும்.

Lilting song.

யே சபா உன்ஸே கஹ்  ஃஜரா

ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
ae sabaa unse kah zaraa
kyun hamen beqaraar kar diyaa

தென்றலே, நீ அவளிடம் சொல்: ஏன் என் மனதை கட்டிழக்கச் செய்துவிட்டாய்?


dil hamaara  jaan se pyaaraa
jaao ji tum pe ye nisaar kar diyaa aa
dil hamaara  jaan se pyaaraa
jaao ji tum pe ye nishaar kar diyaa

நீயும் தான் என்ன, என் மனதை உன் வசம் செய்து விட்டாய் !


ae sabaa unse kah jaraa
kyun hamen beqaraar kar diyaa

zindagi tum nahin to zindagi nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை
chandni tum nahin to chandni nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை


zindagi tum nahin to zindagi nahin
chandni tum nahin to chandni nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை

நீ இல்லாமல்  இந்த நிலவொளியும் நிலவொளியாக இல்லை!


sab nazaare  ye pukaare
tumne hi bahaar ko bahaar kar diyaa

நீ தான் இந்த சந்தத்தை வஸந்தாமாகச் செய்தாய்

எல்லாக் காட்சிகளும் இதைத்தான் சொல்கின்றன!


ae sabaa
unse kah zaraa
kyun hamen beqaraar kar diyaa

keh zaraa sanam  hamko tumse pyaar hai

அன்பே, உன்னிடம் தான் எனக்கு அன்பு என்று சொல்

keh diyaa sanam hamko tumse pyaar hai

அன்பே, சொல்லிவிட்டேன்உன்னிடம்தான் எனக்கு அன்பு

keh zaraa sanam  dil se dil nisaar hai

அன்பே, மனதுடன் மனம் இணைந்து ஆனந்தம் என்று சொல்

keh diyaa sanam   dil se dil nisaar hai

அன்பே சொல்லிவிட்டேன்: மனதுடன் மனம் சேர்ந்து ஆனந்தமே!

paas aa ke  muskaraa ke
tumne dil par nazar kaa waar kar diya

அருகில் வந்து, புன்சிரிப்புடன் உன் கண்களை இதயத்தில் பதித்து விட்டாயே!


ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
dil hamaara jaan se pyaara
jaao ji
tum pe ye nikhar kar diyaa
ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
ae sabaa

Song: Ay saba unse heh zara  Film: Alibaba Aur 40 Chor 1954 Lyricist; Raja Mehdi Ali Khan

Muaic: S.N.Tripathi, Chitragupta  Singers: Mohammad Rafi & Asha Bhonsle

என்ன இனிய பாடல்! சில சொற்களையே புரட்டிப் போட்டு ஒரு எளிய பாடல் எழுதிவிட்டார் கவி

இது தமிழ் நாட்டில் பிரபலமான மெட்டு. தமிழ் அலிபாபா & 40 திருடர்களில் 1955 இந்த மெட்டில் வந்த பாட்டுமாசிலா உண்மைக் காதலே‘. மருதகாசி எழுதி .எம் ராஜாவும் பானுமதியும் பாடியது.

தமிழ்ப் படத்தில் எல்லா பாடல்களும் ஹிந்தியின் அடிச்சான் காபியே. படம் டைடிலில் இசையமைப்பாளர் பேர் எதுவும் போடவில்லை. ஆர்கெஸ்ட்ரா: எஸ்.தக்ஷிணாமூர்த்தி என்று போட்டார்கள்! ஆனால் அதைக்கூட சரியாகச் செய்யவில்லை. ஹிந்திப் பாட்டின் ஆர்கெஸ்ட்ராவைக் கவனியுங்கள்இந்த இனிமை தமிழில் இல்லையே!

இதற்கு இசையமைத்தது யார் என்பதில் சந்தேகம்  நிலவுகிறது. எஸ்.என் திரிபாடி-சித்ரகுப்தா இருவர் பெயரும் சொல்லப்படுகிறது. சித்ரகுப்தா திரிபாடிக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்தவர்-பின்னர் தனியே இயங்கினார். திரிபாடி நல்ல இசைஞர்.  இங்கும் சில வரிகளில் இருவரையும் இழைந்து பாடவைத்திருக்கிறார்.

Same melody in different pitches  simultaneously!

அரிய பாட்டின் எளிமை, இனிமைஉள்ளத்தைக் குளிர்விப்பது.

Evergreen melody.

மில் தேஹி (ங்)கே தில் ஹுவா தீவானா

मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका

மில்தே ஹீ ஆங்கே தில் ஹுவா தீவானா கிஸீகா

அஃப்ஸானா மேரா பன் கயா  அஃப்ஸானா கிஸீ கா

கண்கள் கலந்ததும்  மனம் யாருக்கோ பைத்தியமாகிவிட்டது

யாருடைய சரித்திரமோ என்னுடைய கதையாகிவிட்டது!

पूछो ना मोहब्बत का असर, हाय पूछो  हाय ना पूछो

दम भर में कोई हो गया, परवाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका
मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका  

பூசோ முஹப்பத் கா அஸர் ஹாயே பூசோ, ஹாயே பூசோ

தம் பர் மே கோயீ ஹோகயா பர்வானா கிஸீ கா

அஃப்ஸானா மேரா பன் கயா , ஃப்ஸானா கிஸீ கா

மில்தே ஹீ (ங்) கே தில் ஹுவா தீவான கிஸீ கா

காதலின் தாக்கம் என்ன? அதை மட்டும் கேட்காதே, கேட்காதே

வாழ் நாளுக்கும் யாரோ  யாருக்கோ அடிமையாகிவிட்டார்கள்

(விட்டிற்பூச்சி போலாகிவிட்டார்கள்)

வேறொருவர் கதை என் கதையாகி விட்டது

हंसते ही ना जायें कहीं, आँखों में आँसू आँखों में आँसू
भरते ही छलक जाये ना, पैमाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका
मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका

ஹன்ஸ்தே ஹீ நா ஜாயே கஹீ ஆங்கோ மே ஆன்ஸூ,

ஆங்கோ மே ஆன்ஸூ

பர் தேஹீ சலக் ஜாயே நா, பைமானா கிஸீ கா

அஃப்ஸானா மேரா பன் கயா அஃப்ஸானா கிஸீ கா

மில்தே ஹீ ஆங்கே..…..

சிரித்துச் சிரித்தே கண்களில் கண்ணீர் வந்துவிடப் போகிறது, ஜாக்கிரதை!

ஊற்றிக்கொண்டிருக்கும்போதே பாத்திரத்திலிருந்து சிந்திவிடப் போகிறது, ஜாக்கிரதை!

யார் கதையோ என் கதை ஆகிவிட்டது…….

Song: Milte hi aankhen      Film: Babul 1950 Lyrics: Shakeel Badayuni

Music : Naushad  Singers: Talat Mahmood & Shamshad Begum

இது நௌஷத்தின் பாடல்களில் மிகவும் பிரபலமானது. தமிழ் நாட்டிலும் இந்த மெட்டு 50களில் பிரசித்தமாக இருந்ததுபராசக்தி படத்தில் வரும்  “பொருளே இல்லார்க்கு தொல்லையா புது வாழ்வே இல்லையாஎன்ற பாட்டு இந்த மெட்டில் அமைந்ததே!

இது பியானோ வாத்தியத்தை இசைத்தபடியே பாடும் பாட்டு. இப்படிப் பாடுவது இயலாது. ஆனாலும் இத்தகைய பியானோ பாட்டுக்கள் முன்பு அதிகம் வந்தன. அவற்றில் பல பிரசித்தமாயின. சினிமா தானே, எல்லாம் செல்லும்! Sab chalta hai!

ஷகீல் பதாயுனி சிறந்த உருது கவிஞர். வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்வது சிரமம். கருத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்பைமானா, சலக் ஜாய் ஆகியவை அத்தகையவை. ஒரு நிலையை மனதில் கொண்டு எழுதுகிறார். பின்னர் கதை அப்படிப் போகிறதோ என்னவோ! ஆனால் பொதுவானே கருத்தே பொருத்தமாக இருக்கிறது.

தலத் முஹம்மது குரலும் ஷம்ஷாத் பேகம் குரலும் முற்றிலும்  வித்தியாசமானவை. தலத் குரல். very soft and mellifluous. ஷம்ஷாத் குரல்  high pitched and somewhat shrill இருக்கும்.  இரண்டும் சேர்ந்து இங்கே ஜாலம் செய்கின்றன. சொக்கிப் போகிறோம்.. இதிலும் இருவர் குரலும்  சில இடங்களில் சேர்ந்தே ஒலிக்கிறது

இந்தப் பாடல் முதலில் ஹேமந்த் குமார்உமாதேவி குரலில் பதிவாக்கப்பட்டது. ஆனால் ஹீரோ திலிப் குமார் விரும்பியபடி தலத்  குரலில் மீண்டும் பதிவுசெஉதனர். முதல் பதிவு வெளியாகவில்லை. இப்படி எவ்வளவோ நடந்திருக்கிறது. ஹேமத் குமார் குரலில் நம்மால் இப்போது கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

One of our most  iconic  songs.

இப்பொழுதும் லட்சக் கணக்கானவர்கள் விரும்பிக் கேட்கின்றனர். இசையின் பொற்காலம் என்று சும்மாவா சொன்னார்கள்!

******

வாபி சாபி – கற்றுக் கொள்வோம்! (Post No.7878)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7878

Date uploaded in London – – 25 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாக்யா 1-4-2020 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள பத்தாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை – அத்தியாயம் 445

வாபி சாபி – வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றைக் கற்றுக் கொள்வோம்!

ச.நாகராஜன்

சிக்கலான மனித வாழ்க்கை ஏராளமான குறைகளையும் கொண்டது என்றால் அது பொய்யல்ல!

விவரம் தெரிந்த நாளிலிருந்து எங்கு நோக்கினாலும், ‘இன்னும் நேர்த்தியாக இரு; இது போதாது இதை விட இன்னும் அதிக நேர்த்தி தேவை – ‘Be Perfect’ – என்று  நமக்குச் சொல்லப்படுகிறது. உடை உடுத்துவதிலிருந்து, வேலை பார்ப்பது, வீட்டை அலங்கரிப்பது, சுத்தப்படுத்துவது என்று எதை எடுத்தாலும் நமக்குச் சொல்லப்படுவது – இன்னும் அதிக நேர்த்தி தேவை என்பது தான்!

     இந்தச் சூழ்நிலையில் தான் ஜப்பானிய வாழ்க்கைக் கலைகளில் ஒன்றான வாபி சாபி (Wabi Sabi) நமக்கு ஆறுதல் அளிக்கிறது.

வாபி சாபி என்பது ஜப்பானிய வார்த்தைகள். இதற்கான அர்த்தம் ‘குறையுள்ள அழகு’ என்பது தான்!

சிக்கலான விஷயங்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்வது, அதே நேரத்தில் அதில் இருக்கும் எளிமையை மதிக்கக் கற்றுக் கொள்வது! -இது தான் வாபி சாபி!

   வாபி சாபியைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள ஜென் கதை ஒன்று உண்டு.

ஜென் ஆலயம் ஒன்றில் இளம் பிட்சு ஒருவர் அதிலிருந்த தோட்டத்தைப் பராமரிக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருந்தார்.  இயல்பாகவே அவருக்கு மலர்ச் செடிகள், மலர்கள், மரங்கள், புதர்கள் இவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆகவே அவருக்கு அந்தப் பணியைத் தலைமை பிட்சு தந்திருந்தார்.

அந்த ஆலயத்தின் அருகே இன்னொரு சிறிய ஆலயம் உண்டு. அதில் இருந்தவரோ வயதான துறவி; அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

ஒரு நாள் பிட்சு சில விசேஷ விருந்தினர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆகவே தோட்டத்தை அழகுபடுத்துவதில் விசேஷ கவனத்தைச் செலுத்தினார். காய்ந்து போய் உதிர்ந்து விழுந்த சருகுகளை அகற்றுவது, புதர்களை வெட்டி ஒழுங்கு படுத்துவது, மலர்ச் செடிகளை கத்திரியால் வெட்டி வரிசைப் படுத்துவது என மிக்க நேர்த்தியுடன் செயல்பட்டு தோட்டத்தை பிரமாதமாக ஆக்கினார். நெடுநேரம் அவர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்ததை அடுத்த ஆலயத்தில் இருந்த வயதான துறவி மதில் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தனது வேலையைத் திறம்படச் செய்து மிக்க திருப்தி கொண்ட பிட்சு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வயதான துறவியைப் பார்த்து, “ஐயனே! எப்படி இருக்கிறது பாருங்கள், மிக்க அழகுடன் நேர்த்தியாக ஆகி விட்டது இல்லையா, இந்தத் தோட்டம்” என்று வினவினார்.

வயதான துறவி, “ஆம், ஆனால் ஏதோ ஒரு குறை இருப்பது போலத் தோன்றுகிறது.  இந்த மதில் சுவர் மீது ஏறி என்னை உன் பக்கத்தில் கொண்டு விடு” என்றார்.

பிட்சு அப்படியே செய்தார். வயதான துறவி தோட்டத்தின் நடுவில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அருகே வந்தார். அதன் அடிமரத்தைப் பிடித்து தனது முழு பலத்தையும் உபயோகித்து மரத்தை ஆட்டினார்.

பெரிய மரத்திலிருந்து ஏராளமான இலைகள் ஆங்காங்கே கீழே உதிர்ந்தன.

“ஆஹா! இப்போது சரியாகி விட்டது, என்னை பழைய படி அந்தப் பக்கம் கொண்டு போ” என்றார்.

இது தான் வாபி சாபியின் விளக்கம்.

இன்றைய வாழ்க்கை முறையில் செல் போனில் ஆரம்பித்து ஸ்மார்ட் கார் வரை எதிலும் ஒரு நவீனம், மேம்பாடு, மிகுந்த நேர்த்தி என எதிர்பார்க்கிறோம். சீரற்ற தன்மையும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்பதையும் மறந்து கொண்டு வருகிறோம்.

இப்படி நமது வாழ்க்கையை நேர்த்தியாக அமைக்க முயன்று  முயன்று சிக்கல்களையும் அதிருப்தியையும் நாமே ஏற்படுத்திக் கொள்வதை விட்டு விட்டு வாழ்க்கையை அதில் உள்ள சில குறைகளுடன் உள்ளது உள்ளபடி ஏற்க வழி காட்டுவதே வாபி சாபி.

அழகாக இருந்த தோட்டத்தில் உதிர்ந்த இலைகளை உதிர விட்டு வயதான துறவி  இளம் பிட்சுக்கு வாழும் வழியை உணர்த்தினார். இயல்பாக உள்ள குறைகளை உங்கள் வாழ்க்கையில் அதன் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டு அமைதியாக வாழுங்கள் என்கிறது வாபி சாபி.

இது 15ஆம் நூற்றாண்டில். ஜப்பானில் ஆரம்பித்தது

முராடோ ஜுகோ (Murato Juko – 1423-1502) என்பவர் தான் இதைக் கண்டுபிடித்தவர்.

ஜப்பானில் அன்று முதல் இன்று வரை தேநீர் சடங்கு ஒன்று உண்டு.

அதாவது தேநீரை – டீயை- தயாரிப்பதை ஒரு பெரும் கலையாக அவர்கள் மதித்தனர். நல்ல ஒருவரே தேநீரைச் சரியாகக் கலக்க முடியும் என்பது ஜப்பானியரின் நம்பிக்கை.

அந்தத் தேநீரைக் கலக்கும் ஜாடி மிக்க விலை மதிப்புடையதாகவும் அலங்காரம் கொண்டதாகவும் இருக்கும். அதில் சிறு கீறல்  இருந்தாலும அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரத்தைக் காட்டும் ஒரு விழாவாக தேநீர் விருந்து ஆகி விட்டிருந்தது.

இதை மாற்றினார் முராடோ ஜூகோ. அவரது லெட்டர் ஆஃப் தி ஹார்ட் – இதயத்தின் கடிதம் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற கடிதம். இதை கொகொரோ நோ ஃப்யூமி என்று ஜப்பானிய மொழியில் சொல்வர். அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பீங்கான் பாத்திரங்களுக்கு மவுசு அதிகம். இதை மாற்றி பளபளப்பில்லாத ஆடம்பரம் இல்லாத ஜப்பானிய பீங்கான் கிண்ணங்களில் தேநீரை ஊற்றித் தருவதை அறிமுகப்படுத்தினார் அவர்.

தேநீர் சடங்கில் நான்கு விஷயங்களை அவர் அறிமுகப்படுத்தினார். 1) கின் – எளிமையான ஒரு பெரிய மதிப்பு 2) கெய் – உணவுக்கும் பானத்திற்கும் ஒரு

மரியாதை 3) செய் – உடலிலும் மனதிலும் ஒரு தூய்மை 4) ஜகு – புத்த மதக் கொள்கையின் படி ஒரு பேரமைதி, ஆசைகளிலிருந்து விடுதலை.

இந்த நான்கின் அடிப்படையில் தேநீர் சடங்கையே ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழியாக மாற்றினார் அவர்.

பழமைக்கு மரியாதை தரும் விதமாக பழைய கீறல் விழுந்த ஜாடியை தேநீர் சடங்கில் வைத்து அதை அலங்காரப் பொருள்களில் ஒன்றாக மாற்றினார் முராடோ ஜூகோ.

     இப்படி ஆரம்பித்த வாபி சாபி பெரும் தத்துவமாக ஆகியது; விரிந்தது.

இதைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பவர்களுக்கு ஏழு குணாதிசியங்கள் மீது பற்று வரும். 1) கன்ஸோ – எளிமை 2) ஃப்யூகின்செய் – சீரற்றதன்மையை ஏற்பது 3) ஷிபுமி – குறைத்து மதிப்பிடுவதில் உள்ள அழகு 4) ஷிஜென் – பாசாங்கு இல்லாத இயற்கைத் தன்மை 5) யூஜென் – நுட்பமான நளினம் 6) டட்சுஜோகு – சுதந்திரத் தன்மை 7)செய்ஜாகு – நிலையான அமைதி

     இந்த தேநீர் சடங்கை முராடோ ஜூகோவின் சீடரான சென் நோ ரிக்யூ (Sen no Rikyu0 எளிமைப்படுத்தி, இரண்டு முரட்டுப் பாய்கள், குறைபாடுள்ள இரண்டு கோப்பைகள், அதை வைக்க ஒரு குடிசை என்று ஒரு முறையை ஏற்படுத்தினார். அவரது புகழ் எங்கும் பரவவே, ஆடம்பரபிரியர்களான உயர் வர்க்க பிரபுக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். அதுவே அவரது ஹரஹிரி எனப்படும் ஜப்பானிய  முறையிலான ‘கௌரவ தற்கொலைக்கான’ காரணமாக அமைந்தது. அவர் மறைந்த பிறகு வாபி சாபி இன்னும் அதிக வேகத்துடன் பரவ ஆரம்பித்தது.

காலம் வென்ற ஞான உபதேசமாக அமைந்த வாபி சாபி இன்றைய படுவேகமான நாகரிக வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஒன்றாக இருப்பதை  மேலை நாட்டினர் உணர்ந்தனர். பரபரப்பூட்டும் உலோகாயத வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்க, இப்போது அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

வாபி சாபி இன்று இடம் பெறாத துறை இல்லை. அலங்காரம், வடிவமைப்பு, கவிதை இயற்றல், மட்கலம் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் அழகுச் சின்னங்கள் தயாரிப்பு என அனைத்திலும் இன்று வாபி சாபி கொள்கை இடம் பெறுகிறது.

வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியுடன் முன்னேற அறிவு பூர்வமான ஒரு உத்தி வாபி – சாபி!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 ஜோஸப் ப்ரமா (Joseph Bramah – பிறப்பு 13-4-1748 இறப்பு 9-12-1814) இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி. ஹைட்ராலிக் பிரஸ், ப்ளேனிங் மெஷின், பேப்பர் தயாரிக்கும் மெஷின், வங்கி நோட்டுகளைத் தானே அச்சடிக்கும் மெஷின் என 18 அரிய கண்டுபிடிப்புகளை இவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால் இவரது கண்டுபிடிப்புகளில் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது திருடர்கள் யாராலும் திறக்க முடியாத இவரது பூட்டு தான்! 1784இல் இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார்.

இதைத் திறந்து காட்டுவோருக்கு 200 கினியா நாணயம் பரிசாகத் தருவதாக இவர் அறிவித்தார். கினியா என்பது கால் அவுன்ஸ் தங்கத்தைக் கொண்டது. 1663 முதல் 1814 வரை இங்கிலாந்தில் புழக்கத்தில் இருந்தது இது.

அறுபது ஆண்டுக் காலம் இந்த பூட்டை யாராலும் திறக்க முடியவில்லை. கடைசியில் ஒரு அமெரிக்க பூட்டு ரிப்பேர்காரர் ஒரு மாதம் முயன்று இதைத் திறந்து காண்பித்தார். அப்போது ப்ரமா உயிருடன் இல்லை. என்றாலும் கூட அவர் நிறுவிய அவரது பூட்டு கம்பெனி 200 கினியா பரிசுத் தொகையை அந்த அமெரிக்கருக்குத் தந்து கௌரவித்தது. ப்ரமாவின் வாக்கையும் காப்பாற்றியது!

***

tags – வாபி சாபி , ஜோஸப் ப்ரமா

SWAMI CROSSWORD 2442020 (Post No.7877)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7877

Date uploaded in London – 24 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1.—9 letters – India’s another name; Soviet documents used only this name for India

5. –9—Draupadi’s other name because she emerged from a Fire Altar

9.—5—a  Brahmavadini/ sanyasini in Upanishad;

10.—9—essential oil taken from popular flower; used by Moguls

12. – 9—twin city with Kochi in Kerala

13.—4—In Vedic times mother; later maternal grandfather, also used as different in Sanskrit

14.– 9—Son of arjuna who was killed in Mahabharata war

DOWN

1.—10 letters – horse headed Avatar of Lord Vishnu

2. –9—Great Buddhist philosopher with magical powers

3. – 7—sub division, appendix, minor sujects; Mimasai and 3 more subjects are called

4. 3—Rama lived in this age or Yuga

6.—6—inter Galactic Traveller and a Tri Kala Jnani cum Devarishi

7.—8—Feminine aspect of Vishnu; Durga

8. — 6—meat or vegetables braised in water, yoghurt, cream and spices; South Indian spelling is given here.

11.—5—Grass ; it is in the name of political party TMC in West Bengal

–subham–

ஊஊ ஊஊ ஊஊ ஊஊ ஊஊ !!!!!!!!!! சிலப்பதிகார நரிக்கதை! (Post No.7876)

Kannaki and Kovalan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7876

Date uploaded in London – 24 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தள தள என்று மின்னும் உடம்பு. இப்போதுதான் கல்யாணம் ஆன மாதிரி முகத்தில் ஒரு ஜொலிப்பு. இதைப்  பார்த்தவுடன் காதல் ஜோடிக்கு கொழுப்பு! புதியவளான ஒரு பரத்தையும் , அவளுடன் வந்த வெற்றுவேட்டு காமுகனும் கண்ணகி – கோவலன் ஜோடி மன்மத – ரதி ரூபத்தில் நிற்பதைக் கண்டு நக்கல் தொனியில், கிண்டல் பாணியில், கேலி செய்யும் தொனியில், கவுந்தி அடிகள் என்ற சமண மத பெண்துறவியைப் பார்த்து அம்மையாரே உங்கள் கூட நிற்கிறார்களே ஒரு அழகு சுந்தரியும் உலக மஹா ஆண் அழகனும் ; அவர்கள் யாரோ? என்று வினவினர். உண்மையில் கவுந்தி அடிகளின் அருகில் நின்றது பணக்கார குடும்பத்தில் பிறந்த கண்ணகியும் கோவலனும் ஆகும். பூம்புகார் நகரிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் !

உலகையே ஒரு குடும்பமாகப் பார்ப்பது பாரத நாட்டுத் துறவிகளின் பிறவிக்குணம். ஆகையால் அந்த அர்த்தத்தில் சமண மத பெண் துறவி கவுந்தி அடிகளாரும் இவர்கள் என் குழந்தைகள் என்று பதில் கொடுத்தார். எதிரே நின்ற அந்த காதல் ஜோடிக்கு எக் காளச் சிரிப்பு பொத்துக் கொண்டுவந்தது.

அம்மையாரே, ஒரே குடும்பத்தில் பிறந்த இருவர் கணவன் மனைவி ஆனதை இப்பத்தான் கேக்கறோம் ; இப்பத்தான் பாக்கறோம் ; ஹா, ஹ்ஹா , ஹா, ஹா  … என்று வயிறு புடைக்கச் சிரித்தனர் இதைக்கேட்டவுடன்  கண்ணகி காதுகளைப் பொத்திக்கொண்டு, நடு நடுங்கி கணவன் பக்கம் சென்றாள் .

;

அம்மையாருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உடனே,

“பிடி, சாபம் ! நீங்கள் இருவரும் இந்தக் காட்டில் நரியாய் போகக்கடவது”–

என்று சபித்தார்

உடனே அந்த இருவரும்

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

என்று ஊளை இட்டுக்கொண்டு நரியாக மாறி ஓடினர்.

கண்ணகியோ உலக மஹா உத்தமி. தென்னாட்டு அருந்ததி என்று இளங்கோ புகழும் கற்புக்கரசி. பேரழகி. மாதவியுடன் வாழப்போய் , திரும்பி வந்த கணவனுக்கும்  வாழ்வளித்த கருணைக் கடல். அவளுக்கு கணவன்- மனைவி வாழ்வு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். ஆகவே கருணை கொப்புளிக்க கவுந்தி அதிகளிடம் மன்றாடினார்.

இவர்களுக்கு சாப விமோசனம் கொடுங்கள் என்று.

இந்துக்கள் சத்தியத்தை வழிபடுபவர்கள். ஆகையால் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் அதை மாற்ற மாட்டார்கள். கடவுளும் கூட சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். அதே கொள்கையை இளங்கோ அடிகள், கவுந்தி விஷயத்திலும் காட்டுகிறார்.

சாபத்தை கடவுளே வந்தாலும் திரும்பப்பெற முடியாது. ஆனால் சிறிது காலத்துக்குப் பின்னர் மாற்றலாம். ஆகையால் கண்ணகி கெஞ்சியதால் அவ்விரு தம்பதிகளும் ஓராண்டுக்குப் பின்னர் மனித உரு எய்துவர் என்று சாப விமோசனம் கொடுத்தார். இதன் பின்னர் நரிகள் காட்டுக்குள் ஓடின. கோவலன்  கண்ணகி , கவுந்தி அம்மையார் மூவரும் அறம் மிகு உறையூருக்குள் நுழைந்தனர்.

இதோ இந்த சம்பவத்தை இளங்கோ அடிகள் வருணிக்கும் அழகைப் பாருங்கள்—

வம்பப் பரத்தை வருமொழியாளனோடு

கொங்கு அலர் பூம்பொழில் குறுகினர்  சென்றோர்

காமனும்தேவியும் போலும் ஈங்கு இவர்

ஆர் எனக் கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே

………………….. ஆர் என வினவ

மக்கள் காணீர் , மனித யாக்கையர்;

பக்கம் நீங்குமின்; பரிபுலம்பினர்  என

உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை

காட்டுவதும் உண்டோ  கற்றறிந்தீர் என

தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்

காதலன் முன்னர் கண்ணகி நடுங்க

எள்ளுநர் போலும் இவர் எம் பூங்கோதையை

 முள் உடைக் காட்டின் முது நரி ஆக எனக்

கவுந்தி இட்ட தவம் தரு சாபம்

கட்டியது ஆதலின் பட்டதை அறியார்

குறுநரி நெடுங்குரல் கூவிளி  கேட்டு

………………….

நாடு காண் காதை, புகார்க்கண்டம், சிலப்பதிகாரம்

குறுநரி நெடுங்குரல் கூவிளி  = ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

tags – சிலப்பதிகாரம்,  நரிக்கதை

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!