

Post No.7930
Date uploaded in London – 6 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சங்க கால தமிழர் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் மிகப்பழைய நூல் புறநானூறு. இதில் 358ஆவது பாடலைப் பாடியவர் பெயர் வான்மீகி . இவர் சம்ஸ்க்ருதத்தில் உலகப் புகழ்பெற்ற ராமாயணத்தை எழுதிய வால்மீகி என்று பலரும் நம்புவர். ஏனெனில் அவர் பாடும் பாடலின் பொருளும் அப்படிப்பட்டது. தவ வாழ்வே பெரியது. இல்லற வாழ்வு கடுகு அளவு சின்னது. தவத்தை மேற்கொள்ள முடியாதோரே இல்லற வாழ்வை நாடுவர் என்கிறார். இவர் ‘ஒரிஜினல்’ வால்மீகியாக இருந்தால் தமிழர் வரலாறு திரேதாயுகத்துக்குப் போய்விடும்.ஆனால் இவர் பிற்காலத்தவர் என்பதை இவருடைய மொழிநடை காட்டிக் கொடுத்துவிடுகிறது. எப்படியாகிலும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சங்கத்தில் ஒரு புலவர் இந்தப் பெயருடன் உட்கார்ந்து பாடல் இயற்றினார் என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று அய்யங்கார்கள் தமிழின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றினர். கனக சபைப் பிள்ளை போலவே ஆங்கிலத்தில் தமிழர் பெருமையைப் பறைசாற்றியவர்கள் கிருஷ்ணசாமி அய்யங்காரும் பி.டி .ஸ்ரீனிவாச அய்யங்காரும் ஆவர். ஆயினும் தமிழர் பற்றிய தகவலைப் பரப்புவதில் சிகரத்தில் நின்றவர் மு.ராகவ அய்யங்கார்தான். பாண்டித்துரை தேவர் ஸ்தாபித்த மதுரை நாலாவது தமிழ்ச் சங்கம் நடத்திய செந்தமிழ் பத்திரிகையில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். இதோ அவர் தரும் தகவல்கள்:-
வால்மீகியும் தமிழ் வழக்குகளும்

சோழ அரசர்க்கு ஆத்திமாலை உரித்தாகச் சொல்லப்பட்டுள்ளது இவர்கள் சூரிய வம்சத்தாராகவும் ஸ்ரீ ராமனுடைய முன்னோர்களையே இவர்களுடைய முன்னோராகவும் கூறப்படுதலை கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களால் அறிக
இச் சோழற்கு ஆத்தி சின்னமாகக் கூறப்பட்டிருத்தல் போலவே இராமர் வம்சத்திற்கும் ஆத்தி சின்னமாகக் கூறப்படுகிறது . இதனை வால்மீகம், அயோத்யா காண்டம் 84-ம் சருக்கத்தில், பரதனுடைய சைன்யத்தைப் பார்த்த குகன் இக்ஷ்வாகு வம்சத்து சக்கரவர்த்திகள் மலையாத்திக் கொடியுடைய மஹாரதம் – கோவிதார த்வஜம் — இதோ தெரிகின்றது எனக்கூறுவதால் உணர்க.
இதனால் அவ்விக்ஷ்வாகு வமிசத்தவராகச் சொல்லப்படும் சோழர்கள் தம்முன்னோர் கொடியாகக் கொண்ட ஆத்தியையே தாம் மாலையாகத் தரித்தவராதல் தெளியப்படும்.
இனிச் சேரர்க் கு பனம் பூ மாலை கூறப்படுவதற்கும் வான்மிகத்தால் ஓர் பொருள் கொள்ளக் கிடக்கின்றது கிழக்கு, மேற்கு திசைகளின் எல்லையாக முத்தலையும்,பத்துத் தலையும் கொண்ட பனை மரங்கள் ஆண்டுத் தேவர்களால் நாட்டப்பட்டுள்ளன என்று கிஷ்கிந்தா கா ண்டத்தில் வானரங்களை நாடவிட்ட சருக்கங்களிற் காணப்படுகின்றது .
சேரர் மேற்றிசையாராதலின் கிழ மேலோடிய தேச முழுமைக்கும் தாங்களே உரியவரென்பதைச் சூ சிப்பதற்கு அத்திசைகளில் எல்லையாக வைத்த பனையைத் தங்கள் சின்னமாகக் கொண்டனர் எனல் தக்கது போலும் .
MY COMMENTS — என் கருத்து

ஏழு பொன் பனை மரங்கள்
ஆறு வருடங்களுக்கு முன்னால் ஜனவரி 27, 2014-ல் எழுதிய ‘பனை மரங்கள் வாழ்க’ கட்டுரையில் இராம பிரானுக்கு விபீஷணன் குட் பை (Good-Bye) சொல்லி ‘டாடா’ காட்டும் பொது 7 தங்க பனைமரங்கள் கொண்ட ஒரு மெமென்டோ (Memento) – நினைவுப் பரிசு கொடுத்தான் என்றும் இது ராமன் ஏழு மராமரங்களைத் துளைத்ததால் இருக்கலாம் என்றும் எழுதி இருந்தேன். ஆனால் ராகவ அய்யங்கார் கட்டுரையைப் படிக்கையில் இதுவும் காரணமாக இருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது. 7 பனை மரங்கள் தகவலை அடியில் இணைத்துள்ளேன்.
‘சோழர்கள் தமிழர்களா ?’ – என்று ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலை 15, 2013-ல் நான் எழுதிய கட்டுரையின் இணைப்பை அடியில் கொடுத்துள்ளேன் அதையும் படிக்கவும் . வடமேற்கிலுள்ள இந்தியப் பகுதியிலிருந்து அவர்கள் வந்ததை புறநானுற்றின் பல பாடல்கள் தெளிவாகச் சொல்வதைக் காணவும்.
‘கரதளம்’ என்றால் பனை. இதிலிருந்துதான் கேரளம் என்ற சொல் உண்டானதோ என்றும் ஆராயவேண்டும்.

Xxx
தமிழ் மக்கள் பூச்சூடும் வழக்கம் பற்றி வால்மீகி
தமிழர்கள் தலையில் பூச்சூடும் வழக்கம் பற்றி வால்மீகி பாடியிருக்கிறார் .
தமிழரசர் போர்க்குச் செல்லும்போது அதற்கென்று ஒரு வகைப்பூவும், தம் குலத்திற்கென்று அடையாளப் பூவும் — ஆக இருவகைப் பூவுடையாரென்பது பழைய தமிழ் நூல்களால் அறியப்படுகின்றது. அன்றியும் ஆநிரை கவர்தல், நிரை மீட்சி முதலாக நிகழும் போர்த் தொழில்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பூச்சூடி செல்லுதலும் மரபாம். இப் பூ பற்றியே வெட்சி, கரந்தை , உழிஞை என அப்போர்த்துறைகள் பெயர் பெறுதலும் காண்க
இவ்வாறே அகப்பொருட்டுறைகளாகிய புணர்தல், பிரிதல் முதலியவைகளும் குறிஞ்சி, பாலை என அந்நிலத்துக்கேற்ப பூப்பெயராலே வழங்கப்படும். இவற்றால் தென்னாட்டார் பூவணிதனிற் கொண்டிருந்த பெரு விருப்பம் புலனாம்
இவ்வழக்கத்தையே வான்மிகி முனிவர் அயோத்யா காண்டம் 96-ம் சர்க்கத்தில் பரதன் கூற்றில் வைத்து , “நமது யுத்த வீரர்கள் மேகங்களைப் போன்ற கருத்த கேடயங்களுடன் தென்னாட்டாரைப் போலத் தலைக்கணியாக பூக்களைச் சூடுகின்றனர்” — எனக்கூறுதல் கவனிக்கத் தக்கது .
சேனை வீரர்கள் பூச்சூடுதற்குத் தென்னாட்டு மக்கள் சூடுதலை உவமையாக்குதலால் அம்மக்களை வீரராகக் கொள்ளுதலே பொருத்தம். இங்கனம் பூச்சூடுதல் தென்னாட்டிற்கு மிகக் சிறந்த வழக்கமென்பதை வால்மீகியார் நன்கறிந்து கூறுதல் கண்டு கொள்க.
—செந்தமிழ் தொகுதி – 8


கபாடபுரம்
இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த இடம் கபாடபுரம் .
ஸீதையைத் தேடுவதற்காகப் போகும் வானர அணிகளுக்கு ஒவ்வொரு திசையிலும் உள்ள காடு, மலை, நகர, நதிகளைச் சொல்லுகையில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள இடங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஆந்திரர் , புண்ட்ரர் , சோழர், பாண்டியர், கேரளர் சொல்லப்படுகின்றன. மேற்காக செல்லுவோருக்கு முரசி பட்டணம் சொல்லப்படுகிறது. இது கேரள முசிறியாக இருக்கலாம்.
இவை கிரிப்பித் (Griffith) மொழிபெயர்ப்பில் இல்லாததால் சிலர் தென்னக ராமாயண இடைச் செருகல் என்பர் .
இதே போல இன்னும் ஒரு இடத்தில் பாண்டிய நாட்டின் கடற்கரையில் தங்கமும் முத்தும் பொருந்திய பெரிய (கவாடம்) கதவுகளைக் காண்பீர்கள் என்கிறார். இது எல்லா பதிப்புகளில் உளது .
ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஷிதம்
யுக்தம் கவாடம் பாண்ட்யானாம் கடா த்தரக்ஷ்யத வானராஹா
இதற்கு வியாக்கியானம் எழுதிய கோவி ந்தராஜர் இதை கபாடபுரம் என்ற பாண்டிய நகரம் என்று எழுதுகிறார் . அவர் அப்படி சொல்வதற்கு பாண்டிய கவாடம் என்ற அர்த்த சாஸ்திர குறிப்பு உதவும். அங்கே சாணக்கியர் முத்து பற்றிச் சொ ல்லுகையில் பாண்டிய கவாடம் என்பது கொற்கை முத்து என்ற பொருளில் வருகிறது.
இது தவிர விராதன் என்ற அசுரன் தன்னைப் புதைக்கச் சொன்னதையும் சிலர் தென்னக வழக்கம் என்பர். ஆனால் அது பசையற்ற வாதம் என்பது புறநானூ ற்றை யும் ம் ரிக் வேதத்தையும் பயின்றோருக்குத் தெரியும். ரிக் வேதத்தில் கூட சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை. மனு ஸ்ம்ருதியும் இது பற்றி கதைக்கவே இல்லை. ஆனால் சங்கத் தமிழ் நூலில் பூதப்பாண்டியன் பெருந்தேவி எல்லோரையும் புறாக்கணித்து விட்டு கணவன் சிதையில் பாய்ந்து உயிர் துறந்ததை படிக்கிறோம். ஆக வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் புதைப்பதும் எரிப்பதும் உள்ளதால் விராதன் உதாரணம் பசையற்றது.

XXX
வடக்கிருத்தல்
வடக்கிருத்தல் என்பது வட திசை புனிதமானது–என்னும் நம்பிக்கையில் பிறந்தது இதை ராமாயணம், மஹாபாரதம், புறநானூ ற், காண்கிறோம் .புறம் 65,66 பாடல்களிலும் 214 முதல் 220 வரையுள்ள பாடல்களிலும் வடக்கிருத்தல் போற்றப்படுகிறது. சேரன் பெருஞ் சேரலாதன், கோப்பெருஞ் சோழன் மற்றும் சோழனை ஆதரிக்கும் புலவர்கள் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் துறந்தார்கள் .
ராமாயணத்தில் அங்கதன் பற்றி இதே கருத்து வருகிறது அவன் எங்கு தேடியும் சீதையைக் கண்டு பிடிக்க முடியாததால் மற்ற வானரங்களுடன் சேர்ந்து உயிர் துறக்க எண்ணுகிறான். பூமியில் தெற்கு முகமாக தர்ப்பையைப் பரப்பி கிழக்கு நோக்கி இருந்து கொண்டு பி’ராயோபவேச விரதம்’ பூண்டான் என்று கிஷ்கிந்தா காண்டம் 56ம் சர்க்கத்தில் வருகிறது
மஹா பாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும், ஒரு நாய் புடை சூழ,வடதிசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறக்கின்றனர் . மொத்தத்தில் இவைகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்தோமானால் வட திசை புனிதமானது- அதை நோக்கி உட்கார்ந்தோ நடந்தோ உயிர்விடுதல் நலம் பயக்கும் என்பதாகும்
இவ்வாறு ஒரே மாதிரி நம்பிக்கைகள் இருந்ததால் இவைகளை பழங்கா லத்தவை என்று கணக்கிட முடிகிறது .

சோழர்கள் தமிழர்களா? | Tamil and Vedas
tamilandvedas.com › 2013/07/15
15 Jul 2013 – சோழர்களின் மூதாதையர்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதில் இருந்து வந்தவர்கள்என்று தோன்றுகிறது. தமிழர்களின் …
தமிழர்கள் இழந்த நாடுகளும் …
tamilandvedas.com › 2015/02/15
15 Feb 2015 – தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும் … —இளங்கோ தந்த இதே செய்தியை முல்லைக் கலியில் சோழன் நல்லுருத்திரனும் (கலித் …
மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் …
tamilandvedas.com › 2014/09/19
19 Sep 2014 – இவர்கள் யார் என்பதை ஆராய்வதும் ஏலாரன் (மனுநீதிச் சோழன்) … அனுப்பி, இது உன் நாடு, முதலில் தமிழர்களை விரட்டு என்றான்.
மகாவம்சம்-4 | Tamil and Vedas
tamilandvedas.com › tag › மகா…
16 Sep 2014 – மகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் … சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–. 1. … (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை)).
2500 ஆண்டுக்கு முன் தமிழர் …
tamilandvedas.com › 2014/09/17 › 2…
17 Sep 2014 – கட்டுரையின் முதல் பகுதியில் மனுநீதிச் சோழன், குமணன் முதலிய 16 விஷயங்களைக் கண்டோம். இது … 2500 ஆண்டுக்கு முன் தமிழர்—சிங்களவர் உறவு! … இப்போதைய மதுரை அல்ல).

பனை மரங்கள் வாழ்க! | Tamil and Vedas
tamilandvedas.com › 2014/01/27
27 Jan 2014 – பனை மரம் தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருகிறது. அதே போல … இந்த ஏழு பொன் பனை மரங்கள் என்ன, ஏன் என்று விளக்கப்படவில்லை. இது …
இலக்கியத்தில் மரங்கள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › இலக்…
பனை மரம் தண்ணீர் ஊற்றாமலேயே பழம் தருகிறது. அதே போல … இந்த ஏழு பொன் பனை மரங்கள் என்ன, ஏன் என்று விளக்கப்படவில்லை. இது ஒரு …
tags – வால்மீகி ,தமிழர்கள், கபாடபுரம், பூச்சூடும் வழக்கம்,ஆத்திமாலை, வடக்கிருத்தல்

—subham —