Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு – முதலாம் கட்டுரை!
உலக நாடுகளும் தலைமைப் பொறுப்பிற்கான மதம் பற்றிய தகுதியும்! – 1
ச.நாகராஜன்
உலகில் உள்ள நாடுகளில் குறைந்த பட்சம் 30 நாடுகள் மிக திடமாகவும் தெளிவாகவும் தாங்கள் ஒரு மதத்தைச் சார்ந்திருப்பதாக தங்கள் அரசியல் சட்டத்தில் கூறுகின்றன.
லெபனானில் அந்த நாட்டின் ஜனாதிபதி மரொனைட் கிறிஸ்டியன் சர்ச்சில் (Maronite Christian Church) உறுப்பினராகத் தான் இருக்க வேண்டும். அந்த நாட்டின் பிரதம மந்திரி சன்னி பிரிவைச் சேர்ந்த ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும். பாராளுமன்ற சபாநாயகரோ ஷியா முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும்.
சுமார் 17 நாடுகளில் நாட்டின் உயர் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும்.
ஜோர்டானை எடுத்துக் கொண்டால் உயர் பொறுப்பில் இருப்பவர் முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்த ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும். டுனீஷியாவில் அந்த நாட்டில் பிறந்த எந்தவொரு முஸ்லீம் ஆண் மற்றும் பெண் ஓட்டர், ஜனாதிபதி வேட்பு மனுத் தாக்கச் செய்யத் தகுதி பெற்றவர்.
மலாசியா, பாகிஸ்தான், மௌரிடானியா (Mauritania) ஆகிய நாடுகளில் முஸ்லீம் குடி மக்கள் தான் அரசுப் பொறுப்பின் உயரிட இடத்திற்கு வர முடியும்.
அண்டோரா (Andorra) நாட்டில் ஒரு கிறிஸ்தவர் தான் உயர் அரசுப் பொறுப்பிற்கு வர முடியும்.
பூடான் மற்றும் தாய்லாந்து புத்த மதத்தைச் சேர்ந்தவர் தான் அரசுப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்று கூறுகின்றன.
இந்தோனேஷியா பஞ்சசீலக் கொள்கையில் நம்பிக்கை உள்ள ஒருவர் தான் உயர் அரசுப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்று கூறுகிறது. அங்கு முஸ்லீம்கள் தான் மெஜாரிட்டியினர் என்பது குறிப்பிடத் தகுந்தது. “அனைத்துப் பண்பாடுகளின் சங்கமமாக” பஞ்சசீலம் திகழ்கிறது.
பர்மா (மயன்மார்) தனது ஜனாதிபதி எந்தவொரு மதத்தையும் சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்கிறது.
பொலிவியா, மெக்ஸிகோ, எல்சால்வடார் உள்ளிட்ட எட்டு நாடுகள் மத போதகர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக் கூடாது என்று கூறுகின்றன.
இன்னும் சுமார் 19 நாடுகள் அரசின் தலைமைப் பீடத்தில் உள்ளவர்கள் மதத்தைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இவற்றில் யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா, நியூஜிலாந்து உள்ளிட்ட 16 நாடுகள் காமன்வெல்த் உறுப்பினர்கள் – இவற்றிற்கு இரண்டாம் க்வீன் எலிஸபத் தான் – Defender of Faith என்றும் இவர் அழைக்கப்படுகிறார்-அரசின் தலைவர். இந்த வகையில் சேரும் மற்ற நாடுகள் – டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன்.
உலகின் 85 சதவிகித நாடுகள் தங்கள் குடி மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அரசின் தலைமைப் பொறுப்பிற்கு வரத் தகுதியுள்ளவர் தான் எனக் குறிப்பிடுகின்றன.
அமெரிக்காவில் எந்த ஒரு மதம் பற்றியும் குறிப்பு இல்லை. ஆனால் அங்குள்ள பல மாகாணங்கள் “நம்பிக்கை இல்லாதோர்” (non believers) (அதாவது நாத்திகர்கள் எனலாமா?) அதிகாரப் பதவியை வகிக்கத் தடை செய்கின்றன. ஆனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடவுள் நம்பிக்கை கொண்டவர் தான் அதிகாரப் பதவிக்கு வரவேண்டும் என்பதில்லை என்று கூறிவிட்டது.
பெரும்பாலும் அரசியல் சட்டங்கள் தாம் இவற்றைத் தெளிவாகக் கூறுகின்றன.
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உலக நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பீடு செய்யும் முயற்சியை புரபஸர் எஸ்.கே.சக்ரபர்த்தி மேற்கொண்டு பல சுவையான தகவல்களைத் தருகிறார்.
அவர் கூறும் சில கருத்துக்களையின் அடிப்படையில் ‘இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒரு ஒப்பீடு’ என்ற
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழைப் போலவே ஸம்ஸ்க்ருதமும் அழகான மொழி . கொஞ்சம் எழுத்துக்களை மாற்றிப் போட்டால் அர்த்தமே மாறி விடும். க, ச ட , த, ப என்பதற்கெல்லாம் ஒவ்வொரு வர்க்கத்திலும் 4 எழுத்துக்கள் வீதம் இருப்பதால் இன்னும் ஜாக்கிரதையாக உச்சரிக்க வேண்டும் . இதைக் கொஞ்சம் பயின்றால் அருணகிரிநாதர் போல நாமும் சந்தக் கவி எழுதத் தொடங்கி விடுவோம் ; படிக்கப் படிக்க இசை ஓசை எழும்பும்
மெதுவாகப் படித்தால் அகராதியைப் பார்க்காமல் நாமே பொருள் சொல்லிவிடுவோம் .தசரதன், பசுவதை, மது, மதம் என்பதெல்லாம் நாம் அறிந்த சொற்களே . ஹைதராபாத், அலகாபாத், ஆமதாபாத் என்பதில் ஜனபத என்ற சொல் இருக்கிறது. புத்தர் காலத்தில் 16 மஹா ஜனபத (ங்கள்) இருந்தன. 56 தேசங்கள் என்று கதைகளில் நாம் படிப்பதெல்லாம் குட்டி ஜனபத ஆகும். இவை பல நகரங்களின் பெயரில் இன்றும் ஒட்டிக்கொண்டுள்ளன
சங்கீத மேதை பாபநாசம் சிவன் வடமொழி சொற்கடல் என்ற புஸ்தகத்தில் பக்கம் பக்கமாக இந்த அழகை எடுத்துக் காட்டியுள்ளார் இதோ இணைப்பைப் பாருங்கள் :–
சம்ஸ்க்ருத/ தேவ நாகரி எழுத்து படிக்கமுடியாதவர்களுக்கு அதே வரிசைக் கிரமத்தில் இதோ சொற்கள் : அதிபத , அவப்ருத,அதிரத , தசரத, ஜனபத, ம்ருகமத ,மதுமத , தனமத ,அபசத /அபஸ த ,பசுவத, சிசுவத
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
ANSWER
ஆடிப் பட்டம் தேடி விதை
ஆடிக் காற்றில் பூளைப்பூ பறந்தார் போல
ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடித்து செருப்பால் அடி
ஆடி ஞாயிறு ஐந்து பட்டால் நாடு படும்பாடு நாயும்படாது
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
MARCH OF HISTORY – 3
R. Nanjappa
Evils of European colonialism
The rise of European Imperial power distorted things. It blinded the European colonial powers, who were also Christian, to the merits of the societies they chanced to rule. They did not seek to understand that those societies were different, but not inferior. Bigots like the Spanish and the Portuguese literally killed millions of people wherever they went and physically destroyed the old order, as in Latin America, in the name of their religion and God. The Muslims resisted them in Egypt and the Middle East. (But Muslims had destroyed the old culture and religion there.) The English destroyed the Native American civilisation and confined them to “reservations” like caged animals.
Subtle and sinister methods of the English
In India, the English followed a more subtle method, which is more destructive in the long run, while not appearing overly violent. They did not kill Hindus. But they destroyed the Hindu mind- its Independence and self-belief. They made Indians believe that they were not intelligent and that they were inferior. So their mission was to “civilise” us, which they considered ‘the white man’s burden’. This they attempted to do through the educational and administrative systems.
Muslims resisted the colonial power better
One stunning feature is to be noted here. The Europeans could not succeed in fully colonising the Muslims, even if they ruled them. Even where they introduced their system of education, Muslims did not give up their educational and cultural practices completely. But an English educated Hindu is almost always “modern”- i.e, he gives up his own language, literature, culture and starts imitating the Europeans fully! It is difficult to account for this phenomenon. We can witness this clearly in India. Young Hindus don western clothes and fashion. Young educated Hindu girls increasingly dress like Europeans or like Muslims (Salwar-kameez) while educated Muslims still dress like Muslims! The educated Hindu has become “secular” in the sense of diluting his religious adherence, he is diffident and defensive about it, but this has not happened with the Muslims. This is one of the problems which secular Western countries face from Muslim immigrants.
Colonial India
True Indian History- India is a civilization
But, with all this, Indian civilisation has somehow been continuous and living! This is what westerners and their Indian followers do not realise. When they talk of Indian history, they talk of the Mohammedan period and the English rule. But this is so idiotic. Mohammedans invaded and ruled over parts of India, not over all the Hindus. Englishmen ruled over Hindus, Indians (including converted Muslims who were originally Hindus). The Muslims could not convert all Hindus, despite trying force for more than thousand years, nor could the British rule beyond two hundred years- hundred years under the company, and 90 years under the Crown. So, the real history of India is not how Hindus were ruled by Muslims and the British for some time, but how Hindus faced Muslims and the English and finally overthrew them! If there is any problem, it is now, after Independence! Our threat today comes from the two proselytising Abrahamic religions (which enjoy guaranteed privileges as minorities) and the general Westernisation of our life and thought. But our religious civilisation is still largely intact, though increasingly confined to the seniors! Converted Christians of India are more devout than the western Christians. This is because of the Hindu blood running in them. We may hope that one day, it will triumph, for blood is thicker than watery western dogma or theology!
பிரபல இயற்பியல் விஞ்ஞானியும் மாபெரும் கணித மேதையுமான
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் (பிறப்பு 18-5-1872 மறைவு 2-2-1970) ஒரு நாத்திகர்! ஒரு முறை நம் நாட்டின், பிரபல கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் (பிறப்பு 7-5-1861 மறைவு 7-8-1941) இங்கிலாந்து சென்றிருந்த போது அவருடன் ரஸ்ஸல் கேம்பிரிட்ஜில் காலார நடந்து சென்றார். அப்போது அருகில் உள்ள கிங்ஸ் காலேஜ் சர்ச்சுக்கு அருகில் அவர்கள் இருவரும் வந்தனர்.
தேவாலயத்தில் அற்புதமாக ஒரு கூட்டுப் பிரார்த்தனையின் இசையை மாணவர்கள் இசைத்துக் கொண்டிருந்தனர். இசை இருவரையும் கவர்ந்தது. ‘உள்ளே போகலாமே’ என்றார் தாகூர்.
ஆனால் ரஸ்ஸலோ, ‘அது தான் நடக்காது! இந்த இசையும் ஊதுபத்தி மணமும் ஜன்னல் வழியே வெளிவரும் வண்ணமயமான ஒளிக்கதிர்களும் என் மீது செல்வாக்கு செலுத்தி என் பகுத்தறிவு எதைச் சந்தேகிக்கிறதோ அதை விட்டு விட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்றார்.
தாகூரோ விழுந்து விழுந்து சிரித்தார் – கடவுளைப் பற்றிய சந்தேகம் ரஸ்ஸலுக்கு எப்போது தான் போகுமோ என்று!
ஒரு நாத்திகர் நாத்திகராகவே இருக்க விரும்பும் வகையில் ரஸ்ஸல் சேர்கிறார்.
ஆனால் இன்னொரு சம்பவம் இப்படிப்பட்ட நாத்திகர்களுக்கும் சில சமயம் சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பதைக் காட்டுகிறது!
மைக்கேல் ஷெர்மரின் திகைப்பு!
மைக்கேல் ஷெர்மர் (பிறப்பு 8-9-1954 இப்போது வயது 66) உலகப் பகுத்தறிவுக் கழகத்தின் தலைவர். விஞ்ஞானபூர்வமாக இல்லாத எதையும் நம்பவே கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். இவரது கழகத்தில் சுமார் 55000 உறுப்பினர்கள் உள்ளனர். உலகின் பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் 2001 ஏப்ரல் மாத இதழிலிருந்து பகுத்தறிவுப் பகுதியை இவர் எழுதி வருகிறார்.
இவரது பகுத்தறிவையே ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவரது திருமண தினமான 2014 ஜூன் 24ஆம் தேதி நிகழ்ந்தது.
அதை இவரே ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டது அவரது நேர்மையைக் காட்டுகிறது!
ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபை மணமுடிக்க அவர் முடிவு செய்தார்.
ஜென்னிபருக்கு அவரது தாத்தா என்றால் உயிர்! ஆனால் அவரது 16ஆம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார்.
தாத்தா பயன்படுத்திய 1976ஆம் வருட பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரை அவரது நினைவாக அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார்.
அது இயங்கவில்லை. எவ்வளவோ பேரிடம் ரிப்பேர் செய்யக் கொடுத்த போதும் ஒன்றும் நடக்கவில்லை.
கல்யாண நாளன்று திடீரென்று அந்த ரேடியோ பாட ஆரம்பித்தது!
அனைவரும் பிரமித்தனர்.
பகுத்தறிவுக் கழகத் தலைவரோ திகைத்துப் போனார்.
ஜென்னிபரும் அதே அளவு பகுத்தறிவுவாதி தான். அவரும் திகைத்தார்.
மணநாளன்று மட்டும் பாடிய அந்த ரேடியோ அடுத்த நாளிலிருந்து பாடவில்லை.
தன் தாத்தா எப்போதும் தன்னுடன் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி விட்ட ஜென்னிபர்!
ஆமாம், ஆமாம், அது உண்மையே என்கிறார் ஷெர்மர்!
“என் பகுத்தறிவுக் கொள்கைக்கு பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும், அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் பாடியது என்பதை என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கம் கொடுக்கவும் முடியவில்லை” என்று ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இப்படிச் சில நிகழ்வுகள் அவ்வப்பொழுது நிகழ்ந்து நாத்திகரைச் சிந்திக்க வைக்குமோ?!
கடவுளை நம்புகிறீர்களா? ஐன்ஸ்டீனின் பதில்!
உலகில் இதுவரை தோன்றிய விஞ்ஞானிகளிலேயே மாபெரும் விஞ்ஞானி என்று இன்றளவும் கொண்டாடப்பட்டு வருபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்! (பிறப்பு 14-3-1879 மறைவு 18-4-1955)
அவருக்கு 1936ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சிறுமியிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. பிரித்து படித்தார் ஐன்ஸ்டீன்.
கடிதம் இது தான்:
எனது அன்புக்குரிய டாக்டர் ஐன்ஸ்டீன்,
எங்களது ஞாயிற்றுக்கிழமை பள்ளி வகுப்பில் விஞ்ஞானிகள் பிரார்த்தனை செய்கிறார்களா என்ற கேள்வியை முன் வைத்தோம். விஞ்ஞானம், மதம் ஆகிய இரண்டையும் ஒருசேர நம்ப முடியுமா என்ற கேள்வியிலிருந்து இது ஆரம்பித்தது. நாங்கள் விஞ்ஞானிகளுக்கும் இதர முக்கியமான பிரபலங்களுக்கும் எங்கள் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமாறு எழுதி வருகிறோம்.
எங்கள் கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தால் மிகவும் கௌரவிக்கப்பட்டதாய் மகிழ்ச்சி கொள்வோம். விஞ்ஞானிகள் பிரார்த்தனை செய்கிறார்களா, அப்படியெனில் அவர்கள் எதற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்?
நாங்கள் ஆறாம் வகுப்பில் மிஸ்.எல்லிஸ் வகுப்பில் படிக்கிறோம்.
மிகுந்த மரியாதையுடன் தங்கள் பிலிஸ்
சிறுமி கேட்ட கேள்வி ஆழமானது; அர்த்தமுள்ளது.
அதை ஒதுக்கி விடவில்லை அவர். ஐந்தே நாட்களில் பதில் எழுதி அனுப்பி விட்டார்.
உலகின் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக இன்றளவும் அது கருதப்படுகிறது.
ஐன்ஸ்டீனின் பதில் இது தான் :
அன்புள்ள பிலிஸ்,
உனது கேள்விக்கு எவ்வளவு எளிமையாக பதில் கூற முடியுமோ அவ்வளவு எளிமையாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
இதோ எனது பதில்:
மனிதர்களின் விஷயங்களில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இயற்கையின் சட்ட திட்டங்களுக்கு இணங்க நடைபெறுகின்றன என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆகவே நிகழ்வுகளின் மீது, ஒரு பிரார்த்தனை செல்வாக்கு கொண்டிருக்கும், -அதாவது இயற்கைக்கு மீறிய அதீதமான விருப்பத்திற்கு இணங்க நிகழ்வானது மாறும் – என்று ஒரு விஞ்ஞானி நம்புவதற்கு இயலாது.
இருந்தபோதிலும், இந்த இயற்கைச் சக்திகளைப் பற்றிய நமது அறிவு பூரணமானதில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகவே கடைசியில் இறுதியான மஹாசக்தி ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையானது ஒருவித தெய்வீக நம்பிக்கையைச் சார்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட நம்பிக்கை இப்போதைய விஞ்ஞான சாதனங்கள் இருந்தபோதிலும் கூட, இப்போது பரவலாக எல்லா இடங்களிலும் உள்ளது.
ஆனால், கூடவே விஞ்ஞானத்தின் மீது தீவிர நாட்டம் கொண்டுள்ள ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தின் விதிகளில் ஏதோ ஒரு மஹா சக்தி -மனிதனுக்கும் மேம்பட்ட பிரம்மாண்டமான ஒன்று – பரிமளிக்கிறது என்று நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி விஞ்ஞானத்தின் மீதான நாட்டம் ஒரு விசேஷ மத உணர்வுக்கு இட்டுச் செல்கிறது.
உளங்கனிந்த வாழ்த்துக்களுடன் உனது ஏ. ஐன்ஸ்டீன்
கடிதத்தைப் படித்த சிறுமி அடைந்த மகிழ்ச்சி ஒருபுறமிருக்க உலகத்தினர் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ?
அவர் தனிப்பட்ட கடவுளைத் தான் நம்பவில்லை என்றும் ஒரு மஹாசக்தி இருப்பதை நம்புவதாகவும் கூறினார்.
ஒரு முறை பேச்சு வாக்கில் அவர், “கடவுள் நுட்பமானவர், தீய நோக்கம் கொண்டவரல்ல (God is Subtle, but not malicious)” என்று கூறினார்.
இதில் பொதிந்திருந்த ஆழ்ந்த அர்த்தத்தை உலகம் கொண்டாடியது. இந்த வார்த்தைகள் அப்படியே அவரது கணிதப் பிரிவில் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது!
இறைவன் இருக்கிறான் – ஐந்து நிரூபணங்கள்!
விஞ்ஞானிகளின் கருத்துக்கள் இப்படி இருக்க ஆத்திகர்களின் நிரூபணங்கள் அதிரடியாக உள்ளன.
செயிண்ட் தாமஸ் அக்வினாஸ் 1265ஆம் ஆண்டிலிருந்து 1274ஆம் ஆண்டிற்குள்ளாக (ஸம்மோ தியோலாஜிகா என்ற) அரிய ஒரு நூலை எழுதினார். அதில் அவர் இறைவன் இருக்கிறான் என்பதற்கு ஐந்து நிரூபணங்களை வழங்குகிறார்.
இயக்கம் ; நமது புலன்கள் ஒவ்வொரு இயக்கத்தையும் அறிந்து கொள்கிறது. ஒன்றின் மீது இன்னொன்றின் இயக்கம் இருக்கிறது என்பதையும் நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இந்த சங்கிலித் தொடர் போன்ற இயக்கத்திற்கு ஆதி காரணமாக உள்ள இயக்ககர்த்தா ஒருவர் இருக்க வேண்டுமல்லவா, அவர் தான் இறைவன்!
காரணமின்றி எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை. எந்த ஒரு காரியத்திற்கும் காரணம் இருக்கிறதல்லவா? ஆகவே முதலில் இருக்கும் ஆதி காரணம் எது? அது இல்லாமல் மற்றவை நடக்காது. அந்த முதல் காரணமே இறைவன்!
பொருள்கள் தோன்றுகின்றன; மறைகின்றன! சில சமயம் அவை இருக்கலாம்; சில சமயம் அவை இல்லாமல் போகலாம்! ஆனால் சூனியத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாதல்லவா? ஏதோ ஒன்று எப்போதும் இருக்க வேண்டுமல்லவா? அந்த முழு முதல் பொருள் தான் இறைவன்!
வெவ்வேறு விஷயங்களில் வெவ்வேறு அளவான நல்லவை இருக்கிறது. இதை – க்ரேட் செயின் ஆஃப் பீயிங் -“சங்கிலித் தொடர் போன்ற இருக்கை” என்ற அறிவியல் கொள்கை வற்புறுத்துகிறது. உயிரற்ற ஜடத்திலிருந்து ஆரம்பித்து உயிரியல் ரீதியாக சிக்கலான உயிர்கள் வரை இது பல்வேறு அமைப்புக்குக் காரணமாகிறது. இந்த நல்லனவற்றைச் செய்யும் ஒன்று இருக்க வேண்டுமல்லவா? அது தான் இறைவன்!
ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒரு ஒழுங்கு, நியதி இருக்கிறது. அது ஒரு லட்சியத்துடன் கூட அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்துமே தற்செயலாக ஏற்பட்டிருக்க முடியவே முடியாது. இவற்றை உருவாக்க ஒரு பேரறிவு வேண்டுமல்லவா? அந்த வாலறிவன் தான் இறைவன்!
நுட்பமாகச் சொல்லப்பட்ட மேற்கண்ட ஐந்து கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்தால் இறைத்தன்மை என்னவென்று புரியும்!
உலகின் பெரும் நாத்திகர் ஆத்திகரானார்!
பிரிட்டனைச் சேர்ந்த தத்துவஞானியும் பேராசிரியருமான அந்தோணி ஃப்ளூ (பிறப்பு 11-2-1923 மறைவு 8-4-2010) தனது 87 வருட வாழ்க்கையில் 81 வருடங்கள் வரை நாத்திக பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தி வந்தார். ஆனால் அறிவியல் அடிப்படையிலான ஆதாரங்களையும், விஷயமறிந்தோர் தரும் விளக்கங்களையும் நன்கு சிந்தித்துப் பார்த்தார்; பின்னர் தன் முடிவை மாற்றிக் கொண்டு 2004ஆம் ஆண்டு இறைவன் மீது நம்பிக்கை கொண்டு அதை அனைவரிடமும் கூறி விட்டார்.
அவர், “அறிவு பூர்வமான ஒரு வடிவமைப்பானது இருக்கிறதென்று நான் ஒப்புக் கொள்கிறேன்” என்றார். இண்டெலிஜென்ஸ் டிசைனர் எனப்படும் அறிவுசால் வடிவமைப்பாளர் ஒருவர் இருப்பதை விஞ்ஞானிகளில் பலர் இப்போது ஆதரிக்கின்றனர்.
அது என்ன அறிவார்ந்த வடிவமைப்பாளர்? சூப்பர் இண்டெலிஜென்ஸ் டிசைனர்?!
ஃபிரெடெரிக் ஹேலின் விளக்கம்!
பிரபல வானவியல் விஞ்ஞானியான சர் ஃபிரடெரிக் ஹேல் பற்றி அனைவரும் அறிவர்.
அவர் இதற்கான விளக்கத்தை அழகுற இப்படிக் கூறுகிறார்:
மனிதனின் உடலில் உள்ள செல்கள் அமினோ அமிலங்களால் உருவாக்கப்படுபவை.
“அமினோ அமிலங்கள், தாமாக இயற்கையின் பரிணாமத்தில் ஒன்று சேர்ந்து மனிதனின் செல்லாக உருவானது என்று கூறுவது மகா அபத்தம்! இப்படி ஒரு தற்செயல் சேர்க்கை நடக்க முடியாத ஒன்று என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமானால் சொல்லலாம்!
ஒரு சூறாவளிக் காற்றானது வெகு வேகமாகக் கிளம்பி பழைய இரும்புப் பட்டறையில் இருந்த பாகங்களை எல்லாம் வேகத்துடன் வெளியே கிளப்பி அவை அனைத்தும் தாமாக அந்தந்த இடத்தில் பொருத்தமாக ஒன்று சேர்ந்து ஒரு போயிங் 747 விமானமாக தாமாகவே அசெம்பிள் ஆகி பறக்கத் தயாராகி விட்டது என்று சொல்வது போல இருக்கிறது அமினோ அமிலங்கள் தாமாகச் சேர்ந்து மனித செல்லாக மாறி மனிதன் உருவானான் என்கிற கதை!”
ஹேலின் இந்த விளக்கத்தைப் போல இன்னும் ஒரு விளக்கத்தைத் தந்தார் பாலி என்னும் இன்னொரு அறிஞர்!
பேரறிவு வடிவமைப்பாளன்!
அயல் கிரகம் ஒன்றை ஒரு மனிதன் அடைகிறான் என்று வைத்துக் கொள்வோம். அங்கு தரையில் டிஜிடல் கடிகாரம் ஒன்றை அவன் காண்கிறான். அந்தச் செய்தியை பூமிக்கு அவன் அனுப்பினால் பூமியில் என்ன பரபரப்பு உண்டாகும்? கடிகாரத்தைப் படைத்த ஒருவன் அங்கு இருக்கிறான் என்றல்லவா அர்த்தம் ஏற்படுகிறது!
கையில் கட்டும் கடிகாரத்தைக் காண்பித்தால் அதை உருவாக்கியவன் ஒருவன் இருக்க வேண்டுமல்லவா?
இந்த கடிகார ஒப்புமையை முதலில் சொன்னவர் வில்லியம் பாலி (பிறப்பு :ஜூலை 1743 மறைவு:25-5-1805) என்ற அறிஞர். கோடானுகோடி நட்சத்திரங்களையும், கிரகங்களையும், பால்வீதி மண்டலங்களையும், அவை சுழலுகின்ற சுற்றுப்பாதைகளையும் நிர்ணயித்தவர் யார்? ஒழுங்குபட இயக்குபவர் யார்?
பேரறிவுள்ள வடிவமைப்பாளனே என்ற பாலியின் கொள்கை இப்போது பல விஞ்ஞானிகளும் ஒப்புக்கூடிய ஒரு கருத்தாக ஆகி வருகிறது.
ககாரின், விண்ணிலே கடவுளைப் பார்த்தீர்களா?
ரஷிய விண்வெளி வீரர் யூரி ககாரின் (பிறப்பு 9-3-1934 மறைவு 27-3-1968) வோஸ்டாஸ் விண்கலத்தில் ஏறி 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி விண்வெளியில் பறந்து மனித குலத்தில் ஒரு புது சகாப்தத்தைத் தோற்றுவித்தார். அவரது சாதனை கண்டு மனித குலம் பிரமித்தது; வியந்தது.
அவர் விண்கலத்திலிருந்து மீண்டும் பூமிக்கு வந்த பின்னர் அவரைப் பாராட்ட ஒரு மாபெரும் விழா ஏற்பாடு செய்ய்ப்பட்டது.
அதைப் பற்றிய ஜோக் ஒன்று உலகெங்கும் பரவலாகப் பரவியது. ஜோக் இது தான்:-
பாராட்டு விழாவில் அப்போது சோவியத் பிரதமராக இருந்த நிகிதா குருஷேவ் கலந்து கொண்டார். அவர் ககாரினிடம், “ககாரின், விண்வெளியில் கடவுளைப் பார்த்தீர்களா, எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றார்.
அதற்கு உடனே ககாரின், “ஆமாம், ஐயா, அவரைப் பார்த்தேன்” என்றார்.
உடனே குருஷேவ் அவரிடம், “வேறு யாரிடமும் இதைச் சொல்லி விடாதீர்கள்” என்றார்.
அதே விழாவிற்கு வந்திருந்த ஒரு பாதிரியார் ககாரினிடம், “ககாரின், விண்வெளியில் கடவுளைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு ககாரின், “இல்லை ஐயா, பார்க்கவில்லை” என்று பதில் கூறினார். உடனே பாதிரியார், “வேறு யாரிடமும் இதைச் சொல்லி விடாதீர்கள்” என்றார்.
ஜோக் ஒரு புறம் இருக்க, ககாரின் இந்தக் கேள்விக்கு என்ன பதிலைத் தான் உண்மையாகச் சொன்னார்?
அவர் உண்மையாகச் சொன்ன பதில் இது தான்: “ பூமியில் நீங்கள் கடவுளைப் பார்க்கவில்லை எனில் உங்களால் விண்வெளியில் கடவுளைப் பார்க்க முடியாது!”
அர்த்தமுள்ள பதில்! ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை புரியும் அல்லவா!
ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே
என்று அற்புதமாகக் கூறி விடுகிறார்.
திருஞானசம்பந்தரோ,
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி மா துக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்க இறையே வந்து சார்மின்களே
என்று கூறி காரணங்களாலும் தர்க்கத்தாலும் சோதனை செய்ய வேண்டாம்; நேராக வந்து இறைவனைப் பற்றுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனோ முத்தாய்ப்பாக மனித குலத்திற்கு ஒரு கருத்தை இராமாயணத்தில் யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்தாக நம் முன் வைக்கிறான் :
ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!
பொருள்:-
இறைவன் ஒருவனே என்று சொன்னால் அவன் ஒருவன் தான்!
இல்லை, பல என்றால் அவன் பலவே தான்!
அப்படி இல்லை என்றால் இல்லை தான்!
ஆம், அப்படித்தான் என்றால் ஆம் தான்!
இல்லை என்றால் இல்லை; உண்டு என்று சொன்னால் உண்டு தான்!
அனைத்துமே நமது நம்பிக்கையில் தான் இருக்கிறது.
இதை உணர்ந்து கொண்டு வாழ்ந்தால் நமது வாழ்க்கை நன்றாகும்!
அடடா, சரியாகத் தான் சொன்னான், கவிச்சக்கரவர்த்தி கம்பன்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆனி மாதம் பற்றிய 4 பழமொழிகள் – கட்டத்துக்குள் கண்டு பிடியுங்கள்
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
ANSWER
1.ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழையில்லை
2.ஆனி அடியிடாதே, கூனி குடிபோகாதே
3.ஆனி அற ணை வால்பட்ட கரும்பு ஆ னை வால் ஒத்தது
4.ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Swastika on Indus – Sarasvati Civilization Sealsswastika on Germany stamps
ஆஸ்திரியா நாட்டில் இரண்டு சம்பவங்கள் ; செய்தியைப் படித்துவிட்டு சிரிப்பதா அல்லது அழுவதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். உலகம் முழுதும் அகதிகளாக வந்து குடியேறும் மக்கள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு ‘மண்ணின் மைந்தர்கள்’ (Sons of the Soil) கொதிக்கிறார்கள். வேலையே செய்யாமல் அரசின் உதவித் தொகையைப் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது வெடிகுண்டு வைத்து மண்ணின் மைந்தர்களை- ஒரிஜினல் குடி மக்களைக் — கொல்வதைக் கண்டு வெறுப்பு அலைகளை பரப்பி வருகிறார்கள் வீடு ஒதுக்கீடு முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பன்றிக்குட்டி போல 10 அல்லது 15 குழந்தைகளுடன் வசிப்பதும் அந்தந்த நாட்டு மக்களின் வயிற்று எரிச்சலை அதிகரிக்கிறது. இப்படிக் கொதித்துப் போகும் பலரும் ஆதரிக்கும் கட்சி ஹிட்லர் கட்சி ஆகும்.
மாக்ஸ்முல்லர் (Prof. Max Muller) என்ற சம்ஸ்கிருத கிராதகன் ஒரு பொய்யைப் பரப்பினான். ‘நான் ஜெர்மானியன் ; இந்தியாவில் குடியேறிய ஆரியர்களும் நாங்களும் ஒன்றே’ என்றான். வேடிக்கை என்னவென்றால் அந்த ஆள் சாகும் வரை இந்தியாவுக்கே வந்ததில்லை! இதை படித்த ஹிட்லர் நானும் ஆரியன்; நாங்கள் மட்டுமே தூய , ஒரிஜினல் குடி மக்கள் ; மற்ற உதவாக்கரைகளை ஒழிப்பதே என் லட்சியம் என்று மெய்ன் காம்ப் (Mein Kampf) என்னும் சுயசரிதைப் புஸ்தகத்தில் எழுதினான் . இந்துக்களின் புனிதச் சின்னமான சுவஸ்திகா சின்னத்தைக் கொடியிலும் மிலிட்டரி சின்னங்களிலும் பொறித்தான்.
மாக்ஸ்முல்லர் சொன்னதை நம்பி, அவன் சுவஸ்திகா (Swastika) சின்னத்துடன் மற்றவர்களைக் கொன்று குவித்தான் அது முதற்கொண்டு சுவஸ்திகா சின்னத்தைக் கண்டாலே எல்லா வெள்ளையர்களும் உடுத்தியிருக்கும் ஆடையிலேயே சிறு நீர் கழித்து விடுவார்கள் . இப்போதும் கூட அகதிகளை எதிர்க்கும் ஐரோப்பிய வெள்ளையர் கட்சிகள் இந்த சின்னத்தைப் பயன்படுத்துகின்றன. அவர்கள் ஹிட்லரை தங்களுடைய உதாரண புருஷனாகப் பார்க்கிறார்கள் . அவ்வப்போது ஐரோப்பிய நாட்டுத் தேர்தல்களில் பெரிய வெற்றியும் பெறுகிறார்கள்.
ஹிட்லர் பிறந்தது ஆஸ்திரியா (Austria) என்னும் நாடு. அங்கு ஒரு பள்ளிக்கூடம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டப்பட்டது. ஒரு முறை விமானத்தில் இருந்து இதை பார்த்தபோது அது (Swastika) சுவஸ்திகா வடிவத்தில் இருந்ததை ஒருவர் கண்டு விட்டார். உடனே பத்திரிகைகளில் பெரிய செய்தி. எல்லோரும் ஆடையிலேயே ஒன்னுக்குப் போய்விட்டார்கள். உடனே பள்ளிக்கூடத்தை இடித்து மாற்றிக் கட்டு என்று உத்தரவு போட்டனர். செலவு ஆறு மில்லியன் யூரோ; அதாவது 60 லட்சம் யூரோ (இன்று ஒரு யூரோ =85 ரூபாய்) பவுன் ஸ்டெர்லிங்கும் யூரோவும் அப்போது கிட்டத்தட்ட சம மதிப்பில் இருந்தன;
இது பழைய செய்தி (Metro 23-5-2012)
***
புதிய செய்தி இதோ ஜூன் 2, 2020
even today Hindus use Swastika
சென்ற 2019-ல் ஒரு பெரிய வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆஸ்திரிய அரசு. பிரானோ ஆம் இன் (Braunau am Inn in Austria) என்கிற சிற்றுரில் 1889 ஏப்ரல் 20ம் தேதி ஹிட்லர் பிறந்தார். இரண்டாம் உலகயுத்தம் முடிந்த பின்னர் அது டூரிஸ்ட் ஸ்தலமாகி வருவதைக் கண்டு பய ந்த ஆஸ்திரிய அரசு அதை வாடகைக்கு எடுத்து பல அலுவலகப் பணிகளுக்குப் பயன் பபடுத்தியது .அதன் தற்போதைய சொந்தக்காரர் எந்த மாற்றமும் செய்யக்கூடாதென்றதால் அரசு பலவந்தமாக ஒரு ஆணை பிறப்பித்து அதை ஒன்பது லட்சம் டாலருக்கு விலைக்கு வாங்கியது நீண்ட விவாதத்துக்குப் பின்னர் அதை போலீஸ் ஸ்டேஷனாக மாற்ற இந்த 2020 ஜூன் மதம் முடிவு செய்தது.அதற்கான செலவு 50 லட்சம் யூரோ (ஒரு யூரோ 84 ரூபாய்). கட்டி முடிக்கப்போகும் ஆண்டு 2223 ம் ஆண்டு. அதற்குள் இன்னும் செலவு உயரக்கூடும் யானைக்கு கோதுமை அல்வா வாங்கிப் போட்ட கதைதான்.
ஹிட்லர் ஆதரவுக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெரும்போதெல்லாம் அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது . மக்களின் வரிப்பணமும் வீணாகிறது
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் , இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது தமிழ் பழமொழி.
ஹிட்லர் இருந்தாலும் ஆயிரம் பயம் , இறந்தாலும் ஆயிரம் பயம் என்பது புது மொழி.
Post No. 8247 Date uploaded in London – – – 27 June 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
MARCH OF HISTORY – 2 R. Nanjappa
Religious feeling is more ancient than organised religions
This is proof that religious feeling and spirit are part of humanity. The form and shape they take may depend upon human ingenuity or expediency, with large local variations, but the spirit itself is not a human invention, and cannot be denied or destroyed. Organised dogma cannot replace the spontaneous expression of natural feelings. This we saw recently in the Soviet Union too. From 1917, the communists systematically suppressed religion in the USSR but with all the state power and brute methods of Lenin, Stalin and others, they could not destroy it. Enforced atheism could not last even a century. In the end, it was communism that went. Religion revived.
West does not understand “living” religion The Western scientists, historians and others like anthropologists, sociologists do not try to understand a “living” religion. They reduce everything to a system but this is not how a living religion works. When the mother cooks at home, she does not follow a recipe book! And she does not fail or hesitate to improvise as she goes along! This too is what happens in a living religion.
The West trace their intellectual life to the Ancient Greeks and reckon their beginnings from the 7th century BC. But it was not as if it was a blank state before that date, and one day suddenly they sprang to life. The ancient Greeks themselves spoke of more ancient people like the Mycenaean whose antiquity cannot be fathomed. They spoke of Egyptians, Phoenicians, Atlanteans etc. And before the Mycenaeans, there were the Minoans! Who knows who their ancestors were! And there is ample evidence of contacts among them and borrowing of ideas among them. They were not isolated. Especially the Greeks, who were a sea-faring people, living in port cities dotting the seas. The modern scientists discredit them because there are not enough ‘records’. But do they expect old societies to have lived anticipating what people coming two thousand years after them would say and approve?
Edith Hall, classical scholar, says in her delightful recent book on the Ancient Greeks:
Greek history begins with the mysterious, seafaring, well organized Mycenaean. By the time of the first surviving literature, the long poems of the eighth century BC that have come down to us under the names of Homer and Hesiod, the Mycenaean had vanished. Yet they remained ever present, just beneath the surface. They had worshipped by and large the same gods as their eighth century descendants, and the poems- the Homeric epics- in which they took the leading roles as heroes and heroines were without exception the most important part of the ancient education throughout antiquity. All Greeks of the archaic, classical, Hellenistic, and Roman imperial eras spent their days in dialogue with their Mycenaean ancestors. Introducing The Ancient Greeks, chap.1. The Bodley Head, 2015. This passage is worth noting and remembering. The ancient societies were based on still more ancient ones. We really do not know how it all began. They did have literature and study of that literature was ‘education’ for the succeeding generations. (Remember, Will Durant said education is the transmission of civilization). The old religion continued, though new forms emerged along with new deities. The old societies were not ‘static’ or stagnant. They were not completely severed from their ancestors, though there were ‘developments’ or discontinuities. Christianity and Islam represent two large forces of organised discontinuity and deliberate destruction. For a thousand years, the Greek heritage was obscured and forgotten. Its rediscovery resulted in breaking the Christian crust, it led to Renaissance and Enlightenment! It is as if ancient Greece at last had its revenge on their conquerors.
What about Records?
One of the things the modern critics say is that there are no written records. Today, take the newspapers. Do they report everything? Do they cover or exhaust all aspects of actual living? The general newspaper writes about politics, cinema, sports and all social deviations and perversions. The financial newspapers write about markets, commodities, etc. which are all notional, and not real. Yet, how many people read them? And how many understand? If one attempts to write the history of our times only on the basis of what these newspapers write, what will it be like? And since each newspaper has its own slant, which version will one take as the correct one? When, with all the language skills we have, this is the problem we face, how can they say anything about the ancient people whose language we do not understand?. It is not as though people have not communicated. After all, what did the Europeans do before invention of printing? Were they dumb mucks? The general populace was not literate, but they were intelligent, knowledgeable, because they communicated. No society could have survived in the absence of inter-generational communication. It need not be in the form in which these modern theorists expect it to be. (to be continued)