எழுமின்! விழிமின்! பாரதத்தை வல்லரசு ஆக்க உழைமின்! (Post No.8283)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8283

Date uploaded in London – – –4 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஜூலை 4! 1902ஆம் வருடம். வெள்ளிக்கிழமை. இரவு மணி சுமார் ஒன்பது. இந்தப் பூவுலகை விட்டு சமாதி எய்தினார் ஸ்வாமி விவேகானந்தர். அதை நினவு கூரும் ஜூலை நான்கு அன்று

ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலி!

எழுமின்! விழிமின்! பாரதத்தை உயர்த்தி வல்லரசு ஆக்க தளராது உழைமின்!

ச.நாகராஜன்

பாரதத்திற்கு எழுச்சி ஊட்ட எடுத்த அவதாரம் விவேகானந்த அவதாரம்.

சுவாமிஜி வாழ்ந்த காலம் 39 வருடம் 5 மாதம் 24 நாள். அதற்குள், தான் செய்ய வேண்டிய அவதார காரியத்தை அவர் செய்து முடித்தார்.

தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு மேலை நாடுகள் எது செய்தாலும் அதுவே சரி என்று எண்ணி நடை உடை பாவனைகளில் மேலை நாட்டினரைக் காப்பி அடித்த இந்திய மக்களுக்கு அவர் கூறிய உபதேசம் :

“நீங்கள் அம்ருதஸ்ய புத்ரர்கள். தூக்கத்தில் ஆழ்ந்து இருக்காதீர்கள். உங்கள் தேசத்தின் பெருமையை உணருங்கள். அனைவருக்கும் வழி காட்டுங்கள். உயருங்கள். எழுமின், விழிமின். உலகிற்கு வழி காட்டும் அளவு உயரும் வரை தளராது உழைமின்” என்றார் அவர்.

அவரிடம் வழ வழா கொழ கொழா வார்த்தைகளே கிடையாது.

சொல்ல வந்ததை, உணர்த்த வந்ததை ஆழமாக, கம்பீரமாகச் சொல்லி விடுவார்.

உலகெங்கும் சுற்றிப் பார்த்த அவர் தனது முடிவார்ந்த முடிவாக இப்படிச் சொன்னார்:

“Going around the whole world, I find that people of this country are immersed in great Tamas (inactivity), compared with people of other countries. On the outside, there is a simulation of the Sattvika (calm and balanced) state, but inside, downright inertness like that of stocks and stones – what work will be done in the world by such people. How long can such an inactive, lazy, and sensual people live in the world?…”

இதை விடத் தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்?

“உலகெங்கும் சுற்றிப் பார்த்த நான் மற்ற நாடுகளை விட இந்த நாட்டு மக்கள் தமஸில் – செயலற்ற தன்மையில் – மூழ்கி இருப்பதைப் பார்க்கிரேன். வெளியில் சாத்வீகம் – ஆனால் உள்ளேயோ மண்ணாங்கட்டியும் பாறைகளும் போல ஜடமான ஒரு தன்மை – இந்த மக்களை வைத்து என்ன வேலையைத் தான் செய்ய முடியும்? எவ்வளவு காலம் தான் இப்படிப்பட்ட  ஜடங்களான. சோம்பேறிகளான,புலன் நுகர்வு மிக்க மக்கள் வாழ முடியும்?”

இதனால் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது தூங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்புவது என்ற முடிவு தான் அது!

அவர் கூறினார்:

“So my idea is first to make the people active by developing their Rajas, and thus make them fit for the struggle for existence.  With no strength in the body, no enghusiasm at heart, and no originality in the brain, what will they do – these lumps of dead matter! By stimulating them I want to bring life into them – to this I have dedicated my life. I will rouse them through the infallible power of Vedic Mantras. I am born to proclaim to them that fearless message – “Arise, Awake”!

“ஆகவே எனது எண்ணம், முதலில் அவர்களை ராஜஸ குணத்தை மேம்படுத்தி அவர்கள் செயல்பட வைக்க வேண்டும் என்பது தான். இப்படி அவர்களை முதலில், வாழ்வதற்கான போராட்டத்திற்குத் தயாராக ஆக்க விழைகிறேன். உடலில் கொஞ்சம் கூட வலிமை இல்லாத போது, இதயத்தில் உற்சாகம் இல்லாத போது, மூளையில் சுயமான தன்மை இல்லாத போது இந்த செத்த மொத்தைகளால் என்ன தான் செய்ய முடியும்?! அவர்களைக் கிளர்ந்து தூண்டி விட்டு அவர்களில் உயிர்ப்பைக் கொண்டு வர நான் விரும்புகிறேன். இதற்காகவே என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். என்றுமே பிழையாத வேத ம்ந்திரங்களின் மூலமாக அவர்களை எழுப்புவேன். “எழுமின், விழிமின்” என்ற அச்சமற்ற அந்தச் செய்தியைப் பிரகடனப்படுத்தவே நான் பிறந்திருக்கிறேன்.”

அடடா, எப்படிப்பட்ட கம்பீரமான, அற்புதமான, தெளிவான வார்த்தைகள்!

பால கங்காதர திலகரிலிருந்து நிவேதிதை வரை அனைவருக்கும் உத்வேகம் ஊட்டி புதிய இந்தியாவை அமைக்க வழி வகுத்த வீரத் துறவி அவர்.

1892இல் சந்யாசியாக இந்தியா முழுவதும் வலம் வந்த போது பம்பாயிலிருந்து புனே செல்லும் ரயிலில் விவேகானந்தர் ஏறிய பெட்டியில் திலகர் இருந்தார். அவரிடம் சுவாமிஜி அறிமுகப்படுத்தப்பட்டார். எட்டு முதல் பத்து நாட்கள் வரை அவர் திலகர் வீட்டில் இருந்தார்.

அவரது ஆன்மீக சக்தியை அப்போதே திலகர் உணர்ந்தார். பின்னர் சர்வமத சபை மாநாட்டில் உரையாற்றி உலகப் புகழ் பெற்று அவர் பாரதம் மீண்டவுடன் தன் வீட்டிற்கு வந்த அதே சந்யாசி தானா விவேகானந்தர் என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார் திலகர்.

‘ஆம், அவனே தான் இவன்’ என்று பதில் வந்தது.

பின்னர் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற திலகர் அவரை பேலூர் மடத்தில் தரிசித்தார்.

தேநீர் அளித்து அவரை உபசரித்து அவருடன் அளவளாவினார் விவேகானந்தர்.

அவர் திலகரிடம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் இப்படி:”நீங்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு வங்காளம் வாருங்கள், நான் மஹாராஷ்டிரம் வருகிறேன். ஏனெனில் சொந்த ஊரில் எப்போதுமே மற்ற இடத்தில் இருக்கும் அளவு ஒருவனுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்காது அல்லவா?”

அனைவரும் நகைத்தனர்.

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய திலகர் முதல் கடைசி இந்தியன் வரை அனைவருக்கும் அவர் உற்சாகம் ஊட்டினார்; உழைக்கச் சொன்னார்.

“எழுமின்! விழிமின்! பாரதத்தைத் தலையாய இடத்தில் இருக்கச் செய்யும் வரை தளராது உழைமின்!”

இந்த அவரது உபதேச உரையை மேற்கொள்வோம்; பயணிப்போம்! வெற்றி பெறுவோம்!

tags — எழுமின்! விழிமின்! , பாரத, வல்லரசு

***

INDEX 2; எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -2 (Post No.8282)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8282

Date uploaded in London – – –3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

March 2017

    1-3-17     3679    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 31

   2-3-17     3682     அறிவு ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா? – (பாக்யா  

               24-2-17 அ.து   )

  3-3-17     3685  அண்டார்டிகா ஐஸ் பாறை பிளக்கிறது! (பாக்யா  

               6th year last)

  4-3-17    3688  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-22 –    

               ஏ.கே.செட்டியாரின் குமரிமலர் கட்டுரைகள் – 7

  5-3-17     3691     The glory of Betelgeuse – Ardra Star!

     6-3-17     3695      Miraculous Incidents due to Positive Emotions!

  7-3-17     3699      Wonderful Divine Saint Vallalar and some of His Miracles!     

  8-3-17     3702      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 32

    9 -3-17   3706     The Story of Revata, First Time Travel Story in the History of

                         Mankind!

    10-3-17   3710    Wonderful Episodes of temples that were saved during Muslim

                        Invasion! 

   11-3-17     3712   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 33

 12-3-17      3717     பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!

               (பாக்யா அ.து. 7yh year -1st article 3-3-2017)

  13-3-17     3718      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 34

   14-3-17     3721   Feng Shui True or False?

 15-3-17     3724    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 35

  16-3-17     3727    Get Feng Shui – Vastu Combined Benefits!

  17-3-17     3730     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 36

 18-3-17     3733   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 37

  19-3-17      3737   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 38

  20-3-17      3739  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 39 (முடிவுரை)

  21-3-17      3742    எது கவிதை?

  22-3-17      3745    மதுரை ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் அதிசயம்!

               (10-3-17 பாக்யா கட்டுரை)

 23-3-17       3748    மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள்!

               (பாக்யா அ.து.    )

24-3-17      3751     புத்தக மதிப்புரை – எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி!

24-3-17      3752     Book Review – A Journey towards the Infinite Absolute!

25-3-17      3755  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-23 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 8

26-3-17       3757    Scientific Thinking for Success – Christian D Larsen

27-3-17       3761    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-24 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 9

28-3-17       3764     அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல!

               (பாக்யா அ.து.  17-3-17 கட்டுரை)

29-3-17       3767  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-25 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 10

30-3-17       3771  ஆத்ம தரிசனம் – ஆன்மீக மின்னணு இதழ்!

31-3-17       3774  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-26 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 11

April 2017

     1-4-17     3777     How to cultivate the state of contentment and Mental State of         

                         Appreciation!

  2-4-17     3870    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-27 – பாரதியார் பற்றி  

               நினைவு மஞ்சரியில் உ.வே.சுவாமிநாதையர்

  6-4-17     3786      ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,

               நம்பிக்கைகளும் – 1

  7-4-17     3795      ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,

               நம்பிக்கைகளும் – 2 (ஹெல்த்கேர் பிப்ரவரி 2017 கட்டுரை)

     8-4-17    3798     மின்னல் வேகத்தில் கணக்கிட்ட மேதை ஜெடிடியா பக்ஸன்!

               (பாக்யா அ.து  )

    9 -4-17    3801    ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும்,

               நம்பிக்கைகளும் – 3 ஹெல்த்கேர் மார்ச் 2017 கட்டுரை

   11-4-17     3807   விஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும்

               உண்மைகள் (ஞான ஆலயம் மார்ச் 2017 கட்டுரை)

 12-4-17     3810     பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி!

               (பாக்யா அ.து  )

 13-4-17     3813      Damn Good Advise by George Lois

   14-4-17     3816   How to Make your Aura bright and Divine?

 15-4-17     3819    அற்புதக் குறிக்கோள்!

  16-4-17      3822    The wonderful and complicated organ called Brain!

   17-4-17     3825     Awaken the Giant within – Tony Robbins!

 18-4-17     3828   நிழலைக் குழியில் புதைக்க முயன்ற கதை போல!

  19-4-17      3830    பகவான் ரமணரின் வாழ்க்கையில் நகைச்சுவை!

  20-4-17      3833   விளம்பர குருவின் அறிவுரை! Damn Good Advise by George

                         Lois

  21-4-17       3836    பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்!

  22-4-17      3839    அருணாசல மலை சிவனே தான்!

 23-4-17       3842    விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர்

              ஃபெய்ன்மேன் (பாக்யா அ.து.   ?

24-4-17      3845     ரமணர் மாற்றிய ஒரே ஒரு வார்த்தை!

25-4-17      3848  உடலின் லயம் அறியுங்கள்! உங்கள் ஆற்றலைக் கூட்டுங்கள்!!

              (பாக்யா அ.து.   )

26-4-17       3851    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-28- 2 ஸ்ரீஹரிகிருஷ்ணன்

              எழுதிய ‘பாரதியும் ஏவிஎம்மும் சில உண்மைகள்!’

27-4-17       3855     ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்?

28-4-17       3858     இள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது?

29-4-17       3861  ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம் விதி விளக்கம் – 1

30-4-17       3864  இறைவா எனக்கொரு வரம் அருள்வாய்!

May 2017

     1-5-17     3867     நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? விதி விளக்கம் – 2

  2-5-17     3870    கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி!

  3-5-17     3873     வள்ளுவர் குறளில் வடமொழிச் சொற்கள்!

  4-5-17     3876     வாரம், திதி, யோகம், கரணம், விதி விளக்கம் – 3

     5 -5-17    3879    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-29 சின்ன

               அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்ப மாட்டீர்கள்!

    6 -5-17    3882   பூமியைக் காக்க நாஸாவின் புதுத் திட்டம் (பாக்யா அது   )

  7-5-17      3885    மறக்கின்ற தருணமும், நினைக்கின்ற தருணமும்!

  8-5-17    3888   ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?

    9 -5-17    3891    தமிழ்த் தாய் வாழ்த்தில் வடமொழிச் சொற்கள்!

 10 -5-17      3894   ஜென் குருமார்களும், சீடர்களும் – சுவையான சம்பவங்கள்!

 11-5-17      3897   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-30 எஸ்.ஜி.ராமானுஜுலு

               நாயுடு எழுதிய ‘சென்று போன சில நாட்கள்’

 12-5-17     3900     ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை!

 13-5-17     3903   மூநட்சத்திர விளக்கம் – விதி விளக்கம் – 4

   14-5-17      3906  கட்டளை புதிது!

 15-5-17      3909   Courage and Reputation – Zen Story!

   16-5-17      3912   கம்யூனிஸ ஜோக்குகள்!

   17-5-17     3915    விஞ்ஞானிகள், கணித மேதைகள் ஜோக்குகள்!

 18-5-17      3918   நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் -5

 19-5-17     3921    உடல் ஆரோக்கியத்திற்கு மசாஜ்!

20-5-17      3924    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-31- 1 ஸ்ரீ அரவிந்த

              தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!

21-5-17      3927    வாழ்க்கைக்கு வழி காட்டும் அறிவுரைகள் – 1

22-5-17      3930    எண் ரகசியம் – 1 – சந்திர எண் 1080இன் மர்மம்!            

23-5-17      3933    எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?

24-5-17      3936     ப்ரூஸ்லியின் மரணம் – தவறான பெங்சுயி தான் காரணமா?

25-5-17      3 939  சில முக்கிய குறிப்புகள் – விதி விளக்கம்!

26-5-17       3942    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-31- 2 ஸ்ரீ அரவிந்த 

              தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!

27-5-17       3944     பெங் சுயி உண்மையா, பொய்யா?

28-5-17       3948     ஜாலி எல் எல் பி!

29-5-17       3951  எண் ரகசியம் – 2

30-5-17       3954  வைஷ்ணவ பரிபாஷை என்னும் அரிய நூல்!

31-5-17       3957  Benefits of Walking!

TO BE CONTINUED………………………………….

Tags- Index 2, எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -2 

Swami Crossword 372020 (Post No.8281)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8281

Date uploaded in London – 3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1. – 8 letters – after Samhita and Brahmanas comes this Vedic literature

5. 5—feminine name; means sparkling beauty

6. – 5–  a disease mentioned in the Atharva Veda

9. – 8—several kings of solar race had this name; one was killed by Ravana in a duel in Ayodhya

11. – man in Sanskrit

12. – 4– mean one; still used in Hindi and other languages

13. – 8– gold I Sanskrit; many demons had this name

Xxx

DOWN

1. –5—king who spread Buddhism to different parts of the world

2 –7—(long sound) it means assembly, royal court

3. – 5- demi gods whose chief is Kubra; pygmies of the Vedic world

10. – great hero of solar race sung around the world

7. – 7- lotus stem ; also name of girls

4.  – — 6— to be attended medically; in Grammar, doubling consonant

8.– 5- laughter in Sanskrit; goes with words such as Mantha……, Atta…….

—subham–

3 மாசி-பங்குனி மாத பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8280)

மாசி-பங்குனி மாதப் பழமொழிகள் மூன்று கண்டு பிடியுங்கள்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8280

Date uploaded in London – 3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாசி-பங்குனி மாதம் பற்றிய 3 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.மாசி நிலா பாசி படரும்

2.பங்குனி மாதம் பகல் வழி நடப்பவன் பாவி

3.பங்குனி என்று பருக்கிறதும் இல்லை, சித்திரை என்று சிறுக்கிறதும் இல்லை

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- மாசி, பங்குனி  மாதம்,  பழமொழிகள்

–subham–

அயோத்தி நகரில் 4 புதிய வாசல்கள் (Post No.8279)

Jaipur City Gate

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8279

Date uploaded in London – 3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயோத்தி நகரில் 4 புதிய வாசல்கள்!!

அயோத்தி நகரம் பற்றி நமக்குத் தெரியாத புதிய தகவலை கம்பன் அளிக்கிறான் .

அங்கு 4 வாசல்கள் இருந்தன. இதிலிருந்து அந்த நகரம் , இப்போதுள்ள மதுரை நகரம் போல சதுர வடிவில் இருந்தது தெரிகிறது ; அங்கு 4 கோபுரங்கள் இருந்தனவாம். அவற்றின் உயரம் எவரெஸ்ட் சிகரத்தை விட  உயரமானதாம் ; இதை மறைமுகமாக செப்புகிறான் ; ஏனெனில் கம்பனுக்கு எவரெஸ்ட் சிகரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

வாமனாவதாரத்தின் போது மூன்றாவது அடி வைக்க இடமில்லாததால், விஷ்ணு தன்னுடைய காலை உயர்த்தி பிரபஞ்சசத்தையே அளந்தார் அல்லவா ? அதை விட  உயரமாக இருந்தனவாம் . அது மட்டுமல்ல . இந்தப் பூவுலகை காத்து நிற்கும் திசையானைகள் போல அசையாது நின்றனவாம் அந்த வாசல்கள்.

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?

அந்த நான்கு வாசல்களும் 4 வேதங்களை போல இருந்தனவாம். அதாவது ஒரு வாசல் ரிக் வேதம், இன்னொரு வாசல் யஜுர் வேதம், மற்றும் ஒரு வாசல் சாம வேதம்; நாலாவது வாசல் அதர்வண  வேதம்..

இது என்னடா , பெரிய ‘கப்ஸா’ ஆக இருக்கிறது?

முதலில் சொன்ன யானை, ஓங்கி உலகளந்த உத்தமனின் கால்கள் ஆகியன கற்பனை செய்தால் கண்ணுக்குத் (concrete shapes) தெரியும். வேதங்கள் எழுதாத புஸ்தகங்கள் ஆயிற்றே ; அதுவும் மந்திரம் என்பது ஒலிகளின் தொகுப்புதானே (abstract) ; அதைப் போய் வாசல்களுக்கு ஒப்பிடலாமா ? என்று நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது . அதற்கும் கம்பன் ஒரே பாட்டில் பதில் சொல்லி விடுகிறான்.

வேதங்கள் நாலும் ஒழுக்க நெறியை கற்பிக்கின்றன. அதன் வழி  செல்லுவோருக்கு  நல்லொழுக்கம் இருப்பதால் வாழக்கையில் நல்ல பாதை (ஆறு) கிடைக்கிறது. அது போல அயோத்தி மா நகருக்குள் நுழைந்து விட்டால் நல்லொழுக்கம் தானாக வருமாம். ஒழுக்கம் நன்றாக இருந்தால் ஆரோக்கியம் இருக்கும். ஆரோக்கியம் இருந்தால் நல்ல சுகமாக 100 ஆண்டு வாழலாம் . இப்படி  ஒரு நகரத்தின் வாசல் பற்றிச் சொல்லும்போது கூட  4 வேதங்களின் பெருமையையும் சொல்வதால்தான் தமிழர்கள் அவனை கவிச் சக்ரவர்த்தி என்று அழைக்கின்றனர்.

இதோ, பால காண்டத்தில் நகரப் படலத்தில் வரும் பாடல் –

எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால்

ஓல்லை உம்பர் நாடு அளந்த  தாளின் மீது உயர்ந்த வான்

மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழங்கினால்

நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே

Ayodhya Temple Model

பொருள்

அந்நகரத்தின் கோபுர வாயில்கள் நான்கும் , நான்கு திசைகளில் நின்ற வெற்றியை உடைய திசை யானைகள் போல நிலையாக நின்றன ; திருமால் முன்பு திரிவிக்கிர  மூர்த்தியாகி  மேல் உலகத்தை எளிதாக அளந்த திருவடியினும் அக்கோபுர வாசல்கள் உயர்ந்து நின்றன.

அந்த நான்கு வாயில்களும், தன்னுள் புகும் உயிர்களை நல்வழியில் ஒழுகச் செய்வதால் , வளம் பொருந்திய உலகத்து உயிர்கள் யாவும் நீ தியிலிரு ந்து மாறுபடாத ஒழுக்கத்தோடு இருக்குமாறு நல்ல வழிகளைச் சொல்லுகின்ற நான்கு வேதங்களையும் ஒத்திருந்தன .

tags — அயோத்தி, 4 வாசல்கள்

INDIA WAS NOT POOR-4 (Post No.8278)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8278

Date uploaded in London – – – 3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

INDIA WAS NOT POOR:

TESTIMONY FROM ADAM SMITH  – 4

R. Nanjappa

Churchill, and his Indian cigar! 

Such is the stuff of our bureaucracy! Let me share one more incident. Churchill was a heavy smoker of cigars. When he became the Prime Minister during the War, the British govt was anxious that his cigar supply should not be disrupted! Dindigul in Madras state was identified as a source of good quality cigars. The Madras govt was ordered to procure it and send to London. The bureaucracy set to work. The Collector of Chengleput was given the responsibility of collecting the cigars. In order that he would not overlook, the govt prescribed a monthly Statement form which he had to fill, giving details of the collection and submit to the Secretariat. Now, the war ended in 1945; Churchill ceased to be PM shortly thereafter. India became free in 1947. Churchill became PM once again in 1951 and retired in 1955. The great man died in 1965. But the return of the Chengleput collector did not die: it continued up to 1972, when it was discovered by chance and stopped! 

How can we ever prosper when we have such politicians and bureaucrats?
To Smith, again

Enough of this digression.  We return to Smith. He makes some more adverse observations about the affairs of the East India Company and its officials. He remarks how every European power created a monopoly to enter into trade with other nations, and how it must have resulted in high price for the consumers. He says:

Since the establishment of the English East India company, for example, the other inhabitants of England, over and above from being excluded from the trade, must have paid in the price of the East India goods which they have consumed, not only for all the extraordinary profits which the company may have made upon those goods in consequence of their monopoly, but for all the extraordinary waste, which the fraud and the abuse, inseparable from the management of the affairs of so great a company, must necessarily have occasioned.

This leads Smith to an even more important insight. East India company, by acquiring the Diwani rights,  had become sovereigns, and ceased to be mere traders.They should have administered the territories to the advantage of the people. But they did not do this.Smith says:

But a company of merchants are, it seems, incapable of considering themselves sovereigns, even after they have become such. …. by a strange absurdity regard the character of the sovereign as but an appendix to that of the merchant.. As sovereigns, their interest is exactly the same with that of the country which they govern. As merchants their interest is directly opposite to that interest. But if the genius of such a government, even as to what concerns its direction in Europe, is in this manner essentially and perhaps incurably faulty, that of its administration in India is still more so.

Smith then points out how the servants of the company have been carrying on  private trade along with the business of the company, and making profits for themselves. They were then eager to get back to their mother country,” and carried the whole fortune with him”, as quickly as possible, “perfectly indifferent though the whole country was swallowed up by an earthquake”. Smith takes care to say that he was not making an odious imputation against individuals or officials of the company as a group, but ” it is the system of government… that I mean to censure”. As individuals, they could have been magnanimous against expectations on occasion, and on others, totally different. But the system of which they were part was bad.

Such exclusive companies, therefore, are nuisances in every respect; always more or less inconvenient to the countries in which they are established, and destructive to those which have the misfortune to fall under their government.

Part IV, chap vii.

Here is another piece of history. The returning company officials “carried the whole fortune” with them!  They were so fabulously rich, they were called “nabobs”. This enabled them to buy up landed property which were called “rotten boroughs”. They were really considered rootless and were known to be corrupt. They did attract lot of adverse social and literary attention. 


Oliver Goldsmith in his long poem “The Traveller” wrote:

The wealth of climes, where average nations roam,
Pillaged from slaves to purchase slaves at home

(lines 387-388)

Such persons entered parliament (for which property was the qualification) and this too attracted adverse notice. William Pitt, the Earl of Chatham (who himself had something to do with framing the policy towards India wrote, in 1770:

… the riches of Asia have been poured in upon us, and have brought with them not only Asiatic luxury, but I fear, Asiatic principles of government. Without connections, without any natural interest in the soil, the importers of foreign gold have forced their way into parliament, by such a torrent of private corruption, as no private hereditary fortune could resist.

Smith too later said that such people had no concern for the people of those countries at all. But as individuals, they were acting on their self-interest, and perhaps in the circumstances others would have done so, too!.

Now, Indians loot India!

In this respect, let us introspect a little. How have our politicians and bureaucrats done since Independence? Have they been better than the Company and its officials? Now that we have RTI, and the requirement of financial disclosure before the elections, we clearly see how the riches of the netas keep growing..  How could they have earned all that through their fair remuneration from the offices they held? And every day, we read stories about Lok Ayukta action against some bureaucrat or the other. But what happens to all of them in the end ? In one notorious case, the High Court acquitted an accused politician, in a verdict delivered in two minutes, after the case lingered for 18 years, by totally disregarding the judgment of the Special Court! Those who run the government and the administration have not failed to take advantage of the situation- exactly as the officials of the East India Company did more than 200 years ago!  While they were all private employees, our candidates have been in public life, professing socialism, no less! Human nature has hardly changed. 

In a sense, we have been worse. The English looted India and enriched their country. But Indians are today looting their own country and keeping the money in Swiss bank accounts! We have not had Independence really, but only a transfer of power to a new set of looters!

Note:

  1. Adam Smith gives us accurate information about the state of our economy at the time. He was writing about the Company. But the same loot continued under the Crown too. India’s prosperous state is borne out by research based on British archival records, which documented the matter in some detail. The original material is still available in British Museum and other libraries in England. Dharampal has brought out these details in the 5 volumes of his collected writings.

Years before Dharampal, a retired civil servant , Romesh Chander Dutt had surveyed the scene, based on British documents. We will see it later.

2.There has been a tendency, after Independence, to glorify British rule. Nehru dispensation was a party to this. It is therefore refreshing to see a loyalist of the Nehru dynasty listing the adverse features of the British rule. See: Sashi Tharoor: An Era of Darkness, Aleph Book Company, 2016.    

                                               ****

Concluded

tags – India, not poor-4

ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! (Post No.8277)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8277

Date uploaded in London – – –3 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்!

ச.நாகராஜன்

தமிழுக்குப் பெருமை தரும் பதினாறாயிரம் திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியவர் அருணகிரிநாதர். நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1324 பாடல்கள்!

சொல்லழகும் பொருளழகும் கூடிய பக்திச் சுவை நனி ததும்பத் ததும்பப் பாடும் வல்லமை படைத்தவர் அவர்.

நாற்கவிராஜர் என்று அவரைப் போற்றுவர்.

பல்லாயிரக் கணக்கில் பாடல்களைப் பாடியவர் ஆதலின் இவர் வித்தார கவி ஆவார்.

இனிமையான ஓசை இன்பத்தை நல்ல பொருளுடன் தரும் பாடல்களை அருளியவர் என்பதால் இவர் மதுர கவி ஆவார்.

வியக்க வைக்கும் வெவ்வெறு விசித்திரக் கவிகளைப் புனைந்தவர் ஆதலின் இவர் சித்ர கவி ஆவார்.

எந்த ஒரு ஓலைச் சுவடியையும் எழுத்தாணியையும் கையில் வைத்துக் கொண்டு யோசித்து, யோசித்துப் பாடாமல் நினைத்த இடத்தில் சொல்லழகும் பொருளழகும் கூடிய, ஆழ்ந்த கருத்து அமைந்துள்ள பாடல்களைப் பாடியவர் ஆதலின் இவர் ஆசு கவி ஆவார்.

ஆக இப்படி நால்வகைக் கவிகளிலும் சிறப்புற விளங்கியதாலும் இவர் வாக்கு தனித்துவம் பெற்றதாலும் ‘வாக்குக்கு அருணகிரி என்று போற்றும் பெருமையைப் பெற்றார்.

அத்துடன் இவர் பல்வேறு மொழிகளில் வல்லுநர் என்பதை அஷ்டபாஷா பரமேஸ்வரர் என்ற இவரது பெயரால் அறியலாம். அஷ்ட பாஷா என்றால் எட்டு மொழி என்பது பொருள்.(பல மொழிகளில் விற்பன்னர் என்று பொருள் கொள்ள வேண்டும்)

அத்துடன் சார்வ பௌமடிண்டிய கவி என்ற பட்டப் பெயராலும் இவரது கவித்திறன் தனித் தன்மை வாய்ந்தது என்பதை அறியலாம்.

ஏராளமான இடங்களில் முருகனிடம் நல்ல தமிழ் பாடும் வல்லமையைத் தாராய் என வேண்டுவதைப் பார்க்கலாம்.

“நிதி பொங்கப் பல தவங்களாலுனை

      மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை

       நிகர் சந்தத் தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்

     (மதியஞ்சத் திரு எனத் தொடங்கும் திருப்புகழ்)

“மதுரகவி யடைவு பாடி வீடறிவு

     முதிர அரிய தமிழோசையாகவொளி

     வசனமுடைய வழிபாடு சேருமருள் தந்திடாதோ

(இலகு குழை எனத் தொடங்கும் திருப்புகழ்)

இப்படிப் பல இடங்களில் தங்கம் நிகர் சந்தத் தமிழை வேண்டுகிறார் அவர்.

சித்திர கவிகளில் கரந்துறை கவியாக அமையும் மூன்று திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

அவற்றுள் ஒரு பாடலை இங்கு பார்ப்போம்:

ஆறு படை வீடுகளில் ஒன்றான பழனித் திருத்தலத்தில் அவர் அருளிய பாடல் இது.

பாடல்

கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய

     கடைக்கணொடு சிரித்தணுகு

          கருத்தினால் விரகுசெய் …… மடமாதர்

கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை

     கனத்தவிரு தனத்தின்மிசை

          கலக்குமோ கனமதில் …… மருளாமே

ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி

     யுனைப்புகழு மெனைப்புவியில்

          ஒருத்தனாம் வகைதிரு …… அருளாலே

உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி

     யுரைக்கமறை யடுத்துபொருள்

          உணர்த்துநா ளடிமையு …… முடையேனோ

பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு

     படிக்கடலு மலைக்கவல

          பருத்ததோ கையில்வரு …… முருகோனே

பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல

     பணிப்பனிரு புயச்சயில

          பரக்கவே இயல்தெரி …… வயலூரா

திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை

     செயித்தருளு மிசைப்பிரிய

          திருத்தமா தவர்புகழ் …… குருநாதா

சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்

     திருப்பழநி மலைக்குளுறை

          திருக்கைவே லழகிய ….    பெருமாளே.

பாடலின் பொருள் : கரும்பு வில்லில் வாசனை உடைய மலர் அம்புகளைத் தொடுத்து மன்மதன் செலுத்தியது போல கடைக் கண் பார்வையுடன் சிரித்தவாறே நெருங்கி தங்கள் எண்ணத்தினால் தந்திரமான செயல்கள் புரிகின்ற இளம் மாதர்களின்,

கோபமுள்ள யானையும் கூடத் திடுக்கிடும்படியான செழிப்புற்ற மலை போல் பருத்துள்ள இரு மார்பகங்களைக் கலக்க விழையும் மோக வெறியில் மயங்காமல்,

மனமானது ஒருமை அடைதலில் விருப்பம் கொள்ளும் எண்ணம் எனது மனதில் உண்டாகும்படி உனது திருவுள்ளத்தில் நினைத்து அருள் செய்து, உனைப் புகழ்ந்து பாடும் என்னை புவியில் ஒரு நிகரிலாப் புலவனாக ஆக்கும் வகையை உனது திருவருளால்,

ருத்திரனும் கூட விளக்கம் உற, எனக்கு அனுக்கிரகம் செய் என்று உன்னை அணுகிக் கேட்க, நீ உபதேசித்த அந்தமறையின் உறு பொருளான பிரணவ ரகசியத்தை அடியேனுக்கும் உணர்த்தும் வகையில் வரும் நாள் ஒன்றை அடியேனும் பெறுவேனோ?

கிரௌஞ்ச மலையையும் பெரும் அரக்கர்களையும் ஒலித்து எழும் பூமியில் உள்ள எழு கடல்களையும் அலைத்துக் கலக்க வல்ல பருத்த தோகைமயிலில் மீது வரும் முருகோனே

பதித்த மரகதத்துடன் ரத்தினமணிகள் வரிசையில் அமைக்கப்பட்ட பல ஆபரணங்களை அணிந்துள்ள மலை போலும் பன்னிரெண்டு தோள்களை உடையவனே, பரக்கவே இயல் தமிழ் தெரிந்த வயலூரானே,

திருப்புகழை உரைப்பவர்கள் மற்றும் படிப்பவர்களுடைய வறுமையையும் பகைமையையும் தொலைத்து வெற்றி அருளும் இசைப் பிரியனே, ஒழுக்கமுடைய மாதவம் புரிவோர் புகழும் குருநாதா,

வில் ஏந்திய குறவர் தம் ஓலைக் குடிசையிலும் புகை போன்ற கரும் மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்லும் அழகிய பழனியில் உறைகின்ற திருக்கையில் வேல் ஏந்திய அழகிய பெருமாளே.

இப்படிப்பட்ட அழகிய பொருள் வளம் நிறைந்த இந்தப் பாடலில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் வரியை மட்டும் சேர்த்துப் பார்த்தால் அது ஒரு தனித் திருப்புகழாக அமையும்.

கருத்தினால் விரகு செய் மடமாதர்

   கலக்கு மோகனமதில் மருளாதே

ஒருத்தனாம் வகைதிரு வருளாலே

   உணர்த்து நானடிமையு முடையேனோ

பருத்த தோகையில் வரு முருகோனே

    பரக்கவே இயல் தெரி வயலூரா

திருத்த மாதவர் புகழ்  குருநாதா

    திருக்கை வேல் அழகிய பெருமாளே!

எப்படி ஒரு அழகிய திருப்புகழ் அமைகிறது! திருப்புகழினுள் ஒரு திருப்புகழ்!!

இதை கரந்துறைப் பாடல் என்பர்.

வாழ்க திருப்புகழ்! வளர்க சித்திரத் தமிழ்!!

குறிப்பு : 29-2-2020 அன்று வெளியான கட்டுரை “ஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கியை- (திரிபங்கி வெண்பாவை) –  நினைவு கூர்ந்தால்

(கட்டுரை எண் 7633) சித்திர கவியின் அருமை தெரிய வரும்!

tags இரு ,திருப்புகழ் பாடல்கள்,

***

எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ் -1 (Post No.8276)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8276

Date uploaded in London – – –2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நமது பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் பட்டியலை 2016 முதல் வெளியிடுகிறேன். இது அகர வரிசைப்படி இல்லாவிடினும் இண்டெக்ஸ் INDEX போன்றதே.

இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்

கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?

பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பிcopy  செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com  என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.

 from swamiindologly.blogspot.com

என்று எழுதியும் பெறலாம்.

எடுத்துக்காட்டு:

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடிfrom tamilandvedas.com

ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி from swamiindology.blogspot.com

நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்

கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .

December 2016

    1-12-16     3405     மன்னனின் பிரச்சினையும் ஆனந்தரின் தீர்வும்!

  2-12-16     3408    ஒவ்வொரு மனிதனின் கடைசி விநாடி! (பாக்யா)     

     3-12-16     3411     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 19

   4-12-16     3414     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 20   

  5 -12-16    3418   அரவிந்தர் கண்களில் அரும்பிய நீர்!

  6 -12-16    3421   சுவர்க்கமும் நரகமும் – குட்டிக் கதை!

     7-12-16     3425   பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!

  8-12-16     3428   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15  

               (பெ.நா.அப்புஸ்வாமியின் ‘பாரதியும் திலகரும்’)

  9 -12-16    3431    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15

               (பெ.நா.அப்புஸ்வாமியின் ‘பாரதியை ஒட்டிய நினைவுகள்!)

  10 -12-16     3434    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 15 (விஜயா

                   பாரதியின் ‘பாரதியாரின் Annotated Biography’ (with anational historical   

                                 background)

  11-12-16       3437     மஹாகவி பாரதியார் கண்ட அகண்ட பாரதம்!

  12-12-16      3440     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 21   

  13-12-16      3443    கடைசியில் என்ன சொன்னார்கள்? (பாக்யா )

 14-12-16     3446    தமிழுக்காகத் தாலியை ஈந்த தமிழர் (பாக்யா )

  15-12-16      3450    பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

  16-12-16      3453  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 22   

  17-12-16      3456     Gayatri Mantra –  24 Syllables and Governing Deities!

 18-12-16       3459      விண்வெளியில் மூழ்க இருந்த வீரர்! (பாக்யா)

 19-12-16       3462      Every Little Things Help!

 20-12-16       3465      ப்ருந்தாவன் எக்ஸ்பிரஸ்

 21-12-16       3468      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 23

 22-12-16       3471     Know Thyself First !

23-12-16        3474     பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

24-12-16        3477   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 16 ஏ.கே.  

                  செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 1

25-12-16         3481       Book Review – Brindavan Express by Mr V.Desikan

26-12-16         3483      அழகியின் ஆசையும் கோடீஸ்வரரின் புத்திமதியும்! (பாக்யா)

27-12-16         3487       5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின்

                 கண்டுபிடிப்பு (பாக்யா )

28-12-16         3490      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 24

28-12-16         3493  மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 16 ஏ.கே.  

                  செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2

30-12-16         3497  பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

31-12-16         3500  மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே –

                நோபல் பரிசு உரை (பாக்யா )

January 2017

     1-1-17     3503      வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை!

  2-1-17     3506     அதிசய புத்த துறவி ஸூ யுன் – 25

   3-1-17     3509   மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-18 – ஏ.கே.செட்டியாரின்

               குமரிமலர் கட்டுரைகள் – 3

  4-1-17     3512  பரிபாடலில் அந்தணரும் வேதமும் -4

  5-1-17     3515     அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஒக்!

     6-1-17     3518     புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 1 (பாக்யா  

               30-12-16 அ.து   )

   7-1-17     3521      அதிசய புத்த துறவி ஸூ யுன் – 26

  8-1-17     3525     2016ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் புத்தகங்கள்! (பாக்யா

               அ.து.   )

    9 -1-17    3527     தமிழில் உள்ள யமகப் பாடல்கள்! (பாக்யா0

   10-1-17   3530     வடிகன் போப்பாண்டவரும், தஞ்சாவூர் அபிராமி பட்டரும்!

   11-1-17   3533     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-19 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 4

    12-1-17   3536     Oh! It was a wonderful phenomenon! – Swami Vivekananda!

  13-1-17    3539     பரிபாடலில் அந்தணரும் வேதமும் -5

  14-1-17     3542  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 27

 15-1-17     3545     Business is Business

  16-1-17     3548      புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 2 (பாக்யா  

               6-1-17 அ.து   )

  17-1-17     3551      How your thoughts could help you? (Ezine 14-1-17)

 18-1-17     3554   அதிசய புத்த துறவி ஸூ யுன் – 28

 19-1-17      3557    Uri Geller, the man who bent the spoon with his mental power!

                          (ezine 9622866)

  20-1-17      3559  Make every Stumbling Block as a  Stepping Stone!

                         (ezine9623826)

  21-1-17      3562    மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-20 – ஏ.கே.செட்டியாரின்

               குமரிமலர் கட்டுரைகள் – 5

  22-1-17      3565    Be Always on God’s side, Pray for God to come to your Side!

                          (Ezine19574)

23-1-17       3568    The wonders of Sound! (Ezine 9625344)

24-1-17       3571      The Secret of Sri Yantra (Ezine 22-1-17)

25-1-17       3574  நூறு வயதை எட்டிய ஹாலிவுட் கதாநாயகன், கதாநாயகி!

              (பாக்யா கட்டுரை)

26-1-17       3577    Satiric  Verses in Sanskrit Language!

27-1-17       3580    பரிபாடலில் அந்தணரும் வேதமும்!

28-1-17       3583    மர்மக்கதை எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டிய

              விஞ்ஞானி (பாக்யா அ.து.   )

29-1-17       3586    சிம்பல் மயம் உலகம்! (பாக்யா 20-1-17 கட்டுரை )  

30-1-17       3589    காந்திஜியே மருந்து!    

31-1-17       3591    Taj Mahal is a Hindu Temple reveals the book ‘World Vedic

                         Heritage’ (Ezine article)    

February 2017

    1-2-17     3594      புத்துலகம் காண விழையும் வித்தகர்கள் – 3 (பாக்யா  

               13-1-17 அ.து   )

  2-2-17     3597     Wonderful Inspirational Sankrit Subhashitam

                         (ezinearticles.com 23-1-17)

    3-2-17     3600  Inspiring Anecdotes in the Life of Swami Chinamayanda

                         Saraswathi

  4-2-17    3603  அதிசய புத்த துறவி ஸூ யுன் – 29

  5-2-17     3606     Let us Salute the Great American Sanskrit Scholar Ludwik

                         Sternbagh!

     6-2-17     3609      The Mysterious Parallel Universe!

   7-2-17     3613      Warning! Your xerox may also be reading this article right now

                         in Parallel Universe!

  8-2-17     3616    Hugh Everett and his path breaking new theory of Parallel

                         Universe!

    9 -2-17   3619     Who is a poet? Hundreds of Definitions! All are beautiful!

   10-2-17   3623     Love Poems in sanskrit Literature!

   11-2-17   3625     பாரதத்தின் ஒருமைப்பாடு : சங்க இலக்கியச் சான்றுகள்!

              (இரண்டாம் பாகம் – முதல் கட்டுரை)

    12-2-17   3629     Pigeons in Amarnath and eagels in Thirukkazukkundram – A

                         Miracle!

  13-2-17    3632     Thousand pillar Hall – An Acoustic marvel in Madurai

                         Meenakshi Temple

  14-2-17     3634  சாஸ்தா மலையின் அடியில் மர்ம சித்தர்கள் வசிக்கிறார்களா?

               (பாக்யா அ.து.  )

 15-2-17     3637       Alexi Paulovich Kulaichev on the Secrets of Sri Chakra.

  16-2-17     3640       Four wonderful Sri Chakra Temples near Chennai in India to

                           visit and get all benefits!

  17-2-17     3643      Time is a mysterious Factor! Let us first know about  

                           Present!

 18-2-17     3646   Agni Purana explains correct Gem for Wealth and Health!

 19-2-17      3649   ஜப்பானில் கற்கலாம் வா! (பாக்யா 3-2-17 அ.து.  )

  20-2-17      3652  கடவுள் நம்பிக்கை வளர்கிறதா, தேய்கிறதா?

               (பாக்யா 10-2-17 அ.து.)

  21-2-17      3655    தகவல் கொள்கையின் தந்தை க்ளாட் ஷெனான்!

               (17-2-17 பாக்யா கட்டுரை)

  22-2-17      3658    The one and only Big Temple at Tanjore, an Architectural  

                          wonder of the World!

 23-2-17       3661    நடிகர்களின் பூர்வ ஜென்மம் அதிசய தகவல்கள்!!

 24-2-17       3665     Miracles of Shirdi Sai Baba!

 25-2-17      3668  Psychic Wonder Wold Messing met Sri Sathya Sai Baba thrice :      

                         Baba’s revealation!

26-2-17       3671    Eienstein, Stalin, Mahatma Gandhiji tested Wold Messing –

                          More incidents in detail!

27-2-17       3673    அதிசய புத்த துறவி ஸூ யுன் – 30

28-2-17       3676     மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்-21 – ஏ.கே.செட்டியாரின்

              குமரிமலர் கட்டுரைகள் – 6

to be continued……………………………………….

tags – எஸ்.நாகராஜன், கட்டுரை இன்டெக்ஸ் -1 

4 தை மாத பழமொழிகள் கண்டு பிடியுங்கள் (Post No.8275)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8275

Date uploaded in London – 2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தை மாதம்

தை   மாதம் பற்றிய 4 பழமொழிகள் என்ன?

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

ANSWER

1.தை பிறந்தால் வழி  பிறக்கும்

2.தை  மழை நெய் மழை

3.தை ஈனாப் புல்லும் இல்லை மாசி ஈனா  மரமும் இல்லை

4.தைப் பனி தரையைத் துளைக்கும், மாசிப் பனி  மச்சைத் துளைக்கும்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- தை,  மாதம்,  பழமொழிகள்

–subham–

ஆன்டிமணி மாத்திரையின் வினோத உபயோகம் (Post No.8274)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8274

Date uploaded in London – 2 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிரபஞ்சத்தின் செங்கற்கள் போல உள்ள 118 மூலகங்களில் இதுவரை 24 மூலகங்களைப் பற்றி படித்தோம். நம் எல்லோருக்கும் சுப்பிரமணி தெரியும். ஆனால் ஆன்டி மணி ANTIMONY தெரியாது. முதலில் ஒரு சுவையான, ஆனால் அசிங்கமான, உபயோகத்தைப் பற்றிச் சொல்கிறேன்

மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு அந்தக் காலத்தில் ஆன்டிமணி மாத்திரை ANTIMONY METAL PILLS கொடுப்பார்களாம் பட்டாணி அளவுள்ள இந்த மாத்திரை குடலில் போய் அதன் விஷச்  சத்தை வெளியேற்றி குடலில் உள்ள  எல்லாவற்றையும் விரைவில் தள்ளும்.  பின்னர் மலத்துடன் மாத்திரையும் வந்து விழும். அதைக் கழுவி, சுத்தம் செய்து மறு நாளும் பயன்படுத்துவாராம் ; இதைவிடக் கொடுமை அதை தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று பரம்பரையாகவும்  பயன்படுத்தினராம்

***

இரண்டாவது சுவையான கதையைக் கேளுங்கள் .

உலகப் புகழ்பெற்ற இசை மேதை மொஸார்ட் (Mozart) .

35 வயதான உல்ப்காங் அமேதியஸ் மொஸார்ட் 1791ம் ஆண்டு வியன்னா நகரில் நோயில் விழுந்தார் . அக்டொபரில் படுக்கையில் படுத்தவர் டிசம்பரில் உயிரிழந்தார். மேலை உலகின் சங்கீத  மேதையின் அல்பாயுசுக்குக் காரணம் ஆண்டிமணி தான் .  சங்கீத  உலகில் போட்டி , பொறாமை கொள்ளை மலிவு. மொஸார்ட்டின் மீது பொறாமை கொண்ட அன்டோனியோ சலியேரி, ‘நான்தான் அவரை விஷம் வைத்துக் கொன்றேன்’ என்று பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒப்புக்கொண்டார். ஆனால் அப்படி அவர் ஒப்புக்கொண்ட சமயத்தில் வயதானோருக்கு வரும் நினைவாற்றல் இழப்பு நோய் (Senile Dementia) இருந்தது. இதனால் இவர் கொடுத்த வாக்குமூலத்தை ஏற்கமுடியவில்லை . இந்த நோயுள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உளறுவார்கள்

இதற்கிடையில் டாக்டர்கள் அவருக்கு ஆன்டிமணி டார்ட்ரேட்  (Antimony Tartrate) மருந்து கொடுத்ததும் அதை அவர் விரும்பி உட்கொண்டதும் தெரியவந்தது. இதை அவர் தவறுதலாக அதிகம் எடுத்திருப்பார் ;அதனால்தான் உடல் நலம் குன்றினார்  என்று முடிவு செய்தார்கள்.

இதில் இன்னொரு வினோத விஷயமும் உண்டு. அக்காலத்தில் மிலிட்டரி / ராணுவ நோய் (Military Disease) என்று ஒரு கற்பனை நோய் உண்டு. அதனால்தான் அவர் 1701 நவம்பரில் இறந்தார் என்றும் எழுதி வைத்தனர். இந்த நோயின் அறிகுறிகள் – ஜுரம், கை,கால் , உடல் வீக்கம், வாந்தி. இவை அத்தனையும் ஆன்டிமணி சாப்பிட்டாலும் வரும் . உலகின் இசை நட்சத்திரம் மறைந்த அபவாதம் ஆண்டிமணியின் தலையில் விழுந்தது.

***

இனி ரசாயன விஷயங்களைப் பார்ப்போம்-

இது ஒரு உலோகம் .

வெள்ளி நிறத்தில் இருக்கும் .

அடையாளக் குறியீடு Sb.

 (ஸ்டிபியம் Stibium என்பது இதன் லத்தின் மொழிப்  பெயர் )

அணு எண் – 51

உ ருகு நிலை – 631 டிகிரி C

கொதி  நிலை- 1635 C

இது விஷ சத்துடையது. உடலுக்குத் தேவைப்படாதது.

பழங்காலத்தில் பலவித நோய்களுக்கு மருந்தாக இதை மேல் நாட்டினர் பயன்படுத்தினர் .

மிகச் சிறிய அளவில் உட்கொண்டால் உடலுறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும் 

ரோமானிய வைத்தியர் டயஸ்காரிடஸ் (Dioscórides)  முதல் 1500 ஆண்டுகளுக்கு 25 வகையான ஆன்டிமணி மருந்துகள் பயன்பாட்டில் இருந்தன.

***

மூன்று டாக்டர்களுக்குத் தூக்குத் தண்டனை

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், வேண்டாத மனைவிமார்களை சொர்க்கத்துக்கு அனுப்ப வெள்ளைக்காரர்கள் ஆண்டிமணியைப் பயன்படுத்தினர். டாக்டர்கள் பால்மர்- 1885ம் ஆண்டு; ஸ்மேதர்ஸ்ட் – 1859; ப்ரிட்ச்சர்ட் -1865 ஆகியோர் மனைவிமார்  கொலை வழக்கில் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டனர் . இதே போல கணவனையும் ஒரு பெண் கொன்றாள் ; அவளுக்கு தண்டனை தரப்படவில்லை. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா!

சத்திரம் நடத்திவந்த ஜார்ஜ் சாப்மேன் பல  பெண்களைக் கொன்றதற்காக 1902ல் தூக்கில் தொங்கவிடப்பட்டார் ; எல்லாம் ஆண்டிமணியின் லீலைகள்தான் .

பழங்கால மக்களும் இதைப் பலவகைகளில் பயன்படுத்தினர். பிரான்சில் லூவர் மியூசியத்தில் 5000ஆண்டு பழமையான ஆண்டிமணி கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது . எகிப்திய பெண்மணிகள் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணுக்கு மை தீட்ட இதன் உப்பை பயன்படுத்தினர் .பைபிளில் இஸபெல் என்ற அழகி மயக்குவதற்குப் பயன்படுத்தியதும் இதுதான். பாபிலோன் நகர சுவர்களை அழகு படுத்த நெபுகத் நேசர் இதை உபயோகித்தார்

இது தங்கம் போலவே ராஜத் திராவகத்தில் (Aqua regia)  கரையாததால் 1604ம் ஆண்டிலேயே, இதன் பெருமையை விளக்கும்  புஸ்தகமும் வெளியானது .

கிரேக்கர்கள் இதை போரில் பயன்படுத்திய விதம் எதிரிகளுக்கு திகில் ஊட்டியது. ஆன்டிமணி ஸல்ஃபைட் உப்பை எரியும் திரவத்துடன் சேர்த்து கப்பலில் இருந்து தீ வெடிகுண்டுகளை வீ சினர் . இதை எளிதில் அணைக்க முடியவில்லை. இது நீர் மேலும் எரிந்ததைக் கண்டு எதிரிகள் பயந்து நடுங்கினர்.

***

கிடைக்கும் இடம்

இன்று உலகில் இதன் தாது உப்புக்கள் சீனா , ரஷ்யா , பொலிவியா ,  தென் ஆஃப்ரிக்கா முதலிய நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது .

போர்னியோ, சுவீடன் , அமெரிக்கா , கனடா , போர்ச்சுகல், ஜெர்மனி முதலிய இடங்களில் வேறு உலோகங்களுடன் முடிச்சுகளாக (Nodules) கிடைக்கின்றன. இவற்றின் விஷத் தன்மை புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதால் உபயோகங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

***

பொருளாதார உபயோகங்கள்

தாமிர தாதுக்களுடனும் இது கிடைக்கிறது . அமெரிக்காவில் பழைய ஈய பாட்டரிகளில் (Lead Batteries)  இருந்து ஆன்டிமணி எடுக்கின்றனர் இதை கலப்பு உலோகத்திலும் , அச்சுக்களிலும் பயன்படுத்துவர் . இந்த உலகத்துக்கு ஒரு அதிசய குணம் உண்டு. இது உருகி கெட்டியாகும் பொது விரிவடைகிறது. ஏனைய உலோகங்கள் சுருங்கும். இந்த அதிசய பண்பால் இதை சிலைகள் செய்ய பயன்படுத்தினர்.

ஸ்டோரேஜ் பாட்டரிகளில் (Storage Batteries)  , மற்றும் தீப்பற்றாத மெத்தைகள், கார் , டெலிவிஷன் பாகங்கள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது இதன் ஆக்சைட் தீயை அணைக்கும்.

வெளி நாடுகளில் தொட்டிலில் போடும் குழந்தைகளின் மர்மச் சாவுக்கு (Cot Deaths) மெத்தைகளில் கலக்கும் ஆன்டிமணிதான் காரணம் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால் பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் அது நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டது. வீட்டிலுள்ள தூசியில் இருக்கும்  ஆன் டிமணி இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பழங்கால ஈய குழாய்களில் இருந்து இந்த  தூசிப்படலம் வந்திருக்கலாம் என்றும் ஊகிக்கின்றனர் .

ஆன் டிமணி ஆராய்ச்சிகள் நீடிக்கின்றன . அவர் நல்லவரா , கெட்டவரா என்பது போகப் போகத் தெரியும் !!

tags — ஆன்டிமணி , மாத்திரை, மொஸார்ட் (Mozart), antimony

–subham–